Freitag, 13. September 2019

தாலிக்கு முண்டு கொடுக்கும் தமிழ் கலாச்சார காவலர்கள்.



- கணபதிப்பிள்ளை சுதாகரன் 13.10.2019


தாலி ஆணாதிக்கத்தபாதுகாப்பதற்கான ஓர் குறியீடாக இருப்பதனால் , பெண்கள் ஆண்களுக்கு தாலிகட்டினால் ஆண்களது ஆதிக்கம் வலுவிழந்துவிடும் என்று தமிழ் சமூகம் பயப்பிடுகின்றது

இதன் அடிப்படையில் சிந்திப்பதால்சில முகநூல் காவலிகள் திருநங்கைகளின் திருமணம் என்று திருநங்கைகளையும் பாலியல் இனவாத ஓடுக்குமுறை (discrimination) சிந்தனையுடன் பார்க்கின்றது.
ஏன் அர்த்தமற்ற ஆடம்பர திருமண விழாக்களை நாடாத்தும் போது இந்த கலாச்சார காவலர் எங்கு சென்றனர்? அல்லது ஏன் மொளனம் காத்தனர்?

புலம்பெயர் சமுகம் இன்னமும் திருமணத்தின் போது சீதனத்தினை வாங்கிவருகின்றது. அதையும் பார்த்து காவலர்கள் மொளனம் காக்கின்றனர் அல்லது ஊக்கிவிக்கின்றனர்

மோதிரத்தினைமாத்திரமும் இருபாலர்களும் மாற்றும் போது ஏன் ஓர் விடயமாக தெரியவில்லை இந்நிகழ்வு பாலியல் சமநிலையை பேணுவதற்கான முன்னெடுப்பின் சிந்தனையில் எடுக்கபட்டிருந்தாலும். அடிமைக்கான அடையாளத்தினை அம்பலப்படுத்தும் ஓர் முன்முயற்சியாக அமையாமல் சென்றது கவலைக்குரிய விடயம்
இதற்கே ௯ச்சல் போடும் இந்த காவலர்கள் ஓர் இன பாலியல் திருமணங்களையும் உறவுகளையும் எவ்வாறு பரிந்து கொள்ளமுடியும்?

தமது பிள்ளைகளின் தனிப்பட்ட விருப்பங்களை கவனத்திற்கு எடுக்காது இன்றும் கட்டாயத்திருமணங்களை (Forced marriage) நாடாத்தி வருகின்ற சமூகம். எவ்வாறு நடைபெறும் மாற்றங்களை புரிந்து கொள்ளமுடியும்?

இன்னமும் சாதிய சிந்தனையுடன்ஓர் இனத்தினையும் சமுகத்தினையும் அல்லது மதத்தினை சார்நதவர்களை ஓதுக்குவது அல்லது புறக்கணிப்பது புலத்தில் அன்றாட காட்சியாக நடைபெற்று வருகின்றது.

ஐரோப்பிய சமூகம் அனைத்து பாகுபாடுகளையும் உடைத்து ஓர் முன்னேறிய சமுதாயமாக உருவாகுவதற்காக போராடி வருகின்றது . நாமோ கற்காலம் நோக்கி பயணிக்க முற்படுகின்றோம்.

இந்நாடுகளில் புலம்பெயர்ந்த எம்மவர்கள் பலர் எவ்வித இணைவாக்கவும் (Intergration) அடையாது தமக்குள்ளேயே சுழண்று கொண்டு சமாந்தர சமூகத்தினை (Parallel society) உருவாக்கி கொண்டு வருகின்றனர்.

ஓர் அடையாளமாக இருந்து பெண்களை கட்டுக்குள் உட்படுத்துவதாககருதியிருந்தால் முற்றாக நிராகரித்தது இருக்கலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து. 

அடையாள சின்னத்தின் முக்கியத்தினை வலுப்படுத்துவதாக மணமக்கள் தாலியை பயபக்தியுடன் அணிந்து கையாண்ட முறை ஓர் புலப்படுத்தியது
என்பது எனது விமர்சனமாகும்.

விமர்சனங்களை வலுவான தமது பக்க நியாயங்களுடன் முன்வைத்து இருந்தால் ஏற்றுகொள்ளலாம். மாறாக கலாச்சார காவலர்கள் பெண்களை இழிவுபடுத்தியும் மணமகனை இழிவுபடுத்தி வெளியாகும் பதிவுகளை சமூக விழிப்பு உணர்வாளர்கள் கண்டிக்க முன்வரவேண்டும்.