Freitag, 23. Januar 2015

தோழர் யோகாவின் அரசியல் சமூக வாழ்வு பற்றிய எனது பார்வை


(புலம் பெயர் நாடக எழுத்துருக்கள் நூல் அச்சுக்கு தயார் நிலையின் போது தோழர் தன்னைப்பற்றிய ஓர் குறிப்பை எழுதித்தருமாறு கேட்டிருந்தார். அவரின் வேண்டுகோளிற்கு இணங்க நான் கீழ் வரும் குறிப்பினை எழுதி தோழருக்கு அனுப்பிவைத்திருந்தேன். என்னால் அனுப்பிவைக்கப்பட்டிருந்த விமர்சனத்துடனான அறிமுகம் பார்வை பிரசுரிக்கப்பவாமல் தவிர்க்கப்பட்டிருந்தது. தோழர்  தன்னால் குறித்த நேரத்தில் எனது மின் அஞ்சலை பார்க்க முடிவில்லை என்ற காரணத்தினை முன்வைத்திருந்தார். இக் காரணத்தினை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனாலும் அவர் சம்பந்தபட்ட பதிவு சுவிற்சர்லார்ந்து அரசியல் சமூக வரலாற்று பதிவின் தேவை கருதி இதனை பிரசுரிக்கின்றேன். இதனை ஓர் தனிப்பட் விரோதமாக கருதாமல்  வாசகர்கள் குறிப்பில் இடம்பெற்றிருக்கின்ற அரசியல் வாழ் முறைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.)


தோழர் யோகா சுவிற்சர்லாந்து புலம்பெயர் சமூகத்தில் ஓர் முக்கிய சமூக அரசியல் பங்காளி. தோழர் இலங்கையில் பல் வேறுபட்ட அரசியல் இலக்கிய அமைப்புக்களில் முக்கிய அங்கத்துவராக இருந்ததினால் அவரின் முதிர்ச்சியும் அனுபவமும் இந்நாட்டில் புலம்பெயர்ந்த இளைஞர்களிற்கு ஓர் அனுபவ பகிர்னைவ கொடுத்தது. தோழரை நான் தழிழீழ விடுதலைக் கழகத்தில் (PLOT ) செயற்பட்ட போதே அறிமுகமானார். தோழர் அக் காலப்பகுதியில் தன்னை எந்தவொரு அமைப்பையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. ஆனாலும் அக்காலகட்டத்தில் சுவிற்சர்லாந்தில் செயற்பட்டு வந்த ஈழ விடுதலை அமைப்புக்களுடன் தனது தொடர்புகளை கொண்டிருந்தார். இயக்கங்களிடையே ஓர் தொடர்பு பாலமாகவும் செயற்பட்டு வந்துள்ளார். தளத்தில் விடுதலை இயக்கங்கள் தமக்குள் மோதிக்கொண்ட போதும் புலத்தில் நிலவிய சுமூக நிலைமைகளிற்கு தோழரின் செயற்பாடுகளும் ஓர்முக்கியமான காரணங்களாகியது.

வேறுபட்ட கருத்தோட்டங்கள் விரிவு பெற தோழரும் தனது கருத்துக்கனை பதிவு செய்யவேண்டிய தேவை உருவானது. இதன் அடிப்படையில் தோழர் கண்ணணுடன் இணைந்து ஒண்றியம் எனும் சிறு பத்திரிகையினை கொண்டுவந்தார். இச்சிறுபத்திரிகை சமூகத்தின் தேவைகளையும் இணைவாக்கம் ஈழவிடுதலை இயக்க அரசியல் சர்வதேச அரசியல் என பல்வேறு உள்ளடக்கங்களை கொண்டு வெளிவந்தது. புலத்தில் செயற்பட்ட அனைத்து ஈழ விடுதலை இயக்க அங்கத்தவர்களிற்கு ஓர் அரசியல் பார்வையை கொடுத்தது.

தளத்தில் கழகத்தில் உட்கட்சி போராட்டமும் உட்கொலைகளும் தாண்டவம்  ஆடிய போது நானும்  என்னுடன்  இணைந்து செயற்பட்ட சக தோழர்கள் அனைவரும் அமைப்பை விட்டு வெளியேறி இருந்தோம். இக்காலகட்டத்தில் தோழரின் சந்திப்புக்கள் பல விடயங்களை அலசி ஆராய உதவியது. இதன் விளைவுகளே காலப்போக்கில் சிறு சஞ்சிகையின் அவசியமும் விடுதலை இயக்கங்களின் தவறான போக்கால் அதிருப்தி உற்ற அங்கத்தவர்களை இணைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. ஆதன் வெளிப்பாடே வாசகர்வட்டம் மனிதம் வீடியோ சிறுபத்திரிகை பாரதி கலைக்குழு என உருவெடுத்தது.

தோழரின் செயற்பாடு மனிதம் ஆசிரியர் குழவில் முக்கியத்துவம் பெற்றது. மனிதம் குழவில் இருந்து பல ஆக்கங்களையும் அரசியல் பார்வைகளையும் தொகுத்திருந்தார். மனிதத்தினை ஆட்கொண்டிருந்த அதிதூயவாதத்திற்கு எதிராக தோழரின் கருத்துக்கள் சமநிலையை பேண பெரிதும் உதவியது. மனிதம் சஞ்சிகை ஐரொப்பிய நாடுகளிலும் இலஙகையிலும் இந்தியாவிலுள்ள வாசகர்களிடம் பெரிய எதிர்பார்ப்புக்களை வளர்த்திருந்தது. இவ் உயர்ந்த பட்ச எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் நிலையில் உள்கட்டுமாணம் நிலவவில்லை. இதனால் உண்மை நிலையை தெரியப்படுத்த வேண்டிய தருணம் உருவான போது மனிதம் குழு உடைந்தது.

மனிதத்தின் உடைவினை தொடர்ந்து பல மனிதம் குழு உறுப்பினர்கள் பல அரசியல் பின்புலங்களால் விடுதலைப்புலிகளை ஆதரிக்க  தொடங்கினர். அவ்வகையில் தோழரின் விடுதலைப்புலிகள் மீதான ஆதரவு எம்மவர் பலரிற்கு ஆச்சரியத்தினை கொடுத்தது.

பின்னர் தோழர் விடுதலைப்புலிகளின் கலாச்சார பிரிவினருடன் இணைந்திருந்த நாடக பயிற்சிக்கல்லூரியில் இணைந்து பல நாடகங்களை எழுதி மேடை ஏற்றி இருந்தார். ஏனது பார்வையில் தோழரின் நாடகங்களில் அவரின் தனித்துவம் மழுங்கடிக்கப்பட்டு அன்று மேலோங்கியிருந்த தேசியவாதப்போக்கே ஆக்கிரமித்திருந்தது.

புலிகளின் தோல்விக்கு பின்னரும் தோழர் தனது சமூக அரசியல் நடவடிக்ககைளை தொடர்ந்தார். இக்காலகட்டத்தில் தோழர் ராஐனுடன் இணைந்து புலிகளின் தோல்விகளை விமர்சித்தும் சர்வதேச அரசியல் போக்குகள் பற்றியும் எழுதத்தொடங்கினார். இக்காலப்பகுதிகளில் வெளியான ஆக்கங்களில் தோழரின் தெளிவான தனித்துவ பாங்கு காணாமல் போயிருந்தது.

நாமும் தோழரும் ஒன்றிணைந்து வேலை செய்ய வேண்டிய புதிய தேவைகள் உருவாகின. உள்நாட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட பல போராளிகளும் பொதுமக்களும் அங்கவீனமுற்றிருந்ததுடன் வாழ்வாதாரம் இன்றி தவிர்த்தனர். இந்நிலைமைகளிற்கு ஏதொ ஓர் வழியில் நாமும் காரணமாக இருந்தோம் என்ற குற்ற உணர்வின் வெளிப்பாடாக Support எனும் அமைப்பு தோற்றுவிக்கப்ட்டது. இவ்வமைப்பிலும் தோழரின் செயற்பாடுகள் மிக முக்கியத்துவம் பெற்றிருந்தது.

Keine Kommentare:

Kommentar veröffentlichen