Freitag, 22. Januar 2021

நண்பன் ஐெமினியும் ஐரோப்பிய தமிழரின் கருத்துகளமும்.

 

னக்கு சுவிற்சர்லாந்தின் வதிவிட அனுமதி கிடைத்து முதன் முதலில் சுவிற்சர்லாந்தை விட்டு முறையாக ஜேர்மனியில் இடம்பெற்ற இலக்கிய சந்திப்பிற்கு சென்றிருந்தேன். இந்த இலக்கிய சந்திப்பினை ஜெமினி மற்றும் காலம்சென்ற தோழர் பராவினால் ஒழுங்கு செய்பட்டிருக்பலாம் என நினைக்கின்றேன். என்னை அழைப்பதற்காக புகையிரத நிலையம் வந்திருந்த நண்பர் ஜெமினிஎன்னை தனேக்கே உரித்தான சிரித்த முகத்ததுடன் வரவேற்றார். 87, 88, 89, 90 அந்தகாலம் சிறு பத்திரிகைகளின் பொற்காலம். ஐேர்மனி, பிரான்ஸ், சுவிற்சர்லாந்து, நெதர்லாந்து, டென்மார்க், நோர்வே என பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து பல சஞ்சிகைகள் புற்றீசலாக பறந்து திரிந்த காலம்அன்று நடை பெற்ற சந்திப்பில் சுவிற்சர்லாந்தில் இருந்து நான் மட்டுமே கலந்து கொண்டிருந்தேன். மனிதம் தனது விடியோ சஞ்சிகையினை முடிவிற்கு கொண்டுவந்து தனது ஆக்கங்களை கை எழுத்து பிரதியாக கொண்டு வந்த காலம். நான் நண்பர் ஜெமனியிடம் கை எழுத்து பிரதி கொண்டுவருவதில் உள்ள சிக்கல்களை அலசி ஆராய்ந்தோம். தாம்மால் கொண்டுவரப்பட்ட அக்கினி சிறு பத்திரிகை கணணியில் தமிழ்  எழுத்துக்களால் எழுதி வடிமைக்கபட்ட சஞ்சிகையாக வெளிவந்திருந்தது. என்னை தனது வீட்டிற்கு அழைத்து சென்று தமிழ் உருக்களை எவ்வாறு கணணியியில் பதிவு செய்யமுடியும், அதற்கு தேவையான மென்பொருட்கள் பறறியும் சலிக்காமல் சொல்லித்தந்திருந்தார். அதே கனவுடன் வந்து முதலில் சுவிற்சர்லாந்தில் வெளிவந்த மனிதம் சஞ்சிகையை கணணி தமிழ் உருவில் வடிவமைத்திருந்தேன்

நான் ஜெமினியை சந்தித்ததன் விளைவாகவே எனக்கு கணணியில் ஆர்வம் ஏற்பட்டது. துறைசார்ந்த கணணி ஆர்வத்தை  ஏற்படுத்தியது நண்பர் ஜெமனி என்பது என் வாழ் நாளில் மறக்க முடியாத சம்பவமாகும். அதன் பின்னர் நான் கணணியை துறைசார்ந்துகற்றேன் பலரிற்கும் கற்பித்தேன்.

 90 களில் புலிகளின் இராணுவத்திற்கு எதிரான தாக்குதல்கள்அதிகரிக்க புலத்தில் புலிகளிற்குஆதரவாக பலர் செயற்பட ஆரம்பித்தனர். நாட்டில் விடுதலைப்புலிகள் ஜனநாயகத்தின் குரல்வைளயை நசித்த போது அதன் தாக்கம் புலத்திலும் தலைவிரித்தாட ஆரம்பித்தது. இதன் விளைவாக பல சிறு சஞ்சிகைகள் மீது அழுத்தங்கள் கொடுக்கப்பட்டது. மேலும் தனி ஆயுதகலாச்சாரம்மட்டுமே விடுதலைப்போரட்டத்தின் வடிவம் என நம்பி பலர் ஆதரவாளர்கள்ஆனார்கள். இவற்றின் விளைவாகவும் சிறு த்திரிகைகள் வாசகர் பரப்புமின்றி ,துணிச்சலின்றி ஆக்கங்களை எழுதமுடியாது முடங்கின. இக்காலகட்டத்தில் ஜனநாயாக மறுப்புக்களிற்கு எதிராகவும் ஆயுதகலாச்சாரத்திற்கு எதிராக குரல்கொடுக்க முன்வந்த பல சிறு சஞ்சிகை எழுத்தாளர்கள் தமது பதிவுகளை பிரசுரிக்க வாய்பில்லாமல் இருந்த காலம்.

 அவ் வேளையிலும் ஜெமினி  கணணித்துறையில் ஒருபடி முன்சென்று தேனி எனும் இணையத்தளம் மூலம் பலரிற்கு எழுதும் தளத்தினை இலவசமாக வழங்கியிருந்தார். ஆயுத மோகமும் அச்சுறுத்தல்களும் தலைவிரித்தாடிய காலப்பகுதியில் துணிச்சலோடு அனைத்து விமர்சன எதிர்ப்பு ஆக்கங்களை பிரசுரித்து வந்திரிந்தார்.

அன்றும் பெரும்பாண்மையினரால் சரி எனும் கருத்துக்கு  மாற்றாக ஓர் கருத்து பதிவு செய்தால் எழுதியவர்களும் பிரசுரித்தவர்களும் துரோகிகள், காட்டி கொடுப்பவர்கள், அரச உளவாளிகள், இன்னும் பல பட்டங்களையும் தூற்றல்களையும் முகங்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. இவற்றை எல்லாம் சகித்து தனியே முகம் கொடுத்த மாமனிதன். இவ்வகை ஒர் கருத்து களத்திற்கான இடம் மறுக்கபட்டிருந்தால் மாற்று கருத்து என்பதே வெற்றிடமாக அமந்திருக்கும். எனது பல கட்டுரைகள் தேனியில் பிரசுரிக்கபடடிருந்தமையும்குறிப்பிடதக்கது.

புலம்பெயர்ந்ததமிழர் வரலாற்றில் ஜெமினி ஓர் முக்கிய பாத்திரம் என்பது யாராலும் மறுக்க முடியாதது ஒன்றாகும்.

நன்று ஓய்வாக நீண்ட உறக்கத்திற்கு சென்ற நண்பனிற்கு எனது இதய பூர்வமான நன்றிகளும் வாழ்த்துக்களும். உன்னை பிரிந்தி தவிர்க்கும் அன்பு நெஞ்சங்களிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

கணபதிப்பிள்ளை சுதாகரன்

23.01.2021


Keine Kommentare:

Kommentar veröffentlichen