புலத்தில் பல ஆய்வாளர்கள் புத்திஜீவிகள் செய்தியார் என தமக்குதாமே பெய சூட்டிய பலர் புலத்து (Monopol) குத்தகை ஊடகங்களில் போலி, தீவிர தேசியவாத நஞ்சை விதைத்து வருகின்றனர். இந்த கும்பல் தமக்கு சாதகமாக இலங்கையில் தமிழ்மக்களிடம் செல்வாக்கு பெற்ற கடசிகளை தமது கட்டுப்பாட்டிற்குள் கெண்டுவருவதற்கு நிதி மூலமாகவும் பொய்பிரச்சாரங்களை மேற்கொண்டுவருகின்றனர். தம்மால் கைப்பொம்மைகள் ஆக்கியவர்கள் மூலம் கடசிகளை கைபெற்ற முனைந்துள்ளனர். அதனை அந்த கட்சியில் உள்ள திறமைசாலிகளால் இனங்காணப்பட்டு காப்பற்றபட்டது.
இதற்கு சான்றாக தமிழ் கட்சியின் தீர்மான தெரிவுகளின் போதும், தற்போதை பாராளுமன்ற தேர்தல்களிற்கான வேட்பாளர் தெரிவின் போதும் கண்கூடானது. இந்த கட்சிகளை கைப்பற்ற போராடின கைக்குலிகள் சிலர் தம்மை சங்கு சின்னத்தில் ஐக்கியமாக்கினர் மேலும் சிலர் தம்மை சுயேட்சை வேட்பாளர் ஆக்கினர். இந்த செயற்பாட்டின் முலம் தங்களின் கனவு பாராளுமன்ற கதிரை தவிர தமிழ்மக்களின் அரசியல் தீர்வ அல்ல என்பதனை அம்பலப்படுத்தி உள்ளனர். உண்மையாக தமிழ்மக்களின் தீர்வில் அக்கறை கொண்டவர்களாக இருப்பின் ஒரு கட்சியை பலப்படுத்தி அதன்முலம் தமிழ்மக்களின் பெரும்பாண்மையை பெற்றெடுக்க போராடி இருப்பார்கள் அல்லவா?போலிகளிற்கு உந்து கொடுத்து அவர்களிற்கான ஆதரவு தளத்தினை புலத்து ஊதுகுழல் ஊடகங்கள். ஏற்படுத்தி கொடுக்கின்றனர். ஊடகங்களில் தம்மை ஆய்வார்கள், புத்திஐீவிகள்,செய்தியாளர் எனக்கூறுபவர்கள் தாம் வாழும் நாடும் புலத்தில் எவ்வித இணைவாக்கம் (Integration) அடையாத தரப்பாகவே பார்க்க முடிகின்றது. பல ஆண்டுகள் இந்த நாடுகளில் வாழ்ந்தாலும் அந்நாடுகளின் கட்சி சமூக சிவில் அமைப்புகளில் தம்மை ஈடுபடுத்தாதவர்களாகவே கணிக்க முடிகின்றது. அதன் வெளிப்பாடகவே இவர்களின் இலங்கை சம்பந்தபட்ட ஊடகபேட்டிகளில் மிகவும் மட்டமான அரசியல் பார்வைகளையும், புதிய மாற்றங்கள் பற்றிய எந்தவித ஞானமின்மையை புலப்படுத்துகின்றனர்.
2024 இலங்கை பாராளுமன்ற தேர்தல் பற்றிய அலசல்களின் போது இந்த விண்ணர்களின் தரம் பற்றி அறியக்கூடியதாக இருந்தது. தமிழ்கட்சி ஒன்று பெண் இளையோர் வேட்பாளர்களை தேடிய விடயங்களை எள்ளி நகையாடினர். புலம்பெயர் தேசத்தில் தேர்தல்கள் நடைபெறும்போது வேட்பாளர்களை தேடும்படலம் நடைபெறுவது வழமை. கட்சி அரசியலில் நேரடியாக ஈடுபடுத்த முடியாத மன நிலையில் ஐரோப்பிய நாடுகிளில் உள்ள பல மக்கள் உள்ளனர். இதனால் வேட்பாளர் பட்டியலை தெரிவு செய்யும் போது அனைத்து கட்சிகளும் பாரிய சவால்களை சந்திக்கின்றனர். இந்த ஆய்வளர்கள் ஏன் இதனை அறிந்திருக்கவில்லை? இந்த நிலமையால் சுவிற்சர்லாந்தில் பல குடியேற்றவாதிகள் சுவிற்சர்லாந்து கட்சிகளில் அங்கத்துவம் பெற்று வேட்பாளராக கூடிய வாய்புக்கள் அதிகமாக உள்ளது. பல ஐரோப்பிய நாடுகளிலும் பல தமிழர்களும் ஏனைய குடியேற்றவாதிகளும் மக்களால் தெரிவு செய்யப்பட்டு அரசுகளில் ஓர் அங்கமாக உள்ளனர்.
மற்றும் கட்சி கூடடங்களில் தீர்மாணத்தினை நிறைவேற்றுவதற்கு கையை உயர்த்தி வாக்களிகுக்கும் நடமுறை இன்றும் ஐரோப்பிய கட்சிகளில் வழமையாக உள்ளது. ஒரு முறைதமிழ் அரசுக்கட்சியில் தீர்மாணம் நிறைவேற்றிய விடயம் சம்பந்தமாக இந்த ஆய்வாளர்களால் மயிர் பிழக்கும் விவாதங்கள் நடைபெற்றதை நாம் பலர் மறந்திருக்க மாட்டோம்.
இவ்வகை ஆய்வாளர்களை கிணத்து தவளைகளும் கத்துகட்டிகள் என்றே வரையறை செ்யமுடியும் . இவர்கள் தாம் நினைக்கும் ஒரு விடயத்தினை நிறுவுவதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் குறிப்பிட்ட தரப்பினரால் கொண்டுவரப்பட்டுள்ள கையாட்களாகவும் ஏவலர்களாகவுமே பார்க்க முடிகின்றது.
புலத்தில் பல சிறிய அரசியல், இலக்கிய, சஞ்சிகைகள் 80, 90 களில் ஐரோப்பிய நாடுகளில் பல்வேறு பட்ட தளங்களில் இருந்து வெளி வந்திருந்தது. மிக சிறுபாண்மையாக இருந்திருந்தாலும் ஓரு ஆரோக்கிய சமுகத்தின் ஆரம்பம் தென்பட்டது. புலத்து புலிகளது குத்தகை செயற்பாடுகள் ஆட்கொணட பொழுது பல சஞ்சிகைகள் காணாமல் ஆக்கபட்டன. இதனையும் மீறி ஒரு சில சஞ்சிகைகள் பத்திரிகைகள் ,இணைய பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருந்தன. ஆயத சாகச காதல் பல சுயாதின செயற்பாட்டை முடக்கின. இதன் புலம் பெயர் தமிழர் தாம் வாழும் நாட்டு சமுகத்துடன் இணைவாக்கம் (Integration) அடையாது தமக்குள்ளேயே ஓர் Parallel society
உருவாக்கி கொண்டது. இதன் வெளிப்பாடகவே குறுகிய எண்ணம் கொண்ட இந்த ஆய்வாளராகது தோற்றமாக பார்க்க வேண்டி உள்ளது. புலத்தில் வாழும் எம்மவர்களில் எத்தனை பேர் இந்நாடுகளில் உள்ள சிவில் சமூக நிறுவனங்களில் அங்கத்துவத்தினை ஏற்படுத்தி பொதுவான மக்கள் நோக்கிற்காக இணைந்து இந்நாட்டு மக்களுடன் இணைந்து பயணிக்கின்றனர்? இந்த Parallel society யினை முதலாம் தலைமுறையினரே தேற்றுவித்திருந்தனர். இருந்தாலும் துரதிஷ்ட வசமாக ஒரு சிறிய இரண்டாம் தலைமுறையிலும் தொடர்கின்றது.இது ஓர் ஆரோக்கிய சமுகத்திற்கு ஆபத்தானது.
I’m attracted to intelligence, not education. You could graduate from the best, most elite college, but if you’re clueless about the world and society, you don’t know anything.
புலம்பெயர்மக்கள் இந்த Monopol ஊடகங்கள் மூலம் கிடைக்கும் தகவல்களையும் அலசல்களையும் சரியாக விமர்சனைப் பார்வையுடன் பகுத்தறிய கற்று கொள்ள வேண்டும். செய்தி ஊடகங்களில் தம்மை ஆய்வாளர் செய்தியாளர் என அடையாளப்படுத்துபவர்கள் தாம் வாழும் நாடுகளில் எப்படிசெயற்படுகின்றார்கள் என்பதை இனங்கண்டு கொள்வது அவசியம். மாக இந்த நஞ்சு களை அப்படியே உள்வாங்குவது ஓர் அறிவிலி ஆட்டு மந்தை சமுகத்தினைேயே தோற்றுவிக்கும்.