Samstag, 20. Januar 2024

தமிழ் தேசியமும் தலைமத்துவ அவலங்களும்

தேசியம் பற்றிய புரிதல் அற்று இலங்கை தமிழர் அரசியல்வாதிகள் பலர்  இருப்பதை பார்க்கும் பொழுது கவலை அளிக்கின்றது. முதலில் தேசியம்பற்றி பேசுபவர்கள் மற்றைய தேசிய இனங்களை ஏற்றுக்கொள்ளவும் அங்கீகரிக்கவும் பக்குவப்படல் வேண்டும். தனியே தனது இனமே பல சிறப்பு அம்சங்களை கொண்டதாக தாமே நினைத்து பெருமை கொள்வது முட்டாள் தனமாது. தேசியம் கற்பிதமானதும் காலத்துக்கு ஏற்ப மாறுபாடுகளை கொண்டது என்பதனை மார்க்சிலிருந்து பல அரசியல் புத்தியீவிகள் விவாதித்து வந்துள்ளனர். இலங்கைத்தமிழரிடம் விடுதலைப்புலிகளும் தமிழ் மிதவாத கட்சிகளும் இந்தியாவில் சீமான் போன்ற அரசியல்வாதிகளும் தாம் சார்ந்த இலக்குகளை அடைவதற்கும் தேசியத்தினை ஆயுதமாக பயன்படுத்தி மக்களை அணிதிரட்ட பயன்படுத்த பட்டுள்ளது. இதனையே சிங்களத்தேசியமும் செய்கின்றது.


இன்று புலத்தில் தமிழர்கள் இடம் விடுதலைப்புலிகளால் விதைக்கபட்ட தமிழ்தேசியம் அவர்களின் இலக்கை நோக்கி மக்களை அணிதிரட்டவும் நிதிசேகரிக்கவும் நன்கு பயன்பட்டது. விடுதலைப்பபுலிகள் தளத்தில் இல்லாதபோதும் பலர் புரளிகளை பரப்பி விடுதலைப்புலிகளின் தேசியத்தினை உயிர்பித்து பணம்பறிப்பதில் பல பிரிவுகள் புலத்தில் உலாவருகின்றனர்.


இலங்கையில் உள்ள மிதவாத தமிழ்கடசியின் தலைவருக்கான தேர்தலில் மீண்டும் ஓர் தமிழ்தேசியம் பேசுபொருளாக எழுந்துள்ளது. தமிழ் அரசுகட்சி மூன்று வேடபாளர்களை கட்சித்தலைவர் தேர்வில் நிறுத்தி உள்ளனர். இந்த வேட்பாளர்களில் இருவர் சைவசமயத்தவரகள். ஒருவர் கிறுஸ்துவ மதத்தினை சார்ந்தவர். இப்பொழுது சில தமிழ் தேசியம் பேசும் அறப்படித்ததுகள் தாம் ஆதரிக்கும் சைவசமய வேட்பாளரிற்கு ஆதரவாக தமிழ் தேசியம் வரையறுக்கபடுகின்றனர்.


தலைமைத்துவம் என்பது இலகுவானதல்ல. வழிநடத்தல்களிற்காண பண்பும் அனைத்து விவாதங்களயும் பல்வேறுபட்ட விடயங்களை கூர்ந்து செவி சாய்க்கும் பண்புகளகொண்ட ஒருவராக இருக்கவேண்டும்.


இலங்கை இந்திய நாடுகளில் தலைமைத்துவம்பற்றிய விவாதங்கள் குறைவாகவே உள்ளது. இராணுவம்போல் மறுபேச்சு அற்று பின்தொடர்வது மட்டுமே தலைமை என்ற பழமைவாத சிந்தனை முறையே உள்ளது.


ஓர் சமூகம் எப்பொழுது ஆராக்கியமான கருத்துபரிமாற்றங்களையும் புதிய கருத்துக்களையும் மாற்றங்களையும் ஏற்க மறுக்கினறாதோ அந்த சமூகம் இந்த புதிய புவியியல் மாற்ற அரசியலில் இரையாகிவிடும் வாய்ப்பே அதிகமாக உள்ளது.


முதலில் இலங்கையில் வாழும் தமிழர்களும் புலத்தில் வாழும் தமிழர்களும் நடந்துமுடிந்த ஆயுதபோராட்டம் ,மற்றும் அரசியல் நகர்வுகளில் நடைபெற்ற தவறுகள் சரிகள் பற்றி பக்க சார்பற்ற விமர்சனங்களிற்கு தயாராக வேண்டும். அதற்கான அரசியல் புவியியல் சூழல்பற்றிய அறிவை வளர்த்து கொள்ளல் வெண்டும்.மாறாகா நாம் பிறப்பிலையே அறிவுயீவிகள் உலகத்தினையே ஆணடவர்கள் என்ற மமதையில் இருந்தால் இலங்கைத்தமிழர்கள் காணாமல் ஆட்கப்படுவர் என்பது நிட்சயமானதாக மாறிவிடும்.


அதுமட்டுமல்லாது உணர்ச்சிகளிற்கும் தம்பட்ங்களிற்கும் அடிமையாகாது கசப்பாண உண்மைகளை அறிந்துகொள்வதற்கும் ஏற்றுகொள்வதற்கு தயார் ஆகவேண்டும்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen