இலங்கையில் தமிழர்கள் தமது அரசியல் உரிமைகளிற்காகவும் இனத்தின் இருப்பிற்காகவும் பல்வேறு முறையில் போராட்டத்தினை நடாத்திய சமூகம். அதுமட்டுமல்லது போராட்டங்கள் பல சரியான நோக்கி நகர்த்தபடாதினால் வன்முறைகளால் மொளனிக்கபட்டுள்ளது. இவற்றிற்கு பல்வேறு காரணிகள் தாக்கம் செலுத்தி உள்ளது.
2. பிழமையான தலமைகள் போராட்டங்களை நடாத்துவது
3.பாராளுமன்ற கதிரைகளை கைப்பெற்றும் நோக்காகத்திற்காக மக்களிடம் உணர்ச்சி கோரிக்களை முன்வைப்பது
4. படிப் படியாக சிறிய கோரிக்கைகளை முன்வைக்கும் அல்லது ஏற்கும் போராட்டங்களை நிராகரிப்பது
5. இலங்கை வாழ் ஏனைய தேசிய இனங்களின் போராட்டங்களிற்கு ஒத்துழைப்பு வழங்காது புறக்கணிப்பது
6. போராட்டங்கள் ஓரளவு சமரச நிலமைக்கு வரும்பொழுது ஏற்றுகொள்ள கூடிய விடயங்களை ஏற்க மறுப்பது
7.போராட்டங்களிற்கான நியாயத்தினை ஏனைய தேசிய இனங்களிற்கு புரிய வைக்காமையும் இலங்கை மக்களிற்கான பொது கோரிக்கைகளின் போராட்டங்களின் போது அனைத்து சக்திகளையும் இணைக்க தவறுவது.
8.சிறிய சிவில் அமைப்புக்களின் பற்றாக்குறை
9. விடுதலை இயக்கங்ளிலும் அரசியல் கட்சிகளிற்குள் இந்திய உளவுகளும் புலம் பெயர் அமைப்புக்களின் தலையீடும்
10. புத்திஜீவிகள் என்ற போர்வையில் அதிதீவிர தேசியத்தினை மக்களிடம் விதைப்பது
11. ஏனை தேசிய இனங்களை எப்பவும் சந்தேகத்துடனும் இனவாத வெறுப்புனூடாக நோக்குவது.
12. போராட்டங்களை ஒருகட்சியோ இயக்கமோ குத்தகைக்கு எடுக்கும் பண்பு.
13. ஏனை தேசிய இனங்களுடன் தொடர்பற்ற நிலை,
14. துரோகி அல்லது தேசியத்திற்கு ஆதரவு சக்தி என வகைபிரிப்பது, அதனை ஓர் சமூக நீதியாக உருவாக்குவது.
15. ஆட்சியில் அல்லது பொறுப்புக்களை ஏற்காது எதிர்கட்சி கதிரையில் இருந்து சகல அரச வசதிகளையும் அனுபவிபப்பது.
மேற்குறிப்பிட்ட வாறு பல்வேறு காரணிகள் தமிழ் மக்களது உரிமைபோராட்டங்கள் வெற்றியை நோக்கி நகர்த்தாது முடக்கபட்டுள்ளது. மக்கள் உணர்ச்சி அரசியலிற்கும் இனவாத அரசியலை இனங்கண்டு புறம்தள்ள வேண்டும்.
இதேபோல் புலிகள் கைகள் ஓங்கி இருந்த காலங்களில் நடைபெற்ற பேச்சு வார்த்தை காலங்களில் ஒப்பீட்டளவில் மிகசிறிய அளவினான அதிகாரபகிர்வு முன்மொழியப்பட்டிருந்து. கிடைத்தால் தமிழ்ஈழம் அல்லது வேறு தீர்வுகள் வேண்டாம் என்ற அடிப்படையில் மற்றைய முன்மொழிவுகள் பல புலிகளால் நிராகரிக்கபட்டிருந்து. சிறிய தீர்வுகளை ஏற்று படிப்படியாக மிதவாத அரசியலில் கால் பதித்திருந்தால் மொளனிப்பும் இன அழிப்பும் நடைபெறாமல் தடுத்திருக்கலாம். மக்களிடம் தாம் தமிழ் ஈழத்தினை வலுயர்த்தி இருந்ததால் தாம் ஒரு படி இறங்கிபோக இயலாது என்ற தரப்பும்., நிதிகளை வழங்கிய புலம்பெயர் அமைப்புககளின் அழுத்தமும். புலிகளை மாறுபட சிந்திக்க விடாமல் தடுத்திருக்லாம். அது மட்டுமல்லாது ஆயுதத்தினையே நம்பி வளர்ந்த இயக்கம் ஆயுத்தினை கீழே வைத்தவிட்டு முனனர் போன்று ஓர் கட்டுபாட்டிற்குள் உறுப்பினர்களை வைத்து கொள்ள முடியாது என தலமை எண்ணி இருக்கலாம். இவ்வகையான தெளிவற்ற முடிவுகளால் பல சந்தர்ப்பங்களை தமிழர் இழந்துள்ளனர்.
அதேபோன்ற தவறுகள் தமிழ் கட்சிகளிடமும் தொடருகின்றது. இன்றைய தேர்தலில் பல சிறுபாண்மை இன கட்சிகள் பல சஜித் பிரேமதாச வெல்லுவார் எனக் கணிப்பிட்டு அவரிற்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்து இருந்தனர். இவர்களால் பெரும்பாண்மை மக்களின் மனோ நிலமையைபுரிந்து கொள்ள இயலாது போய்விட்டது.
வெல்பவர்களுடன் ஐக்கியப்பட்டு பிரச்சாரம் செய்வது என்பது சாத்தியம் அற்றது. இன்று ஒரு சில புலம் பெயர்ந்தவர்கள் தமிழரசுகட்சி தோற்பவருக்கு ஆதரவாக ஏன் ஆதரவளித்தனர் என விமர்சிக்கின்றனர். இது ஓர் சுத்த முட்டால் தனமான விமர்சனம். எவ்வாறு வெற்றியாளரை முன்பே கணிப்பிடுவது? இது ஓர் கணிப்பு மட்டுமே. ஆனால் தமிழரசு கட்சி வென்றால் தமது எதிர்கால ப்பை பற்றி ஆராயிந்து இருந்தனரா என்ற கேள்வி எழுகின்றது.
மித வாத அரசியலில் நம்பிக்கை அற்றவர்கள் ஏன் பாராளுமன்ற கதிரைக்கான தேர்தலில் மட்டும் பங்கு பெறுகின்றனர். மக்களை ஏமாற்றி தமது நலனுக்காக மட்டுமே பாராளுமன்றகதிரைகளை பயன்படுத்துகின்றனர். இதனை மக்கள் விரைவில் உணர்வார்கள். மேலும் சிலர், தமிழ் இனவாத கருத்துக்களை உணர்சியாக வாந்தி எடுத்து வாக்குகளாக மாற்றி பாரளுமன்ற கதிரைகளை ஆக்கிரமிக்கின்றனர். இவர்களை நம்பும் மக்களை ஏமாற்றுவது மட்டுமல்லாது பேரினவாத இனவாதிகளை உசுப்பேத்தி தமிழ்மக்கள் மீது வன்முறையைதூண்ட ஒத்தாசை புரிகின்றனர்.

நிதிகளை வழங்கி உங்களை தலையாட்டி பொம்மைகளாக்கி தாம் குளிர்காய எண்ணும் சக்திகளை இனங்கண்டு நிராகரிக்க கற்றுகொள்ளல் வேண்டும்.
இன்றைய புதிய சூழலையாவது திட்டமிட்டு தமிழ் மககளின் அபிலாசைகளை வென்றெடுக்கும் திசை நோக்கிநகர்துங்கள். வழமைபொல் தனியே எதிர்கட்சி அரசியலில் மட்டும் நின்றுவிடாது இலங்கை மக்களின் சேகவர்களாக மாறுங்கள்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen