Dienstag, 8. November 2016

அணு மின் உற்பத்தி நிறுத்தலுக்கான கால வரையறை மசோதாக்கான அபிப்பிராய வாக்கெடுப்பு- சுவிற்சர்லாந்து

கணபதிப்பிள்ளை சுதாகரன் / 08.November 2016


Tschernobyl, Fukushima போன்று சுவிற்சர்லாந்தில்உள்ள Beznau அணு மின் நிலைமையும் உலகத்தில் உள்ள அணு உலைகளில் மிக பழமை வாய்ந்தவை ஆகும். பல பழமை வாய்ந்த அணு உலைகள் பாதுகாப்பு சிக்கல்களை முகம்கொடுத்து வருகின்றன.  Beznau உலை திருத்தும் வாய்ப்புக்களையும் இழந்துவிட்டது. மீண்டும் இவ் அணு நிலையத்தினை மின்சார உற்பத்தியில் ஈடுபடுத்துவது மக்களின் பாதுகாப்பில் பரிசோதனை செய்வாத அமைந்துவிடும். இதே போன்று Mühleberg க்கும்  Beznau ம் உலகத்தில் மிக பழமை வாய்ந்த அணு உலைகளாகும். முக்கியமான Reactor களை புதுப்பிப்பது மேலும் ஆபத்துக்களையும் சூழல் மாசடைதலையுமேயே ஏற்படுத்தும்.


வருகின்ற 27 ம் திகதி நவம்பர் 2016 ஆம் ஆண்டு அபிப்பிரயா வாக்கெடுப்பிற்கு கொண்டு வந்துள்ள மசோதாவில் தவிர்க்கபட்ட விடயங்களுக்கான தீர்வு கொடுக்கப்பட்டுள்ளது. பழமைவாய்ந்ததும் ஆபத்தானதுமானமான  அதிக உற்பத்தி செலவினை கொண்ட அணு உலைகளிற்கு இவ் அபிப்பிராய வாக்கெடுப்பு தீhமானகரமான உற்பத்தியை நிறுத்தும் காலவரையறையை கொடுத்துள்ளது. இவ் அபிப்பிரயா வாக்கெடுப்பில் ஆம் என்று வாக்களிப்பதன் மூலம் சுவிற்சர்லாந்து மக்களின் பாதுகபப்பினையும் மாற்று மின் உற்பத்தி தொழில்நுட்பத்தினையும் வலுப்படுத்தலாம்.

மற்றைய நாடுகளை விட மாற்று மின் உற்பத்தியில் தனக்கொரு காத்திரமான இடத்தினை சுவிற்கர்லாந்து பெற்றுள்ளது. மூன்றில் இரண்டு பங்கு மின்வலுவினை மாற்று தொழில்நுட்பம் மூலமே பெற்றுகொள்கின்றது. மூன்றில் ஓரு பங்கு மின்சாரம் அணுமின் நிலையம் பெறப்பட்டு வருகின்றது. வருகின்ற 13 வருட காலத்திற்குள் மாற்று தொழில்நுட்பத்தின் துணையுடன் மின்சாரத்தினை உற்பத்தி செய்து கொள்ளலாம்.

அணு உலைகளை செயல் இழக்க செய்வதன் மூலம் மாற்று மின் உற்பத்திக்கான தொழில்நுட்பத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் வேலைவாய்ப்புக்ளையும் இயற்கை வளத்தினை கொண்டு மலிவான மின்சார உற்பத்தியையும் அதிகரித்துகொள்ளலாம். அபிப்பிரயா வாக்கெடுப்பிற்கு கொண்டு வரப்பட்டுள்ள மசோதா புதிய அணு நியைங்களை நிறுவுவதற்கான தடையயையும் பழைய அணு உலைகள் 45 வருட முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்பதனையும் வரையறுத்துள்ளது.

2011 ம் ஆண்டு Fukushima வினால் ஏற்பட்ட ஆபத்தினை தொடர்ந்து சமஷடி அரசு புதிதாக அணு உலைகளை அமைப்பதற்கான தடையை விதித்துள்ளது. ஆனால் தற்பொழுது செயற்பாட்டில் உள்ள பழைய அணு உலைகளுக்கான செயல் இழக்கம் செய்வதற்கான காலவரையறையை நிர்ணயிக்க தவறியுள்ளது. இதனாலே இவ்விடயத்தினை கவனத்தில் எடுத்து அபிப்பிரயா வாக்கெடுப்பிற்கான குழு காலவரையறையுடனான செயல் இழக்கத்தினை வலியுறுத்திய மசோதவினை வாக்கெடுப்பிற்கு கொண்டு வந்துள்ளனர். இத்தீhமானத்திற்கு ஆம் என சுவிற்சர்லாந்து பசுமைக்கட்சியினரும் சமூக ஐனநாயக கட்சியும் மும்மொழிந்துள்ளனர். வுழமை போல் அனைத்து வலதுசாரிக்கட்சிகள் இம் மசோதவினை எதிர்த்து வாக்களிக் உள்ளனர்.

ஓர் அணு உலையின் பாதிப்பு கிட்டதட்ட 50 கிலோமீற்றர் தூரத்தில் பகுதிகள் அனைத்தையும் பாதிப்புக்குள்ளாக்கும். சுவிற்சர்லாந்தில் அணு உலைக்கு 50 கிலோமீற்றர் அருகாமையில் உள்ள அனைத்து கிராம நகர மக்களிற்கு Jodtablets (Kaliumioid 65 AApot) இலவசமதாக விநியோகிக்க படுகின்றது என்பதனை சுவிற்சர்லாந்தில் வாழும் அனைத்து தமிழர்கள் அறிந்திருப்பார்கள்.


சுவிற்சர்லாந்தில் வாக்களிக்க தகுதிபெற்ற அனைத்து தமிழர்களும் ஆம் என வாக்களித்து எதிர்கால சந்தியினரை அணு மின் ஆபத்திலிருந்து காப்பாற்றுங்கள். உலகத்தில் எந்த பகுதிகளிலும் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ள அனைத்த அணு உலைகளுக்கான எதிர்ப்பு குரல்களையும் வலுப்படுத்துங்கள். அணு மின் உற்பத்தியினால் உருவாக்கப்படும் கழிவுகள் பல வளர்ந்துவரும் நாடுகளில் மிக குறைந்த செலவிலேயே வீசப்படுகின்றது அல்லது மறைத்து வைக்கபடுகின்றது. இக்கழிவுகளும் மக்களிற்கு கதிர்வீச்சு ஆபத்தினை ஏற்படுத்தும். மக்களின் ஆரோக்கியத்தினையும் சுகாதாரத்தினையும் எதிர்கால சந்ததியினரையும் பாதிக்கு உள்ளாக்கும் என்பது நாம் அறிந்தது உண்மையாகும்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen