Dienstag, 29. November 2016

எனது உள் வன்னி பயணப்பதிவு


SUPPORT  'ஆதரவு' வினை தவிர வேறு எந்தவொரு புலம்பெயர்ந்த அமைப்புகளும் உள் வன்னியில் உள்ள பாதிப்புற்ற முன்னால் போராளிகனை பார்க்கவுமில்லை உதவியும் செய்யவில்லையும் என உறுதியாக கூறுகின்றார் - ஓர் முன்னால் போராளி

SUPPORT 'ஆதரவுபழைய மனிதம் பத்திரிகை குழு வினராலும் ஓர் சில நண்பர்களாலும் உருவாக்கப்பட்ட ஓர் சிறிய உதவி நிறுவனமாகும்.

உள் வன்னியில் பல போராளி குடும்பங்கள் பழைய புலிகளால் அமைக்கபட்ட குடியமைப்பிற்குள் குடியமர்த்தபட்டுள்ளனர். வீட்டுத்திட்டங்கள் ஓர் சில இடங்களில் நடைமுறைப்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கு கொடுக்கப்பட்ட நிதியினை முழுமையாக பயன்படுத்தாது தமது அன்றாட வயிற்றுபசியை தீhக்க பலர் பயன்படுத்தி உள்ளனர். இதன் விளைவாக பலரது வீடுகளிற்கு கதவுகள் இல்லை. நிலங்கள் சரிவர சீர்செய்யாது கரடு முரடாக உள்ளன.  அடுப்படிகளை மூடும் பிளாட்டுக்கள் அன்றி மழைக்கு சமைக்க இயலாது உள்ளது.

அவர்களின் முகங்களில் பயம் மட்டுமே மிஞ்சி உள்ளது. யுத்த காலகட்டத்தில் பல போராளிகள் அவசர அவசரமாக திருமணம் செய்துள்ளனர். அதுமட்டுமல்லது விசாரணை காலகட்டத்தில் தமது பாதுகாப்பு கருதி பயிற்சியம் அற்ற நபரை தமது துணைவன் துணைவி என இனம்காட்டியுள்ளனர். இதன் விளைவு பல பெண்கள் இன்று விதைவகள் ஆக்கப்பட்டுள்ளனர். அல்லது வாழ்நிலை காரணமாக விபச்சாரத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அது மட்டுமல்லாது தெற்கில் இருந்து படை எடுத்துள்ள பல வங்கிகள் மேசைமீது பணத்தினை வைத்து இம்மக்களிற்கு ஆசையை வளர்த்து கடன் பத்திரத்தில் கையொப்பத்தினை மட்டும் பெற்றுகொண்டு கடளை கொடுக்கின்றனர். பல முகவர்கள் தனியே பெண்கள் மீதே தமது விற்பனை சாதுரூயித்தினை காட்டுகின்றனர். அப்பத்திரத்தில் உள்ளவிபரங்கள் ஓன்றும் வாசித்தோ அல்லது தெளிவுபடுத்தும் வழமையோ கிடையாது. இதற்கு பின்னர் மாதந்த தவணைப் பணம் கட்டமுடியாது போது இவர்களை வெருட்டி தாமே தொழில் எடுத்து தருவதாக கூறி விபச்சார தொழில் இற்குள் தள்ளிவிடுகின்றனர்.

பல அங்கவீனமுற்ற அல்லது பாதிப்பிற்கு உள்ளாகிய பல போராளிகள் தமது பதிவுகளை கூட செய்து அரச பத்திரங்களை பெற இயலாது ஓடுங்கி போயுள்ளனர். அதற்கு பின்வரும் விடயங்களே காரணமாக உள்ளது.1.            அரச அதிகாரிகளை சந்திக்க பயம்
2.            பல் வேறுபட்ட திணைக்களங்களிற்கு செல்ல பண வசதியின்மை
3.            எப்படி செய்வது என்று பலர் அறியாது உள்ளனர்.

அரசோ நடமாடும் பத்திரங்களை ஓழுங்கு செய்து கொடுக்கும் வாகனத்துடன் கூடிய அதிகாரிகளை ஓழுங்கு செய்து கொடுத்துள்ளது. அதில் வலமிடும் அதிகாரிகளை பொறுத்தே அவர்களது செயற்பாடும் உள்ளது.

பல சர்வதேச  NGO க்கள் கிளிநொச்சியை நோக்கி வலம் வருகின்றனர். அவர்களுடைய உள் நோக்கமே இந்த மக்கள் என்றும் கையேந்தியாக இருக்க வேண்டுமென்பதே ஆகும். ஓரு சில அதிகாரிகள் இவற்றை இனம் கண்டு கொண்டு மக்களிற்கு நலம் தரும் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். நான் எனது பயணத்தின் பொழுது கிளிநொச்சியில் ஓர் விடுதியில் தங்கியிருந்தேன் அவ்விடுதியில் பல NGO க்கள் தங்கியிருப்பதனை அவ்விடுதியை முகாமைப்படுத்துவர் தெரிவித்திருந்தார். ஜரோப்பிய தமிழர்கள் போலே அவர்களது உடைநடை பாவனை இருந்தது. காலையில் ஓவ்வொரு அறைகளில் இருந்தும் ஆண் பெண்களாக வெளியில் வந்தனர். இதில் வந்த ஓர் பெண் NGO முகாமையாளருடன் குறைப்பட்டுகொண்டார். தமக்கு றூம் விலை அதிகமாக கணக்கிடப்பட்டுள்ளதாக விடுதி முகாமையாளருடன் குறைபட்டு கொண்டார். அது மட்டுமல்லாது தனக்கு கிளிநொச்சி மூளைமுடக்குகள் எல்லாம் தெரியும் அனைத்து விடுதிகளின் றூம் வாடகை விபரமும் தெரியும் தான் ஓர் NGO என பெருமையாக விலாகித்தார்.; இங்கு பல Nபுழு வருவார்களா என நான் முகாமையாளரிடம் கேட்டேன் அதற்கு அவர் தினமும் ஓருசிலர் வருவதாக கூறியதுமட்டுமல்லாது தமது விடுதிக்கு மேலுள்ள கலியாண மண்டபம் வருகின்ற 29 ம் திகதி மூன்று நேர சாப்பாட்டுடன் கூடிய சந்திப்பு நடக்க இருக்க உள்ள தகவலையும் எனக்க வழங்கி இருந்தார். கிட்டதட்ட 50 பேர் மேல் சந்நிக்க உள்ளதாகவும் ஓருவருக்கு 1600 ருபாய்களுக்கான உணவுகளும் ஓடர் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். கலந்து கொள்ளப்போது இலங்கையர்கள் என்பதனையும் குறிப்பிட்டிருந்தார்.

உள்வன்னிப்பகுதிக்கு என்னை இரண்டு முன்னால் போராளிகளே அழைத்து சென்றிருந்தனர். இன்று வரை எம்மை போன்ற போராளிகளிற்கு உதவ SUPPORT  'ஆதரவுஅமைப்பினை தவிர எந்தவொரு புலம்பெயர் அமைப்புகளும் வரவில்லை என்பதை புலம்பெயர் தமிழ் சமூகத்திற்கு எடுத்த சொல்லுமாறு உறுதியாக கூறியிருந்தார்கள்.

இவர்களது அபிலாசைகளும் சமூகத்திற்காக அற்பனித்த தம்மை போன்ற பல போராளிகளின் நிலைமையை கண்டு செய்வதாறியாது உள்ளனர். எந்த திட்டத்தினைப்பற்றி பேசும்போது அவர்கள் தம்மோடு இருந்த அல்லது தம்மைபோல் உள்ளவர்களின் வீடுகளிற்கு அழைத்து சென்று அவர்களிற்கு செய்யுமாறு கோரிக்கைகள வழங்கியள்ளனர். இது வரை 24 குடும்பங்களிற்கு SUPPORT 'ஆதரவு' வாழ்வாதர உதவிகளை வழங்கியுள்ளது. இம்மக்களின் தேவைகளை சிறிய அமைப்பான ளரிpழசவ 'ஆதரவு' இனால் மட்டும் நிவர்த்தி செய்யமுடியாது என்பது தெளிவானது. ளுரிpழவட்  இனால் உதவி செய்ப்பட்டுள்ள பல போராளிகளை சந்தித்த போது உதவிப்பணம் தம்மால் சிறு தொழிலை செய்வதற்கு வழவகுத்துள்ளதாக தெரிவித்திருந்தனர். சில போராளிகள் எழுந்து நின்று கைகூப்பி வணங்கி நின்றனர். வணங்கப்பட வேண்டியவர்கள் நீங்களே முதல் வெடியுடன் நாட்டை விட்டு சென்றவர்களை அல்ல என்று தெரிவித்திருந்தேன். யாரைக்கண்டும் கைகூப்பாதீhகள் என்றும் கூறிவந்திருந்தேன். இப்போராளிக்கு ஓர் கால் இன்றி பொய்காலுடனே ஓர் சிற்றுண்டி கடையை நடாத்தி வருகின்றார். இந் நிகழ்வு எனது கண்ணகளை கலங்கவைத்து விட்டது. ஓர் சமூகத்திற்காக எவ்வித பலாபலனும் எதிர்பாக்காது போராடிய ஓர் போராளி எதுவுமற்று ஆனாதரவாக நிறுத்தபட்டுள்ளதை எண்ணி புலம்பெயர் தமிழ் தேசிய வாய்வீச்சர்களை நோக்கியே எனது கோபம் பாய்ந்தது.

ஓர் நேர்மையான அரச அதிகாரியை சந்தித்தேன் அவர் மற்ற அதிகாரிபோல் அல்லது ஓர் இடது சிந்தனைக்குரியவர் என்பதனை அவருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அறிந்துகொண்டேன். பல பெண் போராளிகள் போலி திருமணம் செய்ததின் விளைவாக கணவன் காணமல் போயுள்ளனர் அல்லது விடடு சென்றுள்ளனர். இவர்கள் மறுமணம் செய்யதயராக உள்ள போதும் அங்குள்ள ஆண்கள் தயாராக இல்லை எனவும் இந்த சமூகமும் ஏற்று கொள்ள வில்லை என்பதனையும் குறிப்பிட்டிருந்தார். அவர் அவ்வாறு பேசிக்கெண்டிருந்தபோது ஓர் பெண் அவரை பார்க்க வந்திருந்தார். உடனே அப்பெண்ணை என்னிடம் அறிமுகம் செய்து போலி திருமணத்தின் விளைவாக கணவன் விட்டு சென்றுவிட்டார் எனவும் இவருக்கான தனிப்பதிவினை கோருவத்திற்கான விண்ணப்பத்தில் கையொப்ப மிட வந்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார். போரின் போது ஓர் கட்டுப்பாடனா முன்மாதிரியான சமூகம் ஏன் இன்று மறுமணத்தினை ஏற்று கொள்ளவில்லை என்ற கேள்வியை என்னிடம் எழுப்பியிருந்தார். மேலும் இச்சமூகத்தினை வழிநடத்த மதங்களும் இல்லை எனவும் அரசியல்வாதிகள் தமது இருப்புக்களில் மட்டுமே அக்கறைப்படுவாதாக ஆதங்கத்தினை தெரிவித்திருந்தார். தனக்கு முன் இருந்த அதிகாரிகள் தற்போது நடைமுறைக்கு தேவைப்படாத பல திட்டங்களிற்கு முதலீடுகளை செய்து வந்துள்ளதாகவும் பல சனசமூகநிலையங்கள் கட்டப்பட்டு இன்னமும் திறக்காமல் கட்டடங்களாக காட்சி தருவதாக தனது அலுவலகத்திற்கு முன்னால் உள்ள சனசமூகநிலையத்தினையும் காட்டியிருந்தார். பல கோயில்களும் புனருத்தானம் செய்யப்பட்டு யொலிக்கின்றன. கோயில்கள் பலவற்றிற்கு எமது புலம்பெயர் சமூகமே முன்னின்று செய்துள்ளது என்ற செய்தியையும் சொல்லத்தவறவில்லை. நான் வீட்டிற்கு ஓர் குழாய்க்கிணறு திட்டத்தினை குறிப்பிட்ட போது அவர் குறுக்கிட்டு 5 அல்லது 6 வீடுகளிற்கு ஓர் கிணறு என்று அமைத்து கொடுங்கள் என்றார். இதன் போது குறுக்கிட்ட முன்னால் போராளி அப்படி அமைப்பதாயின் ஓர் போராளியின் வீட்டிலேயே அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினையும் முன்வைத்தார். அப்படி என்றால் தான் முன்னால் போராளிகள் சமூகத்தில் இருந்து ஓதுக்கபடமாட்டார்கள் என்பதையும் தெரிவித்திருந்தார்.

இதை போன்று இம்மக்களின் வாழ்வாதரங்களை வியாபரப்படுத்தி வயிருவளர்க்கும் ஓரு கும்பல் போல் இம் மக்களின் வழங்களையும் சுரண்டவும் ஓர் உள்ளுர் கும்பல் கிழம்பியிருக்கும் தகவல்களையும் அவ் அரச அதிகாரி தெரிவித்திருந்தார். அதாவது மணல்களை சட்டéர்வமற்று கபளீகரம் செய்து விற்கப்படுகின்றது. இதனை தடுக்க வெளிக்கிட்ட பொழுது அரச அதிகாரிகளும் பொலிசாரும் மக்கள் பெற்றுள்ள வங்கிகடனின் தவணைப்பணத்தினை தாம் கட்டுவதாக கூறி அவர்களிடம் இவ்விடயத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்குமாறு கோரிய சம்பவத்தினையும் என்னிடம் தெரியப்படுத்தியிருந்தார்.

இது மட்டுமல்லாது எவ்வித பொருளாதார அறிவுமற்ற அரசியல் கட்சிகள் தனியே வரவு செலவு விவாதத்தின் போது ஓரு சில விடயங்களை தெரவித்து தமது ஆதரவினை வழங்கியுள்ளனர். தமது சமூகம் பிரதேசம் அபிவிருத்தி சார்ந்த சொந்த ஆய்வின்றி தாம் சார்ந்த ஓர் மாற்று வரவு செலவுதிட்டத்தினை கூட வழங்கமுடியாத ஓர் அறிவிலிகளாக இருப்பதனை தெரியப்படுத்தியிருந்தார்.

பழைய புள்ளி விபரத்தின் போது கிளிநொச்சியின் சனத்தொகை பரம்பலிற்கும் புதிய கணிப்பிட்டீன் அடிப்படையிலுள்ள சனத்தொகை வளர்ச்சிவீதம் தனிளே 15-20 விகிதமே அதிகரத்துள்ளதாகவும். நாட்டின் தெற்கிலுள்ள சனத்தொகை வளர்ச்சி வீதம் மூன்றுமடங்களாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இதனை கூட எந்தவொரு தமிழ் அரசியல் வாதிகளும் கவனத்தில் எடுத்துகொள்ளது உள்ளது பற்றியும் ஆதங்கத்துடன் தெரிவித்திருந்தார். இன்றும் இருவருக்கு ஓருவர் அல்லது இருவர் என்ற குடும்பகட்டுப்பாட்டு விழப்புணர்வுகள் ஓடுங்கிவரும் ஓர் சிறுபாண்மை இனத்துக்கு இது சார்த்தியமானதா என்ற கேள்வியை என்னிடம் கேட்டிருந்தார்.

இன்னமும் ஓரு சிலர் எதற்கு எடுத்ததலும் இலகுவான முறையில் இனவாதம் என முத்திரை பதிப்பதாகவும் அத்துடன் தம்மை ஓர் அரசால் தேடப்படும் நிலைவரையும் சென்று நாட்டைவிட்டு இலகுவாக வெளியேற முயற்சிப்பதகவும் குறிப்பிட்டிருந்தர்ர்.

ஓரு வீட்டில் இரு பிள்ளைகள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தபட்டதால் பெற்றோர்களிடம் இருந்து பிரித்து பிள்ளைகள் காப்பு நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். இப்பிள்ளைகளின் தாய் விழுந்து கை முறிந்துள்ளது. வைத்தியசாலைக்கு செல்லாமல் அப்படியே வைத்திருந்து கை எலும்பு தானகவே சொத்தியாக இணைந்துள்ளது. ஏன் இப்படி இருகின்றீர்ள் என கேட்டதற்கு வார்த்தைகள் இன்றி மௌனமாக உள்ளனா.

மழைக்கு அடுப்பிலிருந்து சமைக்கமுடியாது அடுப்பு புகைêட்டி அடைக்கபடவில்லை. இவ்வீட்டில் ஓர் குழந்தை உள்ளகு காது கேளாது ஊமையாக உள்ளது. இப்பிள்ளைக்கு வைத்தியம் செய்ய இயலாது இக்குழந்தை பராமரிப்பு அற்றுள்ளது. அப் பெண் பிள்ளைக்கு காதில் மட்டுமே பிரச்சினை உள்ளதாக நான் அறிகின்றேன். காது கேட்குமாயின் அப்பிள்ளை பேசுவதற்கான வாய்ப்பு அதிகம் என்று எண்ணுகின்றேன்.

கிளிநொச்சியில் உள்ள துயலும் இல்லம் பெற்றோர்களினால் துப்பரவு செய்யும் காட்சியை பார்த்தபோது என்னை அழைத்து சென்ற போராளிகள் படம் எடுப்பதற்கும் நிறுத்தாது அழைத்து சென்றனர். இவ்வருட மாவீரர் தினங்களும் மிக அமோகமாக விமரிசையாக புலம்பெயர் நாடுகளில் நடைபெற்றதை அறிந்துகொண்டேன். வழமைபோல் மண்டப அலங்கார செலவு என பல கோடிகளை முதலீடு செய்தே நிகழ்ச்சிகளை நடாத்தி இருப்பார்கள். இதனால் யாருக்கு என்ன பயன்? அவ் மாவீரர்களுடன் வாழ்ந்த போராளிகள் இன்றும் சாட்சிகளாக அனாதரவாக்கபட்டு நடுத்தெருவில் விடப்பட்டுள்ளனர். இவர்களிற்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? இனிமேல் மாவீரர் தினங்களை அங்கு கோலாகலமாக செய்யாமல் இந்த நாட்களிலாவது வாழும் வீரர்கள் வயிராற உண்ண வழவகுங்கள். மனச்சாட்சி உள்ள அனைத்து புலம்பெயர் சமூகமும் சிந்திக்க வேண்டுகின்றேன்.

இந்த மக்களின் வாழ்வாதரங்களை உயர்த்துவததற்கு பல திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. இதுற்கு அனைவரது ஓத்துழைப்பு அவசியமானது. எனது பார்வையில் பின்வரும் திட்டங்கள் நடைமுறைப்படுத்த வேண்டியதாக கணிப்பிட்டுள்ளேன்.

1. சுய தொழில் முயற்சிகளை ஏற்படுத்தி கொடுத்தல். இப்பகுதியல் கோழி ஆடுவளர்த்தல்களிற்கான முழுவாய்ப்புக்களும் உள்ளன.

2.  வீடுகளுக்கான குழாய் கிணறுகள் அமைத்து கொடுத்தல். இதன் மூலம் ஓர் சிறிய மரக்கறி தோட்டத்தினை உருவாக்கி அன்றாடம் உணவிற்கு வழிவகுத்தல்.

3. சிறிய கைத்தொழில் பட்டறைகளை ஏற்படுத்தி கொடுத்தல. தொழில்நுட்ப பட்டறைகளை புலம்பெயர் நாடுகளில் கைத்தொழில்களில் தேர்ச்சிபெற்றவர்களை கொண்டு நடாத்துதல். அதன் மூலம் புதிய தொழில் வாய்ப்புக்களை அறிமுகப்படுத்தல்;.

4. சமூக உதவி சேவை நிலையங்களை உருவாக்குதல். இதன் மூலம் புலம்பெயர் நாடுகளில் இருந்து சேகரிக்கப்படும் பாவித்த ஆடைகள், சைக்கில்கள், பாவிக்ககூடிய கணணிகள் போன்றவற்றை வருமானம் அற்றவர்களிற்கு வழங்கி அவர்களின் வாழ்வாதரங்களை உயர்த்துதல்.

5. அரை குறையில் அமைக்கப்பட்ட வீடுகளை முழுமையாக திருத்தி கொடுத்தல்.

6. குளங்களில் நன்நீர் வளர்ப்புத்திட்டங்களிற்கான தொழில்நுட்ப அறிவை வழங்கி புதிய தொழில்களை அறிமுகப்படுத்துதல். (அக்கராயன் குளம்)

அம் மக்களின் பல தேவைகளை éர்த்தி செய்ய பல சக்கதிகளின் ஓன்று கூடிய வேலைத்திட்டமே அவசியமானது என்பதை உறுதியாக நான் ஏற்றுகொள்ளுகின்றேன். ஆதலால் SUPPORT  'ஆதரவுஉடன் இணைந்து வேலை செய்ய முன்வருபவர்கள் முன்வாருங்கள். அல்லது தனியே மேற்குறிப்பிட்ட சில வேலைத்திட்டங்களை தனியே முன்னெடுக்க விரும்புபவர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள். இன்றுள்ள பசிக்கு இன்றே தீhவு அவசியமானது. எமது அமைப்பின் இயலாமையை காரணம்காட்டி செய்யமுடியாத வேலைகளை எம்மிடத்தில் மட்டும் வைத்திருக்கமுடியாது. இது ஓர் வாழ்வு சம்பந்தப்பட்டது.


என்னை அழைத்து சென்ற இரு பழைய போராளிகளும் என்னை அவதானமாக அழைத்து சென்றது மட்டுமல்லாது என்மீது அவர்கள் காட்டிய அக்கறை என்னை மெய்சிலிர்க்கவைத்தது. அவர்களின் அன்பு கோரிக்கையின் விளைவாகவே இக்கட்டுரையை நான் இங்கு பிரசுரிக்கின்றேன். இந்த நாட்கள் விடுதலைப்போராட்ட விடுதலைக்கு அர்பனித்த அனைத்து போராளிகளிற்குமான ஓர் உண்மையான நினைவுதினங்களாக அமைந்திருந்தது.
http://aatharavu.com
கணபதிப்பிள்ளை சுதாகரன்  29.11.2016

Keine Kommentare:

Kommentar posten