Sonntag, 13. Oktober 2024

இலங்கை தமிழரசுக்கட்சியும் இரண்டுதோணியில்கால்வைத்ததலைவர்களும்! - மூ. சிவகுமாரன் / 13.10.2024

திர்வரும் 14 நவம்பர் இலங்கைத்தீவின் 17 வது நாடாளுமன்றத்திற்கான 225 மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெறவுள்ளது

தேசியமக்கள்சக்தி அநுரா அலை நாடாளுமன்றத்தில் அதிகப்படியான ஆசனங்களை கைப்பற்றுவார்கள் என்பது சந்தேகத்துக்கு இடமற்றது ஆனாலும் கடந்த நாடாளுமன்றத்தில் வெறும் 3 ஆசனங்களைமட்டுமே

பெற்றுக்கொண்ட மக்கள்சக்தி இம்முறை நாடாளுமன்றத்தில் தன் அசுரபல வளர்ச்சியை பெரும்பான்பை பலத்தை காட்டுமா என்ற வினாஎழுப்பும்அளவுக்கு அதன் மக்கள் ஈர்ப்பு அலை மோதுகிறது பெரும்பான்மைபலத்தை பெறுவதினூடாகத்தான் மக்கள் சக்தி அது விரும்பும் மாற்றத்தை கொண்டுவர முடியும்  அதேநேரம் இடது அநுராஅலையை தடுக்க பவ்வியமான பதுங்கலான பகட்டிலா முகங்களோடு பன்னாட்டு பின்னணயில் பாரம்பரிய வலது சஜித்அணி வெல்ல தன்தான தண்ட வியூகங்களை வகுப்பது வெட்ட வெளிச்சம்!

இத்தகைய சூழலில் எம் தமிழ் பரப்பின் தேர்தல் அரசியல் நிலைமைகள் என்ன குறிப்பாக  தமிழரசின் நிலை இதுகுறித்த என்அவதானமே இங்கே பதிவாகிறது செப்பரம்பர் ஜனதிபதிபதித்தேர்தல்வரை எம்மக்களை ஆட்கொண்ட தேசம் திரட்சி  மிரட்சி போன்ற அழகான வார்த்தைகளின் திரைவிலகி ஜனநாயகம் என்ற மக்கள் தேவை பெரும்பாலும் உணரப்படுகிறது சங்கோடு ஜனநாயக கூட்டணி தமிழரசில் விலகிய ஜனநாயக தமிழரசு  இன்னும் ஜனநாக முற்போக்கு கூட்டணிஎன ஜனநாயகம் எம்மக்களின் உதடுகளெல்லாம்இவ்வளவு உச்சரிக்கப்படுவது யுத்தத்திற்குப்பிந்திய தேர்தல்களில் இதுதான் முதல் முறை அந்தவகையில் மக்கள் சுதந்திரமாக

தம்வாக்குகளை அளிக்ககூடிய ஒருசூழல் கனிந்திருப்பதாகவே தெரிகிறது. இது ஆரோக்கியம் மற்றும் தமிழ்மொழி அமுலாக்க அமைச்சில் பணியாற்றிய இனப்பிரச்சனை அரச நிர்வாகப்பிரச்சனை போன்றவற்றில் பட்டறிவுள்ள முன்னாள் அரசதிகாரிகளும் இத்தேர்தலில் சுயாட்சையாக போட்டியிடுவது விரிந்த ஜனநாயக சூழலின் வீரியத்தை வெளிப்படுத்துகிறதென்று சொல்வது மிகையான கூற்றல்ல சென்ற தேர்தல்வரை எம்மக்களிடையே அதிக செல்வாக்கை செலுத்திய தமிழரசுக்கு இம்முறைத்தேர்தல் சவாலாகவே இருக்கப்போகின்றது என்பது திண்ணம். 

ஏனெனில் தீவில் எம்மக்களிடையே அது செல்லும் திசையை சொல்லும் முதல்தேர்தல் கட்சிக்குள் முட்டியமோதிய அணிகள் இணைந்தும் பிரிந்தும் தமிழரசாக ஜ. தமிழரசாக தேர்தலுக்கு முகம் கொடுக்க போகிறார்கள் என்பதால் இது முக்கியத்துவமுடையதாகவும் ஆகின்றது தமிழரசும் அதன் எதிர்காலமும்: இலங்கை தமிழர்களின் பாரம்பரியஜனநாயகத்தில் வளர்க்கப்பட்டதுதான் தமிழரசுக்கட்சி தந்தை செல்வா அண்ணன் அமிர்தலிங்கம் என்ற குடும்ப உறவுபாசம் கொட்டி எம்தந்தைதாய் ஆச்சி அப்புவால் போற்றிவளர்க்கப்பட்ட கட்சி தலைவர்பதவி இல்லாமலேயே தமிழ் மக்களின் ஏகோபித்த தலைவனாக தந்தைசெல்வா பிரகாசித்தார் தந்தைசெல்வாவும் தன்உடல் உழைப்பு சொத்து எல்லாம் கட்சிக்கென்றே அர்ப்பணித்து ஓர் ஜனநாயக தலைவராகவே வாழ்ந்தார் அதனால் அவர் இன்றுவரை ஈழத்தமிழர் தந்தையாகவே போற்றப்படுகிறார்!

ஆனாலும் ஒருகட்சியால்மட்டும் ஒருவரலாற்று சிக்கலான இனப்பிரச்சனையை தீர்க்கமுடியாதென்பதை அவர்தன் இறுதிவாழ்நாளில் நன்கு உணர்ந்துகொண்டார் சிங்களபேரினவாத த்தின் கொடுங்கோல்கண்டு கடவுள்தான் எம்மக்களைஇனிகாப்பாற்றவேண்டும் என்று தன்உள்ளக்குமுறலை வெளிப்படைய்கொட்டி எளிய மக்களின் மனங்களில்எல்லாம் ஒரு தலைவனாக மட்டுமன்றி ஓர் உன்னதமனிதனாகவும் உயர்ந்திருக்கிறார் தந்தை செல்வா இது வரலாறு!

பின்னர் தமிழர்விடுதலைக்கூட்டணியில் கரைந்துகொண்ட தமிழரசு அதன் செயலாளர்நாயகம் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் கொலையோடு இருந்த இடம்தெரியாமல் எங்கோதொலைந்தது அதன்ஜனநாயகபண்புகளில் இருந்தும்! பிற்பாடு யுத்த போர்காலசூழலில் கூட்டமைப்பின் வீட்டுசின்னத்தோடு மாவைஅண்ணன் தலைவராக மறுபடி உயிர்த்தது. 

யுத்தத்திற்கு பிந்தி: யுத்தம் முடியும் இறுதிநாட்களின் நிலமைகள் குறித்து அறியமேற்கு ஐரோப்பிய பிரபல பத்திரிகைஒன்று அரசியல்அறிவியலாளர் கொழும்பு பாக்கியசோதி சரவணமுத்து அவர்களோடு நடாத்திய நீண்ட செவ்வியில் ஒரு கேள்வி: இனி  இலங்கைத்தமிழர் தலைமை எவ்வாறு அமையப்போகின்றது ?அதற்கு அவர்அளித்த பதில் இனி புதிய தமிழ்ஆளுமைகள்அரசியலுக்கு வர வாய்புக்கள் இருக்கின்றது என்றார்

தமிழரசில் சுமந்திரன்:

அந்தகாலகட்டத்தில்தான் கொழும்புவாழ் சட்டத்தரணி மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரனும்தமிழரசுக்கட்சிக்குள் சம்பந்தன் ஐயாவால் அறிமுகம் செய்யப்பட்டார் தமிழ் சிங்கள மொழி சட்ட அறிவியல் புலமை யுத்தத்துக்கு பிந்திய சர்வதேச நாடுகளின் இன்றைய சட்டநியம புரிதல்களோடு கட்சிக்குள்பிரகாசிக்க தொடங்கினார் சுமந்திரன்!ஆனால் முப்பதுவருட யுத்தத்துள் மூச்சுவிடாமல் தவித்த ஜனநாயக சூழலிருந்து யுத்தம் முடிந்து மிரண்டு விழித்த ஜனநாய வெளிச்சம்!எமது தமிழ்சூழலில் கட்டமைக்கப்படும் பெரும்பான்மை கருத்தே ஜனநாயகமாகவும் ஏனையவை துரோகம் எனவும்அதுதன் யுத்தகால அகராதியை தூக்கிநிறுத்தியது! தேசம் மனித உரிமை என்பவையெல்லாவற்றையும் ஒற்றைப்பரிமாண வாய்ப்பாடாய் முப்பதுவருட யுத்தம் தின்றகாலம் கடந்தும்  இன்றும் ஒப்புவிக்கின்றது!

தமிழர்கூட்டமைப்பு:

எதிரிக்கு எதிரி நண்பன் எனக்குமூக்குபோனாலும் எதிரிக்குசகுனம் பிழைக்கவேண்டும் என்ற எம்தமிழ் பழையமொழிகளை அரசியல் கொள்கையாய் வரித்தது அன்றைய தமிழர்கூட்டமைப்பு ! யுத்தத்தை களத்தில் நின்றுநடாத்திய சிங்கள பேரினவாத இராணுவதளபதிக்கே  எம்மக்களை வாக்குபோட வைத்தது பிற்பாடு யுத்தத்தை நடாத்திய பாதுகாப்புமந்திரிக்கே  நல்லிணக்கம் என்று சொல்லி எம்மை நம்பசொல்லி மீண்டும் வாக்கு கேட்டார்கள் சந்தனம் பூச்சோடு இலங்கையின் முன்னாள் தமிழ்நீதி அரசரை எம் வடபுல முதலமைச்சராக்கினார்கள் இவைகள்தான் தமிழர்கூட்டமைப்புசெய்த தமிழ்தேசிய அரசியல்கள் யுத்தத்தால் அனைத்தும் இழந்த அபலைகளுக்கு அப்பாவி ஏழைமக்களுக்கு செய்தது என் பட்டியலிட

இந்த தலைமைகள்! தமிழ்தேசியம் வெல்லும்வரைமக்களுக்கான வாழ்வாதாரம் அபிவிருத்தி எதுவும்தொடவும்மாட்டோம் அண்டவும்மாட்டோம் என்றார்கள் சிங்களபேரினவாதம் தன்மனிதாபிமானத்தோடு மாகாணத்துக்கு கொடுத்த நிதிகளைக்கூட தொட்டால் தீட்டாக திருப்பிஅனுப்பினர் தேசியம்போற்றும் நிலத்துபுலத்து தலைவர்களுக்கோ அவர்கள் குடும்பம் உறவு ஏன் பரம்பரைசெல்வசெழிப்புக்குகுறைவேஇல்லாதபடி நிலம்புலம்குடிதோட்டம் ! மக்கள்பட்டினிவாழ்வை காணமறுத்து தேசிய அரசியல்குருடர்கள்ஆனார்கள் இந்ததலைவர்கள்! மக்களோ தம்தேவைகளுக்காக சுயமான அரசியல்சக்திகளுக்கு தம்வாக்குகளை வாரிவழங்க தொடங்க  கூட்டமைப்பு ஆணிவேரோடு ஆட்டம்கண்டது! இதில் யுத்தத்துக்கு பிந்திவந்த தமிழரசு சுமந்திரன் தமிழர் கூட்டமைப்பின் பேச்சாளர்மட்டுமல்ல தமிழரசின் மூச்சாளரும் என்ற உள்ளூர வெதும்பல்கள் வெடித்தெழத்தொடங்கின இத்தகைய சூழலில்தான் சென்றாண்டு முதுமைவாழ்வையெட்டும் மாவைஅண்ணாவின் தமிழரசு தலைவர் பதவிக்கு ஒரு தேர்தல் நடந்தது அப்படித்தான் வெளியே சொல்லவும்பட்டது ஆனால்பின்திரையில் நிலத்தில் புலத்திலுள்ள தேசிய பரப்பாளர்களின் பலத்தோடுதமிழரசில் சுமந்திரனை கழட்டி சிறிதரனை தலைவராக்கும் முயற்சிமேற்கொள்ளப்பட்டது புலத்திலுள்ள மீடியாக்கள்ஊத!

தமிழரசின் பெருமையையும் சிறிதரனின்  தேசியபரப்பையும் ஊதிஊதிக்காட்டினார்கள் அமெரிக்க அதிபர்தேர்தல்போல சிறிதரன்புகழ் பிரச்சாரம் புலத்தில் கொடிகட்டியது நிலத்தில் சந்தனப்பொட்டு நீதிஅரசர் சிறிதரன் நல்லதலைவர் எனசான்றிதழ் கொடுத்தார் ஆனால் பாவம் சிறிதரன் அந்தாள் நொந்துபோய் தமிழர்நாம் வெளிவிவகாரகொள்கைஎல்லாவற்றிலும் தோற்றுப்போனோம் என்று வெளிநாட்டில் நின்று அழுதது கைகெட்டியும் வாய்கெட்டாம்போனகதையா கட்சித்தலைவர்பதவியும்! புலத்து நிதிஊட்டோடு சிறிதரனைவைத்து கட்சியை கபளீகரம்செய்ய எடுத்த முயற்சி முடிவு என்னவோ நீதிமன்றத்தில் கட்சிஇப்போ! இதை தொடர்ந்து வந்த இலங்கைஅதிபர்தேர்தல் தமிழரசு சுமந்தரன்அணி தெளிவான முடிவு யாருக்கு ஆதரவு ஆனால் மாவைஅண்ணா சிறிதரன் சட்டத்தரணி தவராசா இவரகள்யாவரும் கட்சி முடிவுக்கு எதிராக பொதுவேட்பாளர் ஆதரவு இதில் தலைவர் மாவைஅண்ணா அதிபர் தேர்தல்முடியும்வரை அவருக்கே தெரியுமோ தெரியாது அவர் யாருக்கு ஆதரவு என்று  இப்போ கட்சியில் இருந்து கொளரவமாக ஓய்வுபெற்று  தன்கட்சியின் ஜனநாயக விழுமியத்துக்கு வலுச்சேர்த்திருக்கிறார் தேர்தலில் முதன்மை வேட்பாளராக சிறிதரன் முன்னிறுத்தப்பட்டிருக்கிறார் கடந்த காலங்களில் எல்லாம் எம் மக்கள் பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரை ஒன்றல்ல இரண்டல்ல கன்சாட் எடுத்துப்பார்த்தால் புரியும் எல்லாவற்றுக்கும் மேலாக கிளிநொச்சியில் அவர் ஆற்றிய உரை மிக மிக மிக்கியமானது!

ஜேவிதான்  வடக்கு கிழக்கை பிரித்தது இனக்கலவரத்தை நடாத்தியது இரவில் ஏறினால் எனக்குஎடுப்பார்கள் என்றுதன் அரசியல் புலமையையும் தன்ஆதரவாளர்களையும் புகழ்ந்தார் வடக்குகிழக்கை பிரித்தது

இலங்கை நீதித்துறை நீதிமன்றம் என்பதை மறந்தால் மறந்து பறவாயில்லை சிறிதரன் முன்னாள் எம்பி அந்த நீதியின்குடைக்குள்ளேதானே எம்பிபதவி அவருக்கு குளிராய் கிடைத்தது மீண்டும் ஆசைப்படுகிறார்!

ஆனால் இனக்கலவரத்தைநடாத்தியது ஜேஆரல்ல ஜேவிதான் என்று சொன்னார் ஒரு வரலாறு அப்பவே இவர் எம் ஈழத்தமிழ்தலைவரா என மக்கள் சிந்திக்கத்தொடங்கிவிட்டனர்! இதற்குபிற்பாடு அநுராவிடம் ஏன்போனார் எந்த நாடாளுமன்றத்துக்கு வேட்பாளராக போட்டியிட தேர்தலில் குத்தித்துள்ளார் என எம் தமிழ் மக்களே குழம்புகின்றனர் ஆனால் ஒன்று நிச்சயம் எம் மக்கள் இம்முறை தங்களுக்கான தலைவர்களை தாங்களே தேர்ந்தெடுக்க தயாராகிவிட்டார்கள் தமிழரசுக்கட்சிக்கும் கூடவே

இது ஜனநாயக தேர்தல் அது உலகளாவிய தன் தேர்தல் பண்பாட்டோடு கொண்டாடப்போகிறது பொறுத்திருந்து பார்ப்போமே மக்கள் தீர்ப்பைமகேசன் தீர்ப்பாய் ஏற்றிடும் ஜனநாயகத்தை போற்றும் மனத்திடத்தோடு!

Keine Kommentare:

Kommentar veröffentlichen