Sonntag, 14. März 2021

முகத்தினை மறைப்பதிற்கான தடை - Das Verhüllungsverbot

 


கடந்த 7ம் திகதி சுவிறசர்லாந்தில் நடந்து முடிந்த அபிப்பிராய வாக்கெடுப்பும் அத் முடிவுகளும்.இம்முறை பின்வரும் மூன்று அபிப்பிராய வாக்கெடுப்பு சுவிறசர்லாந்தின் அனைத்து கன்ரோன்களில் நடைபெற்றது.

 

1. முகத்தினை மறைப்பதிற்கான தடை Das Verhüllungsverbot

2.இலத்திரன் அடையாள அட்டை «E-ID lektronischer Pass

3. இந்தோனேசியாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் Das Freihandelsabkommen mit Indonesien

 

முகத்தினை மறைப்பதிற்கான தடைக்கான அபிப்பிராய வாக்கெடுப்பினை முன்வைத்தவர்கள் Egerkinger Komitee இஸ்லாமியர்களிற்கு எதிரானதும் வெளிநாட்டவர்களிற்கு எதிரான அதி வலதுசாரி அமைப்பாகும். இவ்வமைப்பானது சுவிற்சர்லாந்து இஸ்லாமியமாகி விடும் என்ற அதி கூடிய பயத்தினால் உருவாக்கபட்ட மனித உரிமைகளை மறுக்கும் ஓர் அமைப்பாகும். 2009ஆண்டு  இஸ்லாமிய மசுதிகளை கூம்பு கோபுரதடதுடன் நிறுவுவதற்கான அனுமதிகள் மறுப்பதற்கான அபிப்பிராய வாக்கெடுப்பினை முன்னெடுத்து 57.5 வாக்குகளை பெற்று வெற்றிபெற்றது.

 

சுவிற்சர்லாந்தின் அரச சாசனத்தின்பிரகாரம் எந்த ஒரு சமுகத்தினதும் உடைகளை தீரமானிப்பதற்கான அதிகாரம் கிடையாது. இவ்வகையில் ஒரு சமூகத்தின் மீது வலோத்காரமான கலாச்சார தடையை அனுமதிப்பது மற்றைய கலாச்சார உடைகளிலும் தமது அதிகாரத்தினை திணிப்பதற்கான வழிவகைகளை செய்வது போன்றதாகிடும். இதனை புரியாத பலர் முகத்தை மறைத்து முட்டாக்கு அணிவது பெண்அடிமைத்தனம் என விடயத்தை குறுகிய பார்வை கொண்டு பார்க்கின்றனர். முகத்தை மூடி முக்காடு போடும் இஸ்லாமிய பெண்கள் இவ்வகையில் ஓர் கருத்தினை வைத்து போராடும் போது அந்த கருத்திற்கு சார்பாக குரல் கொடுப்பது வேறுவிடயம்.

 

இந்த அபிப்பிராய வாக்கெடுப்பானது கருத்து சுதந்திரத்தனையும் கலாச்சார சுதந்திரத்தினையும் மத சுதந்திரத்தினையும் மறுதலிக்கின்றது. இந்நாட்டில் Fastnacht  இன்போது முகமூடி அணிந்து செல்லும் விழாக்களை எப்படிப்பார்ப்பது? தமது கலாச்சார விழாக்களிற்கு வேறுஒரு நீதியும் இன்னும் ஒருசமூகத்திற்கு வேறு நியாயம் வழங்குவது ஒரு வகை அடக்கு முறையாகவே பார்க்க முடியும். Egerkinger Komitee தமது நாடு இஸ்லாமிமயமாகி விடும் என பயந்து ஒரு மதத்திற்கு எதிராக பல தடைகளை மேற்கொண்டு வருகின்றது. இதேபோல் பல மத மாற்றங்களை நிர்ப்பந்தித்துவரும் பல மதக்குழுக்களின் நடவடிக்கைகளை எவ்வாறு பார்ப்பது? இத்தார்மிக மற்றநடவடிக்கைகளை தனிேய பெண் உரிமை மீதான அக்கறையதக காட்டி வலது சாரிகள் தம்மை முற்போக்கு முகமூடிக்குள் போர்த்து மூடும் நாடகம் கண்டிக்க தக்கது.

 

சிறுபாண்மையாக வாழும் சமூகங்கள் இவ்வகையில் மேற்கொள்ளப்படும் சுதந்திர மறுப்புக்களை இது எமக்கல்லஎனைய சமுகத்திற்கானது என கருதி இவ்வகை மனித உரிமைமறுப்பிற்கு ஆதரவாக வாக்களிப்பது ஆபத்தானது.

 

51,2 %ஆம் எனவும்:48,8 % இல்லை என்ற விகிதாசார அடிப்படையில் Egerkinger Komitee முன்வைக்கட்ட நியாயமற்ற கோரிக்கை வெற்றி பெற்றது. 18 கன்ரோன்கள் பெரும்பாண்மையாக ஆம் 5 கன்ரோன்கள் இல்லை ெபரம்பாண்மையாக வாக்களித்தது குறிப்பிட தக்கது எனவும் இதே சட்ட முலம் எப்பொழுது எமது பாரம்பரிய உடைகள மீதும் மற்றைய சமூகங்களின் உடை கள் மீது ஆதிக்ககரத்தினன வைக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.