இலங்கையில் தமிழர்பகுதியிலும் தேர்தல் சூடுபடித்துள்ளதை யாவரும் அறிந்ததே. அதற்கு சாட்சியாக கட்சி தாவல்கள், விலகள்கள்,சின்னத்திற்கான அடிபிடிகள், போட்டியாளர்ளாக தெரிவுசெய்யப்படாதவர்களின் குமுறல்கள் என பல செய்திதாள்களையும் முகநுால்களையும் நிரப்பிவருகின்றது. இவற்றை அவதானிக்கும் அல்லது நிதி வழங்கும் புலத்துதரப்பினரும் தமது மூலதனத்தினை காப்பாற்ற வாந்தி எடுக்கும் ஒற்றைபரிமாண ஊடகங்கள் தமது பங்குக்கு நச்சூட்டலையும் நடாத்திவருகின்றன. ஒரு சில ஊடகங்களும் தனிநபர்களும் ஊடகப்பண்போடு தமது ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகின்றனர் என்பதனையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
நடைபெற இருக்கும் தேர்தலில் தமிழ்தரப்பினை பலவீனமாக்கும் பல சதிகள் நடைபெற்றுவருகின்றன. இதனை சதி என்று புரியாதும் பலர் உள்ளனர். இலங்கையில் உள்ள அதி தீவிர தேசியவாதிகளும் (ultra Nationalist) தேசியத்திற்கான விசிறிகளான (Fans) புலத்தில் உள்ள சில போலி தேசியவாதிகளும் உடந்தையாக உள்ளனர். இந்த சதியினை இலங்கையையும் தெற்காசிய பிராந்தியத்தினை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் இந்தியாவும் ஒரு சிலபுலத்து முதலாளிகளும் இணைந்தே நடைமுறைப்படுத்திவருகின்றனர்.NPP யினால் கொண்டு வரப்பட்ட இளையோர் பெண்கள் மற்றும் புத்திஐீவிகளின் படை எடுப்பு இலங்கையில் உள்ள அனைத்துதரப்பினருடமும் தாக்கம் செலுத்தி உள்ளது. இந்த அலை சிறுபாண்மை தரப்பினையும் விட்டுவைக்கவில்லை. அதால் பெண்களும் இளையோரும் தமிழ், இஸ்லாமிய, மலையக மக்களின் வேட்பாளர்கள் பட்டியலை நிரப்பி உள்ளது.
NPP இனால் மூன்றில் இரண்டை பெற முடியவில்லை என்றால் ஏனைய வெற்றி பெற்ற கட்சிகளுடன் இணைந்தே ஆட்சியமைக்க முடியும். இது சிறுபாண்மையினரை பிரநிதிப்படுத்தும் கடசிகளிற்கு கிடைக்க இருக்கு வரப்பிரசாரம். அதன் மூலம் தமது அரசியல் உரிமை சட்டங்களை அமுல்படுத்துவதற்கு பெரிதும் உதவும். இதனால் தமிழ்மக்கள் சரியான அரசியலை நடாத்தும் கட்சிக்கு வாக்குளை வழங்கி தமது பிரதிநித்துவதினை தக்கவைக்க வேண்டும். அதற்கு தமிழ்மக்கள் யாதார்தமானதும் சாத்தியமானதும் படிப்படையாக உரிமைகளை பெற்றுகொள்ள தகுதி படைத்த கட்சியையும் தலைமையையும் இனங்காணல் வேண்டும்.
நடமுறையில் தற்போது சாத்தியமற்றதும் தற்போதைய அரசமுறமையை ஏற்று கொள்ள விரும்பாது தனியே பாராளுமன்ற கதிரைகளை சூடாக்க விரும்புவர்களை மக்கள் இனங்கண்டு அரியலில் இருந்து ஒதுக்க தாயாராக வேண்டும். சர்வதேசததிற்கு எடுத்துகாட்டவும் நாம் தேசிய இனம் என பறைசாற்றுவதற்கும் மட்டும் பாரளுமன்ற ஆசனங்களை வேண்டி வருபவர்களையும் தமிழ்மக்கள் இனம்கண்டு புறந்தள்ள வேண்டும்.
சிறுபாண்மைினர் தமது பிரதிநிதித்துவத்தினை தக்கவைக்காது தவறவிடுமானால் தனது பேரம்பேசும் தகுதி எனும் துருப்பு சீட்டினை இழந்துவிடும் ஆபத்து உள்ளது. மீண்டும் உரிமைக்கான குரல்கள் அடுத்ததேர்தல்வரை காத்திருக்க நேரிடும். இக்கால இடைவெளியில் பல பாதக சாதக அம்சங்கள் நடைபெறலாம்.
சிறுபாண்மை கட்சிகள் தனிநபர் சேறு பூசல்களை நிறுத்தி தமது கொள்களை தீர்வு திட்டங்களை முன்வைத்து மக்களின் ஒப்புதல்களை பெற்றுகொள்ள முயற்சிக்க வேண்டும். புதிய அரசில்கலாச்சாரத்தினை கட்சிகளும் ஊடகங்களும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஒருவர்மீது சேறு பூசியும் அந்நபர் இன்னமும் எவ்வித ஊழல்களில் மாட்டாமல் இருக்கின்றார் எனில் குறித்த நபரின் கருத்துகளிலும் தனிப்பட்ட நேர்மை உள்ளதாக கருதவேண்டி உள்ளது. அனைத்து தரப்பும் ஒருவரை மட்டும் சுட்டி நிற்பது மற்றவர்களது ஆளுமை இயலாமை நேர்மையின்மை பற்றிய சந்தேகங்களை தோற்றுவிக்கின்றது.
ஒரு பாரிய சதி வலைகளில் இருந்து இருந்து மீள வேண்டியவர்களாக இன்றைய இலங்கை வாழ் தமிழர்கள் உள்ளனர். இந்த வலையில் இருந்து புத்திசாதுரியமாக இந்த தேர்தல் வெற்றியை தமதாக்கி கொள்வதிலேயே தங்கி உள்ளது. மக்கள் மீண்டும் பொய்வாக்கு உறுதிகளையும் உணர்ச்சி அரசியலிற்கு (emotional politics) அடிமையாகள் ஆகாமல் தம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen