Samstag, 17. November 2018

இலங்கையில் பகடைக்காய்களாக ஆக்கப்பட போகும் தமிழர்களும். உலக ஓழுங்குக்கான போரில் முழு நாட்டையே அடகுவைக்கும் சிங்கள அரசியல்வாதிகளும்.


இலங்கையில் பகடைக்காய்களாக ஆக்கப்படும் தமிழர்களும். உலக ஓழுங்குக்கான போரில் முழு நாட்டையே அடகுவைக்கும் சிங்கள அரசியல்வாதிகளும்.


இலங்கையில் நடைபெறும் விடயங்களை தனியே ஜனாதிபதி மைத்திரி சிறிசேனாவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமான முரண்பாடாக குறுக்கி பார்த்தால் பல உண்மையான பின்னணிகள் தெரியாமல் போய்விடும்.

சீனா இலங்கையுடன் 1952 இலேயே ஓர் பண்டமாற்று ஓப்பந்தம் செய்துகொண்டது. இலங்கையிலிருந்து இறப்பரை பெற்று அதற்கு பதிலீடாக அரிசியை  வழங்குவதாக உடன்பாடானது. இநத வகையிலே இன்று சீனா தனது அகல  கால்களை இலங்கையிலன் யுத்ததிற்கு பின்னர் இருந்த ராஜபக்ஸ அரசுடன் இணைந்து பல திட்டங்களை நடமுறைப்படுத்தி பல ஓப்பந்தங்கள் செய்ப்பட்டிருந்தது.

இந்த வருடம் ஓக்டோபர் மாதம் 26 ம் திகதிக்கு ஒரு சில வாரங்களிற்கு முன்னர் இலங்கை ஜனாதிபதி மைத்திரி சிறிசேனா தன்னை இந்திய உளவுப்படை கொலை செய்யவுள்ளதாக அறிவித்திருந்தார். இதனை இந்திய முற்றாக மறுத்திருந்த பொழுதும் இந்த சம்பவமே பல விடயங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கின்றது. 

பல ஆண்டுகளாக திரைமறைவில் இந்தியாவிற்கும் சீனாவிற்கு மான இலங்கை மீதான ஆதிக்கபோட்டி திரைக்கு வெளியே மிகத்தெளிவாக தெரிய ஆரம்பித்தது. இதற்கு இலங்கையில் மேற்கொள்ளபட்ட பல்வேறுபட்ட சீன முதலீடுகள் காரணமாகின.

சீனாவின் பொருளாதார ஆக்கிரமிப்புசீனா தனது சகாவான இராஜபக்சாவுடன் 2005 இலிருந்து 2015 வரைலயில் தனது உறவை இலங்கையுடன் வலுப்படுத்தி கொண்டது. 2009 இல் யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டபின்னர் சீனா பல பில்லியன் பெறுமதியான அபிவிருத்தி என்ற பெயரில் பல திட்டங்களை ஆரம்பித்தது மட்டுமல்லாது இராஜபக்சா அரசால் மேற்கொள்ளபட்ட யுத்தமீறல்களிற்கும் மனித உரிமை மீறல்களிற்கும் முண்டு கொடுத்தது. இலங்கையில் நடைபெற்ற யுத்ததினை முடிவிற்கு கொண்டுவருவதற்கும் இராஜபக்சா அரசிற்கு இராணுவதளபாடங்களையம் வெடிமருந்துகளையும் கொடுத்து உதவிய விடயங்களை இன்று பல சர்வதேச பத்திரிகைகள் வெளிக்கொண்டுவருகின்றன.

அதனடிப்படையிலேயே 2007 ம் ஆண்டு இராஜபக்சாவுடன் 1 பில்லியன் டொலர் கைமாறப்பட்டே அம்பாந்தோட்டை துறைமுகத்திட்டத்திற்கான இலங்கையின் ஓப்புதல் வாங்கப்பட்டது.

2010 ம் ஆண்டு இலங்கையில் தெற்கிலுள்ள கொல்கலன் இறங்குதளம் செயற்படுத்தும் உரிமை சீனாவுக்கு வழங்கபட்டிருந்தது.

2013 ம் ஆண்டு சீனாவினால் 1.4 பில்லியன் திட்டமான கொழும்பு துறைமுக நகரம் அறிமுகப்படுத்தபட்டது. இந்த திட்டமானது 2016 ம் ஆண்டு ஆரம்பிக்கபட்டிருந்தது. சீனா தனது அனைத்து திட்ட நிர்மாண பணிகளின் போது தனது நாட்டு தொழிலாளர்களை கொண்டே செயற்படுத்தி வருவதே வழமையாகி உள்ளது. இந்த துறைமுக நகரம் சீனாவின் ஆதிக்கதிட்டமான சில்க் வீதி Silk Road திட்டம் அல்லது One Belt One Road (OBORஎனும் திட்டத்தின் ஓர் பகுதி என்பதே அடிப்படை உண்மையாகும். இப்பாதை திட்டமானது பல கண்டங்களையும் துறைமுகங்களையும் ஆசியா ஊடாக ஊடறுத்து இணைக்கும் ஓர் பாரிய திட்டமாகும்.

2013 ம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை புகையிரத பாதையை புணரமைப்பதற்காக 272 மில்லியன் டொளர்களை இலங்கைக்கு வழங்கியது. 2014 இல் சீனாவிற்கு சொந்தமான இராணுவகப்பல்கள் இலங்கை துறைமுகத்தில் தரித்து நின்றதை அவதானித்து இந்தியா இலங்கை அரசையும் சீனாவையும் எச்சரித்திருந்தது. இந்ந சம்பத்தின் மூலம் சீனாவின் ஆதிக்கம் எல்லை மீறி செல்வதை இந்தியா கண்டுகொண்டது. இதன் வெளிப்பாடே நல் ஆட்சி என்ற பெயரில் தனக்கு சாதகமான அரசை 2015 இல் இலங்கையில் சயத்திப்படுத்தியது. சீனாவின் செல்லபிள்ளையான மகிந்தவை தோல்வி அடையச்செய்தது. சீனாவின் நலனையும் இந்தியாவின் நலனை சரிசமமாக பாதுகாக்கும் பொருட்டு ஜனாதிபதியாக சீனசார்பு மைத்திரி சிறிசேனாவையும் பிரதமராக இந்தியசார்பான ரணில் விக்கிரமசிங்கவும் கொண்டுவரப்பட்டிருந்தனர்.

சாதாரணமாக இலகுவில் விளங்கிகொள்ள கூடிய விடயம் யாதெனில் மூலதனம் இட்டவன் தனது முதலீட்டிற்கு பாதுகாப்பான நகர்வுகளையே மேற்கொள்ளவான் அந்த வகையிலேயே இன்றைய இலங்கை விடயத்தினை புரிந்து கொள்ளமுடியும். 

இலங்கை மீதான இந்திய சீனா ஆதிக்க சமப்பாடு


மகிந்த அரசினால் சினாவினால் கட்டப்பட்ட அம்பாந்தோட்ட துறைமுகத்தினை கொண்டு நடத்த பணமில்லாது நல்லாட்சி அரசு தடுமாறியது. இதன் விளைவு 15000 ஏக்கர் பிரதேசம் 99 வருடங்களிற்கு சீனாவிடம் தாரைவார்த்து கொடுக்கபட்டது. இதனை பற்றி அல்ஜசிரா தொலைக்காட்சி நிறுவனம் நாமல் இராஜபக்ஸவிடம் வினவிய போது. அவர் கூறிய பதிலானது இத்துறை முகத்தில் வேயைசெய்யும் தொழியாளர்களின் நலனை கவனத்தில் கொண்டு இன்னமும் மிக சிறப்பான ஓப்பந்தத்தினை செய்திருக்கலாம.; ஆனால் நல்லாட்சி அரசினால் சீனாவுடன் ஏற்படுத்தபட்ட ஓப்பந்தம் நாட்டுமக்களிற்கோ தொழிலாளிகளிற்கு எவ்வித பயனும் இல்லை என தெரிவித்திருந்தார். இவ்வகையான பதில் மூலம் தான் ஓர் சீன சார்பு அல்ல என்ற வகையில் இந்தியாவையும் திருப்திபடுத்தும் வகையில் வெளிப்படுத்தியது இங்கு குறிப்பிடத்தக்கது. 


இந்தியா சீனாவின் இலங்கை மீதான ஆதிக்கத்தினை சமப்படுத்தும் நோக்கிலேயே திருகோணமலை துறைமுகமும் மாத்தளை விமான நிலையும் இந்தியாவிடம் குத்தகைக்கு கொடுக்கபட்டது.

இலங்கையில் மேற்கொள்ளப்படும் இந்திய சீன முதலீடுகள். வங்காளதேசம் நேபாளம் மாலைதீவு போன்ற நாடுகளிலும் நடைபெற்று வருகின்றது. இவ் இரு நாடுகளும் தமது நலனையும் ஆதிக்கத்தினையும் வலுப்படுத்த இந்நாடுகளில் காலடிபதித்துள்ளனர். இது மென்மேலும் இவ் இருநாடுகளிடையே ஓர் முறுகள் நிலையையே ஏற்படுத்தும். இதன் ஓர் வெளிப்பாடகவே மாலைதீவில் சீன சார்பு அப்துள்ளா யமீன் தேர்திலில் வெற்றி பெற்றுள்தனை பார்க்க முடிகின்றது.

தமிழர் வாழும் வடக்கு கிழக்கிலும் கால்பதிக்க துடிக்கும் சீனா


இலங்கையின் தெற்கில் மிக ஆழமாக கால் பதித்திருக்கும் சீனா இலங்கையின் மலை நாட்டுப்பகுதியிலும் வடக்கு கிழக்கிலும் தேயிலை இறப்பர் தென்னை உற்பத்திகளில் கவனம் செலுத்தி இந்த பிரதேசங்களையும் தனது பிரதேசங்கங்ளாக வைத்து கொள்ள விரும்புகின்றது.

இந்தவகையிலேயே 300 மில்லியன் டொலர்கள் முதலீட்டின் மூலம் 40000 வீடுகளை யுத்ததினால் பாதிக்கபட்டவர்களிற்கு சீனா முன்வந்தது. அதேபோல் 30 இலிருந்து 40 மில்லியன் டொலர்களை மலைநாட்டு உற்பத்தியில் முதலிட பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது. வடக்கு கிழக்கு பகுதிகளில் இந்தியாவின் ஆதிக்கமே இன்று வரை உள்ளது. ஆதனடிப்படையிலேயே இந்தியா யாழ்பாணத்திற்கும் கொழும்பிற்குமான இரயில் பாதையை புணர் அமைத்து மீண்டும் யாழ்தேவி சேவையில் அமர்த்தபட்டிருந்தது. அது மட்டுமல்லாது 50000 வீடுகளை 270 மில்லியன் டொலர்களிற்கு நிர்மாணிக்க திட்டமிட்டது மேலும் காங்கேசன்துறை துறைமுகம் சிமெந்து தொழிற்சாலை பலாலி விமான நிலையைங்hளையும் புனர்நிர்மாணம் செய்வதிலும் கவனம் செலுத்தியுள்ளது. 

இந்த வீட்டுதிட்டத்தின் போது தமிழ் அரசியல் வாதிகளில் ஓரு சிலர் சீனாவின் வீட்டுத்திட்டதிற்கு ஆதரவாகவும் ஓருசிலர் இந்தியாவின் வீட்டுதிட்டத்திற்கு ஆதரவாக தமது கருத்துக்களை பரப்புரை செய்து வந்தனர். இலங்கையின் தெற்கு அரசில் வாதிகள் சீனசார்பு இந்திய சார்பு என இரண்டு முகாங்களாக உள்ளனரோ அதேபோன்று தமிழ் தரப்புகளும் இரண்டு முகாங்களக உள்ளது என்பதை இந்த சம்பவம் தெளிவாவுபடுத்தியது.

மலேசியாவும் சீனாவுடன் ஓரு சில திட்டங்களிற்கு ஓப்புதல் அளித்திருந்தது. ஆனால் தற்போதைய பிரதமர் டாக்டர் மகதீர் முகமட் பழைய நிர்வாகத்தினால் செய்பட்ட ஓப்பந்தத்தினை நிராகரித்துவிட்டு கடுமையான தொனியில் சீன பிரதமரிடம் இவ்வித திட்டங்கள் ஓர் புதிய முறையிலான காலனித்துவம் என விமர்சித்திருந்தார்.

இந்த நிலைமைகளியன் தொடர்ச்சியாகவே இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலவரங்களை புரிந்துகொள்ள வேண்டும். சீனாவின் அழுத்ததிற்கு செவிசாய்க்காத இரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடுகளல் சீன ஆதரவு மைத்திரி சிறிசேன மீண்டும் தனக்கு ஆதரவாக மீண்டும் சீன ஆதரவு மகிந்த இராஜபக்ஸ வினை பிரதமாராக கொண்டுவர துடித்ததின் விளைவாகவே இன்றைய இலங்கை அரசின் அலங்கோலங்களிற்கான காரணிகளாக அமைந்துள்ளது. இந்த நடவடிக்கையை மேடையேற்ற பல மில்லியன்களை சீனா இத்தரப்பிற்கு வாரி இறைத்துள்து. இப் பணத்தின் மூலமே மகிந்த தனது பெரும்பாண்மையை நீரூபிக் அமைச்சர்கள் விலை பேசப்பட்டனர்.

இரண்டு ஆதிக்க சக்திகளின் முறுகள்களின் காய் நகர்த்தலுpற்கு பலியாக போவது இலங்கை வாழ் மக்கள் என்பது தெளிவாகினும். ஏற்கனவே இலங்கையில் தீhக்கபடாதுள்ள சிறுபாண்மை தமிழர்களின் அரசியல் உரிமை பிரச்சினையினை கையிலெடுத்து தமது நலன்களிற்காக பயன்படுத்துவர் என்பதனை தமிழ் அரசியல்வாதிகள் மிக நுணுக்கமாக ஆரயாவேண்டும். 

ஏற்கனவே ஓரு தடவை இந்தியா தனது கட்டுப்பாட்டிற்குள் இலங்கை அரசினை வைத்திருப்பதற்காக  தமிழர் போராட்த்தினை கையிலெடுத்த வராலாற்றினை மறந்துவிடலாகாது. அன்று இலங்கை அரசின் இனவெறி கொள்கைகளிற்கு எதிராக முன்னெழுந்த தமிழர் போரட்டத்தினை பின் தள்த்தில் வைத்து அனைத்து இயக்கங்களிற்கும் பயிற்சி வழங்கியும் ஆயுதங்களை வழங்கி இயக்கங்களை தமக்கில் மோதும் வகையில் பிரித்தாளும் கைங்கரியத்தினை நன்கே அரங்கேற்றியது.

மீண்டும் தமது நலனுக்காக சீனா அல்லது இந்தியா இந்த விடயத்தினை திருப்பியும் ஊதிப்பெருக்கி யுத்ததினை நடாத்தினாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. அந்த அடிப்படையிலேயே கடும்போக்கு தமிழ் தேசியவாதிகளையம் மறைமுகமாக வளர்த்துவருகின்றது. இதேபோன்று கடும்போக்கு சிங்கள தேசிவாதத்தினை வளர்த்து தமிழர் மீது தாக்குதல் தொடுத்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

எது எப்படி இருப்பினும் பந்தாடப்பட போவது இலங்கை வாழ் சிறுபாண்மை இனங்களே.  உதைபந்தாட்டத்தில் பிரத்தியேகமாக விளையாட்டில் பங்குபெறாமல் ஓரு குறிப்பிட்ட விளையாட்டுவீரர்கள் இருப்பார்கள் யாரவெது ஓர் விளையாட்டு வீரர் காயப்படும் போது பிரத்தியேகமாக உள்ளவர்கள் விளையாட்டில் களம் இறக்கப்படுவார்கள்

உலகத்தில் நடைபெற்ற யுத்தங்கள் அல்லது நடைபெற்று கொண்டு இருக்கும் யுத்தங்களில் மக்கள் பல கூறுகலாக பிரித்;து தமக்குள்ளே மோதும் நிலைமையை தோற்றுவித்து தமது இலக்கினை ஆதிக்கசக்திகள் இலகுவாக பெற்று கொள்கின்றன.

இன்றைய நிலைமையில் நரகலிற்கு நல்ல அரிசி தேடும் நிலைiயே இன்று இலங்கை வாழ் மக்களிற்கு ஏற்பட்டுள்ளது. 

சீனா தனிமனித சுதந்திரத்திற்கு மதிப்பளிக்காது பொதுடமை என்ற பொயரில் ஆதிக்கசக்திகளாக உருவெடுத்;துள்ளது. சீனா அரசு அரசை விமர்சிப்பதற்கான உரிமையோ அல்லது ஊடக சுதந்தரமோ தனிமனித சுதந்திரமற்ற அற்ற h  காட்டு தர்பாராகும்.

;இந்தியா அரசியலில் பல்வேறு சீhகேடுகள் இருப்பினும் ஓப்பீட்டளவில் கருத்து ஊடக சுதந்திம் உள்ளநாடு. அதுமட்டுமல்லாது சிறுபாண்மை மக்களின் அரசியல் அபிலாசைகள் மதிக்கப்பட்டு மாநில சுயாட்சிகள் வழங்கப்பட்ட ஓர் நாடு. 

ஜனநாயகம் என்பது பாராளுமன்றம் நீதிமன்றம் பொலிஸ் இராணுவம் தேர்தல்;றை சிறைச்சாலைகளை கொண்ட ஓர் பொறிமுறை. இதுவே உயர்ந்தபட்ச வடிவம் என்பது அர்த்தமன்று. 

சீனாவின் பொருளாதார ஆதிக்கத்தினால் அச்சமுறும் அமெரிக்கா ஐரோப்பியா நாடுகள் பல இந்தியாவுடனே உடன்பாடுகளை செய்விரும்புகின்றனர் என்பதே உண்மையாகும்.

இன்றைய உலகில் திரைமறைவில் நடைபெறும் புதில உலக ஓழுங்கிற்கான போராட்டத்தில் பல் வேறுபட்ட தேசிய இனங்கள் பகடைக்காய்களாக்கப்பட்டு சீரழிக்கபடுவதும் அல்லது தேசங்களாக பிரிக்;படும் கைகரியங்களும் நடைபெற்றுவருகின்றன. 

சீனாவின் பொருளாதார ஆதிக்க கொள்கைக்கு எதிராக இந்திய அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் கைகோர்த்துள்ளன. 

இந்த சிக்கலான நிலைகளை மேலும் தமிழ் தேசிய வாதத்தினை கூட்டியம் குறைத்தும் பாவித்து ஆதக்க சக்திகள் தமது நலன்களை வெற்றிகொள்ள போவதே கசப்பான உண்மையாகும்.

இன்று இலங்கையில் ஜனாதிபதி மைத்திரிக்கும் இரணிலிற்கும் உள்ள இழுபறி இதனடிப்படை என்பதை புரியாமல் தமிழர் தரப்பு நடுநிமை வகித்திருக்கலாம் என்று ஆருடம் கூறுவது யதார்த்தமற்றது. 

இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் இந்நிலைமைகளையும் கசப்பான உண்கைளையும் கவனத்திற்கு எடுத்து மிஞ்சி உள்ள இலங்கை வாழ் தமிழர்களையம் பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பு ஏற்படடுள்ளது. அதேபோன்று புலத்தில் உள்ள கடும்போக்கு தமிழ் தேசியவாதிகள் எப்பொழுதும் எந்த தரப்பு ஏஜென்டுகளாலும் பாவிக்கபடும் வாய்ப்புக்கள் பலவே உள்ளன. இவற்றை அவதானத்தில் எடுத்து தமிழ் மக்கள் தனியே உணர்வு அரசியலிற்கு இடமளிக்காது இனத்தின் உயிர் வாழ்வில் அக்கறை கொண்டு அரசியல் செய்ய வேண்டிய காலத்தின் கட்டாயம் இன்று இருக்கின்றது. இதேவகையில் இந்நிலமைகளை புரிந்து கொண்டுள்ள சிங்களசக்கதிகளுடன் கைகொர்த்து ஓர் சரியான திசைநோக்கி நகர்வதன் மூலமே இந்த புதிய உலக ஓழுங்குக்கான போராட்த்திலிருந்து இலங்கை தனது இறையையை பாதுகாத்து கொள்ள முடியும். மகிந்த திரும்ப வந்தால் இலங்கை சிங்கப்பூராக மாறாது மாறாக சீனாவின் கொலனியாகவே மாறும் என்பதை தமழ்தரப்புக்கள் புரிந்து கொள்ளவேண்டும். சீனாவினால் செய்து கொள்ளப்பட்ட ஓப்பந்தங்கள் 99 ஆண்டுகள் என்பதனை மறந்துவிடலாகாது. சீனா 2016 இல் 1000 க்கு மேற்பட்டவர்களிற்கு மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளது என்பது சீனாவின் கணக்கு. சர்வதேச மன்னிப்பு சபையின் கூற்றியன் படி சீனாவானது தனது தகவல்களை தாமே தாயார் செய்கின்றனர் என்பதே உண்மை ஆகும்.- கணபதிப்பிள்ளை சுதாகரன் -17.11.2018-  Keine Kommentare:

Kommentar posten