Montag, 16. Januar 2017

நான் ஓர் தமிழின துரோகியும் சிறிலங்கா அரசின் கை கூலியும்- ஓர் சுய விளக்கமன்னை ஓர் தமிழின துரோகி எனவும்; சிறிலங்கா அரசின் உளவு கைக்கூலி எனவும் தமிழிலிலும் யேர்மன் மொழியிலும் முகநூல் மூலமாக எனக்கு எதிரான பிராச்சரத்தினை சுவிஸ் ஈழத்தமிழர் அமைப்பின் பிரதிநிதிகள் என கூறிக்கொள்ளும் நபர்களால் முன்னெடுக்கபட்டிருந்ததினை எனது முகநூல் நண்பர்கள் அறிந்திருப்பீர்கள்.இவர்களின் உளவுத்திறமையினால் என்னை இனங்கொண்ட விடயங்களை நீங்களும் அறிந்துகொள்ள வேண்டும். இதே போல்; இலங்கையில் எவ்வித ஆதாரமும் அற்று தம்மை விமர்சிப்பவர்ளை துரோகிளாக்கி புலிகளினால் அழித்தொழிக்கபட்ட பல புத்திஜீவிகளின் எண்ணிக்கை அதிகமானது. இவர்களினால் துரோகி என அடையாளம் காட்டுவதற்கு இவர்களால் முன்வைக்கும் இலகுவான ஐந்து காரணிகள் பின்வருமாறு.

1. அரச உளவாளி அல்லது கைகூலி
2. காட்டிக்கொடுப்பு
3. பண மோசடி
4. பல பெண்களுடன் தகாத தொடர்பு
5. தமிழ் தேசியத்தினை அங்கீகரிக்காதவர்கள்

இவற்றை போராட்ட சூழலில் வாழ்ந்த சமூகம் எவ்வித கேள்வி கேட்காது ஏற்று கொண்டது. தமிழீழ போரட்டம் முள்ளி வாய்காலில் மௌனிக்கபட்டவுடனே இங்கு சுட சுட புலம்பெயர் மக்களுடன் தமது வியாபரத்தினை தொடருவதற்காக தாம் இனி ஐனநாயக வழியில் போராட்டத்தை தொடருவதாக கூறி பல பிரிவுகளாக பிரிந்து ஓருவர் தன்னை நாடுகடந்தவர் என்றும் மற்றவர் ஈழத்தமிழர் அமைப்பு எனவும் அமைப்புக்களை நிறுவி தமக்குதானே தேர்தலை சுவிற்சர்லாந்தில் நடத்தி இருந்ததினை யாவரும் மறந்திருக்க மாட்டீர்கள். அவ்வாறு தெரிவு செய்பட்டவர்கள் பலர் இவர்களது அரசியலில் இருந்து இன்று ஒதுங்கியுள்ளனர். அவ்வாறு தமது பிரதிநிதிகளை தெரிவு செய்பட்டதால் சுவிற்சர்லாந்து புலம்பெயர் தமிழ் மக்கள் தம்மை ஏகபிரதிநிதிகளாகவும் தமக்கு சுவிற்சர்லாந்து வாழும் தமிழர்களால் புலம் பெயர் தமிழர்களின் அரசியலை தீர்மாணிக்கும் ஆணை வழங்கப்பட்டதாக கர்வத்துடன் செயற்பட்டு வருகின்றனர்.சுவிற்சர்லாந்து சோசலிச ஜனநாயக கட்சியில் தமது பிரதிநிதித்துவத்தினை உட்புகுத்தி தமது கட்டுபாட்டில் சுவிற்சர்லாந்து தமிழ் அரசியல்வாதிகள் இருக்க வேண்டும் என கனவு காணுகின்றனர். அக்கனவை அடிப்படையாகவைத்து தமக்கு ஆமாபோடும் ஓரு சில வேட்பாளர்களிற்கு பிரச்சாரம் செய்வதும் அவர்களை தமிழ்மக்களின் ஓரே பிரதிநிதியாக காட்டும் ஓர் ஐனநாயக மற்ற நடவடிக்கையினை செய்துவருகின்றனர்.
நான் ஓர் தமிழின துரோகி இலங்கை அரசின் உளவாளி. என்று இவ்வாறு எனக்கு முத்திரை குத்துவதற்காக இவர்களால் கண்டுபிடிக்கபட்ட காரணத்தினை கண்டு மெய்சிலிர்த்துவிட்டேன். இப்படியான இவர்களது சிறப்பு திறமையாலேயே  சர்வதேச புலனாவுக்குள் தம்மை அறியாது அடைக்களம் புகுந்துள்ளார்கள்.

தம்மை ஜனநாயக சூழலில் இணைத்து கொண்டவர்கள் என தம்பட்டம் அடித்து கொண்டு. ஓரு தனிநபரிடம் எவ்வாறு தமது சந்தேகத்தினை கேட்டு அறிவேண்டும் என்ற அடிப்படை நாகரிகமே தெரியதவர்களை நான் எப்படி அழைப்பது? அது மட்டுமல்லாது நீ தமிழின துரோகி அரசின் கைகூலி இவருக்கு வாக்களிக்காதீர்கள் என முகநூல்களில் செய்திகளை பரவலாக்கிவிட்டு அதே பிரச்சாரத்தில் என்னிடம் கேள்வி கேட்பது எவ்விதத்தில் நியாயம். நீங்கள் தானே துரோகி என முடிவெடுத்துவிட்டீர்களே அதற்கு பிறகு எவ்வாறு என்னிடம் இருந்து பதிலை எதிர்பார்க்கமுடியும்.
அரசியலில் பொது வெளிக்கு வந்தால் யாரும் கேள்வ கேட்கலாம் ஆனால் அதற்கு ஓர் ஜரோப்பிய ஜனநாயக பண்புள்ளது. பொதுவெளியில் சேற்றை வாரி வீசிவிட்டு கேள்வி கெட்பதல்ல. கேள்விக்கு பதிலளிக்காமல் இருப்பதற்கும் எனக்கும் தனிமனித சுதந்திரமுள்ளது.

எனது முகநூலில் Die srilankische Diaspora in der Schweiz என்ற பக்கமுள்ளது.
இந்தமுகநூல்பக்கத்தினை நான் கூடுதலாக நான் எனது சுவிற்சர்லாந்து நண்பர்களிற்கு யேர்மன் மொழிப்பதிவுகளிற்காகவே பயன்படுத்திவந்துள்ளேன். இது ஓர் அமைப்பல்ல எனது முகநூலில் என்னால் உருவாக்கபட்ட ஓர் முகநூல்பக்கம். ஏன் நான் சிறீலங்கா டயஸ்பொரா என்ற பெயரை பயன்படுத்தினேன் என்பதற்கு பல காரணங்கள் உள்ளன.

1.டயஸ்பொரா என்ற சொல்லை எடுத்துப் பார்த்தால் அது – êதர்கள் தங்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதைக் குறிக்கும் ஓரு சொல். அதேபோல் நாமும் யுத்தினால் நாட்டைவிட்டு வந்தவர்கள்.

2. இலங்கையில் நடைபெற்ற யுத்ததில் இருந்து தனியே தமிழர்கள் மட்டும் நாட்டை விட்டு வெளியேறவில்லை. சிங்கள மக்களும் பலர் ஜரோப்பிய நாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளனர். இவர்களில் பல பத்திரிகையாளர்களும் மனிதஉரிமைவாதிகளும் உள்ளடங்குவர்.3. 2007 ம் ஆண்டு சுவிற்சர்லாந்து நீதித்துறையினால் சுவிற்சர்லாந்தில் வாழும் தமிழர்களை பற்றி ஆய்வின் வெளியீட்டிற்கும் Die srilankische Diaspora in der Schweiz என்றே பெயரிட்டிருந்தனர். (2007 ம் ஆண்டு )

4. சுவிற்சர்லாந்து அரசியல் என்று வரும் பொழுது இங்கு பல தரப்பட்ட இன மக்களின் நலன்களை கவனத்தில் கொண்டே ஆகவேண்டும்.

மேலும்இந்த முகநூல்பக்கத்தித்தில் சிறிலங்கா அரசினை விமர்சிக்கும் வகையிலான கார்ட்டூன் படமும் சிங்கள பேரினவாத பிரதிநிதிகளாக தம்மை அடையளப்படுத்தி தெருச்சண்டையில் ஈடுபட்டிருந்த புத்த பிக்குகளின் விடியோவும் பதிவிடப்பட்டிருந்தது. இதனைப்பார்த்தும் எமது அரசியல் தத்துக்குட்டிகளும் ஞானசூனியங்களும் இது சிறிலங்கா அரசினால் உருவாக்கபட்ட வலைப்பின்னல் என நிறுவியுள்ளனர்.

சிறீலங்கா அரசு எனது உளவுப்பணிக்கான சம்பளத்தினை தவறுதலாக தங்கள் வங்கி கணக்கிற்கே அனுப்பி உள்ளார்கள் போலும். ஆதனால் தான் உங்களிற்கு சந்தேகம் ஏற்பட்டதோ? உங்களுடன் இணைந்து தமிழ் தேசியம் பேசிய பலர் இன்று இலங்கை அரசுடன் இணைந்து பல எஸ்டேட்டுகளையும் வாங்கி பல நிறுவனங்களையும் கொள்வனவு செய்து நடாத்தி வருவது மட்டும் ஏன் உங்கள் கண்களிற்கு புலப்படவில்லை? அல்லது கடைசி யுத்தகாலத்தில் சேகரிக்கபட்ட பணங்கள் தனிநபர்களின் கணக்குகளிற்கு மாற்றபட்டது ஏன் உங்களிற்கு தெரயாமல் போனது? அல்லது சேகரிக்கபட்பட பணத்திற்கான கணக்கு விபரங்களை மக்களிற்கு முன்வைக்கபடாது மறைக்கபட்டதிற்கு எதிராக ஏன் உங்கள் எதிர்ப்பு குரல் எழும்பவில்லை? இதற்கெல்லாம் சுவிற்சர்லாந்து தழிழ் மக்கள் உங்களிற்கு ஆணைபிறப்பிக்வில்லையா?


இப்பக்கத்தில் கடந்த ஆண்டு 13.02.2016 ஓழுங்குபடுத்தபட்ட நாடுகடத்தல் சட்டமூலத்திற்கு எதிராக என்னாலும் இன்னும் இரண்டு கட்சி தோழர்களினால் ஓழுங்கு செய்யபட்டிருந்தது. கலந்துரையாடலிற்கான அழைப்பு இப்பக்கத்திலிருந்தே அறிவக்கபட்டிருந்தது. மற்றைய தோழர்கள் தமது வட்த்திற்கும் அழைப்பிதலை அனுப்பியிருந்தனர். சுவிற்சர்லாந்து சோசலிச ஜனநாயக கட்சியிலும் அங்கம் வகித்து கொண்டு சுவிஸ்ஈழத்தமிழர் பேரவையின் அங்கத்தவர்கள் அல்லது ஆதரவாளர்கள் அல்லது அமைப்பாளராக வலம்வரும் எந்தவொரு நபரையும் நான் தனிப்பட அழைக்கவில்லை.

ஆனால் மற்ற தோழர்கள் தமது நட்புவட்டத்திற்கும் உங்களைப்போன்றவர்களிற்கும் அழைப்பு விடப்பட்டிருக்கின்றது. ஓர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன்னர் யாரால் இந்த நிகழ்ச்சி ஓழுங்குபடுத்தபடுகின்றது என்பதை கூட ஆராயது மேடை கிடைத்தால் காணும் என நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மட்டுமல்லாது நிகழ்ச்சியில் மைக்கை பிடித்து உரையாடிவிட்டு. இன்று 2017ம் ஆண்டு இது சிறிலங்கா அரசினால் ஓழுங்கு செய்யபட்டுள்ள நிகழ்ச்சியில் எமது படங்களை நீக்கி விடுமாறு கோருவது நகைப்பிற்கு இடமானது. நீங்கள் எந்த நிகழ்ச்சியை நடாத்துபவர்களிற்கு ஓர் கோரிக்கையை விடுங்கள். நாங்கள் தமிழ் அல்லது ஈழம் என்ற பெயரைக்கொண்ட அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்து கொள்ளுவோம் என வெளிப்படையாக அறிவியுங்கள்.

நாடுகடத்தல் சட்டமூலம் எவ்வித ஆபத்தானது என்பதை நான் விளங்கப்படுத்தும் போது இவ்வகையான கடும்போக்கான சட்டங்களே யுத்ததினையும் மனித உரிமை மீறல்களையும் காட்டுமிராண்டி அரச தர்பார்களையும் இலங்கையிலும் இந்தியாவிலும் நடைமறைப்படுத்த சாத்தியமாக்கியது. என்பதற்கு ஆதாரமாக திரையில் காட்டபட்ட படத்தினையும இங்கு காணலாம்.

இலங்கை இந்தியாவில் அமுலாக்கபட்ட இறுக்கமான சட்டமூலங்கள்;


  1. Prevention of Terrorism Act of 1978 (PTA)
  2. Terrorist and Disruptive Activities (Prevention) Act (TADA) (1985–95


எந்த அரச உளவு நிறுவனம் தன்னால் கொண்டுவரப்பட்ட அத்துடன் நடைமுறையில் ஓர் சட்டமூலத்தினை அம்பலப்படுத்தி விமர்சனம் செய்யும். நான் நினைக்கின்றேன் உங்களை போன்ற அரசியல் ஞான சூனியங்களால் மட்டுமே இப்படி ஓரு கண்டுபிடிப்பை கண்டுபிடிக்க முடியும் என்பதனை யாராலும் மறுக்கமுடியாது.

நான் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளிலும் அவர்களது வாழ்வாதாரத்துடன் அக்கறையுடையவன.; நீங்கள் வரையறுத்துள்ள தமிழ் தேசியவாதி ஆக நான் இல்லை. ஆனால் உங்களைப் பொறுத்தவரை தமிழ் தேசியத்தினை ஏற்காதவன் ஓர் துரோகி. உங்களுடைய பார்வையில் நானும் துரோகியாக இருப்பதை எண்ணி பெருமைப்படுகின்றேன். உங்களுடைய சான்றிதல் எனக்கு எவ்வித பாதிப்பiயும் ஏற்படுத்ததது.

சுவிற்சர்லாந்து வாழ் தமிழ் மக்கள் இன்று நீங்கள் சொல்வதை கேட்டு தலையாட்டும் காலம் கடந்துவிட்டது. சுவிற்சர்லாந்து வாழ் தமிழ்மக்கள் இன்று ஜனநாயக காற்றை சுவாசிக்கின்றார்கள். இச்சுதந்திர காற்றினை சுவாசிக்கும் எந்த தமிழரும் உங்களது ஞானசூனிய அரசியலிற்கு எடுபடமாட்டார்கள் என்ற உறுதியான நம்பிக்ககை எனக்கு உண்டு.

சோசலிச ஜனநாயக கட்சி தலைமை பீடத்திற்கு எழுதிய கடிதத்தில் என்னை சிறீலங்கா அரசின் கைக்கூலி எனவும.; நான் ஓர் ளுஉhறயசணநள ளுஉhயக  (கறுத்த ஆடு)இந்த கறுத்த ஆட்டை வெளியேற்ற வேண்டுமென குறிப்பிடபட்டுள்ளது. ஓர் இனவாத சொல் தொடர்களை பாவிப்பது ஓர் தவறானது என்ற அடிப்படை அறிவில்லாதவரினாலே கடிதம் எழுதப்பட்டுள்ளது. இனவாதத்தினையும் சாதிய ஓடுக்குமுறையினை வெளிப்படுத்தும் சொற்களை எமது பானையிலிருந்து நீக்க வேண்டும். இந்த அடிப்படை அம்சமும் தெரியாமல் சோலிச ஜனநாயக கட்சியில் அங்கம் வகிப்பது ஆச்சரியத்தினை தருகின்றது. இவர்களை போன்றவர்களிற்கான சரியான தரிப்பிடம் வலதுசாரி முகாம் என்றே கருதுகின்றேன்.
நான் சுவிற்சர்லாந்து சொலத்தூண் மாநில அரசியலிற்கு உட்புகுந்தது இலங்கை அரசியல் செய்யவில்லை என்பதனை ஆணித்தரமாக கூற விரும்புகின்றேன்.

மேலும் சுவிற்சர்லாந்து வாழ் பல்லின பாலியல் உரிமைகளிற்காகவும் இநநாட்டில் குடியேறி அனைத்து இனத்தவர்களின் வதிவிட உரிமைகளிற்காகவும் அனைவருக்கும் இன மத வேறுபாடற்ற வேலைவாய்ப்பு கல்வி உரிமைகளிற்காகவும். நிறவாதம் சாதியம் போன்ற அனைத்து சமூக ஓடுக்குமுறைகளிற்காகவும். அதிதீவிர தேசியத்திற்கு எதிராகவும் அதிதீவிரமத அடிப்படைவாதத்திற்கு எதிராகவே எனது சுவிற்சர்லாந்து அரசில் அமையும்.

இவ்விடயங்களை நான் யேர்மன் மொழியில் பதில் அளிக்கவிரும்பாததிற்கும் ஓருவருடைய பெயர்களும் பாவிக்கபடாதிற்கு பின்வரும் காரணங்களே முக்கிய காரணிகளாகும். தமிழ்ஈழ அரசியலில் ஈடுபடும் உங்களை போன்றவர்களிற்கு நன்றாக தமிழ் பேச எழுத வரும் என்று நம்புகின்றேன். அப்படி தமிழ் தெரியாவிடன் உடன் தமிழை கற்று கொள்ளுங்கள்.

1. இவ்வருடம் பல தேர்தல்கள் பல்வேறு மாநில கிராம நகர சபையில் நடைபெற இருப்பதால். உங்களது சேறடிப்புகள் பற்றிய யேர்மன் மொழி விவாதம் பல் வேறு குடியேற்ற பின்புலம் கொண்ட வேட்பாளர்களையும் பாதிக்கும்.

2. உங்களது அரசியல் ஞானசூனிய நடவடிக்கையை மற்றைய நாட்டவர்களிற்கு முன்னிலையில் நான் அம்பலப்படுத்த விரும்பவில்லை.

மீண்டுமொரு முறை சுவிற்சர்லாந்து அரசியலுக்கு வருபவர்கள் இந்நாட்டு அரசியலில் முதற்கண் கவனம் செலுத்துங்கள். தமிழ்ஈழ அரசியலை தனித்து நடத்துங்கள். இந்நாட்டு அரசியலில் கால்பத்திக்கும் போது நீங்கள் அனைத்து குடியேற்றவாதிகளிற்குமான குரலாக ஒலிக்கவேண்டும்.

கணபதிப்பிள்ளை சுதாகரன்
17.01.2017

Keine Kommentare:

Kommentar posten