Montag, 22. Januar 2024

தமிழ் அரசு கட்சியின் தேர்தலும் விசிறி தேசியவாதமும் (Fans Nationalism)

G. Suthakaran / 23.01.2024

தமிழ் அரசுக்கட்சி தனது தலைவரிற்கான தெரிவினை தேர்தல் மூலமாக நடாத்தியது பாராட்டதக்கது. இது ஓர் முனமாதிரியான செயல். மற்றும் இலங்கை இந்திய அரசியல் கட்சிகளிற்கும் முன்மாதிரியாக அமைந்தள்ளது என்பதனை மறுக்கமுடியாது.

ஆனால் தமது கட்சி சக வேட்பாளர்கள் மீது அதே கட்சியை சேர்ந்த அங்கத்தவர்களும் வேட்பாளர்களும் சுமந்திரன் மீது ஆதாரமற்ற குற்றசாட்டுக்ளை அள்ளி வீசியது அருவருக்கத்தக்தும் ஏற்றுக்கொள்ளமுடியாத செயற்பாடுகளாக அமைந்திருந்தது. ஆனாலும் சுமந்திரன் தரப்பிலிருந்து தன்னுடன் இருந்த சக வேட்பாளர்களிற்கு எதிராக எந்த ஒரு மலிவான பிரச்சாரங்கள் இடம்பெறவில்லை. தேர்தல் முடிவுகளை மதித்து வெற்றி பெற்ற வேட்பாளரை உட்சாகப்படுத்தி தனது தோல்வியை கெளரவமாக ஏற்றுக்கொண்டது அவரது தலைமைத்துவ பண்பின் சிறப்பினை எடுத்துரைக்கின்றது.


புலத்தில் உள்ள தமிழ்தேசியம் என்ற போர்வையில் தமது விசிறி தமிழ் தேசியவாதிகள் (Fans Nationalism) சுமந்திரனை தமிழ் தேசியத்திற்கு எதிரானவர் சித்தரித்து இருந்தனர். தமது வித்தைகளிற்கும் தாம்போடும் தாளத்திற்கு தலை அசைப்பவராக சிறிதரன் இருப்பார் என்பதனை புலத்து விசிறிகள் கணிப்பிட்டிருந்தனர். அதன் அடிப்படையில் வாக்களிற்கும் தகுதிபெற்ற தமிழ் அரசுக்கட்சியுடன் தமது விருப்பு வேட்பாளரை தெரிவு செய்வதற்கான அளுத்தங்களை கொடுத்திருந்தனர். இச்செயற்பாடுகளை பல்வேறுபட்ட சமூகவலைத்தளங்களில் பார்க்கூடியதாக இருந்தது.

ஒரு ஆளுமையான ஒருவரை தம்மால் நிர்வாகிக்க முடியாது என்பதனை புலத்து விசிறிகளும் மற்றும் உணர்ச்சி பேச்சுக்களிற்கு காலம் காலமாக அடிமையாக இருந்த இலங்கை வாழ் தமிழர்களும் நன்கு அறிந்து இருந்தனர். இவர்களிற்கு இரத்தபொட்டு வேண்டி நிற்கும் தலையாட்டி பொம்மை தேவைப்பட்டது. இதற்கு நன்கு பொருத்தமானவர் சிறீதரன். இவ்வகையாக பல பொம்மைகள் மற்றைய தமிழ் கட்சியிலும் உள்ளனர். இவ்வகையில் உதாரணபுத்திரராக உள்ளவர்கள் ஐயா விக்கினேஸ்வரன், கயேந்திரன், சிவாஜிலிங்கம்......போன்றோர் உள்ளனர்.

தமிழ் சமுகமூம் தலைமைகளும் பல தடவைகள் தமக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை தாம் நம்பும் மற்றும் தமக்கே உரித்தான விசிறி தேசியத்தினால் (Fans Nationalism) பயன்படுத்தாது விட்டு்ளனர்.

தமிழ் அரசுகட்சி வருகின்ற தேர்தலில் மீண்டும் தமக்கு இரத்த பொட்டினையையும் வாக்குகளை தமதுபக்கம் குவிப்பதற்கு தகுதியான தலைவரையே தெரிவு செய்துள்ளனர். இந்த தலைமைக்கு சுமந்திரனை தெரிவு செய்து இருந்தால் மற்றைய தமிழ்கட்சிகளின் வாக்குவங்கி தானாகவே நிரம்பி இருக்கும். அதுமட்டுமல்லாது தமிழரசுகட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பல விழுக்காடுகளை காணவேண்டி நிலை ஏற்பட்டிருக்கும். வரப்போகின்ற நெருக்கடியில் இருந்து தமிழ் அரசு கட்சி தன்னை பாதுகாத்து கொண்டதாகவும் பார்க்க வேண்டி உள்ளது. மேலும் வருகின்ற தேர்தலில் சுமந்திரன் வெல்வதற்கான சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளதாகவும் எதிர்வு கூறலாம்.

வாய்வீச்சு வீரர்களிற்கு வழங்கப்பட்ட ஓர் வாய்பாகவும் பார்க்கலாம். அல்லாது விடில் இது அழகான கனவாக மட்டும் இருந்துவிடும். வசிறிகளின் கனவு நனவாகி உள்ளது. இனி எந்த மேடை சரி இல்லை என்று கூறப்போகின்றனர்? ஆனால் இவர்களிற்கு ஓர் சிறீதரனையும் தேசியத்திற்கு எதிரானவர் என முத்திரை குத்தி தப்பிப்பதற்கான பென்னாண வாய்ப்பு மட்டும் எஞ்சி உள்ளது.

இலங்கையில் எப்போது  தமிழ்தரப்பபில் அதிதீவிர தேியவாதிகள் ஆளுமை பெறுகினறன்றதோ, அது சிங்கள பேரின தேசியவாதிகிற்கு பால்சோறு கிடைக்கின்ற மாதிரியான சம்பவங்களாகவே வரலாற்று ரீதியில் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தல் சிங்கள தேசியத்தினை இன்னும் பல ஆண்டுகள் வலுவூட்டவே செய்யும். இதனையே புலத்து விசிறிகளும் யாகம் செய்து காத்துள்ளனர்.

ஏன் புலத்தில் உள்ளவர்கள் நாட்டில் வாழ்பவர்களை விட ஒருபடி மேல் தம்மை கலாச்சார, தேசிய காவளராக அடையாளப்படுத்துகின்றனர்?

இது புலம் பெயர்ந்து வாழும் பல சமூகங்களிற்கு உரிய பொது பண்பாக உள்ளது. குறிப்பிட்ட கலாச்சாரத்தில் வாழ்ந்த மனிதன் பிறிதொரு கலச்சார சமூகத்துடன் வாழும் போது தனக்காண அடையாளம் இழப்பதாக உணர்கின்றான். இதனாலேயே தமது சொந்த நாட்டில் வாழ்பவர்களை விட இறுக்கமான கலாச்சார காவலர்களாகவும் தேசியவாதிகளாகவும் வாழ முனைகின்றனர். அத்துடன் இவர்கள் நின்றுகொள்ளாமல் தமது சொந்தநாட்டின் அரசியலிலும் ஆதிக்கம் செலுத்த விரும்புகின்றனர்.

புலம்பெயர் தமிழர்கள் பலர் இன்னமும் தனி நாட்டு கோரிக்கையில் உறுதியாக உள்ளனர். இவர்கள் தமது சொந்த நாட்டிற்கு போய் வாழப்போவதில்லை. அங்கு வாழும் மக்கள் தமது அரசியலை தீரமாணிக்கட்டும் என விட்டுவிடும் மனோபவமும் அற்றவர்களாகவே உள்ளனர். இதனால் இலங்கைத் தமிழர்களின் அரசியல் உரிமைகளிற்கு முட்டுகட்டையாக சிங்கள தேசியம் உள்ளதோ அதேபோன்று புலத்தில் உள்ள விசிறி தேசியமும் ( Fans Nationalism) விடாப்பிடியாக இருக்கப்போகின்றது. இது ஓர் கசப்பான தொடர் வரலாறு.

நெல்சன் மண்டலா போன்ற ஓர் தமிழ் தலமை எப்பெழுது உருவாகும்?

Keine Kommentare:

Kommentar veröffentlichen