Sonntag, 11. September 2016

சுவிற்சர்லாந்து போலி தமிழ் தேசியவாதிகள் ஓர் அம்பலப்படுத்தல்


சுவிற்சர்லாந்து தமிழர் ஓருங்கிணைப்பு குழு (STCC) எனும் பெயரில் இன்றும் புலிகளின் தலை இல்லாத பின்னரும் அதே பெயரில் இயங்கிவரும் இவ் அமைப்பும். தமிழ் தேசியமே தமது குறிக்கோல் என்று பிதற்றி திரியும் மற்றைய சில அமைப்புகளும் சீறிலங்கா சுவிற்சர்லாந்து வர்த்தக சமூகத்தினால் நடாத்தபட்ட கலாச்சார உணவு விழாவினை நிகழ்வை கண்டித்து எதிர்ப்பை தெரியப்படுத்தியிருந்தனர்.

விடுதலைப்புலிகளிற்காக புலத்தில் வேலை செய்த பலர் இன்று இலங்கை அரசுடன் மிக நெருக்கமாக கைகோர்த்து தமது வியாபாரத்தினை நடாத்துவதை யாரும் மறக்கமுடியாது. இவர்கள் இன்றும் இலங்கைக்கு ராஜமரியாதையுடன் சென்றுவருகின்றனர். 

புலம் பெயர் மக்களை ஓன்றினைத்து தமது வியாபரத்தினை பெருக்குவதற்கு ஓர் ஆயுதாமாகவே தமிழ் தேசியத்தினை கையில் எடுக்கின்றனர். இவ்வகையில் கடந்த தமிழ் தேசியத்தின் ஆதரவுடன் செயற்பட்ட பல வியாபர ஸ்தாபனங்கள் இன்று பெரிய வெற்றிகரமான நிறுவனங்களாக வலம்வருவதை யாரும் மறுக்க இயலாது.

விடுதலைப்புலிகள் தளத்தில் போராடிய போது அவர்களுக்காக நிதி சேகரித்தவர்கள் தலைமை அழிந்த பின்னரும் நிதியில் ருசி கண்ட éணைகளான இவர்கள் இன்றும் தமிழ் தேசியத்தின் பெயரில் புலம்பெயர் மக்கள் வியர்வை சிந்திய பணத்தினை கபளீகரம் செய்து வருகின்றனர். இவ்வகை கபளீகரங்களை செய்வதற்கு தமிழ்தேசியத்தின் காவலர் எனும் அங்கி இவர்களிற்கு அத்தியவசிமாகின்றது. தாம் சேகரிக்கும் நிதிக்கான பிரச்சார யுக்கதிக்காகவே பல போலிபோரட்ட நிகழ்வுகளை காலத்திற்கு காலம் நிகழ்த்திவருகின்றனர்.

  • ஐ.நா விற்கு படையெடுப்பது

  • மாவீரர்களின் பெயரை கூறி விளையாட்டு போட்டிகளை நடாத்தி இலட்சக்கணக்கான சுவிஸ்பிராங்குகளை திரட்டுவது
  • கல்விசேவை என்ற பெயரில் தமிழ் கல்வி கலாச்சார கல்வி என்ற பெயரில் சுவிற்சர்லாந்து அரசிலிருந்தும் நிதியை பெறுவது மட்டுமல்லாது பெற்றோரிடமும் பணத்தினை கறந்து மிக குறைந்த கூலியை ஆசிரியர்களிற்கு வழங்குவது.
  • அத்துடன் நின்று விடாது வருமானத்தினை அள்ளி வழங்கும் கோயில்களை தமது பினாமிகளை கொண்டு போலி நிர்வாக்த்தினை உருவாக்கி கோலில் நிதியை தேசியத்தின் பெயரில் கையாள்வது.
  • சுயாதீன அமைப்புகள் நாடாத்தும் கலாச்சார நிகழ்ச்சிகளில் சேகரிக்கும்நிதியை தேசியத்தின் பெயரில் கப்பம் பெறுவது. 



என பல அட்டூளியங்களை செய்து வந்தவர்கள் இறுதி யுத்ததின் போது அவசர நிதி சேகரிக்கும் போது போதுமான வருமானமற்ற குடும்பங்களின் பெயரில் தமது சுவிற்சர்லாந்து வங்கி தரகர்கள் மூலம் போலி ஆதாரங்களை சமர்பித்து ஓரு இலட்சம் சுவிஸ்பிராங்குகளை வசூலித்து இந்த கடன்களை அடைக்க இயலாது பலர் இன்று மதுவுக்கும் குடும்ப பிளவுக்கும் உள்ளாகியுள்ளனர். 

கல்வி சேவை பொறுப்பாளர்களிற்கு இவர்கள் கொடுத்த சம்பளம் சுவிற்கர்லாந்தில் ஓர் உயர்மட்ட உத்தியோகத்தினர்களிற்கு வழங்கும் ஊதியத்திற்கு நிகரானது. இந்நாட்டில் வாழும் பல தமிழர்கள் மிக குறைந்த ஊதியத்திலேயே தொழில்சாலைகளிலும் உணவுவிடுதிகளிலும் வேலை செய்து வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடதக்கது.

2009 ற்கு முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமை உயிரிடன் இருக்கும் போது அவர்களிற்கு சேகரித்த நிதி விபரங்கள் காட்டவேண்டும் என்ற நிhபந்தம் இருந்தது. 2009 இற்கு பிற்பாடு நடத்திய மாவீரர் தினம் விளையாட்டுபோட்டிகளில் சேகரித்த பணவிபரத்தினை மக்கள் முன் ஏன் இந்ந முகவர்கள் முன்வைக்கவில்லை.

  • சுவிற்சர்லாந்து வாழ் மக்கள் இவர்களிடம் கணக்கு விபரங்களை ஏன் கேட்க மறந்தனர். 
  • இவ்வாறு சேகரிக்கபடும் நிதிகள் தளத்தில் தலைமையற்ற நிலையில் எங்கு செல்கின்றது.
  • நிhவாகத்திற்கு தேரியாமல் போலி நிர்வாகத்தினை உருவாக்கி கோயில் பணத்தினை ஏன் சூறை ஆடுகின்றனர்.


ஏற்கனவே கல்வி சேவையை மேலும் STCC யுடன் சேர்ந்து செய்ய விரும்பாத சுயாதீன அமைப்புகள் தனியே கல்விசேவையை தொடர்ந்த போது கீரைக்கடைக்கு எதிர்கடை போடுவது போல் அதே பெயரில் புதிய வகுப்புக்களை ஆரம்பிப்பதற்காக செய்யபட்ட விளம்பரத்தினை பாருங்கள்.

யுத்தின் பின்னர் இவர்களால் கைவிடப்பட்ட போராளிகளும் பொதுமக்களும் வழ்வாதரம் அற்று தவிக்கின்றனர். இவ் அமைப்புகள் புலம்பெயர் மக்களிடம் இருந்து சேகரக்கபட்ட நிதியே அம்மக்களின் கண்ணீரை துடைப்பதற்கு. இவர்களால் திரட்டபட்ட நிதி எங்கே? இம் மக்களின் வாழ்வாதரத்திற்கும் கல்வி மேம்பாட்டிற்கு பல தன்னார்வ குழுக்களே முன்வந்து உதவிவருகின்றனர்.

இன்று ஓரளவு மூச்சு விடும்  நிலைமையிலுள்ள பழைய விடுதலைப்புலிப் போராளிகளை மீண்டும் ஓர் போராட்டத்தினை நடாத்துமாறு நெருக்கடிகளை கொடுத்துவருவது பற்றி போரளிகள் பலர் உதவி வழங்கசென்றவர்களிடம் முறைப்பாடு செய்துள்ளனர். புலம்பெயர் நாடுhளில் வசதியாக வாழ்ந்து கொண்டு அம்மக்களை மேலும் நிர்பந்ததிற்கு உள்ளாக்காது. போரட விருப்பமாயின் நீங்கள் நேரடியாக களத்தில் குதியுங்கள் அல்லது உங்கள் பிள்ளைகளை போராட்டத்திற்கு அனுப்புங்கள். உங்கள் வெற்று அறிக்கை போராட்டங்களும் கோரிக்கைகளும் மேலும் இலங்கையில் வாழும் தமிழ்மக்களிற்கே ஆபத்தனதாகும். அந் நடே தஞ்சம் என வாழும் மக்களால் நடாத்தும் போராட்டங்களிற்கு உங்கள் சொலிடாரிட்டியை தெரவியுங்கள் மாறாக உபத்திரவம் செய்யாதீர்கள்.

இலங்கையில் வாழும் மக்கள் இன்று மிக குறைந்த எண்ணிக்கையை கொண்ட ஓர் தேசிய இனமாக மாறியதற்து எமது தமிழ் மிதவாத தலைமைகள் எப்படி காரணமாகியிருந்தார்களோ அதே போல் யுத்தமும்; பலரை புலம்பெயர் வைத்தது. போட்டியில் தோற்று போனோம் மீண்டும் ஓர் போட்டியை ஏற்படுத்தி வெல்லுவோம் என்ற மன நிலையில் இருந்து சிந்திக்காது. இலங்கை வாழ்வாதரங்களை உயர்த்துவதிலும் சுய தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு உதவுங்கள். அவர்களின் வாழை;வாதார உயர்வு ஓர் காத்திரமான அரசியல் உரிமைக்கான போரட்டத்தினை நோக்கி நகர்த்தும். இலங்கை வாழ் தமிழர்களின் வெளியேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கiயும் சிங்கள பேரினவாதத்திற்கு கிடைக்கும் போனஸ் ஆகும்.
  • புலம் பெயர் வாழ் தமிழ் மக்களே போலி தேசியவாதிகளை இனங்காணுங்கள். தேசியத்தின் பெயரில் சேகரக்கும் நிதி விபரங்களை பெதுவெளியில் முன்வைக்க கோருங்கள்.

  • புலம்பெயர் மக்களே 2009 இறுதியுத்ததிற்காக சேகரித்த நிதிக்கான விபரங்களை  முன்வைக்குமாறு கோருங்கள்.
  • 2009 ஆண்டிற்கு பின்னர் சோத்த நிதிக்கான கணக்கு விபரங்களை கோருங்கள்.

இவர்களின் வியாபார உத்திக்காக பயன்படும் தமிழ்தேசியம் என்ற போர்வையில் இவர்கள் நடாத்தும் போலிப்போரட்டங்களிற்கு எடுபடாதீர்கள்.

வாழ்வாதாரமின்றியும் போரட்டத்தில் ஊனமுற்ற மக்களிற்கும் போராளிகளிற்கும் உங்களிற்கு தெரிந்த தன்னார்வகுழக்களுடன் இணைந்து உதிவிகளை வழங்கி அம்மமக்களிற்கு ஓர் நிரந்தர வாழ்வாதர  வழிவகைகளை ஏற்படுத்தி கொடுக்க முன்வாருங்கள்.

க.சுதாகரன்

11.09.2016