Mittwoch, 14. November 2018

சுவிற்சர்லாந்து பல்கலைக்கழக தமிழ் மாணவர் மன்றமும் தண்ணீர் அமைப்பும் - ஓர் சந்திப்பு

சுவிற்சர்லாந்து பல்கலைக்கழக தமிழ் மாணவர் மன்ற ( TaVS Tami­li­scher Ver­ein der Stu­die­ren­den)  நிர்வாக உறுப்பினர்கள் தண்ணீர் அமைப்பின் வேலைத்திட்டத்திற்கு எவ்வாறு உதவுவது என்பது பற்றிய ஓர் ஆலோசனை கூட்டம் நேற்றைய தினம் (13.11.2018) Olten இல் நடைபெற்றது. துண்ணீர் அமைப்பின் தலைவர் Othmar Fellmann தனது வரவேற்பு உரையின் போது தான் 80 துகளிலும் 90 களிலும் அகதி தஞ்சம் அடைந்த உங்கள் அப்பாவினருக்கும் அம்மாவினர்களிற்கும் உறவினருக்கும் தான் ஜேர்மன் மொழி ஆசானாக இருந்ததாகவும். அடுத்த தலைமுறை ஆகிய நீங்கள் இந்த நாட்டு பேச்சு மொழிகளில் உரையாடுவது தனக்கு மகிழ்ச்சியை தருவதாகவும். பல  தமிழ் இளைஞர்களும் இளைஞிகளும் மேல்படிப்பினை மேற்கொள்வது தனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தருவதாகவும் தனது வரேவேற்பு உரையின்போது தெரிவித்திருந்தார். கடந்தகாலங்களில் தமிழரிற்கு எதிரான பிரச்சாரங்களை பல வலதுதீவிரவாத சக்திகள் மேற்கொண்டிருந்த பொழுது தானும் தனது நண்பர்கள் பலரும் தமிழ்மக்கள் ஓர் உயர்ந்த கலாச்சாரப்பண்பை கொண்ட ஓர் ஓடுக்கபட்ட இனம் என்பதைனை  சுவிற்சர்லாந்து மக்களிற்கு புரியவைத்தாகவும் தெரிவித்திருந்தார். மேலும் தான் இதேபோல் உலக ஓழுங்கிற்கான போரட்டங்களில் நசுக்கபட்ட்ட Nicaragua, 
El salvador போன்ற நாடுகளிற்கு அந்நாடுகளில் உள்ள வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களிற்கு பல்வேறு உதவிதிட்டங்களை செயற்படுத்தியதாகவும் அறியப்படுத்தியிருந்தார். உலகத்தில் பல நாடுகளில் யுத்தங்களின் முடிவில்; போராடிய பல போராளிகள் சமூகத்திகாலும் ஏனைய சக்திகளாலும் கைவிடப்படுவதே வழமையாக இருந்துள்ளதாகவும் அதேபோன்றே 2009 இற்கு பிற்பாடு இலங்கையிலும் போராடிய தமிழ் போராளிகள் பலரும் பல்வேறுபட்ட சக்திகளால் கைவிடப்பட் துர்ப்பாக்கிய நிலையே நடந்துள்ளதாக சுட்டிக்காட்டியிருந்தார்

இன்றைய இளைய தலைமுறையினர் ஆகிய நீங்கள் எம்முடன் கைகோர்த்து சமூகத்தின் பல்வேறுபட்ட சக்திகளினால் கைவிடப்பட்டவர்களின் வாழ்கையை மேம்படுத்தும் உயரிய பணியை எம்முடன் இணைந்து நடமுறைப்படுத்த வந்திருப்பது ஓர் முன்னேற்றகரமான நடவடிக்கையாகும் என தெரிவித்திருந்தார்.   


இந்த கூட்டத்தில் TaVS இன் அனைத்து நிர்வாக உறுப்பினரும் கலந்து கொண்டனர். அவர்களும் தமது செயற்பாடுகளை எம்முடன் பகிர்ந்து கொண்டனர். தும்மால் தனியே உதவிதிட்டங்கள் மட்டுமன்றி மேலும் தமிழ் சமூகத்தில் நிலவும் சமூக ஓடுக்குமுறையின் ஓர் அம்சமான சாதியம் பற்றிய கருத்தரங்கு மேற்கொள்ளபட்டதாகவும். மேலும் பல்வேறு அரசியல்வாதிகள் புத்திஜீவிகளுடன் கருத்தரங்குகள் நடாத்தபட்டதாகவும் தெரியப்படுத்தி இருந்தனர். மேலும் தம்மால் கைபெட்டி அடையாளம் அருளகம் போன்ற பலதிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதனையும் அறியத்தந்திருந்தனர்

இவ்வருடம் மூன்று புதிய திட்டங்கள் முன்வைக்கபட்ட போதும் மன்ற உறுப்பினர்களின் பெரும்பாண்மையினர் தண்ணீர் திட்டத்தினையே தெரிவு செய்ததாக அறிவித்திருந்தனர். தண்ணீருக்கு நிதி திரட்டும் வகையில் தம்மால் முன்னெடுக்க படவுள்ள பல நிதி சேகரிப்பு விடயங்களை எம்முடன் பகிர்ந்து கொண்டனர். தண்ணீர் அமைப்பினால் சேகரிக்கபட்ட விபரங்கள் ஊடாக பாதிக்கபட்டவர்களுடன் எமது தொடர்பாளருடன் தொடர்புகளை மேற்கொண்டு விபரங்களை அறிய உள்ளதாகவும் தேவை ஏற்படின் தாம் துறைசார் ஆர்வளர்களுடன் அப்பிரதேசங்களை பார்வையிடப்போவதாகவும் தெரிவித்திருந்தனர்.

தண்ணீர் அமைப்பு இவ்வகையாக பல் வேறுபட்ட அமைப்புக்களுடன் ஓருங்கிணைந்த வேலைத்திட்டங்ளை மேற்கொள்வதை வரவேற்கின்றது. எம்மால் சேகரிக்கப்படும் நிதிவிபரங்கள் சந்திப்பு விபரங்களையும் எமது உறுப்பினர்கள் இணையத்தளத்தில் Log in செய்து அறிந்து கொள்ளலாம்.

பல உதவி நிறுவனங்கள் சேகரிக்கபட்ட நிதியில் இருந்து 60%  விகதத்தினை நிhவாக செலவிற்காக எடுத்து கொள்ளப்படுவதே வழமையாக உள்ளது. ஆனால் தண்ணீர் அமைப்பு தம்மால் சேகரிக்கபடும் 
100 % விகிதமும் பாதிக்கபட்ட மக்களிற்கே வழங்கப்படும்.

இதே போன்று சொலத்துணில் Solo Movies இனால் நடக்தபடவிருக்கும் இசைத்துள்ளல் (22.12.2018) சரித்திரம் (02.01.2019) நிகழ்வுகளில் தண்ணீர் அமைப்பு தனது வேலைத்திட்டங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டு நிதியை சேகரிப்பதற்காக  நேரடியாக மக்களை சந்திக்க உள்ளோம் என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்


எம்முடன் இணைந்து பயணிக்க உள்ள வுயஉள மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்புக்களிற்கு எமது நன்றியை தெரிவித்து கொள்கின்றோம். எமது மனிதாபிமான செயற்பாட்டிற்கு உதவவிரும்புபவர்கள் www.thannir.ch இணைத்தளத்தில் பெற்று கொள்ளலாம். நிதி உதவியை வழங்க முன்வருபவர்கள் பின்வரும் வங்கிகணக்கிற்கு தங்கள் நிதியை அனுப்பிவைக்கலாம் உங்கள் உதவித்தொகைக்கு வரிசலுகை சான்றிதல் வழங்கப்படும் என்பதனையும் உறுதிப்படுத்தி கொள்கின்றோம்.

Direkte Hilfe Tannier - Wasser
Raiffeisenbank Weissenstein,
2540 Grenchen
Konto Nr. 01-31647-1
IBAN CH6380976000004973654

Keine Kommentare:

Kommentar posten