Montag, 4. Januar 2021

இலங்கைக்கான புதிய ஆட்சி முறமையினனதும் புதிய கட்சி வடிவத்துடன் கூடிய அரசியல் கலாச்சாரத்தின் முன் தேவையும்

இலங்கையில்
சிறுபாண்மையினரையும் பிரதேசங்களையும் பிரதிநித்துவப்படுத்தும் கட்சிகள் தொடர்ச்சியாக தமக்கிடையிலான உள்முரண்பாடுகளுடன் அரசியல் ரீதியில் தோல்விகளையே சந்தித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாது இவ்வகையான சிறுபாண்மை கட்சிகளின் எதிர்தாக்கமானது பெரும்பாண்மை இனத்தினை முதன்மைப்படுத்தும் கட்சிகளைபூதாகரமாக இனவாதக்கோட்பாடுகளுடன் வளர வழிசமைக்கின்றன.

சுவிற்சர்லாந்தில் நான்கு தேசிய இனங்கள் இருக்கின்ற போதும் தனியே மாநிலத்தையோ கிரமத்தினையோ மொழியோ பிரநிதித்துவ கட்சிகளை விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் உள்ளது. உதாரணமாக இத்தாலி மொழி பேசும் கன்ரோனில் Lega dei Ticinesi என்ற அதிதீவிர வலதுசாரிகட்சி ஒன்றுள்ளது. ஆனாலும் பெரிய கட்சிகள் தமது மாநில கிராமசபை கட்சிகள் மிகவும் சுயாதீனத்துடன் சுதந்திரமாக செயற்படுகின்றன. இவ்வகை செயற்பாட்டினால் மாநிலங்களின் சுயாதீனமும் அனைத்து தேசிய இனங்களின் ஒற்றுமையும் குறிப்பிட்டளவு பாதுகாக்கபடுகினறது. தனியே மாநில அல்லது சிறுபாண்மையினர் கட்சிகள் மட்டும் வலு வலுப்பட்டிருந்தால் 26 கன்ரோன்கள் ஒன்றுபட்டு செயற்பட முடியாது மட்டுமல்லாது சுவிற்சர்லாந்து என்ற நாடே சாத்திமாயிருக்க முடியாது.

இலங்கையை தமது கட்டுபாட்டிற்குள் வைத்திருக்க சீனாவும் இந்தியாவும் முந்தி அடித்து கொண்டு இருக்கின்ற போதும். சீனாவின் கை ஓங்கி இருப்பதனை கண்கூடாக பார்க்க முடிகின்றது. இவ்வகை இழுபறி நிலையில் இந்தியா, ஐரோப்பிய, அமெரிக்கநாடுகளுடன் இணைந்து தமிழர்களின் அரசியல் உரிமை போராட்டத்தினை கையில் எடுத்து சீனாவினை நெருக்கடியை கொடுக்கும்வகையி லும், தமிழர் வாழ் பிரதேசங்ளை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க விரும்புவதையும் அவதாணிக்க முடிகின்றது. இதன் வெளிப்பாடாகவே யாழ்பாணத்தில் அமைந்திருக்கும் இந்திய துாதரகரத்தினை பார்க்ககூடியதாக உள்ளது.


அதேபோன்று சீனாவில் நடைமுறையுல் மத்தியப்படுத்தபட்ட ஆட்சிமுறையினால் பல்வேறு பிரதேசங்களை தேசியனங்களை ஒருமித்தும் ஒடுக்கியும் கையாளுகின்றது. இவ்வகையான அணுகு முறையினையின் முனைப்பாகவே ராஜபக்ஸ அரசின் கைகளில் அதிகாரம் குவிவதனையும் அதே குடும்பம் One nation, one country கோட்பாட்டினை மக்களிடத்தினை பிராச்சாரப்படுத்துவதனையும் கண்டுகொள்ள கூடியதாக உள்ளது. இரு வகை தன்நலம் கருதும் ஆக்கிரமிப்பாளர்களின் உதைபந்தாட்டத்தில் இலங்கை வாழ் மக்கள் அல்லல் அடையப்போவது தி்ண்ணம்.

முழுமையான ஆக்கிமிப்பாளர்களது பந்தாட்டம் ஆரம்பிக்க முதல்,  இலங்கைவாழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் இலங்கைக்கே உரிய ஆட்சிமுறமையையும் அனைத்து சிறுபண்மைமக்களின் சுயநிர்ணயத்தினை உறுதிப்படுத்தும்வகையில் ஒர் நடைமுறைக்கு சாத்தியமான அரசியல்சாசணம் ஏற்படுத்த வேண்டும். இவ்வகையிலான நடைமுறைக்கு முன்னர் சக தேசிய இனங்களையும் ஒருங்கிணைக்க கூடிய கட்சி வடிவம் அவசியம். தற்பொழுது தம்மைதாமே தேசியகட்சிகள் என்று கூறும் இருபெரும் பேரினவாத கட்சி போலன்றி ஒர் மாறுபட்ட பதிய முறமை அவசியம். தம்மைத்தாமே தேசியகட்சி என அழைத்து கொள்ளும் கட்சியில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே சிறுபாண்மைபிரநிதித்துவம் உள்ளது.

இதைவிட்டுவிட்டு தந்திரோபாயம் சர்வதேச அரசியல் காய்நகர்த்தல் என்ற போர்வையில் சிறுபாண்மை தரப்பு ஒரு ஆக்கிரமாப்பதளருடனும் பெரும்பாண்மை தரப்பு இன்னுமொரு ஆக்கிரமிப்பாளர்களிற்கு முட்டு கொடுப்பதன் மூலம் இலங்கை வாழ்மக்களை கையேந்தும் பிஜைகளாக மட்டுமே மாற்றமுடியும். தம்மைதாமே ஆளும் உள்ளகத்தன்மை கொண்டிராத எந்த மக்கள் குழுமங்களும் எடுப்பார் கைப்பிள்ளைகளாகவே இருக்க முடியும்.

தமக்கான ஓர் அரசியல் கலாச்சாரத்தை சாசணத்துடன் கூடிய வரையறை ஒன்றை செய்து ஆட்சிஆளும்போது ஆக்கிரமிப்பாளர்களால் பெரரிமாற்றங்களை செய்து கபளீகரம் செய்ய முடியாது.

இந்தியவின் ஆக்கிமிப்பின் கட்டுப்பாட்டிற்கு வரும் தரப்பு ஜனநாயகம் என்ற போர்வையில் பல சீரழிவு கலாச்சாரங்களையை கடைப்பிடிக்க நேரிடும். பொரருளாதார நிறைவு என்ற சொல்லே தேவை அற்றது என்ற நிலை ஏற்படும். ஆனால் சீனாவினால் ஆக்கிரமிக்கபட்டால் பொருளாதார வளர்ச்சி ஏற்பட சாத்தியமிருப்பினும் தனிநபர் ஜனநாயக உரிமைகள் நிட்சயம் நசுக்கபடும். ஆதலாலே இலங்கை மக்கள் தம்மைதாமே ஆள்வதே சாலச்சிறந்தது. இந்நிலை ஏற்படேவண்டுமாயின் பிரதேச ஆதிக்க பெரும்பாண்மை சிந்தனைக்கு முற்றுபுள்ளியிடல் வேண்டும்.

சுதாகரன் கணபதிப்பிள்ளை

04.01.2021

Keine Kommentare:

Kommentar posten