தமிழ் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் கைதிகளின் விடுதலைபற்றி பேச வந்த முன்னால் போராளிகளுடன் திமிராக நடந்து கொண்டதை வன்மையாக கண்டிக்கவேண்டும். அரசியல்வாதிகள் மக்காளால் மக்களிற்கு சேவை செய்வதற்காகவே தெரிவுசெய்ப்படுகின்றனர். ஏதோ தாமே மக்களின் எஐமானார்கள் போல் திமிராக அரசியல் அதிகாரத்தினை தமது பக்கபலமாக கொண்டு மக்களை ஏளனத்துடன் அல்லது பொருட்படுத்தாது நடக்கும் போக்கு அனைத்து தரப்பினராளும் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும். உருப்படியான ஜனநாயக முறையிலான கட்சியாக இருப்பின் கூட்டமைப்பு பாரபட்சமின்றி ஓழுங்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும். தனது திமிர்த்தனமான நடவடிக்கையின் தவறினை சுயவிமர்சனம் செய்து மன்னிப்பு கோரல் வேண்டும். மேற் குறிப்பிட்ட நடவடிக்கையே ஓர் நேர்மையாக மக்களை நேசிக்கும் அரசியல்வாதியின் பண்பாக இருக்கமுடியும்.
இதேபோல் சுவிற்சர்லாந்திற்கு சுரேஸ் பிரமேச்சந்திரன் வந்திருந்த போது எனது நண்பர் அரசியல் விடயங்களை பேசத்துடங்கியவுடன். பிரமேச்சந்திரன் பேசியவிடயங்களை பொருட்படுத்ததாது இவர்கள் கூறி நான் என்ன கேட்பது என்ற தமிரில் நடந்து கொண்டதாக என்னிடம் தெரிவத்திருந்தது ஞாபகத்திற்கு வந்தது. அரசியல்வாதிகள் என்றால் எல்லாம் தெரிந்த மகான்களான தம்மை நினைத்து கொள்ளுகின்றனர். மிதவாத அரசியிலில் ஈடுபடும் தனிநபர்களிற்கும் எவ்வித அறிவு சார்ந்த தகுதிலை இன்றி மக்கனை நேசிக்கும் பண்பு மட்டுமே போதுமானது. இதற்கு அடுத்தபடியாகவே மற்றவை எல்லாம்.
நேர்மையான அரசியல் வாதிகள் முதலில் கேட்கும் பண்பினை வளாத்து கொள்ளவேண்டும். ஓர் நிறுவனத்தினை முகாமுத்துவபடுத்தும் ஓர் சிறந்த தலைவருக்கும் இப்பண்பு அவசிமானதாகும். தம்மை தெரிவு செய்த மக்கள் தங்கள் குறைகளை முன்வைக்கும் பொழுது அவ்விடயங்களிற்கு நேரங்களை ஓதுக்கி கூர்ந்து குறைகளை கேட்டறிதல் வேண்டும். இவ்வகை அலட்சியப்போக்காக நடப்பது மக்களை இவர்கள் அடிமைகளாகவே கருதும் போக்;கினையையே வெளிப்படுத்துகின்றது.
சுவிற்சர்லாந்து பாரளுமன்ற தலைமைப்பொறுப்பினை திருமதி சொம்மரூகா ஏற்றபோது மக்களிற்க்கு ஆற்றிய உரையில் தான் இன்றும் வழமைபோல் சுவிற்சர்லாந்து பாராளுமன்ற முன்றலில் ஓன்று கூடும் சந்தையிலேயே சமைலுக்கு தேவையான மரக்கறிகள் பழங்கள் வெண்ணெய் என்பவற்றினை கொள்வனவு செய்து வருகின்றேன் என தெரிவித்து இருந்தார். இதன் மூலம் நான் அன்றாடம் விவாசாயிகளையும் மக்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைப்பதாக கூறி பெருமைப்பட்டார். எமது இலங்கை இந்திய அரசியல்வாதிகள் சந்திக்க வரும் மக்களை உதாசீனம் செயது; தம்மை ஓர் அரசியல் பிரபுகளாக வெளிப்படுத்துகின்றனர்.
தேர்தல் பிரச்சாரத்திற்கு வான் ஊர்தியும் மற்றும் சட்டமன்றம் செல்லாது ஓய்வெடுக்க ஓர் மாளிகை ஜெயலலிதாவுக்கு
கரும்புத்தோட்டத்தில் சிமெந்து மூலம் அமைக்கபட்ட பிரத்தியேக பாதை ஸ்ராலின்க்கு
குறுகியகாலத்தில் அரசியலுக்கு வந்த சீமானிற்கு கூட்டங்களில் கறுப்பு கண்ணாடி அணிந்த தனி பாதுகாப்பு படை சொகுசு வாகனம்
இவற்றைப்பார்க்கும் போது சுவிற்சர்லாந்து பெரும்பாண்மை அரசியல்வாதிகள் பாராளுமன்றத்திற்கும் கூட்டங்களிற்கும் புகையிரதத்தினையே பயன்படுத்துகின்றது. இவர்கள் தம்மோடு ஓர் கூட்டத்தினையோ அல்லது பாதுகாப்பு படையினையோ அழைத்து செல்வதில்லை.
ஆனால் இன்று இந்நாட்டு அரசியிலுடன் தம்மை இணைத்துகொண்ட பல தமிழ் அரசியல் வாதிகள் தம்மை புகைப்படம் எடுத்தும் செல்வி எடுத்தும் பிரபல்யபடுத்தும் இந்திய இலங்கைபாணி மலிவு விளம்பரங்களை செய்து வருவது கவலைதருகின்றது. தம் சார்ந்த கட்சியின் கொள்கையுடன் உடன்பாடு கொள்ளாது தனியே வேட்பாளர்கள் ஆவதற்கு இந்நாட்டுகட்சிகளை பயன்படுத்திகொள்ளுகின்றனர். புலத்தில் வாழும் தமிழர்களும் இந்நாட்டு அரசியலில் அங்ஙத்துவம் பெறவேண்டும் என துடிக்கும் புலத்து தமிழ் அரசியல்வாதிகள். தமிழரே தமிழ்நாட்டை ஆழவேண்டும் என இனவாதம் கக்கும் சீமானுக்கு ஆதரவாக தமது முகநூலில் பதிவு இட்டுவருகின்றனர். இந்நாட்டு மக்களும் அரசியல் அங்கத்தும் தமது éர்வீக குடிகளுக்கு மட்டும் என்று கருதி இருந்தால் ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் எந்தவொரு தமிழனும் கட்சிகளில் அங்கம் கூட வகித்திருக்க முடியாது என்பதனை சிந்தித்து பார்க்கவேண்டும்.
தயவு செய்து புலத்தில் முளைத்திருக்கும் புதிய மிதவாத அரசியல்வாதிகள் இலங்கை இந்திய அரசியல் கலாச்சாரத்தினை மேடையாற்றாது தம்மை ஓர் மக்கள் பிரதிநிதியாக்குவதற்கு முன்தேவையான சமூக பிரங்ஞையை தன்னகத்தே வளர்த்து கொள்ள வேண்டும்.