இலங்கைத்தீவின் அரசியல் அதிஉயர் அதிகாரபீடத்தை புரட்டிப்போட்ட ஒருசூறாவளி அதிபர் தேர்தல் நடந்துமுடிந்திருக்கிறது. சுதந்திர இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக தீவில்வாழும் பெரும்பான்மையான ஏழைமக்களின் வாழ்வுமேம்பாட்டை மட்டுமே அரசியல் சுலோகமாக கொண்டு தேசியமக்கள்சக்திஎன்ற கட்சி அதிபர் பீடத்தை கைப்பற்றிஇருக்கிறது. இது தீவில் வாழும் ஏழைமக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் ஒரு வெற்றிதான் கொண்டாடப்படவேண்டிய வெற்றிதான். ஆனாலும் அன்றாட வாழ்வாதாரமே பெரும்திண்டாட்டமானஅந்த ஏழைமக்கள் தங்கள் மனங்களில்தான் அந்த கொண்டாட்டத்தை நிகழ்த்துகிறார்கள் ! புதிய அதிபர் பதவியேற்பும் மிகமிக எளிமையாகவே நடாத்திமுடிக்கப்பட்டது ஜேஆரிலிருந்து ரணில்வரை அநுராதபுர கோத்தா அதிபர் இராஜ்சிய பதவிஏற்பை கண்ட மக்கள் அருராவின் பதவி ஏற்புஎவ்வளவு எளிமை என்பதை உணர்வர்!
இரண்டுபுரட்சிகளைமூட்டி அரச அதிகார இயந்திரகொடூர பற்களால் வெறிகொண்டு கொன்றுதின்னப்பட்ட ஜேவிபி என்ற இயக்கத்தின் பல்லாயிரக்கணக்கான இளம் உயிர்களின் விடுதலைகனலை ஏந்தி ஒரு சோசலிச இயக்கத்தின் இளைஞர் அமைப்பின் தலைவராகி பிற்பாடு அந்த இயக்கத்தின்அரசியல்கட்சி தலைவராகி நாட்டின் எதிர்கட்சி தலைவராகி ஒரு முப்பது வருட அரசியல் போர் அநுபவங்களினூடாக அதிபராகி இருக்கிறார் அநுரா!செயல் அதுவே சிறந்தசொல் என்பதை நிரூபிப்பதே தன் இலட்சியம் என்பதை அவர் மக்களுக்கு ஆற்றுகின்ற உரைகள் எல்லாவற்றிலும் இடித்துரைக்கிறார் தீவில் தெற்கில் ஒரு வார்த்தை கிழக்கில் இன்னொருவார்த்தை தான்சார்ந்த சிங்கள மக்களுக்கு ஒருபேச்சு வடக்கு தமிழர்வாக்குப்பெற இன்னோர்பேச்சு
என்று அரசியல் வியாபார தலைவராகன்றி ஒன்றுபட்ட இலங்கைத்தீவுக்குமான இன மத பாகுபாடற்ற ஐனநாயகசமத்துவ ஆட்சியை கொண்டுவருவேன் குறிப்பாக ஏழைமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவேன் என்று நிதானமாக ஆணித்தரமாக உரைக்கும் இலங்கை தீவின் முதல் அதிபர் இவர் !முப்பதுவருடத்துக்கும்மேலான யுத்தத்தில் எல்லாம் இழந்து தேசம்விட்டுதப்பிஓடிக்கொண்டிருக்கும் கூட்டத்தின் பக்கம் எண்ணியே பார்க்க முடியாத எம் சொந்த உறவுகள் இந்த தலைவனை ஒருநம்பிக்கை நட்சத்திரமாக பார்ப்பதில் என்ன தவறு!
பண்டாரநாயக்கா சந்திரிகாவை நம்பி நல்லூரில் காப்புகூட வாங்கிய எங்கள் மக்கள் ஏழைஅடிவயிற்று பசிபோக்குவேன் ஏழைப்பிள்ளைகளின் கல்வியை உறுதிசெய்வேன் என்ற அநுராவின் வார்த்தையை நம்பத்தானேசெய்வார்கள்?
ஆனால் எம்புலம்பெயர் ஊடகங்களும் பெரும்பாலான சர்வதேச ஊடகங்களும் புதியதிபரை புதிராகவே சித்தரிக்கிறார்கள் இன்னும் ஒருபடிமேலாக மார்க்ஸிட் சோசலிச கம்யூனிச தலைவர் இவரால் ஆட்சியை கொண்டுநடத்தமுடியாது இவரின் ஆட்சிஆயுள் அரைவருடமும் நீடிக்காது என்று மக்கள்மனங்களிலே எதிர்மறை எண்ணங்களை விழுந்தடித்து விதைக்க முனைவதேன்?
யுத்தம் நடந்துகொண்டிருந்த காலத்தில் லண்டனில் இருந்துவந்த ஒருமாத இதழுக்கு சிவதம்பிஅவர்கள் எம் தமிழ் ஊடகத்துறை குறித்த பேட்டியில் சிங்கள ஊடகத்துறை வளர்ந்தளவுக்கு தமிழ்ஊடகம் வளர்ச்சிஇல்லை என்ற பொருள்பட குறிப்பிட்டார் அது யுத்தகாலம் யுத்தம்முடிந்து ஒரு பதினைந்துவருடம் கழிந்தும் பொதுசன ஊடகம் என்று சொல்லக்கூடியவைகள்கூட எம் இலங்கைத்தீவின் அரசியல் என்றாலே ஒரு சார்பாக உலகக்குருட்டுப்பார்வையோடு ஏனோசெயற்படுகிறார்கள்?இந்தபோக்கு எம்தீவின் தேர்தல்காலகட்டத்திலும் அநுராவின் வெற்றிக்குப் பிறகும் தொடர்வது எம்ஈழத்தமிழரின் அரசியல் சாபமோ என்று எண்ணத்தோன்றுகிறது.!இந்த எண்ணப்பாட்டுத்தீக்கு எண்ணை விடுபவர்களாக எம் மக்களின் அரசியல்கட்சி தலைவர்களே இருக்கிறார்கள் அண்மையில் அப்புக்காத்துவாரிசு அரசியல்கட்சி கஜேந்திரன் அநுராவுக்கு என்ன அருகதை இருக்கு என்று முழக்கமிடுகிறார்
தமிழரசுகட்சி ஜனநாயக தேர்தல் தலைவரோ அநுரா ஜேவிபி கட்சிதான் 83 இனக்கலவரத்தை நடாத்தியது என்று மிகமோசமான வரலாற்று பொய்யை புனிதநாள் பேச்சில் கட்டவிழ்க்கிறார்
இலங்கைதீவின் புவியியல் அமைப்பு அது இன்னும் எவ்வளவுகாலம் ஆயுள் உள்ளது என்று புவியியல் ஆய்வாளர்கள் அங்கலாய்க்கிறார்கள் மாலைதீவையும் ஒப்பிட்டு!
உலக மேலாதிக்கப்போட்டியில் முன்னணியில் ஓடும் சீனாவுக்கு ஆப்புவைக்க தாய்வான் யுத்தத்தைகொழுத்துவிடத்துடிக்கும் மேற்கு ஆதிக்க சக்திகளும் எம் ஆசியபிராந்தியமும்!
உலக சனத்தொகையில் முதன்மை்பெற்றதுமட்டுமல்ல வளர்ந்துவரும் சந்தைப்பொருளாதார போட்டியாளர்களிடையேயும் பலம்பொருந்தும் ஆதிக்கசக்தியாக கருதப்படும் இந்தியா எம் அண்டைநாடுமட்டுமல்ல பாலம்போட்டால் கொழும்பைவிட குறுகிய தூரத்தில் இருக்கும் எம் உறவுநாடு!
இலங்கையின் சனத்தொகையில் இரண்டாம் இடத்தில்இருந்த தமிழர்
மூன்றா நான்கா இடம் என்று தடுமாறும் அளவுக்கு ஈழத்தமிழ்இளைஞர் தப்பி ஓட வைக்கும் அரசியலே இதுவரை இலங்கைத்தீவில் இருந்துவந்த நிலையில் யுத்தத்தால் அனைத்தும்
இழந்தும் பதினைந்து வருடங்கள்கழிந்தும் முறையான எந்த புனர் மேம்பாடும் இன்றி தவிக்கும்எம் ஏழைசகோகதர மக்கள் வாழ்வு விடிவது எப்போ? ஒரு அரைநூற்றாண்டாய் அழிந்துபோன எம்தேச வளங்களை மீள்கட்டமைப்பு செய்வது எப்போ?அல்லது சர்வதேச அனுசரணையோடு வடக்கும் கிழக்கும் இணைந்த உள்ளக சுயாட்சி தீர்வு கிடைக்கும்வரை களத்திலும் புலத்திலும் திரண்டுபோராட புதுசக்திகள்தயாராகிறார்களா?
இந்த கேள்விகளை முன்னிறுத்தி ஆக்கபூர்வ அறிவுக்கண்களை திறக்க ஐனநாயகத்தின் ஒருமுக்கிய தூண் என்ற சமூக பொறுப்போடு குறிப்பாக எம்புலம்பெயர் ஊடகங்கள் செயற்படுவார்களா என்று ஒரு ஈழத்தமிழனாக ஏங்குகிறேன்!