Freitag, 28. Juni 2019

ஏகபோக சிந்தனையும் கண்ணை மறைக்கும் தூய்மைவாதமும்மேற்காணும் பதிவில்; பல தனி மனிதர்கள் மற்றும் சக உதவி நிறுவனங்கள் பலவற்றைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ள முரண்பட்ட பல விடயங்களை எடுத்துரைக்கும் நோக்கமே கீழ்க்காணும் பதிவின் இலக்கு! இப்பதிவுக்கு இன்னுமொரு இலக்கும் உள்ளது. தங்களது பதிவுபற்றி முதுகுக்கு பின்னால் பேசாது நேரடியாக வெளிப்படைதன்மையுடன் முன்வைப்பதும் ஓர் நோக்காகும்.

2009 ஆண்டிற்கு பிற்பாடு சுவிற்சர்லாந்திலும் பல ஜரோப்பிய நாடுகளிலம் பல்வேறு உதவி நிறுவனங்கள் தாயகத்தில் வாழ்வாதார நடவடிக்கைகளை செய்யும்வகையில் தோற்றம் பெற்றன. பல் வேறுபட்ட அமைப்புகள் தமது சக்திகளிற்கேற்ப உதவிகளை பாதிக்கபட்டவர்களிற்கு வழங்கிவருகின்றன. பல தனிமனிதர்களும் தாம் தாயகம் செல்லும் போதெல்லாம் பல்வேறுபட்ட உதவிதிட்டங்களை செய்து வருகின்றனர்

இவ்வகையில் பல மாணவவர்கள் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதை தமது தார்மீகக் கடமையா எண்ணி உண்டியல் மூலம் பணத்தை சேர்ப்பது தொடக்கம் தம்மை விளம்பரப்படுத்தி சில நிகழ்வுகளை நடாத்தியும் விரைவாக பணத்தைச் சேர்த்து மக்களின் அவலநிலை அறிந்து எவ்வளவு விரைவாக உதவ முடியுமோ அவ்வளவு விரைவாக போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் தொழிற் துறைசார் மேம்பாட்டுக்கு உதவி வருகின்தறனர்

ஆனால் ஆதரவு உதவி நிறுவனத்தின் மேற்படி பதிவானது தங்களது அமைப்பு மட்டுமே புனிதமானது சரியானது எனும் தொனி பட தம்மை விளம்பரப்படுதும் வகையில் எழுதியிருப்பது மேற்படி மாணவர் சமுதாயத்தையும் ஏனைய சக உதவி நிறுவனங்கiயும் அவர்களது தார்மீகக் கடமைகளயும் மறுதலிப்பதாக உள்ளது. கண்டிக்கத் தக்கது!  இன்று தாயகத்தில் வாழ்வாதாரத்தினை இழந்து வாழும் பல குடும்பங்கள் உள்ளன. இவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து நிரந்தர வருமானங்களை ஏற்படுத்திகொடுக்கும் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு பல்வேறு உதவி நிறுவனங்களின் தேவை இருக்கிறது. இவ்வகையில் இயங்கிவரும் அமைப்புக்களை ஊக்குவிப்பதே எமது இன்றைய கடமையாகும். அதை விடுத்து தனித்து தங்களது அமைப்பு மட்டுமே புனிதமானதும் மிகச்சரியானதும் எனக் கூறி  தம்மைத் தாமே விளம்பரபடுத்தும் அதேவேளை ஏமைய உதவி நிறுவனங்களின் தேவையை மறுதலிக்கின்றனர். இது ஏனைய நிறுவனங்களை புறந்தள்ளிவிட்டு தாம் மட்டுமே சரியானவர்கள் எனக் கூறும் இம் முறைமை அதிகாரத்துவத் தொனியில் தம்மை விளம்பரப்படுத்தும் ஒரு செயல். மிக ஆபத்தான இவ் அனுபவத்துள் வாழ்ந்து களைத்துப்போனவர்கள் எமது மக்கள்!

பல புலத்து உதவி அமைப்புக்களின் நிர்வாக மற்றும் பயண செலவுகளை தாமே முன்னின்று பொறுப்பெடுக்கின்றனர். நாம் அறிந்தவகையில் பல சுவிஸ் நண்பர்கள் கூட இவ்விதம் செயற்படுகிறார்கள். இவற்றையெல்லாம் நீங்கள் அறிந்துகொள்வதற்கு சந்தர்ப்தபம் இல்லைத்தான்

உண்டியல் குலுக்கலுமில்லை. எந்த வழியிலாவது நிதி சேர்ப்பதை மட்டுமே இலக்காகக் கொண்டதுமில்லை

இவர்கள் பார்வையில் உண்டியல் குலுக்குவது கொச்சையாகத் தெரிகிறது. பரந்துபட்ட மக்களின் பிரச்சனையை பரந்துபட்ட மக்களின் பங்குபற்றலை கோருவதான் ஜனத்திரள் வேலைமுறை. ஒரு நண்பர் கூறினார்; எங்கள் மக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும்பொருட்டு உதவி கிகை;குமாக இருந்தால்உண்டியல் என்ன? குண்டியையே நான் கழுவத்தயாராக இருக்கிறன்என்று. இதுதான் மக்களுக்காக தம்மை அர்ப்பணிக்கும் வேலை முறை

பலரது ஓத்துழைப்போடும் பங்களிப்புடனும் ஓர் உதவி திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதை ஓரு பொதுத் தேவையின் அவசியத்தினை முன் வைத்து உண்டியல் குழுக்குவதை ஏன்? ஒரு பாலியல் தொழிலாளி அவலப்படும் மக்களுக்கு உதவும் பொருட்டு தனது தார்மீகக் கடமையாக நினைத்து உதவி புரியக்கூடும். என்பதற்கான உங்கள் அர்த்தம் அதுவாக இருப்பின்இ அத் தொளிலாளியின் தார்மீக உணர்வுக்கு மதிப்பளித்து அதையும் ஏற்பதுதான் மனிதப் பண்பு. இதைக் கொச்சைப்படுத்திவிட முடியாது.
புலத்தில் பல நிறுவனங்கள் சாப்பாடு சமைத்துகொடுத்து நிதி சேகரிக்கின்றார்கள்! தமது வேலை நேரத்துக்குப் பின் இப்படி ஓர் உடலுழைப்பை செலுத்துவதற்கு எவ்வளவு அர்ப்பணிப்பு மனநிலை வேண்டும்? „வேறு எந்த வழியிலாவதுஎன்ற உங்கள் கூற்று உங்கள் கூற்று இந்த தியாகிகளையும்தான் கொச்சைப்படுத்துகிறது!

வேறு சில நிறுவனங்கள் பயன்பாட்டளர்களிற்கு வருமானம் கொடுக்கும்வகையில் அவர்களால் உற்பத்தி செய்யப்பட்ட பல கைப்பணி பொருட்களை விற்பனை செய்கின்றனர்!
மேலும் இசை நிகழ்ச்சிகள் நடாத்தி நிதி சேகரிக்கின்றனர்! இந்த வகையான அர்ப்பணிப்பு முறைகள் எல்லாமே உங்கள்வேறு எந்த வழியிலாவது“  என்ற பழிப்புரைக்குள் வந்து சேர்கிறது. என்னைப் பொறுத்தவரை அர்ப்பணிப்படன் பணிபுரியும் அனைத்து உள்ளங்களுக்கும் நாம் மதிப்பளிக்கவேண்டும் என்பதே!

ஆக மொத்தம் உங்கள் பர்வையில் இருந்த இடத்தில் இருந்துகொண்டு; நண்பர்கள் மத்தியில் வாய் விளம்பரம் செய்து நிதி சேகரிக்கபடுவது மட்டுமே சரியானது! மற்றவை எல்லாம் பழிப்புக்குரியவை! வாழ்க உங்கள் பணி!

வரலாறு பதிவு ஆவனப்படுத்தல் பற்றி நிறைய பேசுபம் நீங்கள் ஆதரவு நிறுவனத்துக்காக முன்னின்ற முக்கிய நபரை தவிர்த்து மகாகாவம்சம் பாணியில் தங்களை அதிகாரத்தில் நிறுத்தி வரலாற்றை எழுதியிருப்பது மிகவும் சிறப்பானது. ஓரு அமைப்பின் வருடாந்த அறிக்கையில் அமைப்பினால் சாதித்ததை மட்டும் தெரியப்படுத்தாது உங்களது கனவை நனனவாக்க காடு மேடு என்று அலைந்த மனிதனை விட்டுச்சென்றது கவலைதருகின்றது.

ஆக மொத்ததில் இப்பதிவு உதவிநிறவனங்களை ஆக்கபூர்வமாக ஊக்குவிப்பதற்கு பதிலாக தங்களை மட்டும் விளம்பரப்படுத்தியுள்ளமை மிக மிகச் சிறப்பு!

வாழ்க உங்கள் புனிதத்துவம்!
தோடரட்டும் உங்கள் பணிகள்

.சுதாகரன் 
28.06.2019

Keine Kommentare:

Kommentar posten