Mittwoch, 30. September 2020

பன்நாட்டு நிறவனங்கள் பொறுப்பு கூறும் மசோதாவிற்கான அபிப்பிராய வாக்கெடுப்பு

சுவிற்சர்லாந்தின் பாரிய பன்னாட்டு நிறுவனங்கள் உலக நாடுகளின் அந்நாட்டு சட்டங்களையும் மதிக்காது தான்றோன்றி தனமாக இவர்களால் சூழல் மாசு மற்றும் மனித உரிமை மீறல்களில் ஒரு சில உதாரணங்கள்.

நைஜீரிய கிராமமான எவெகோரோவில் (Ewekoro) சுவிற்சர்லாந்தின் Lafargehollcim பன்நாட்டு நிறுவனமான  ஒரு சிமென்ட் தொழிற்சாலையை நடத்தி வருகிறது. இநத கிராமம் சிமென்ட் தூசிகளால் சூழ்ந்து உள்ளது: கூரைகள், கட்டிடங்கள், மற்றும் வயல்கள் அனைத்தும் சிமெந்து தூசினால் முடப்பட்டுள்ளது. மக்களுக்கு கல்லீரல், நுரையீரல் மற்றும் மண்ணீரல் பாதிப்பு ஏற்பட்டு நோய்வாய்படுகின்றனர் என அக்கிராம மருத்துவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்


Glencore எனும் நிறுவனம் பங்களாதேசத்தில் பெட்ரோலிய உற்பத்தியில் இருந்து வரும் ரசாயனங்களை நேரடியாக ஒரு நதியில் கலக்கவைக்கின்றது. இதனால் குறிப்பிட்ட நதி விஷமாகின்றது. இந்த நதியினூடாக தமது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் மக்களது தோலில் சென்டிமீட்டர் அளவிலான கொப்புளங்களை ஏற்படுத்தி தீராத தோல் நோய்க்கு வழிவகுக்கிறது, மற்றும் கிராமவாசிகளின் கால்நடைகுக்கும் இந் நோய் பரவி வருகின்றது.

 
பெருவின் நகரமான செரோ டி பாஸ்கோவில் 70,000 பேர் வாழ்கின்றனர். செம்பு, ஈயம் மற்றும் வெள்ளி உற்பத்தியில் உலகின் மிகப்பெரிய சுரங்கத்தினை உற்பத்தியாளர்களில் ஒருவரான சுரங்க நிறுவனமான Glencore கட்டுப்படுத்துகிறார். மிக குறைந்த விலையில் கண்ணி வெடிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. உற்பத்தியின் போது சிதறிக்கப்படும் கனரக உலோகங்கள் நீரிலும் வளி மண்டலத்துடன் கலந்து விசமாகி பல குழந்தைகளிற்கு இரத்த சோகை, குறைபாடுகள், பக்கவாதம் போன்ற நோய்களை உருவாக்கி வருகின்றது.

பன்நாட்டு நிறவனங்கள் பொறுப்பு கூறும் மசோதாவிற்கான அபிப்பிராய வாக்கெடுப்பு

பன்நாட்டு நிறவனங்கள் தங்களால் ஏனைய நாடுகளில் செய்யப்படும் வணிகத்தில் மனித உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் தரங்களை மதிப்பதை உறுதி செய்ய வேண்டும். பன்னாட்டு நிறுவனங்கள் முறைகேடாக ஒருநாட்டின் மக்களின் வாழ்நிலைக்கும் சூழலிற்கு பாதகமான முறையில் உற்பத்தியை மேற்கொள்ளும் போது விதிமீறல்களிற்கு  எதிராக சட்டரீதியில் தண்டனையை பெற்று கொள்ளும் வகையில் சுவிற்சர்லாந்தின் சட்டங்கள் இருக்க வேண்டும்.

1.   எவ்வகை பன்னாட்டு நிறுவனங்களை இம் மசோதா பொறுப்பு கூறலை வேண்டி நிற்கின்றது?

இவ்வகையில் சுமார் 1,500 நிறுவனங்கள்  உள்ளடங்குகின்றன. சிறிய அல்லது நடுத்தர நிறுவனங்கள் (250 ஊழியர்கள் வரை) உள்ளடங்கா போதும் உயிர் ஆபத்துகளை ஏற்படுத்தகூடிய  துறைகளில் ஈடுபடும் வணிக நிறுவனங்கள் ஏற்படுத்த போகும் சட்ட வரையறுக்கு உள்ளடங்குவர். உதாரணமாக தங்க சுரங்க தொழில் நிறுவனங்கள்

2. எந்த நிறுவனம் அந்நாட்டு மககளின் வாழ்விற்கும் சூழலிற்கு பந்தகம் ஏற்படுத்துகின்றதோ அவர்களே அந்நாட்டில் ஏற்படுத்தபடும் அழிவுகளிற்கு பொறுப்பாளிகள்.

நிறுவனங்கள் குழந்தைத் தொழிலாளர்கள்மீது சார்ந்திருக்கவோ அல்லது நதிகளை மாசுபடுத்தவோ, மனித உரிமை மீறல்களிற்கு துணைபோகவோ மற்றும் அவற்றின் துணை நிறுவனங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீரழிவுகளுக்கும் பொறுப்பு கூறல் வேண்டும்.

3.  இம் மசோதா எவ்வகையில் நிறுவனங்களிற்கு பொறுப்பு கூறலை வலியுறுத்துகின்றது?

எந்தநிறுவனம் சேதம் செய்ததோ அவர்களே அனைத்து பாதிப்புக்களிற்கும்  பொறுப்பு எடுக்க வேண்டும். வெளிநாடுகளில் உள்ள பெருநிறுவனங்களால் பாதிக்கப்பட்டவர்கள் சுவிட்சர்லாந்தில் வழக்கு தொடர முடியும். பாரிய நிறுவனங்கள் தற்பொழுது தமது உப நிறுவனங்களூடாக செய்யப்படும்  மனித உரிமை மீறல்களிற்கு அல்லது சூழல் மாசுபடுதலிற்கு  இலகவாக பொறுப்பு கூறாமல் தப்பித்துகொள்கின்றன.

4.  பாதிக்கபட்டவர்களிற்குவர்களுக்கு எவ்வாறு இந்நிறுவனங்கள் நிவாரணம் கொடுக்க போகின்றார்கள்?

இந்த மசோதா, பாதிக்கப்பட்டவர்கள் சுவிற்சர்லாந்து  சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும், பாதிக்கப்பட்ட சேதத்திற்கு நிதி இழப்பீடு கோரவும் அனுமதிக்கிறது. தகுந்த சாட்சியங்கள் மூலம் பாதிப்புக்களை  ஏற்படுத்திய பாரிய நிறுவனமீதோ அல்லது துணை நிறுவனங்கள் மீதும் சுவிற்சர்லாந்தில் வழக்கு தொடுத்து நஷ்ட ஈட்டினை பெற்றுகொள்ள முடியும். துணை நிறுவனங்களின் தவறுகளிற்கும் தலமை நிறுவனமே பொறுப்பு கூறல் வேண்டும் என வலியுறுத்துகின்றது.

நவம்பர்மாதம் 29 திகதி நடைபெற இருக்கும் அபிப்பிராய வாக்கெடுப்பில் கலந்துகொண்டு இம் மசோதவிற்கு ஆதரவாக வாக்களியுங்கள். சுவற்சர்லாந்திலுள்ள பாரிய பன்னாட்டு நிறுவனங்களில் தான்றோன்றித்தனமான நடவடிக்கைகளை சட்டத்தின் முலம் கட்டுப்படத்தவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படும். மேலும் இந்நிறுவனங்களால் ஏற்படுத்தபடும் சூழல் மாசினையும் அப்பாவிமக்களது உயிர்களையும் ஓரளவிலாவது பாதுகாக்கமுடியும்.

- கணபதிப்பிள்ளை சுதாகரன் 
Keine Kommentare:

Kommentar posten