Mittwoch, 24. April 2019

அடிப்படைவாத நோய்

இலங்கையில் கடந்த 21 ம் திகதி கிறுஸ்தவ தேவலங்களிலும் நட்சத்திர விடுதிகளிலும் நடைபெற்ற தாக்குதலிற்கு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தான் பொறுப்பு என்பது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இலங்கையில் கடந்தகாலங்களில் வளர்ந்துவரும் மத அடிப்படைவாதிகளின் வளர்ச்சி அதிகரித்துள்ளது.

இதற்கு ஓர் முக்கிய காரணங்களாக இலங்கை அரசின் தனியே பௌத்த மதத்திற்கு கொடுக்கும் தனி முன்னுரிமையும் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்திவரும் இந்து மத தீவிரமும் இஸ்லாமிய தீவரவாதிகளை மறைமுகமாக தூண்டிவிட்டு அதன் மூலம் குளிர்காணும் பல அரசுகளின் இரகசிய செயற்பாடுகளும் வளர்ந்து வரும் கிறுஸ்தவ அதிதீவிர செக்ட்டுக்களும் அவர்களின் மதமாற்ற பிரச்சாரங்களும் காரணங்காளாக அமைந்;துள்ளது.

நியுசிலாந்தில் நடைபெற்ற கிறுஸ்தவ தேவலாய தாக்குதலிற்கு பிற்பாடு முகநூலில் இலங்கை இஸ்லாமியர்கள் அதிதீவிர இனவெறி கருத்துக்களை பகிர்ந்து கொண்டதனை அவதானிக்க கூடியதாக இருந்தது. இதன் விளைவு இவ்வளவு மோசமாக அமையும் என்பதனை அனறு அனுமானிக்க முடியவில்லை.

அரசியல்வாதிகளினதும் அதிகாரிகளினதும் வறுமை

2009 ம் ஆண்டு முடிவிற்கு கொண்டுவரப்பட்ட யுத்ததின் பின்னர் அரசியல்வாதிகள் பலரிற்கு ஆயுதவியாபரங்களில் கிடைத்த பங்குகள் நன்கொடைகள் இன்றி யுத்தம் ஏன் முடிந்தது என்ற வகையில் கையறு நிலையில் இருந்தனர். யுத்த வியபாரம் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட பின்னர் போதைவஸ்து வியாபரத்தினை வலுப்படுத்தினர். இலங்கையில் இனறும் அரசியல்வாதிகள் அதிகாரிகள் பணத்திற்கு விலைபோகும் நிலையிலேயே உள்ளனர். விடுதலைப்புலிகள் கூட இப்பலவீனங்களை பாவித்தே தெற்கில் வெற்றிகரமான தாக்குதல்கள் நடாத்த கூடிய வாய்ப்புக்கள் அமைந்திருந்தது.
இந்நிலைமைகளை இந்த தாக்குதல்களை நகர்த்திய தீயசக்திகளும் தமக்கு சாதாகமாக பயன்படுத்திக்கொண்டனர். குண்டுகளை முதுகில் காவிக்கொண்டு சதாரணமான நிலை எவ்வாறு சாத்தியமானது? பல அதிகாரிகளின் கண்களை பணங்கள் மூடிமறைத்துள்ளது வெளிப்படை ஆகின்றது.

சிங்கள அரசியல் தலைமைகளின் அதிகாரத்துவ போட்டி


இரண்டு சிங்கள கட்சிகளிக்கிடையிலான அதிகார போட்டி மக்களின் நலன்கள் மீது அக்கறை கொள்ள விடாது தடுக்கின்றது.


தீவிர மத பிரச்சாரங்கள்


சர்வதேச ஆதிக்க சக்திகள் இஸ்லாமிய அடிப்படை வாதத்தினை தனது தேவைக்கு ஏற்ப கூட்டி குறைத்து தனது நலனை சாதித்து கொள்கின்றது. மத அடிப்படை வாதத்திற்கு இலகுவாக மக்கள் இரையாகுவதற்கு பல மத போதகர்களின் பிரச்சாரங்கள் முக்கிய காரணங்களாக அமைகின்றது. கிறுஸ்தவ திவீரவாத செக்ட்கள் தஞ்சமடைந்த மக்களின் துண்பங்களை தீர்ப்பதாக கூறி ஏமாற்றி பல தமிழர்களை மதம் மாற்றிய சம்பவங்கள் நியைவே நடந்தேறி உள்ளன. இன்றும் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்த தமிழர்கள் மாற்ற முடியாது நோய்வாப்படும் வேளைகளில் இவ் மத திவிரவாதிகள் வைத்திசாலைக்கதவுகளையம் நோயாளிகளின் வீட்டுவாசலிற்கும் வந்து மதமாற்றங்களை மிக சாதூரியமாக செய்து வருகின்றனர்.

இவற்றை தடுக்கும் நோக்கில் மற்றைய மதங்களும் தமது மதத்தினை பாதுகாக்கும் நோக்கில் புதிய யுக்திகளையும் மாற்றங்களையும் நடைமுறைப்படுத்திவருகின்றனர்.

அடிப்படைவாத நோய்தாம் சார்ந்த இனம் மொழி மதத்தின் பால் கொண்டிருக்கும் அதிதீவிர தற்பெருமையும் பெருமிதங்களும மிகையான கணிப்பீடுகளும் அடிப்படைவாதங்களை உருவாக்குகின்றது. தாம் சாரா இன மத மொழிகளை சார்ந்தவர்களின் கலாச்சார பண்பாடுகளை எள்ளி நகையாடுவது அல்லது அவர்களின் பாரம்பரியங்களை குறைத்து மதிப்பீடு செய்யும் நடவடிக்கையும் ஓர் அடடிப்படைவாத மனபாங்காகும்.


மதமும் அரசியலும்

அரசுகள் மதசார்பற்றதாக இருப்பதன்  மூலமே மதங்களிக்கிடையே ஓர் சமத்துவத்தினை பேண முடியும். இந்நிலமை இலங்கையில் ஏற்படுவதிற்கான வாய்ப்புக்கள் இல்லை என்றே அடித்து கூறலாம். இலங்கை அரசியலில் பௌத்த பீடாதிபதிகளின் ஆதிக்கம் அரசியல் அரங்கில் காத்திரமான பங்கினையும் தாக்கத்தினையும் செலுத்திவருகின்றது. ஆண்மைக்காலங்களில் அரசியல் யாப்பு திருத்த பிரதியிலும் பௌத்ததிற்கு முன்னுரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது. எவ்வாறு இந்த அரசு பல்வேறு மத சார்ந்த மக்களை சமமாக பேண மூடியும். இலங்கை அரசியலில் முன்னேற்றகரமான எவ்வித நடவடிக்கைக்கு முட்டுகட்டையாக இருப்பதே பௌத்த மதத்திற்கான முன்னுரிமையே முக்கிய காரணமாகும். 

புலம்பெயர் சமூகங்கள் பல்லாயிரக்கணக்காண கீலோமீற்றரை தாண்டி வாழும் சமூகங்கள் தமது அடையாளங்களை இழப்பதாக எழும் பயத்தினாலே பல சமூகங்கள் புலத்திலேயே அதிதீவிர அடிப்படைவாதத்தினை மேற்கொள்ளுகின்றனர். இதற்கு புலத்தில் வாழும் பல தமிழர்கள் தம்மை ஓர் கலாச்சார காவலர்களக கருதி தாம் சார்ந்த மொழி மதத்தில் கலாச்சாரத்தில் பித்து பிடித்து அலைகின்றனர். இவர்கள் தமது சௌகரியத்திற்கு இந்நாட்டு பிரஐh உரிமை பெற்றுவிட்டு தாம் வாழும் சமூகத்தின் கலாச்சாரத்தினை நகைப்புக்கிடமாக்கி தமது மொழி மதம் கலாச்சாரமே பெரிது என முகநூல்களில் அன்றாடம் பல பதிவுகளை பதிவு செய்து வருகின்றனர்.

புதிய நாஜிகள்

ஐரோப்பிய நாடுகளில் பல புதிய நாஐpகளும் இவ்வகையில் தமது இனம் மொழி கலாச்சாரத்தின் பால் கொண்டுள்ள அதிதீவிர பற்றே குடியேறிகள் வெளிநாட்டவர்கள் மீது வெறுப்புக்களையும் தாக்குதல்களையும் மேற்கொள்ளுகின்றனர். இவர்களின் நடவடிக்ககைள் தீவிரமாகாத வண்ணம் சட்டங்கள் மிக குறைந்த பட்சம் பாதுகாக்கின்றது. இவ்வகையில் அடிப்படை அதிதீவிரவாதங்களை தடை செய்யும் சட்டங்கள் இலங்கையிலும் உருவாக்கப்பட வேண்டும். 

Keine Kommentare:

Kommentar posten