Montag, 2. September 2024

எனது இலங்கை பயணமும் நடைபெற போகும் ஜனாதிபதி தேர்தல் பற்றிய எனது பார்வையும், புலத்து அதிதீவிர தேசிய வாதமும் யதார்ததமும் - க.சுதாகரன் / 02.09.2024

 

இலங்கை மக்கள் இம்முறை தேர்தலில் மும்முனையாக போட்டி இடும் மூன்று வேட்பாளர்களை சந்திக்க உள்ளனர் என்பது உறுதியாகிவிட்டது. ஆனாலும் இலங்கையில் காலம் கலமாக தேர்தல் காலங்களில் நடைபெறும் வன்முறைகளும் சூழ்சிகளும் அனைத்தையும் தலைகீளாக மாற்றும் என்பதையும் எதிர்பார்த்தே ஆகவேண்டும். சிங்கள தமிழ் முஸ்லீம் மக்களிடம் அலசிய பொழுதும் மூன்று வேறுபட்ட வேட்பாளர்ளின் பெயர்களையே முன் மொழிந்திருந்தனர். கிழக்கில் தமிழ் பல்கலைக்கழக தரப்பினைரும் அரச உத்தியோக பிரிவினரும் NPP யின் அனுரவிற்கு குமார திசாநாயக்க ஆதரவாகவே கருத்துளை தெரவித்திருந்தனர். இந்த விடயம் ஆச்சரியத்தினை தந்திருந்து. ஆனால் யாழ்பாணத்தில் அனைத்து வேட்பாளர்கள் மீதும் ஓர் சந்தேகத்தின் கூடிய பார்வையே காணப்பட்டது. கிழக்கில் உள்ள ஒரு சில புத்திஐீவிகளுடன் பேசிய பொழுது. அனுர தரப்புடன் பல துறைசார் புத்திஐீவிகளை ஒண்றினைத்து உள்ளதாகவும் திறமையான ஊழல் அற்ற தலமையை கொடுக்கமுடியும் என வாதிட்டனர்.

ஆனால் வடக்கில் ரணில் அணியும் சஜித் அணியுமே கண்ணுக்குள் புலப்பட்டன.

முன்னால் போரளிகளும் இலங்கையின் உளவுத்துறையும்

மகிந்த தரப்பு யுத்ததினை கொடூரங்கொண்டு நசுக்கிய பின்னர். தன்னால் கைது செய்யப்ட்ட பல போராளிகளிற்கு புனர் வாழ்வளிப்பதாக கூறி அனைத்து போராளிகளையும் மூளை சலைவை செய்துள்ளனர். அது மட்டுமல்லது அவர்களது வறுமைக்கு ஊதியமளிக்கும் போர்வையில் அவர்களை தமது உளவுறையில் அரச உத்திகோத்தர்களாக ஆக்கி உள்ளனர். Diaspora தமிழர்கள் விடுதலைப்புலிகளின் உளவுதிறனை எப்பவும் பெருமையாக பேசுவதை நான் கண்டுள்ளேன். இம்முறை எனது பயணத்தின் இலங்கை அரசின் நரித்தனமான உளவை எண்ணி வியந்தேன். முன்னாள் போராளிகள் என்ற அமைப்பினை தோற்றுவித்து தமிழ் கட்சிகளிடையே பல பிளவுகளை ஏற்படுத்தி இருக்கின்றனர். எவ்வாறு புலிகள் காலத்தில் புலிகளால் விரட்டபட்ட அமைப்புக்கள் அரசிடம் மண்டியிட்டு தம்மையும் தமது உறுப்பிணர்களை எவ்வாறு காப்பாற்றினார்களோ, அதைவகையில் தான் இன்றைய முன்னாள் போராளிகளின் நிலையும். முன்னால் போராளிகள் மகிந்தவின் கையாளான ரணிலை ஆதரிப்பது என்பதனை வெளிப்படரயாகவே கூறி உள்ளனர்.

நாடு திவாலான நேரம்

ரணில் மகிந்த கொள்ளைக்கூட்டத்தினை காப்பாற்ற வந்த துதூவன் என்பதை பலர் மறந்து. நாடு வங்குரோத்தில் இருந்த போது நாட்டைகாப்பாற்றிய தேவ தூதுவனாக பார்ப்பதே கவலைதருகின்றது. நாட்டை திவாலாக்கிய கும்பல் முற்றும் அதிகாரம் இழந்து இருக்கவில்லை. அவர்களின் சாகாக்களே அன்றும் இன்றும் பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவ படுத்தகின்றனர். திவாலகி போன நாட்டின் ஆட்சியை ஏற்க மறுத்தவர்கள் கெகள்ளைக் கூட்டத்தினை காப்பாற்றுவதே மறைமுக நிபந்தனையாக இருந்தது. இதனாலே இன்றைய மற்றைய ஜனாதிபதி வேட்பாளர்கள் (சஜித், அனுர) ஏற்றுகாள்ளவில்லை என்றகருத்தும் வலுமைபெறுகின்றது.

 

தமிழர் தரப்பு

தமிழர் தரப்பு பல அரசியல் இராணுவ தோல்விகளை சந்தித்த போதும் இன்னமும் எவற்றையும் கற்று கொள்ளவில்லை என்பதை தமிழர் தரப்பின் நகர்வுகள் நிரூப்பிகின்றது. எனது கணிப்பின்படி தேசியம் என்ற மந்திரமும் புலம்பெயர்ந்தவர்பளின் தலையீடுகளும் மற்றும் இலங்கை அரசின் உளவுமே தமிழ் தரப்புக்களை கோமாளிகளாக முடிவுகளை எடுக்க தள்ளுகின்றது. இலங்கை அரசின் உளவின் காய் நகர்த்தலாகவே தமிழ் பொது வேட்பாளர் செயற்பாட்டை பார்க்க முடிகின்றது. இதற்கு ஆதாரமாக இதை இச்செற்பாட்டை மும்மொழிந்த தமிழ் தலமையின் பின்புலம் சாட்சியாக உள்ளது. தமிழ்மக்களின் வாக்குகளை சிதறடித்து மகிந்த தரப்பு தன்னை பாதுகாத்து கொள்ள ரணிலை வெற்றிகொள்ள முனைகின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் நாமல் ராஜபக்ச  தனது பேட்டியில் தமிழ் பொது வேட்பாளர் முனைப்பு வரவேற்கதக்து என்று குறிப்பிட்டுள்ளார். முன்பே குறிப்பிட்டது உளவின் பிடியில் சிக்கி உள்ள முன்னால் போராளிகள் ரணிலிற்கும் தமிழ் பொது வேட்பாளர்களிற்கு ஆதரவளிக்க உள்ளனர்.

அதிதீவிர தமிழ்தேசியம் பேசுபவர்கள் மக்களின் உணர்வுகளை உசுப்பேத்தி வாக்குகளாக்க நினைப்பவர்கள் தமிழ்மக்களிற்கான அரசியல் தீர்வுபற்றி எவ்வித அக்கறையும் அற்று தங்கள் வாக்கு வங்கியை காப்பாற்றி அடுத்ததேர்தலில் எத்தனை கதிரைகளை பெறலாம் என்பது அவர்களின் கனவு. இந்த தரப்பு பகிஸ்கரிப்பு அல்லது பொது வேட்பாளர் என்ற தெரிவின் முலம் பேரினவாத வலைக்குள் சிக்கி உள்ளனர்.

 

புலத்து விசிறி அரசியல்

புலிகளின்காலத்தில் வெற்றித்தாக்குதலிற்கும் தனிநாட்டு கனவிற்கும் விசிறியாக இருந்த புலம்பெயர் தரப்பு. இன்றும் தமிழ் அரசியல்தலமைகளிற்கு நிதியை வழங்கி அவர்களை தமது தலையாட்டு பொம்மைகளாக செயற்படுத்தின்றனர். இந்த அரசியல்வாதிகளும் தேர்தல் காலத்தில் பிரச்சாரத்திற்கான நிதியை கருத்தில் கொண்டு தலையாட்ட சம்மதித்துள்ளனர். தாம் தோற்றுப்போன பந்தையத்தினை மீண்டும் இந்த தலையாட்டி பொம்மைகளை கொண்டு தாம் பார்வையாளராக இருந்து உண்டியல்களுடன் வலம் வரலாம் என கனவு காண்கின்றது.

எனக்கு ஓரு பிரச்சினையை தீர்க்க ஒரு மணித்தியாலயங்கள் கிடைத்தால் 55 நிமிடங்கள் பிரச்சினை என்ன என்பதை ஆராய எடுத்து கொள்வேன் தீர்விற்கு 5 நிமிடங்கள் தீர்வைபற்றி யேசிப்பதற்கு எடுத்துகொள்வேன் என  ஐன் ஸ்ரைன் கூறி உள்ளார். பிரச்சினையை புரிந்து கொள்வதே கடினமானது,

ஆனால் எமது தமிழ் அரசியல் வாதிகள் தமது இருப்புக்ளிற்கும் உணர்வுகளை ஊட்டி ஆதரவு தளத்தினை மட்டுமே சிந்திப்பவர்கள். இவர்கள் எவ்வாறு தமிழ் மக்களின் தீர்வை பற்றி சிந்திப்பார்கள்?

 

பொது வெட்பாளர்

ஜனாதிபதி தேர்தலில் ஓர் சிறுபாண்மை இனத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி தனது வேட்பாளரை நிறுத்தி எதனை சாதிக்க விரும்புகின்றனர்? பொது வேட்பாளரை தீர்மானித்ததரப்பு கூறும் விவாதங்கள்.

1. நாம் ஒருகுறியீடாக செயற்ட முனைகின்றோம்

2. சிறுபாண்மை தமிழரிகளின் ஒற்றைமயை காண்பித்தல்

3. தமிழர்பிரச்சினையை சர்வதேசமயப்படுத்தல்

4.மற்றைய வேட்பாளர்களிற்கு தமிழர் வாக்கு செல்லாது தடுப்பது

 எவ்வித யாதர்த்தமும் அற்ற விவாதங்களை முன் வைக்கின்றனர். இலங்கையை முழுதாக பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய கட்சியில் சிறுபாண்மை இனத்தை சார்ந்தவர் போட்டி போடுவது என்பது வேறு. சர்வதேசம் அறியாத இன முரண்பாட்டை தமிழ் பொது வெட்பாளர் மூலம் காட்ட முனைவதாக கூறுவது சுத்த முட்டாள்தனம். மேலும் ஒற்றுமையை காட்டுவதற்காக பொது வேட்பாளரினால் கிடைக்கும் சில ஆயிரம் வாக்குகளை வைத்து எதனை நிருபிக்க போகின்றனர் ?  இலங்கை பேரினவாதிகளின் கணிப்பின்படி தமிழ்மக்களது வாக்குகளை தீர்மாணகரமான அற்ற வாக்குகளாக மாற்றுவது மட்டுமே நடைபெற போகின்றது.

புலத்து தமிழ் அரசியலும் Monopol ஊடகமும்

இலங்கையில் ஒருவருக்கு வயிற்று வலி என்றால் புலத்திலிருந்து வைத்தியம் பார்ப்பதாக படங்காட்டும் பன்முகைத்தன்மையற்ற ஒருபக்கசர்பான புலத்து ஊடகங்கள். அரசியல் ஆய்வுகளும் கணிப்புகளும் எந்த தரப்பின் அட்டவணையின் அனுகூலத்திற்கான செயற்படுகின்றனர் என்பது ஓர் பெருத்த சந்தேகமே. இந்த Monopol ஓர் பன்முகத்தன்மைுடன் பயணிக்க விரும்பும் சமூகத்தினை முற்றிலும் தடைசெய்யும்.

மற்றும் புலத்து அதிதீவிர தேசிய விரும்பிகள் இலங்கையில் சிறப்பு தேர்ச்சி பெற்றதும் தனித்தன்மை உள்ள தலமைகளை விரும்புவதில்லை. அவ்வகை தலமைகளை இவர்களால் தமது கைபொம்மைகளாக வைத்து கொள்ள இயலாது. துரோகி அல்லது தேசியவாதி என  தமது ஆதரவு அல்லது எதிரி என தமேக்கே உரிய வடிதட்டி  முலம் வடி தட்டி வைத்துள்ளனர் .ஆளுமையற்ற தனிதன்மையற்றவர்கள் மிக இலகுவில் புலத்தில் உள்ள நிதிகளிற்கு அடிமையகி தலையாட்டி பொம்மைகளாக மாறி உள்ளனர்.

மூன்று வேட்பாளர்கள்

ஐனாதிபதி தேர்தலில் போட்டி இடும் ரணிலை ஆதரிப்பதன் மூலம் மகிந்த குடும்பத்தினை  குற்றசாட்டுக்களில் இருந்து காப்பாற்றுவதற்கும் ஊழல்வாதிகளை காப்பாற்றுவதற்குமே பயனாக அமையும் .சஜித் பிரமேதாசாவின் கட்சியிலும் இனவாதத்தினையும் சிறுபாண்மை மக்களின் அரசியல் உரிமைகளை மறுத்தவர்களே பலர் அங்கம் வகிக்கின்றனர். அனுரவின் NPP இயிலும் பல இனவாதிகள் இடதுசாரி சிவப்பு அங்கிகளை அணிந்த வண்ணமே உள்ளனர். இந்த கட்சியில் ஊழலிற்கு எதிரான குரல்கள் வலுப்பெற்றுள்ளது. புதிய கரங்களாக இருப்பதால் ஊழல் கறை படியவில்லை. இனவாதிகளின் ஆதிக்கம் உள்ளதாலும் தேர்தல் வெற்றியை கருத்தில் கொள்வதாலும் வெளிப்படையாக சிறுபாண்மை மக்களிற்கான அரசியல் தீர்வுதிட்டம் முன் வைக்வில்லை. இவர்கள்பு திய அரசியல் அமைப்பை பற்றி பேசுகின்றனர். இது எந்தளவிற்கு சாத்தியம் என்பது கேள்விக்குறி. ரணில் தரப்பும் சஜித்தரப்பும் மட்டுமே இலகுவில் அமுல் படுத்த கூடிய 13 வது சட்ட மூலத்தினை அமுல்படுத்தலாம் என கூறி வருகின்றனர் . இங்கிருந்து ஆரம்பிப்பதே சாத்தியமானது.

தமிழ் அரசுகட்சி

தமிழ் அரசுகட்சி இருதலைக்கொள்ளி எறும்புபோல் அதிதீவிர தேசியம் பேசும் அரசியல்வாதிகளையும் யதார்த்த அரசியல் பேசுபவர்களையும் தன்னகத்தில் வைத்துள்ளனர். தேர்தலின் போது உணர்ச்சி அரசியலிற்கு வாக்களர்களின் வாக்கு வங்கி தேவை என்று கருதி அவர்களிற்கும் கட்சியின் ஐனநாயகம் போன்ற மாயையில் மூடி மறைத்து வைத்துள்ளனர். இது தமிழ் அரசுகட்சி கட்சியின் மறைவிற்கு  இந்த நிலைப்பாடே ஓர் முக்கியகாரணியாக அமைய போகின்றது.

எனது அவதாணிப்பின்படி மக்கள் தாம் சார்ந்த கட்சிகளின் முன்மொழிவினை கருத்தில் கொள்ளாமல் தாமே தன்னிச்சையாக வேட்பாளர்களை தெரிவு செய்வார்கள். வெற்றிபெறும் வேட்பாளரிற்கு வாக்களிப்பதன் மூலம் சிறுபாண்மை தேசிய இனங்கள் தமது உரிமை போராட்டங்களை தொடர்வதற்கு ஆரம்ப புள்ளியாக அமைய வாய்ப்புள்ளது. முஸ்லீம் மலையக வடக்கு கிழக்கு மக்கள் வாக்குகள் ஒரு ஜனாதிபதி வேட்பாளரின் பக்கம் ஒருங்கிணையும் போது அந்த வேட்பாளரிற்கான வெற்றிவாய்ப்பு அதிகமாகும்.

சிறுபாண்மை மக்களின் வாக்குகள் சிதையும் போது புதிதாக பெரும்பாண்மையினரின் ஆதரவை பெற்று வரும் கட்சிக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகமாகும். இந்த காய்கள் எப்பவும் எதிர்பாராத திசைநோக்கி நகர இறுதி நேரம் வரைக்கும் வாய்ப்புக்கள் உள்ளது.

ஜனாதிபதி தேர்தல் முடிந்த பின்பு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பெரும்பாண்மையாக புதிய தரப்பினரே பல கதிரைகளை கைப்பற்றவர் என எதிர்வு கூற முடிகின்றது.

Keine Kommentare:

Kommentar veröffentlichen