Sonntag, 12. November 2017

வடக்கு கிழக்கு இணைப்புபற்றிய மறுபார்வை


வடக்கு தலைமைகள் பேரினவாதிகளின் இன ஓடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுப்பதில் பின்னுக்கு நிற்பவர்கள் அல்ல. ஆனால் இலங்கையில் வாழ் ஏனைய சிறுபாண்மை சமூகங்களின் அரசியல் உரிமைகளை மதிக்க தெரியாதவர்கள். இதன் வெளிப்பாடே வடகிழக்கு தமிழ் அரசியல் வாதிகளால் முன்வைக்கப்படும் வடகிழக்கு இணைப்பு கோரிக்கை.

கிழக்கில் வாழும் இஸ்லாமியதமிழர்கள் தம்மை வியாபரரீதயாக வளர்த்து தாம் வாழும் பகுதிகளை பொருளாதார ரீதியில் செழிப்புற வைத்துள்ளனர். மாறி மாறி வரும் சிங்கள கட்சிகளுடன் கூட்டுச்சேர்ந்து தமது பொருளாதாரங்களையும் அபிவிருத்தி திட்டங்களையும்  தமது பகுதி நோக்கி நகர்த்தி உள்ளனர். கிழக்கில் ஆட்சிக்கட்டிலில் இருக்கும் ஏனைய தமிழ் தலைமைகள் தாம் சார்ந்த பகுதிகளில் எந்தவித உருப்படியாக மக்களின் நலன் நோக்கி திட்டங்களையும் முன்வைக்கவில்லை. தம்மிடம் உள்ள இயலாமையை மறைக்க இஸ்லாமியதமிழர்களை குறை கூறியே காலத்தினை கடத்துகின்றனர். அரேபிய நாடுகளில் தொழில்புரிந்து நாடுதிரும்பும் பல இஸ்லாமியதமிழர்கள தமது பிரதேசத்திங்களில் பல முதலீடுகளை மேற்கொண்டு தமது பொருளாதார வளத்தினை மேன்படுத்துகின்றனர். ஆனால் கிழக்குவாழ் புலம்பெயர் தமிழர்கள் வீடுகளையும் கோயில்களை மட்டுமே கட்டித்தள்ளுகின்றனர். இதே போல் இஸ்லாமியதமிழர்களும் பள்ளிவாசல்களை கட்டினாலும் பொருளாதாரத்திலும் வணிகத்துறையிலும் கவனம் செலுத்துகின்றனர்.

இஸ்லாமியதமிழர்களின் ஆதிக்கத்தினை ஓடுக்குவதற்கான ஓர் வழிமுறையாகவே வடக்குகிழக்கு தமிழர்கள் இன்று வடக்குகிழக்கு இணைப்பை கையில் தூக்குகின்றனர். இன்னுமொரு சிறுபாண்மை இனத்தினை ஓடுக்குவதற்கான ஓர் கோசமாகவே அதனை பார்க்க முடிகின்றது.

வடக்கில் மத்திய அரசினால் வளங்கப்படும் குறைந்த பட்ச பணத்தினை கொண்டே எவ்வித திட்டங்களையும் மேற்கொள்ளாத இந்த தலைமைகள் இரண்டு மாநிலங்களைலும் ஓன்றிணைத்து பெரிதாக ஒன்றும் வெட்டிக்கிழிக்க போவதில்லை.

வடக்கு அரசியல் வாதிகளும் அரச அதிகாரிகளும் வடக்கில் வாழும் சமூகங்க்ளின் மீதே தமது திமிரான ஆதிக்கத்தினை செலுத்தி தமது மக்கiளையே சுரண்டுகின்றனர். இவர்களால் எவ்வாறு மற்றைய சிறுபாண்ணமை சமூகங்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளமுடியும்?
மாற்றிய அமைக்க இருக்கும் அரசியல் யாப்புவில் இஸ்லாமியதமிழர்கள் தனி ஓர் அலகாக இருப்பதே எதிர்காலங்களில் பல உள் முரண்பாடுகளை தவிhத்து கிழக்குவாழ் தமிழர்களுடன் ஓர் நல் உறவை பேண வழிவகுக்கும்.

இதேபோல் வடக்கு வாழ் தமிழர்களின் கலாச்சாரத்திற்கும் கிழக்கு வாழ் தமிழர்களின் கலாச்சாரத்திற்கும் பல வேறுபாடுகள் உள்ளன. வடக்கு ஓர் தமிழ்பேசும் மாநிலமாகவும் கிழக்கு ஓர் தமிழ்பேசும் மாநிலமாக ஆனால் இரண்டு அலகுகளை கொண்ட பிரதேசமாக இருப்பதே இலங்கையில் எதிர்காலங்களில் சிறுபாண்மையினங்களின் அரசியல் அதிகாரத்தினை நிலைநிறுத்த முடியும் என்பது எனது பார்வை. ஆனால் இக் கோரக்கையினை சிங்களத்தரப்பும் தமிழ்தரப்பும் ஏற்று கொள்ள போவதில்லை என்பது மறுவிடயம்.

இவ்விடயம் சம்பந்தமாக இஸ்லாமியதலைமைகளும் தமிழ்தலைமைகளும் மேலம் ஆழ்ந்து சிந்தித்து செயற்பட வேண்டும்.

சுவிற்சர்லாந்தில் 1979 இல் உருவாகிய Jura மாநிலம் உருவாகியது. ஆனால் இவ் மாநில உருவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த பேர்ண் மாநிலம் ஓரு சில பிரதேசங்களை தமது மாநிலத்துடன் இணைத்து வைத்திருந்தது. இவ்வாறு இணைத்து வைக்கபட்ட பிரதேசமான மூட்டியே "Moutier" என்ற பிரதேசம் கடந்த êன்மாதம் சர்வசன வாக்கெடுப்பினை நடாத்தி தாம் Jura கன்ரனுடன் இணைவதற்கான மக்களின் ஆணையை பெற்றுள்ளனர்.

இணைவு பிரிவு மக்களின் அரசியல் அபிலாசகளிற்கு ஏற்பவும் சூழ்நிலைகளிற்கு ஏற்பவும் மாறுபடும். எவ்வாறு இலங்கை அரசு பிரிக்ககூடாத இலங்கை என்பதில் பிடிவாதகமாக உள்ளதோ அதேபோன்று தமிழ் தலைமைகளும் வடகிழக்கு தாயகம் எனும் கோரிக்கையில் அழுங்குபிடியாக உள்ளனர். இவ்விரண்டுமே சிறுபாண்மை இனங்களையும் மக்கள் குழுக்களையும் ஓடுக்கும் ஓர் வன்மமான கோரிக்கiயாகவே பார்க்க வேண்டியுள்ளது.


பிரிவு ஓர் புரிந்துணர்வை ஏற்படுத்த கூடிய சார்த்தியங்களை உருவாக்கும். மாறாக கட்டாய இணைப்பு மீண்டும் மீண்டும் முரண்பாடுகளை வலுவடையச்செய்யும். 

Keine Kommentare:

Kommentar posten