Dienstag, 5. November 2019

இலங்கை தேர்தல் பற்றிய ஓர் பார்வை - Ganapathipillai Suthakaran



ழமைபோல் தேர்தல் காலங்களில் பொய்வாக்குறுதியகளும் கட்சிகளின் கூட்டுக்களும் வழமைபோல் மேடை ஏறின. அத்துடன் மூட்டையாக மூட்டையாக பணங்களும் பரிமாற்றபட்டன. சிறுபாண்மை மக்களின் அரசியல் அபிவிருத்தி திட்டங்களில் இத்தேர்தல் எவ்வித மாற்றங்களை கொண்டுவருமா வராத என்ற ஏக்கம் மட்டுமே சிறுபாண்மை மக்களிடம் காணப்படுகின்றது.பெரும்பாண்மை சமூகமும் வரப்போகின்ற ஜனாதிமாற்றம் பொருட்களின் விலைவாசி குறைப்பு மற்றும் வேலைவாய்ப்பு போன்ற வாழ்வாதார திட்டங்களை எதிர்நோக்கி காத்திருக்கின்றது.


வடக்கின் நிலைமை

வடக்கு வாழ் தமிழர்களின் கட்சிகள் எந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என முடிவெடுத்தாலும் முடிவெடுக்காவிட்டாலும். வடக்கு வாழ் தமிழர்களிற்கும் வாக்குகள் சஜீத் பிரேமதாசாவிற்கு சென்றடைய போகின்றது என்ற நிலைமையே காணப்படுகின்றது. நல்லாட்சிகாலத்தில் சிறுபாண்மை மக்களின் அரசியல் உரிமை விடயத்தில் எவ்வித முன்னெடுப்புக்களையும் வெற்றிகரமாக முன்னெடுக்கவில்லை என்பது வடக்குவாழ் தமிழர்கள் அறிந்த பொழுதிலும். யுத்ததினை முன்னெடுத்த இராஜபக்ச குடும்பத்தின் ஆட்சிவரக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர். சஜீத் பிரேமதாசா சிறுபாண்மைமக்களின் அரசியல் தீர்விற்கு எவ்வித உறுதியான தீர்வுத்திட்டங்களை முன்வைக்காத போதும் மக்கள் கோட்டபாயா, இராஜபக்சவின் வாக்குறுதிகளை நம்பத்தயாராக இல்லை. ஆனாலும் இராஜபக்ச அரசினால் மாத்திரமே இலங்கை உயர்பீட பொளத்த பீடாதிபதிகளையும் இனவாதிகளையும் சமாதனம் செய்து சிறுபாண்மை மக்களின் அரசியல் உரிமைக்காண தீர்வினை கொண்டவரமுடியும் என்பது உண்மையானது. ஆனால் இவர்கள் இதனைசெய்யப்போவதில்லை என்பதே உண்மையாகும் இவ்வாறான ஓர் மாற்றத்தினை UNP கொண்டுவர முற்பட்டாலோ அல்லது அவ்விடயம் பற்றி பேசினாலோ இராஜபக்ச குடும்பம் தனது கட்டுப்பாட்டில் உள்ள பொளத்த பீடாதயத்தினையும் இனவாதிகளையும் தூண்டிவிட்டு கூத்துபார்க்கும். 


கூட்டமைப்புக்கு தனியே MP அங்கத்துவம் மட்டுமே இலக்கு. அதுவே இலகுவான எவ்வித பொறுப்புமற்ற தொழில். கொழும்பில் தங்குமிட வசதி பாதுகாப்பு அரச வாகனம் மற்றும் அனைத்து சலுகைகளை மட்டும்பெற்று பொறுப்பற்று கிடப்பதே அவர்களின் தாரக மந்திரம். மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் அரசாங்கத்தின் பங்குதாராராக இருக்கும் போதே பல சவாலான விடயங்களை தம்மை தெரிவு செய்த மக்களின் பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தி கொடுக்க முடியும். இலங்கை வாழ் அனைத்து மக்களின் நலனிலும்; அக்கறைப்பட வேண்டிய தேவை ஏற்படும். எப்பவும் ஆட்சிக்குவரும் கட்சிகளிற்கு பின்கதாவால் நின்று முண்டுகொடுப்பது அல்லது எதிர்ப்பது இதுவே இவாகளின் நீண்டகால செயல் திட்டம். மலையக அல்லது இஸ்லாமிய கட்சிகள் காலம் காலம் மாறிவரும் ஆட்சியில் தம்மை பங்காளிகளாக மாற்றி கொண்டதால் தமது பிரதேச மக்களிற்கு ஓரு சில அபிவிருத்தி  வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுக்க கூடியாதாக இருந்தது. ஆனால் இவ்வாய்ப்புக்களையும் துஸ்பிரயோகம் செய்து தமது வயிற்றினை மட்டுமே வளர்த்துள்ளனர். 

தமிழ்மக்களின் அரசியல் உரிமைகிடைத்த பின்பே அரசில் பங்கு என கூறி அதற்கான எவ்வித உருப்படியான முன்னெடுப்புமின்றி தனியே தமக்கு அரசினால் கிடைக்கும் சுகபோகத்தினை மட்டும் அனுபவிப்பது எவ்விதத்தில் நியாயமாகும்?

கூட்டமைப்பினை கழுவி ஊத்தி அந்த இடத்தினை பிடிக்க துடிக்கும் சைக்கிள்களும் நடைமுறைக்கு சாத்தியமற்ற தீர்வுகளை முன்வைப்பதும் தமிழ் மக்களிடம் இனவாதத்தினை வளர்ப்பதும் மக்களை புலம்பெயர தூண்டுவது போன்ற செயற்பாடுகளை செவ்வணே செய்து வருகின்றனர். இவர்கள் மக்களின் உணர்ச்சிகளை தூண்டி வாக்குகளாக்கி தாமும் இந்த அரசியல் வலம்வரவேண்டும் என்பதே முக்கிய நோக்கமாக கொண்டு செயல்படுகின்றனர். இவர்களின் நிகழ்ச்சி நிரல் பெரும்பாலும் புலத்து கனவாளிகளிடமிருந்தே தயாரிக்கபடுகின்றது

கிழக்கின் நிலைமை

தமிழ் பேசும் இஸ்லாமியர்களுக்கும் மற்றைய தமிழ் பேசும் மக்களிற்கிடையிலான முரண்பாடு வலுவடைந்து இரு சாரர்கிடையிலான நம்பிக்ககையீனங்கள் வலுப்பட்டுள்ளது. இந்நிலைமையை சரியாக இராஜபக்கச குடும்பம் கருணா அம்மான் மூலமும் பிள்ளையானின் ஆதரவாளர்கள் மூலமும் தனக்கு சாதகமாக பயன்படுத்திவருகின்றது. தமிழ்பேசும் இஸ்லாமியர்கள் UNP முகாமிற்குள் ஓன்று குவிந்துள்ளனர். ஏத்தனையோ முரண்பாடுகள் கிழக்கில் நிலவும் போதும் அடாப்பிடியாக வடக்கு கிழக்கு இணைந்த தீர்வு என தமிழர்தரப்பு பேசியவண்ணம் உள்ளது. இப்பிரதேசத்தினை தமிழ்பேசும் இஸ்லாமிய அதிதீவிர வாதிகளும் ஏனைய தமிழ்பேசும் அதிதீவிரவாதிகளின் ஆதிக்க கருத்துக்கள் வலுபெற்றுள்ளன. இசூழலை பேரினவாதிகள் நன்கு பயன்படுத்துகின்றனர்.

மகிந்த இராஜபக்ச குடும்பத்திற்கு முண்டுகொடுப்பவர்கள் 


விடுதலைப்புலிகளில் இருந்து பிரிந்து வந்து தம்மை காப்பற்றிகொள்ள இராஜபக்ச குடும்பத்தில் சரண் அடைந்வர்கள். மற்றும் விடுதலைப்புலி காலத்தில் தம்மைகாப்பாற்றி கொள்ள இராஜபக்ச குடும்பத்தில் தஞ்சம் அடைந்தவர்களே இன்றும் இராஜபக்ச ஆதிக்கத்திற்கு முண்டுகொடுத்து வருகின்றனர். இவர்களுடன் இணைந்து இன்னமும் ஓருசில மலையகத்தலைமைகளும் தமிழ் பேசும் இஸ்லாமியத்தலைமைகளும் கூட்டுசேர்ந்துள்ளனர்.

வளர்ந்துவரும் மூன்றாம் தரப்பு

தேசிய மக்கள் சக்தி பல திட்டங்களையும் பார்வையினையும்தன்னகத்தில் கொண்டிருக்கின்றனர். தற்போதைய இரண்டு பாரிய கட்சிகளின் ஆதிக்கத்தினை முறியடிக்க வேண்டுமானால் புதிய மூன்றாம் தலைமையை ஆதரிக்க வேண்டும் அனுர குமார திசயாநாயக்க இருக்கின்ற சிங்களதலைமைகளின் ஊழலகள்; பொய்வாக்குறிதிகள்; போதைவஸ்து சட்டவிரோத சம்பவங்களை நீண்டகாலமாக அம்பலபடுத்தி வரும் ஓரு நபர். தமிழ் கூட்டமைப்பு யாரையாவது காப்பற்றியே மற்றவரை மட்டுமே விமர்சிக்கின்றது. சிறுபாண்மை மக்கள் மாறிமாறி ஆட்சிக்குவரும் இரு பெரும் கட்சிகளையும் வீழ்த்தி ஓர் புதிய தலைமையை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தினை பார்க்க தவறுவது. வரலாற்றில் மேற்கொள்ளப்படும் மீண்டும் ஓர் பெரிய தவறாகும்.


இவர்களுடன் ஏன் எந்தவொரு தமிழ்கட்சிகளும் கூட்டுச்சேரவோ அல்லது ஆதரிக்கவோ விரும்பவில்லை என்பது மீண்டும் தமிழ்கட்சிகளின் அரசியல் வியாபரத்தினை அம்பலப்படுத்துவாதாகவே எடுத்துகொள்ள கூடியதாக உள்ளது.

தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடும் அனுர திஸநாயக்க வெல்ல கூடிய சாத்தியம் உள்ளதா என்பதனை தாண்டி இம்முறை நடைபெறும் தேர்தலில் கோட்டபாயாவோ சஜித் பிரமதாசாவோ 51 விகத வாக்குகள் எடுத்து முதலாவது வாக்கெடுப்பில் வெற்றி பெற வைக்கவிடாது தடுக்க முடியும். மூன்றாம் தலைமையை வலுப்படுத்தி இரண்டவாது வாக்கெடுப்பு நடைபெற்று அறுதி பெரும்பாண்மையை நிலைநாட்டும் நிலைமைக்கு வேட்பாளர்களை தள்ளபடல் வேண்டும்

தமிழ் பேசும் மக்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும் சிறுபாண்மை மக்களின் உரிமைகள் விடயத்தில் UNP யோ  மகிந்த அணியோ எவ்வித வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என்பதனை புரிந்து கொள்ளவேண்டும். இவர்களிற்கு முகத்தில் சேறு பூச விரும்பினால்  மூன்றாhம் தலைiயான அனுர திஸநாயக்கவின் கையை வலுப்படுத்தி அறுதிப்பெரும்பாண்மையை எடுக்கவிடாமல் தடுத்தாலே இவர்கள் இரண்டாம் கட்ட வாக்களிப்பின் போது சிறுபாண்மை மக்களின் கருத்துக்களிற்கு செவிமெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். 

எல்லா சிறுபாண்மை மக்களும் தனியே கோட்டபாயாவின் வெறுப்பில் சஜித் பிரேமாதாசாவிற்கு வாக்குகளை அள்ளிக்கொட்டுவதால் ஒன்றும் நடக்கபோவதில்லை. மீண்டும் ஓர் முறை சிறுபாண்மை மக்கள் ஏமாற்றம் அடையப்போகின்றனர். அரசியல் உரிமையில் மாற்றத்தினை செய்ய முடியாத அல்லது செய்ய விரும்பாத ஓருவரை தெரிவு செய்வதால் இலங்கை வாழ் சிறுபாண்மை மக்கள் தங்கள் வாயில் தாமே மண்ணைப் போடப்போகின்றார்கள். 

சஜித் பிரேமதாச தனது தேர்தல் பிரச்சாரங்களில் சிறுபாண்மை மக்களின் உரிமைகள் பற்றிய ஆணித்தரமான கருத்துக்களை முன்வைக்கவில்லை. இதனையே கடந்த தேர்தலில் மைத்திரிபால சிரிசேனா செய்தார் என்பதனை இலங்கை வாழ் சிறுபாண்மை மக்கள் மறந்துவிடலாகாது. 

தேர்தல் வெற்றியை மட்டும் கருத்தில் கொண்டு தீர்க்கப்படாத முக்கிய விடயங்களை பற்றி பேசாமல் இருப்பது ஓர் வகை தப்பித்தலே ஆகும். இராஜபக்ச குடும்பம் இதனை சாக்காக வைத்து இராஜபக்ச குடும்பம் தனக்கு கிடைக்க இருக்கும் சிங்கள வாக்குகள் வாக்குகள் பறிபோகும் என்றும் கருதியிரக்கலாம். இப்படி தந்திரமாக இருப்பவர் எவ்வாறு ஆட்சிக்கட்டிலில் ஏறியபின்னர் சிறுபாண்மைக்களிற்கான அடிப்படை உரிமைக்காக குரல் கொடுப்பார் என எதிர்பாக்க முடியும். 

இதனாலேயே இரண்டாவது வாக்களிப்பு நிலைமையை ஓன்று கூடிய இலங்கைவாழ் சிறுபாண்மை மக்கள் எடுப்பார்களாக இருந்தால் சிறப்பாக இருக்கும். அடிக்கடி சர்வேதசம் என்று கூவும் தரப்புகள் உண்மையாக சர்வதேசத்திற்கு ஓர் செய்தியை கொடுக்க முடியும். இவற்றை செய்யாது தமிழர் கூட்டமைப்பு மிக காலம் தாழ்த்தி சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவழிப்பதாக முடிவெடுத்துள்ளதும் சைக்கிள் தரப்பு தேர்தலை நிராகரக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளதும். தமிழர் தரப்பில் ஓர் தூர நோக்குடன் கூடிய அரசியல் தலைமையின் வெற்றிடத்தினையே புலப்படுத்துகின்றது.

இரண்டாவது வாக்கெடுப்பின் அவசியத்தினை வேட்பாள்களிற்கு ஏற்படுத்துவார்களா என்ற ஏக்கம் இருந்தாலும். சென்ற தேர்தலைப்போன்று 51 விகதத்தினை பெற்று ஓரு வேட்பாளர் வெல்லப்போகின்ற ஆபத்தே மிகையாக உள்ளது.

05.11.2019



Sonntag, 27. Oktober 2019

புலத்து தமிழர்களின் வியர்வைதுளியில் இருந்து சேகரிக்கபடும் உதவி தொகை சரியான முறையில் பாதிக்கபட்டவர்களிற்கு சென்றடைகின்றதா?

Ganapathipillai Suthakaran 27.10.2019

புலம்பெயர் தமிழரின் உதவிதிட்டங்களும் துஸ்பிரயோகங்களும்.

கடந்த மாதம் நான் சார்ந்த உதவிநிறுவனத்தின் வேலைத்திட்டங்களை நிறைவேற்றுவதற்கும் நேரடியாக கண்காணிப்பதற்குமாக இலங்கைக்கு பயணம் செய்திருந்தேன். பல புலம்பெயர் உதவிநிறுவனங்களினதும் பிழையான நடைமுறைகளாலும் சரியான திட்டமிடலின்றி செயற்படுவதால் நாட்டில் செய்ப்படும் உதவிகள் பாதிக்கபட்டவர்களிற்கு சென்றடையாது மாறாக ஓரு சிலர் தமக்குள் சுருட்டிக்கொள்ளும் பல நிகழ்வுகள் நடைபெறுகின்றது. வாசகர்களின் வசதிகருதி புலம்பெயர் உதவிநிறுவனங்களின் அமைப்பு வடிவங்களை கீழ்காணும் வகையில் பிரித்துள்ளேன்.

1. சர்வதேச அரசு சார்பற்ற நிறுவனங்கள். (World Vision, US Aid)

2. புலம்பெயர் வாழ் தமிழர்களின் கிராமம் அல்லது ஊர்சார்ந்த உதவி நிறுவனங்கள்.

3. விடுதலை அரசியல் இயக்கங்கள் தமது அரசியல் தொடச்சி நோக்கி உருவாக்கபட்ட உதவிநிறுவனங்கள்

4. நல்ல நோக்கில் தோற்றுவிக்க பட்ட நிறுவனங்கள் நாட்டில் தமது கிளை நிறுவனங்களை பிழையான முறையில் தோற்றுவித்து பின்னர் அந்நிறுவனம் உள்ளுர் அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டிற்குள்ளும் அல்லது ஓர் குறிப்பிட்ட நபர்களின் நலனுக்குள் முடக்கபட்hடுபவை

5. தமிழ் தேசியம் பேசி வளர்ந்த புலம்பெயர் மேடியயாக்கள் நாட்டில் பாரிய முதலீடுகளை செய்து பூதாகரமாக வளர்ந்த நிறுவனங்கள் தமது பொது நலனை வெளிப்படுத்துவதற்காக அங்குள்ள மக்களின் இன்னல்களை வெளிக்கொண்டு வந்து புலம்பெயர் தமிழர்களின் நன்மதிப்பபை பெற்று மீண்டும் புலத்து தமிழர்களை தமது வாடடிக்கையாளர்களாக வைத்து கொள்ளும் முயற்சி.

6. ஓரு சில வழிபாட்டு நிறுவனங்களால் நடாத்தபடும் உதவி நிறுவனங்கள்.

7. நேர் வழியில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நேரடி உதவிகளை வழங்கிவரும் சிறிய உதவி அமைப்புக்கள். இவர்கள் தம்மால் சேகரிக்கபடும் 100% விகித நிதியையும் எவ்வித அலுவலக செலவுமின்றி பாதிக்கப்பட்டவர்களிறு;கு நேரடியாக உதவிசெய்யும் நிறுவனங்கள் 

சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் தம்மால் சேகரிக்கும் நிதியில் பாதிக்கப்பட்டவர்களிற்கு 20% அல்லது 30% விகிதமே கொடுக்கின்றனர். ஏனைய 80% 70% விகித நிதிகள் அலுவலக செலவிற்கும் அவர்களால் நியமிக்கபட்ட அதிகாரிகளிற்கான சம்பளங்களிற்குமே பயன்படுததுகின்றன. இவ்வகையான பல நிறுவனங்னள் இலங்கையில் வன்னி பிரதேசங்களில்செயற்படுகின்றன. இவர்கள் கணக்கு காட்டுவதற்காக ஓருசில உதவிகளை செய்துகொண்டு பல உள்ளுர்வாசிகளை உள்வாங்கி பயிற்சி பட்டறை வகுப்புக்களை இப்பிரதேசங்களில் உள்ள விடுதிகளில் ஓழுங்கு செய்து நாடாத்துகின்றனர். இதற்கான செலவுகள் அனைத்தும் சேகரிக்கப்படும் உதவியில் இருந்தே பெறப்படுகின்றது. இவர்களின் இவ்வேலைத்திட்டத்திற்காக வேலைசெய்யும் பல உள்ளுர் முகவர்கள் பலனை பெற்றுகொள்ளுகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் மிக அரிதாகவே பயன்பெறுகின்றனர். மேலும் இவர்களின் பெரும் நிதியில் உருவாக்கப்படும் பயன்பெறா பல செயற்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மழைநீர் சேகரிப்பு என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய தாங்கியை ருளு யனை எனும் நிறவனத்தினால் கிளிநொச்சில் ஓரு சில வீடுகளிற்கு அமைத்து கொடுக்கபபட்டுள்ளது. எவ்வித பயனுமின்றி காட்சி அளிக்கின்றது. US AID அமெரிக்க உளவுபிரிவான CIA இன் நேரடிக்கட்டுப்பாட்டிற்குள் இயங்கும் ஓர் நிறுவனம் என்பது இங்கு குறிப்பிடதக்கது.

விடுதலை அல்லது அரசியல் இக்கங்கள் தமது நலன் கருதியும் உள்நோக்கமும் கொண்டு ஓரு சில உதவிகளை செய்து பெரிதாக விளம்பரத்தினை தேடிக்கொள்கின்றன. இவர்களால் செய்யப்படும் உதவிகள் யுத்ததினால் நேரடியாக பாதிக்கப்பட்ட போராளிகளிற்கோ அல்லது மக்களிற்கோ சரிவரசென்றடையவிதில்லை என்பதனை பாதிக்கப்பட்ட மக்களுடன் பேசியபோது அறியக் கூடியதாக இருந்தது. பெரும்பாலான இவ்வகை உதவி நிறுவனங்கள் பாடசாலை உபகரணங்கள் போன்ற சிறு உதவிகளை செய்து புகைப்படங்களை எடுத்து பிரபல்ய படுத்திகொள்ளுகின்றனர். ஆனால் இவ்வகையில் செயற்படும் ஓரு சில நிறுவனங்கள் கைதிகளை விடுவிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு பல கைதிகளையும் விடுவித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

நல்ல நோக்கில் ஆரம்பிக்கபட்ட ஓரு சில நிறுவனங்கள் நாட்டில் கிளை அமைக்கின்றோம் என்ற பெயரில் இந்நாட்டில் உள்ள அதே பெயரில் அங்கு ஓர் அமைப்பினை நிர்மாணித்துள்ளனர். இவ்வமைப்பக்ளும் நாட்டில் ஓர் நிர்வாக கட்டமைப்பினை கொண்ட ஓர் சுயாதீன அமைப்பாகவே உள்ளன. புலத்தில் உள்ள அமைப்பு ஓர் நிதியை வழங்கும் அமைப்பாகவே மட்டுமே உள்ளது. புலத்தில் உளள அமைப்பின் நோக்கத்திற்கும் மாறாக தன்னிச்சிiயாக செயற்கட்டு புலத்தில் சேகரக்கபட்ட நிதிகள் ஓரு சிலரின் தனிப்பட்ட சொத்துக்கள் ஆக்கப்பட்டதிற்கான ஆதாரங்களும் என்னிடம் உள்ளன. ஓரு சில கிளைகள் உள்ளுர் அரசியல் வாதிகளின் விளம்பரத்திற்கும் ஆதிக்கத்தனை நிலை நிறுத்த தமது உதவிதிட்டம் என விளம்பரப்படுத்துகின்றனர். புலத்தில் இருந்து நிதி சேகரிக்கும் தாய் நிறுவனங்கள் தமது கட்டுப்பாட்டினை இழந்து செய்வது அறியாது தவிர்க்கின்றனர். துஸ்பிரயோகம் செய்யும் நிறுவனங்களின் பெயர்களை தேவை கருதி தவிர்த்துள்ளேன்.

தமிழ் தேசியம் பேசியும் ஆதரவும் அளித்து தமது மூலதனத்தினை பெருக்கிய பாரிய தமிழ் மேடியா நிறுவனங்கள் தமது வயிற்றினை மேலும் வளர்ப்பதற்கு நாட்டில் உள்ள துயரங்களை காட்சியாக்கி புலத்தில் நிதியை சேகரித்து பாதிக்கபட்டவர்களிற்கு உதவி செய்து ஓரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கின்றனர். உதவி திட்டங்களை திட்டடிடாமல் செய்வாதால் நாட்டில் புலத்து உதவி நிதியில் தங்கிநிற்கும் கலச்சாரத்தினை உருவாக்குகின்றனர்.

நேரடியான கண்காணிப்பும் அற்றும் தனியே அங்குள்ள ஓருசில தனிநபர்களின் கோரிக்கையை நிறைவேற்றும்வகையில் செய்யப்படும் நிறுவனங்கள். வழங்கப்படும் உதவிகள் சரியான முறையில் பயன்படுத்தாது பிழையான முறையில் துஸ்பிரயோகம் செய்யப்படும் நிகழ்வுகள் பல இடம்பெறுகின்றன. புலத்து சமூகம் தனது வியர்வைத்துளியை சிந்தி கொடுக்கப்படும் நிதிகள் சரியான முறையில் பாதிக்கபட்டவளிற்கு சென்ற அடையாவில்லை என்றால் அதைப்போன்ற ஓரு கொடுமை இருக்கமுடியாது.

புலம்பெயர் மக்கள் சிறிய உதவிகளை தனிப்பட்ட முறையில் செய்யாது நீண்ட காலத்திற்கு பாதிக்கபட்டவர்கள் தமது சொந்த காலில் நிற்பதற்கான வழிமுறையை தேர்ந்தெடுத்து அதற்கான ஓர் கூட்டு நிதியை வழங்குதே ஓர் சிறந்த தீர்வாக இருக்கமுடியும். குறுகிய காலத்திட்டங்கள் புலத்து நிதியில் தங்கி நிக்கும் ஓரு வித கலாச்சாரத்தினை உருவாக்குகின்றது. இவ்வகை கலாச்சார பண்பினை பல இடங்களில் அறிந்துகொள்ள கூடியதாக இருந்தது.

பல நிறுவனங்கள் உண்மையாக பாதிக்கபட்ட பிரதசேங்களிற்கு நேரடியாக சென்றுபார்ப்பது குறைவு. பல நிறுவனங்கள் மெயின் வீதிக்கு அண்மை பிரதேசங்களிற்கு சென்று விட்டு ஓரு சில தகவல்களை சேகரித்து தமது உதவிதிட்டங்களை திட்டமிடுகின்றனர். மாறாக இவர்கள் பல குக் கிராமங்களிற்கு சென்று நிலைமைகளை அவதானிக்கவேண்டும்.

இம்முறை எனது பயணத்தின் போது ஓர் போராளி இன்று வரைக்கும் தொடர்ச்சியாக சிறிலங்கா அரசின் உளவுபடையினரால் கண்காணிக்கபடுபவரும் சித்திரைவதைக்கு உட்பட்டு வருபவரும் ஓருவரை சந்தித்தேன். அவரிற்கு இன்று வரை எவ்வித புலம்பெயர் அமைப்பின் உதவிதிட்டங்களும் சென்றடையவில்லை. அவரிடம் ஓருசில புலம்பெயர் அமைப்புக்கள் தமது செயற்பாட்டிற்கு உள்வாங்கும் வகையில் உரையாடி அவரை இன்னமும் மேலதிக நெருக்கடிளிற்கு முகம் கொடுப்பதற்கான வாய்ப்புக்களை உருவாக்கி கொடுத்துள்ளனர். எந்த வித உதவிதிட்டமும் இன்றி ஓர் தகர கொட்டகைக்குள் 5 பிள்ளைகளுடன் வசித்து வருகின்றார். இவர் புலத்தில் இருந்து வரும் எவ்வித தொலைபெசி தொடர்பினையும் தனது பாதுகாப்பு கருதி ஏற்று கொள்ள மறுக்கின்றார்.

ஓர் சரியான இறுக்கமான அமைப்புமுறையை  தன்னகத்தில் கொண்டு செயற்படும் மற்றும் நேரடியாக பாதிக்கமக்களுடன் தொடர்புடன் இருக்கும் அத்துடுன் வேலைத்திட்டங்களை நேரடி கண்காணிப்பில் நிறைவேற்றிகொடுக்கும் நிறுவனங்களை இனங்கண்டு அவர்களுடன் இணைந்து செயற்படுவதன் மூலமே நாட்டில் உதவிகளற்று தவிர்க்கும் மக்களின் அன்றாட நிரந்தர வாழ்வாதரத்தினை தமது சொந்த காலில் நிவாத்திசெய்வதற்கான வழிவகைகளை செய்து கொடுக்க முடியும். 

Samstag, 19. Oktober 2019

சாதிய ஆதிக்க கருத்துக்குள் ...

நேற்றைய தினம் எனது முகநூலில் வாசகராக இருந்த M.P என்பவர் எனது சாதியத்திற்கு எதிரான கருத்துக்களை கேட்டு (சிவா சின்னப்பொடியின் நூல் வெளியிட்டின் போது) மண்புழுபோல் நெழிந்தவர். ஏன் எமது புண்ணை நோண்டுகின்றீர்கள் என தனது சாதிய ஆதிக்க கருத்துக்குள் குழிர் காய முற்பட்ட போது என்னுடன் உட்பெட்டியில் விவாதித்த விடயங்களை தங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

இந்த நபர் பற்றிய தகவல்

மிக அண்மைக்காலத்தில் சுவற்சர்லாந்து பிராஐh உரிமைக்கு விண்ணப்பித்தவர். இலங்கையில் தமிழ் அரசுக்கட்சியின் முக்கியத்துவர். மேலும் வெளிநாட்டவர்களின் இருப்புக்கு (தமிழர்களின் இருப்புக்கும்) அச்சுறுத்தலாக இருக்கும் அதிதீவிர இனவாத SVPக்கு ஆதரவாக செயற்பட முற்படுபவர். Aarau மாநிலத்தில் வசிப்பவர்










Freitag, 13. September 2019

தாலிக்கு முண்டு கொடுக்கும் தமிழ் கலாச்சார காவலர்கள்.



- கணபதிப்பிள்ளை சுதாகரன் 13.10.2019


தாலி ஆணாதிக்கத்தபாதுகாப்பதற்கான ஓர் குறியீடாக இருப்பதனால் , பெண்கள் ஆண்களுக்கு தாலிகட்டினால் ஆண்களது ஆதிக்கம் வலுவிழந்துவிடும் என்று தமிழ் சமூகம் பயப்பிடுகின்றது

இதன் அடிப்படையில் சிந்திப்பதால்சில முகநூல் காவலிகள் திருநங்கைகளின் திருமணம் என்று திருநங்கைகளையும் பாலியல் இனவாத ஓடுக்குமுறை (discrimination) சிந்தனையுடன் பார்க்கின்றது.
ஏன் அர்த்தமற்ற ஆடம்பர திருமண விழாக்களை நாடாத்தும் போது இந்த கலாச்சார காவலர் எங்கு சென்றனர்? அல்லது ஏன் மொளனம் காத்தனர்?

புலம்பெயர் சமுகம் இன்னமும் திருமணத்தின் போது சீதனத்தினை வாங்கிவருகின்றது. அதையும் பார்த்து காவலர்கள் மொளனம் காக்கின்றனர் அல்லது ஊக்கிவிக்கின்றனர்

மோதிரத்தினைமாத்திரமும் இருபாலர்களும் மாற்றும் போது ஏன் ஓர் விடயமாக தெரியவில்லை இந்நிகழ்வு பாலியல் சமநிலையை பேணுவதற்கான முன்னெடுப்பின் சிந்தனையில் எடுக்கபட்டிருந்தாலும். அடிமைக்கான அடையாளத்தினை அம்பலப்படுத்தும் ஓர் முன்முயற்சியாக அமையாமல் சென்றது கவலைக்குரிய விடயம்
இதற்கே ௯ச்சல் போடும் இந்த காவலர்கள் ஓர் இன பாலியல் திருமணங்களையும் உறவுகளையும் எவ்வாறு பரிந்து கொள்ளமுடியும்?

தமது பிள்ளைகளின் தனிப்பட்ட விருப்பங்களை கவனத்திற்கு எடுக்காது இன்றும் கட்டாயத்திருமணங்களை (Forced marriage) நாடாத்தி வருகின்ற சமூகம். எவ்வாறு நடைபெறும் மாற்றங்களை புரிந்து கொள்ளமுடியும்?

இன்னமும் சாதிய சிந்தனையுடன்ஓர் இனத்தினையும் சமுகத்தினையும் அல்லது மதத்தினை சார்நதவர்களை ஓதுக்குவது அல்லது புறக்கணிப்பது புலத்தில் அன்றாட காட்சியாக நடைபெற்று வருகின்றது.

ஐரோப்பிய சமூகம் அனைத்து பாகுபாடுகளையும் உடைத்து ஓர் முன்னேறிய சமுதாயமாக உருவாகுவதற்காக போராடி வருகின்றது . நாமோ கற்காலம் நோக்கி பயணிக்க முற்படுகின்றோம்.

இந்நாடுகளில் புலம்பெயர்ந்த எம்மவர்கள் பலர் எவ்வித இணைவாக்கவும் (Intergration) அடையாது தமக்குள்ளேயே சுழண்று கொண்டு சமாந்தர சமூகத்தினை (Parallel society) உருவாக்கி கொண்டு வருகின்றனர்.

ஓர் அடையாளமாக இருந்து பெண்களை கட்டுக்குள் உட்படுத்துவதாககருதியிருந்தால் முற்றாக நிராகரித்தது இருக்கலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து. 

அடையாள சின்னத்தின் முக்கியத்தினை வலுப்படுத்துவதாக மணமக்கள் தாலியை பயபக்தியுடன் அணிந்து கையாண்ட முறை ஓர் புலப்படுத்தியது
என்பது எனது விமர்சனமாகும்.

விமர்சனங்களை வலுவான தமது பக்க நியாயங்களுடன் முன்வைத்து இருந்தால் ஏற்றுகொள்ளலாம். மாறாக கலாச்சார காவலர்கள் பெண்களை இழிவுபடுத்தியும் மணமகனை இழிவுபடுத்தி வெளியாகும் பதிவுகளை சமூக விழிப்பு உணர்வாளர்கள் கண்டிக்க முன்வரவேண்டும்.



Dienstag, 13. August 2019

என்று தணியும் இந்த ஆடம்பர விழா மோகம்?



புலம்பெயயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் கலாச்சாரம் என்ற பெயரில் நடாத்தும் நிகழ்வுகளிலும் தமது குழந்தைகளின் பெயர் வைப்பிலும் ஓர் வேறுபட்ட அடையாளத்தினை கொண்டு வரும் வகையில் செயற்பாடுகள் கடந்த காலங்களில் அதிகரித்துவருகின்றது. இப்புதிய கண்டுபிடிப்புக்களிற்கான உற்பத்தி மையமாக கனடா வாழ் தமிழர்கள் முந்நிலை வகிக்கின்றனர். ஓரு சில புலத்துவாசிகள் இந்நாட்டில் தம்மால் கண்டுபிடிக்கபட்ட திருவிழாக்களை நாட்டில் நடாத்தி அதனை எந்தவிதமான மன நெருடலும் அல்லாது விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

முதலில் குழந்தைகளின் பெயரில் இருந்து ஆரம்பிக்கலாம். பல புலத்துவாசிகள் ஓன்றும் அர்த்தம் புரியாத வகையில் தமது குழந்தைகளிற்கான பெயரை சூட்டுகின்றது. இந்நடவடிக்கையின் மூலம் புலத்தில் பிறந்த குழந்தைகளை பெயர் கொண்டு அடையாளப்படுத்தலாம். இதனை விரும்பாத மொழியால் நேசமுடையவர்கள் தனி தமிழ் பெயர்களையும் சூட்டிவருகின்றனர்.

தமிழை காப்பற்றுவோம் கலாச்சாரத்தினை காப்பாற்றுவோம் என ஊளையிடுவோர் கலாச்சார விழா என்று கூறி அடிக்கும் கூத்துக்கள் சகிக்க முடியாத அளவிற்கு சென்றுவிடுகின்றது. தென்னிந்திய சினிமாவின் பாதிப்பு தலைக்குமேல் ஏறி போதையாகி பல புலத்துவாசிகள் தமது விழாக்களை சினிமாக்கியுள்ளனர்.
அதுமட்டுமல்லாது தமது விழாவில் செய்யாத பல புதிய நடமுறைகளை கலாச்சார இறக்குமதி செய்து அறிமுகப்படுத்துகின்றனர்.

இவ்வாறு செய்து கொண்டு நாட்டிற்கு விடுமுறைக்கு செல்பவர்கள் அங்கு வெளிநாட்டு பொருட்களை கொண்டு செல்ல வேண்டாம். அங்குள்ள மக்களிற்கு புலத்தில் உள்ள பிரச்சினைகள் தெரியாது என அறிவுரைகளும் கொடுக்கப்படுகின்றது.

நாட்டிற்கு சென்று பாரம்பரியம் என்ற பெயரில் பணத்தை அள்ளி வீசி பல இல்லாத எடுப்புக்களை எடுத்து மிக ஆடம்பரமாக நிகழ்வுகளை நடாத்திவருகின்றனர். ஆப்படி எல்லாம் செய்து விட்டு நாங்கள் வித்தியாசமாக செய்தோம் என்ற தம்பட்டம் வேறு.

கொண்டாட்டம் செய்யும் விழாக்களில் மட்டுமல்லாது இறப்பு நிகழ்விலும் புதிய கண்டுபிடிப்புக்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். தமிழர்களின் இறப்பு நிகழ்வு நடைபெறும் மண்டபத்தில் உணவு மற்றும் குளிர் பாணங்களை வழங்கி அந்நிகழ்வு நடைபெற்ற இடத்தினையே குப்பை கூழம் ஆக்குகின்றனர்.

புலத்தில் வாழ்பவர்கள் இந்நாட்வர்களின் நிகழ்வுகளில் உள்ள நல்ல விடயங்களை கண்டுபிடித்து தமது விழாக்களில் இணைத்துள்ளனரா என்று கேட்டால் மிக குறைவு என்றே கூறவேண்டும்.

ஆனால் விழா கதாநாயக நாயகிகளை கெலிகொப்டர் மற்றும் பு.கையிரதம் குதிரை வண்டி ஊர்வலப்பாணியில கொண்டு இறக்கி பெருமைப்பட்டு கொள்ளுகின்றனர். ஆகமொத்தம் இன்னமும் ராக்கட்டில் இருந்து இறக்கவில்லை. அதனையும் காலப்போக்கில் புலத்தவாசிகள் நடைமுறைப்படுத்துவார்கள் என்பது உறுதி.

பல தமிழர் நிகழ்வுகளில் உணவுப்பண்டங்களும் குளிர்பாணங்களும் மிதமிஞ்சி வீசப்படுகின்றது என்பதை நேரில் பார்த்த பல மண்டப நிர்வாகிகள் விசணப்பட்டுள்ளனர்.

Freitag, 28. Juni 2019

ஏகபோக சிந்தனையும் கண்ணை மறைக்கும் தூய்மைவாதமும்



மேற்காணும் பதிவில்; பல தனி மனிதர்கள் மற்றும் சக உதவி நிறுவனங்கள் பலவற்றைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ள முரண்பட்ட பல விடயங்களை எடுத்துரைக்கும் நோக்கமே கீழ்க்காணும் பதிவின் இலக்கு! இப்பதிவுக்கு இன்னுமொரு இலக்கும் உள்ளது. தங்களது பதிவுபற்றி முதுகுக்கு பின்னால் பேசாது நேரடியாக வெளிப்படைதன்மையுடன் முன்வைப்பதும் ஓர் நோக்காகும்.

2009 ஆண்டிற்கு பிற்பாடு சுவிற்சர்லாந்திலும் பல ஜரோப்பிய நாடுகளிலம் பல்வேறு உதவி நிறுவனங்கள் தாயகத்தில் வாழ்வாதார நடவடிக்கைகளை செய்யும்வகையில் தோற்றம் பெற்றன. பல் வேறுபட்ட அமைப்புகள் தமது சக்திகளிற்கேற்ப உதவிகளை பாதிக்கபட்டவர்களிற்கு வழங்கிவருகின்றன. பல தனிமனிதர்களும் தாம் தாயகம் செல்லும் போதெல்லாம் பல்வேறுபட்ட உதவிதிட்டங்களை செய்து வருகின்றனர்

இவ்வகையில் பல மாணவவர்கள் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதை தமது தார்மீகக் கடமையா எண்ணி உண்டியல் மூலம் பணத்தை சேர்ப்பது தொடக்கம் தம்மை விளம்பரப்படுத்தி சில நிகழ்வுகளை நடாத்தியும் விரைவாக பணத்தைச் சேர்த்து மக்களின் அவலநிலை அறிந்து எவ்வளவு விரைவாக உதவ முடியுமோ அவ்வளவு விரைவாக போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் தொழிற் துறைசார் மேம்பாட்டுக்கு உதவி வருகின்தறனர்

ஆனால் ஆதரவு உதவி நிறுவனத்தின் மேற்படி பதிவானது தங்களது அமைப்பு மட்டுமே புனிதமானது சரியானது எனும் தொனி பட தம்மை விளம்பரப்படுதும் வகையில் எழுதியிருப்பது மேற்படி மாணவர் சமுதாயத்தையும் ஏனைய சக உதவி நிறுவனங்கiயும் அவர்களது தார்மீகக் கடமைகளயும் மறுதலிப்பதாக உள்ளது. கண்டிக்கத் தக்கது!  இன்று தாயகத்தில் வாழ்வாதாரத்தினை இழந்து வாழும் பல குடும்பங்கள் உள்ளன. இவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து நிரந்தர வருமானங்களை ஏற்படுத்திகொடுக்கும் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு பல்வேறு உதவி நிறுவனங்களின் தேவை இருக்கிறது. இவ்வகையில் இயங்கிவரும் அமைப்புக்களை ஊக்குவிப்பதே எமது இன்றைய கடமையாகும். அதை விடுத்து தனித்து தங்களது அமைப்பு மட்டுமே புனிதமானதும் மிகச்சரியானதும் எனக் கூறி  தம்மைத் தாமே விளம்பரபடுத்தும் அதேவேளை ஏமைய உதவி நிறுவனங்களின் தேவையை மறுதலிக்கின்றனர். இது ஏனைய நிறுவனங்களை புறந்தள்ளிவிட்டு தாம் மட்டுமே சரியானவர்கள் எனக் கூறும் இம் முறைமை அதிகாரத்துவத் தொனியில் தம்மை விளம்பரப்படுத்தும் ஒரு செயல். மிக ஆபத்தான இவ் அனுபவத்துள் வாழ்ந்து களைத்துப்போனவர்கள் எமது மக்கள்!

பல புலத்து உதவி அமைப்புக்களின் நிர்வாக மற்றும் பயண செலவுகளை தாமே முன்னின்று பொறுப்பெடுக்கின்றனர். நாம் அறிந்தவகையில் பல சுவிஸ் நண்பர்கள் கூட இவ்விதம் செயற்படுகிறார்கள். இவற்றையெல்லாம் நீங்கள் அறிந்துகொள்வதற்கு சந்தர்ப்தபம் இல்லைத்தான்

உண்டியல் குலுக்கலுமில்லை. எந்த வழியிலாவது நிதி சேர்ப்பதை மட்டுமே இலக்காகக் கொண்டதுமில்லை

இவர்கள் பார்வையில் உண்டியல் குலுக்குவது கொச்சையாகத் தெரிகிறது. பரந்துபட்ட மக்களின் பிரச்சனையை பரந்துபட்ட மக்களின் பங்குபற்றலை கோருவதான் ஜனத்திரள் வேலைமுறை. ஒரு நண்பர் கூறினார்; எங்கள் மக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும்பொருட்டு உதவி கிகை;குமாக இருந்தால்உண்டியல் என்ன? குண்டியையே நான் கழுவத்தயாராக இருக்கிறன்என்று. இதுதான் மக்களுக்காக தம்மை அர்ப்பணிக்கும் வேலை முறை

பலரது ஓத்துழைப்போடும் பங்களிப்புடனும் ஓர் உதவி திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதை ஓரு பொதுத் தேவையின் அவசியத்தினை முன் வைத்து உண்டியல் குழுக்குவதை ஏன்? ஒரு பாலியல் தொழிலாளி அவலப்படும் மக்களுக்கு உதவும் பொருட்டு தனது தார்மீகக் கடமையாக நினைத்து உதவி புரியக்கூடும். என்பதற்கான உங்கள் அர்த்தம் அதுவாக இருப்பின்இ அத் தொளிலாளியின் தார்மீக உணர்வுக்கு மதிப்பளித்து அதையும் ஏற்பதுதான் மனிதப் பண்பு. இதைக் கொச்சைப்படுத்திவிட முடியாது.
புலத்தில் பல நிறுவனங்கள் சாப்பாடு சமைத்துகொடுத்து நிதி சேகரிக்கின்றார்கள்! தமது வேலை நேரத்துக்குப் பின் இப்படி ஓர் உடலுழைப்பை செலுத்துவதற்கு எவ்வளவு அர்ப்பணிப்பு மனநிலை வேண்டும்? „வேறு எந்த வழியிலாவதுஎன்ற உங்கள் கூற்று உங்கள் கூற்று இந்த தியாகிகளையும்தான் கொச்சைப்படுத்துகிறது!

வேறு சில நிறுவனங்கள் பயன்பாட்டளர்களிற்கு வருமானம் கொடுக்கும்வகையில் அவர்களால் உற்பத்தி செய்யப்பட்ட பல கைப்பணி பொருட்களை விற்பனை செய்கின்றனர்!
மேலும் இசை நிகழ்ச்சிகள் நடாத்தி நிதி சேகரிக்கின்றனர்! இந்த வகையான அர்ப்பணிப்பு முறைகள் எல்லாமே உங்கள்வேறு எந்த வழியிலாவது“  என்ற பழிப்புரைக்குள் வந்து சேர்கிறது. என்னைப் பொறுத்தவரை அர்ப்பணிப்படன் பணிபுரியும் அனைத்து உள்ளங்களுக்கும் நாம் மதிப்பளிக்கவேண்டும் என்பதே!

ஆக மொத்தம் உங்கள் பர்வையில் இருந்த இடத்தில் இருந்துகொண்டு; நண்பர்கள் மத்தியில் வாய் விளம்பரம் செய்து நிதி சேகரிக்கபடுவது மட்டுமே சரியானது! மற்றவை எல்லாம் பழிப்புக்குரியவை! வாழ்க உங்கள் பணி!

வரலாறு பதிவு ஆவனப்படுத்தல் பற்றி நிறைய பேசுபம் நீங்கள் ஆதரவு நிறுவனத்துக்காக முன்னின்ற முக்கிய நபரை தவிர்த்து மகாகாவம்சம் பாணியில் தங்களை அதிகாரத்தில் நிறுத்தி வரலாற்றை எழுதியிருப்பது மிகவும் சிறப்பானது. ஓரு அமைப்பின் வருடாந்த அறிக்கையில் அமைப்பினால் சாதித்ததை மட்டும் தெரியப்படுத்தாது உங்களது கனவை நனனவாக்க காடு மேடு என்று அலைந்த மனிதனை விட்டுச்சென்றது கவலைதருகின்றது.

ஆக மொத்ததில் இப்பதிவு உதவிநிறவனங்களை ஆக்கபூர்வமாக ஊக்குவிப்பதற்கு பதிலாக தங்களை மட்டும் விளம்பரப்படுத்தியுள்ளமை மிக மிகச் சிறப்பு!

வாழ்க உங்கள் புனிதத்துவம்!
தோடரட்டும் உங்கள் பணிகள்

.சுதாகரன் 
28.06.2019