Dienstag, 5. November 2019

இலங்கை தேர்தல் பற்றிய ஓர் பார்வை - Ganapathipillai Suthakaranழமைபோல் தேர்தல் காலங்களில் பொய்வாக்குறுதியகளும் கட்சிகளின் கூட்டுக்களும் வழமைபோல் மேடை ஏறின. அத்துடன் மூட்டையாக மூட்டையாக பணங்களும் பரிமாற்றபட்டன. சிறுபாண்மை மக்களின் அரசியல் அபிவிருத்தி திட்டங்களில் இத்தேர்தல் எவ்வித மாற்றங்களை கொண்டுவருமா வராத என்ற ஏக்கம் மட்டுமே சிறுபாண்மை மக்களிடம் காணப்படுகின்றது.பெரும்பாண்மை சமூகமும் வரப்போகின்ற ஜனாதிமாற்றம் பொருட்களின் விலைவாசி குறைப்பு மற்றும் வேலைவாய்ப்பு போன்ற வாழ்வாதார திட்டங்களை எதிர்நோக்கி காத்திருக்கின்றது.


வடக்கின் நிலைமை

வடக்கு வாழ் தமிழர்களின் கட்சிகள் எந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என முடிவெடுத்தாலும் முடிவெடுக்காவிட்டாலும். வடக்கு வாழ் தமிழர்களிற்கும் வாக்குகள் சஜீத் பிரேமதாசாவிற்கு சென்றடைய போகின்றது என்ற நிலைமையே காணப்படுகின்றது. நல்லாட்சிகாலத்தில் சிறுபாண்மை மக்களின் அரசியல் உரிமை விடயத்தில் எவ்வித முன்னெடுப்புக்களையும் வெற்றிகரமாக முன்னெடுக்கவில்லை என்பது வடக்குவாழ் தமிழர்கள் அறிந்த பொழுதிலும். யுத்ததினை முன்னெடுத்த இராஜபக்ச குடும்பத்தின் ஆட்சிவரக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர். சஜீத் பிரேமதாசா சிறுபாண்மைமக்களின் அரசியல் தீர்விற்கு எவ்வித உறுதியான தீர்வுத்திட்டங்களை முன்வைக்காத போதும் மக்கள் கோட்டபாயா, இராஜபக்சவின் வாக்குறுதிகளை நம்பத்தயாராக இல்லை. ஆனாலும் இராஜபக்ச அரசினால் மாத்திரமே இலங்கை உயர்பீட பொளத்த பீடாதிபதிகளையும் இனவாதிகளையும் சமாதனம் செய்து சிறுபாண்மை மக்களின் அரசியல் உரிமைக்காண தீர்வினை கொண்டவரமுடியும் என்பது உண்மையானது. ஆனால் இவர்கள் இதனைசெய்யப்போவதில்லை என்பதே உண்மையாகும் இவ்வாறான ஓர் மாற்றத்தினை UNP கொண்டுவர முற்பட்டாலோ அல்லது அவ்விடயம் பற்றி பேசினாலோ இராஜபக்ச குடும்பம் தனது கட்டுப்பாட்டில் உள்ள பொளத்த பீடாதயத்தினையும் இனவாதிகளையும் தூண்டிவிட்டு கூத்துபார்க்கும். 


கூட்டமைப்புக்கு தனியே MP அங்கத்துவம் மட்டுமே இலக்கு. அதுவே இலகுவான எவ்வித பொறுப்புமற்ற தொழில். கொழும்பில் தங்குமிட வசதி பாதுகாப்பு அரச வாகனம் மற்றும் அனைத்து சலுகைகளை மட்டும்பெற்று பொறுப்பற்று கிடப்பதே அவர்களின் தாரக மந்திரம். மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் அரசாங்கத்தின் பங்குதாராராக இருக்கும் போதே பல சவாலான விடயங்களை தம்மை தெரிவு செய்த மக்களின் பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தி கொடுக்க முடியும். இலங்கை வாழ் அனைத்து மக்களின் நலனிலும்; அக்கறைப்பட வேண்டிய தேவை ஏற்படும். எப்பவும் ஆட்சிக்குவரும் கட்சிகளிற்கு பின்கதாவால் நின்று முண்டுகொடுப்பது அல்லது எதிர்ப்பது இதுவே இவாகளின் நீண்டகால செயல் திட்டம். மலையக அல்லது இஸ்லாமிய கட்சிகள் காலம் காலம் மாறிவரும் ஆட்சியில் தம்மை பங்காளிகளாக மாற்றி கொண்டதால் தமது பிரதேச மக்களிற்கு ஓரு சில அபிவிருத்தி  வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுக்க கூடியாதாக இருந்தது. ஆனால் இவ்வாய்ப்புக்களையும் துஸ்பிரயோகம் செய்து தமது வயிற்றினை மட்டுமே வளர்த்துள்ளனர். 

தமிழ்மக்களின் அரசியல் உரிமைகிடைத்த பின்பே அரசில் பங்கு என கூறி அதற்கான எவ்வித உருப்படியான முன்னெடுப்புமின்றி தனியே தமக்கு அரசினால் கிடைக்கும் சுகபோகத்தினை மட்டும் அனுபவிப்பது எவ்விதத்தில் நியாயமாகும்?

கூட்டமைப்பினை கழுவி ஊத்தி அந்த இடத்தினை பிடிக்க துடிக்கும் சைக்கிள்களும் நடைமுறைக்கு சாத்தியமற்ற தீர்வுகளை முன்வைப்பதும் தமிழ் மக்களிடம் இனவாதத்தினை வளர்ப்பதும் மக்களை புலம்பெயர தூண்டுவது போன்ற செயற்பாடுகளை செவ்வணே செய்து வருகின்றனர். இவர்கள் மக்களின் உணர்ச்சிகளை தூண்டி வாக்குகளாக்கி தாமும் இந்த அரசியல் வலம்வரவேண்டும் என்பதே முக்கிய நோக்கமாக கொண்டு செயல்படுகின்றனர். இவர்களின் நிகழ்ச்சி நிரல் பெரும்பாலும் புலத்து கனவாளிகளிடமிருந்தே தயாரிக்கபடுகின்றது

கிழக்கின் நிலைமை

தமிழ் பேசும் இஸ்லாமியர்களுக்கும் மற்றைய தமிழ் பேசும் மக்களிற்கிடையிலான முரண்பாடு வலுவடைந்து இரு சாரர்கிடையிலான நம்பிக்ககையீனங்கள் வலுப்பட்டுள்ளது. இந்நிலைமையை சரியாக இராஜபக்கச குடும்பம் கருணா அம்மான் மூலமும் பிள்ளையானின் ஆதரவாளர்கள் மூலமும் தனக்கு சாதகமாக பயன்படுத்திவருகின்றது. தமிழ்பேசும் இஸ்லாமியர்கள் UNP முகாமிற்குள் ஓன்று குவிந்துள்ளனர். ஏத்தனையோ முரண்பாடுகள் கிழக்கில் நிலவும் போதும் அடாப்பிடியாக வடக்கு கிழக்கு இணைந்த தீர்வு என தமிழர்தரப்பு பேசியவண்ணம் உள்ளது. இப்பிரதேசத்தினை தமிழ்பேசும் இஸ்லாமிய அதிதீவிர வாதிகளும் ஏனைய தமிழ்பேசும் அதிதீவிரவாதிகளின் ஆதிக்க கருத்துக்கள் வலுபெற்றுள்ளன. இசூழலை பேரினவாதிகள் நன்கு பயன்படுத்துகின்றனர்.

மகிந்த இராஜபக்ச குடும்பத்திற்கு முண்டுகொடுப்பவர்கள் 


விடுதலைப்புலிகளில் இருந்து பிரிந்து வந்து தம்மை காப்பற்றிகொள்ள இராஜபக்ச குடும்பத்தில் சரண் அடைந்வர்கள். மற்றும் விடுதலைப்புலி காலத்தில் தம்மைகாப்பாற்றி கொள்ள இராஜபக்ச குடும்பத்தில் தஞ்சம் அடைந்தவர்களே இன்றும் இராஜபக்ச ஆதிக்கத்திற்கு முண்டுகொடுத்து வருகின்றனர். இவர்களுடன் இணைந்து இன்னமும் ஓருசில மலையகத்தலைமைகளும் தமிழ் பேசும் இஸ்லாமியத்தலைமைகளும் கூட்டுசேர்ந்துள்ளனர்.

வளர்ந்துவரும் மூன்றாம் தரப்பு

தேசிய மக்கள் சக்தி பல திட்டங்களையும் பார்வையினையும்தன்னகத்தில் கொண்டிருக்கின்றனர். தற்போதைய இரண்டு பாரிய கட்சிகளின் ஆதிக்கத்தினை முறியடிக்க வேண்டுமானால் புதிய மூன்றாம் தலைமையை ஆதரிக்க வேண்டும் அனுர குமார திசயாநாயக்க இருக்கின்ற சிங்களதலைமைகளின் ஊழலகள்; பொய்வாக்குறிதிகள்; போதைவஸ்து சட்டவிரோத சம்பவங்களை நீண்டகாலமாக அம்பலபடுத்தி வரும் ஓரு நபர். தமிழ் கூட்டமைப்பு யாரையாவது காப்பற்றியே மற்றவரை மட்டுமே விமர்சிக்கின்றது. சிறுபாண்மை மக்கள் மாறிமாறி ஆட்சிக்குவரும் இரு பெரும் கட்சிகளையும் வீழ்த்தி ஓர் புதிய தலைமையை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தினை பார்க்க தவறுவது. வரலாற்றில் மேற்கொள்ளப்படும் மீண்டும் ஓர் பெரிய தவறாகும்.


இவர்களுடன் ஏன் எந்தவொரு தமிழ்கட்சிகளும் கூட்டுச்சேரவோ அல்லது ஆதரிக்கவோ விரும்பவில்லை என்பது மீண்டும் தமிழ்கட்சிகளின் அரசியல் வியாபரத்தினை அம்பலப்படுத்துவாதாகவே எடுத்துகொள்ள கூடியதாக உள்ளது.

தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடும் அனுர திஸநாயக்க வெல்ல கூடிய சாத்தியம் உள்ளதா என்பதனை தாண்டி இம்முறை நடைபெறும் தேர்தலில் கோட்டபாயாவோ சஜித் பிரமதாசாவோ 51 விகத வாக்குகள் எடுத்து முதலாவது வாக்கெடுப்பில் வெற்றி பெற வைக்கவிடாது தடுக்க முடியும். மூன்றாம் தலைமையை வலுப்படுத்தி இரண்டவாது வாக்கெடுப்பு நடைபெற்று அறுதி பெரும்பாண்மையை நிலைநாட்டும் நிலைமைக்கு வேட்பாளர்களை தள்ளபடல் வேண்டும்

தமிழ் பேசும் மக்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும் சிறுபாண்மை மக்களின் உரிமைகள் விடயத்தில் UNP யோ  மகிந்த அணியோ எவ்வித வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என்பதனை புரிந்து கொள்ளவேண்டும். இவர்களிற்கு முகத்தில் சேறு பூச விரும்பினால்  மூன்றாhம் தலைiயான அனுர திஸநாயக்கவின் கையை வலுப்படுத்தி அறுதிப்பெரும்பாண்மையை எடுக்கவிடாமல் தடுத்தாலே இவர்கள் இரண்டாம் கட்ட வாக்களிப்பின் போது சிறுபாண்மை மக்களின் கருத்துக்களிற்கு செவிமெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். 

எல்லா சிறுபாண்மை மக்களும் தனியே கோட்டபாயாவின் வெறுப்பில் சஜித் பிரேமாதாசாவிற்கு வாக்குகளை அள்ளிக்கொட்டுவதால் ஒன்றும் நடக்கபோவதில்லை. மீண்டும் ஓர் முறை சிறுபாண்மை மக்கள் ஏமாற்றம் அடையப்போகின்றனர். அரசியல் உரிமையில் மாற்றத்தினை செய்ய முடியாத அல்லது செய்ய விரும்பாத ஓருவரை தெரிவு செய்வதால் இலங்கை வாழ் சிறுபாண்மை மக்கள் தங்கள் வாயில் தாமே மண்ணைப் போடப்போகின்றார்கள். 

சஜித் பிரேமதாச தனது தேர்தல் பிரச்சாரங்களில் சிறுபாண்மை மக்களின் உரிமைகள் பற்றிய ஆணித்தரமான கருத்துக்களை முன்வைக்கவில்லை. இதனையே கடந்த தேர்தலில் மைத்திரிபால சிரிசேனா செய்தார் என்பதனை இலங்கை வாழ் சிறுபாண்மை மக்கள் மறந்துவிடலாகாது. 

தேர்தல் வெற்றியை மட்டும் கருத்தில் கொண்டு தீர்க்கப்படாத முக்கிய விடயங்களை பற்றி பேசாமல் இருப்பது ஓர் வகை தப்பித்தலே ஆகும். இராஜபக்ச குடும்பம் இதனை சாக்காக வைத்து இராஜபக்ச குடும்பம் தனக்கு கிடைக்க இருக்கும் சிங்கள வாக்குகள் வாக்குகள் பறிபோகும் என்றும் கருதியிரக்கலாம். இப்படி தந்திரமாக இருப்பவர் எவ்வாறு ஆட்சிக்கட்டிலில் ஏறியபின்னர் சிறுபாண்மைக்களிற்கான அடிப்படை உரிமைக்காக குரல் கொடுப்பார் என எதிர்பாக்க முடியும். 

இதனாலேயே இரண்டாவது வாக்களிப்பு நிலைமையை ஓன்று கூடிய இலங்கைவாழ் சிறுபாண்மை மக்கள் எடுப்பார்களாக இருந்தால் சிறப்பாக இருக்கும். அடிக்கடி சர்வேதசம் என்று கூவும் தரப்புகள் உண்மையாக சர்வதேசத்திற்கு ஓர் செய்தியை கொடுக்க முடியும். இவற்றை செய்யாது தமிழர் கூட்டமைப்பு மிக காலம் தாழ்த்தி சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவழிப்பதாக முடிவெடுத்துள்ளதும் சைக்கிள் தரப்பு தேர்தலை நிராகரக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளதும். தமிழர் தரப்பில் ஓர் தூர நோக்குடன் கூடிய அரசியல் தலைமையின் வெற்றிடத்தினையே புலப்படுத்துகின்றது.

இரண்டாவது வாக்கெடுப்பின் அவசியத்தினை வேட்பாள்களிற்கு ஏற்படுத்துவார்களா என்ற ஏக்கம் இருந்தாலும். சென்ற தேர்தலைப்போன்று 51 விகதத்தினை பெற்று ஓரு வேட்பாளர் வெல்லப்போகின்ற ஆபத்தே மிகையாக உள்ளது.

05.11.2019Keine Kommentare:

Kommentar posten