Sonntag, 13. Oktober 2024

புலத்தில் அலசும் "ஆய்வாளர்கள்" "புத்திஐீவிகள்" " செய்தியார்கள்", மந்தை சமுக உருவாக்கவும்- க.சுதாகரன்/13.10.2024

புலத்தில் பல ஆய்வாளர்கள் புத்திஜீவிகள் செய்தியார் என தமக்குதாமே பெய சூட்டிய பலர் புலத்து (Monopol) குத்தகை ஊடகங்களில் போலி, தீவிர தேசியவாத நஞ்சை விதைத்து வருகின்றனர். இந்த கும்பல் தமக்கு சாதகமாக இலங்கையில் தமிழ்மக்களிடம் செல்வாக்கு பெற்ற கடசிகளை தமது கட்டுப்பாட்டிற்குள் கெண்டுவருவதற்கு நிதி மூலமாகவும் பொய்பிரச்சாரங்களை மேற்கொண்டுவருகின்றனர். தம்மால் கைப்பொம்மைகள் ஆக்கியவர்கள் மூலம் கடசிகளை கைபெற்ற முனைந்துள்ளனர். அதனை அந்த கட்சியில் உள்ள திறமைசாலிகளால் இனங்காணப்பட்டு காப்பற்றபட்டது. 

இதற்கு சான்றாக தமிழ் கட்சியின் தீர்மான தெரிவுகளின் போதும், தற்போதை பாராளுமன்ற தேர்தல்களிற்கான வேட்பாளர் தெரிவின் போதும் கண்கூடானது. இந்த கட்சிகளை கைப்பற்ற போராடின கைக்குலிகள் சிலர் தம்மை சங்கு சின்னத்தில் ஐக்கியமாக்கினர் மேலும் சிலர் தம்மை சுயேட்சை வேட்பாளர் ஆக்கினர். இந்த செயற்பாட்டின் முலம் தங்களின் கனவு பாராளுமன்ற கதிரை தவிர தமிழ்மக்களின் அரசியல் தீர்வ அல்ல என்பதனை அம்பலப்படுத்தி உள்ளனர். உண்மையாக தமிழ்மக்களின் தீர்வில் அக்கறை கொண்டவர்களாக இருப்பின் ஒரு கட்சியை பலப்படுத்தி அதன்முலம் தமிழ்மக்களின் பெரும்பாண்மையை பெற்றெடுக்க போராடி இருப்பார்கள் அல்லவா?


போலிகளிற்கு உந்து கொடுத்து அவர்களிற்கான ஆதரவு தளத்தினை புலத்து ஊதுகுழல் ஊடகங்கள். ஏற்படுத்தி கொடுக்கின்றனர். ஊடகங்களில் தம்மை ஆய்வார்கள், புத்திஐீவிகள்,செய்தியாளர்  எனக்கூறுபவர்கள் தாம் வாழும் நாடும் புலத்தில் எவ்வித இணைவாக்கம் (Integration)   அடையாத தரப்பாகவே பார்க்க முடிகின்றது. பல ஆண்டுகள் இந்த நாடுகளில் வாழ்ந்தாலும் அந்நாடுகளின் கட்சி சமூக சிவில் அமைப்புகளில் தம்மை ஈடுபடுத்தாதவர்களாகவே கணிக்க முடிகின்றது. அதன் வெளிப்பாடகவே இவர்களின் இலங்கை சம்பந்தபட்ட ஊடகபேட்டிகளில் மிகவும் மட்டமான அரசியல் பார்வைகளையும், புதிய மாற்றங்கள் பற்றிய எந்தவித ஞானமின்மையை  புலப்படுத்துகின்றனர். 

2024 இலங்கை பாராளுமன்ற தேர்தல் பற்றிய அலசல்களின் போது இந்த விண்ணர்களின் தரம் பற்றி அறியக்கூடியதாக இருந்தது. தமிழ்கட்சி ஒன்று பெண் இளையோர் வேட்பாளர்களை தேடிய விடயங்களை எள்ளி நகையாடினர். புலம்பெயர் தேசத்தில் தேர்தல்கள் நடைபெறும்போது வேட்பாளர்களை தேடும்படலம் நடைபெறுவது வழமை. கட்சி அரசியலில் நேரடியாக ஈடுபடுத்த முடியாத மன நிலையில் ஐரோப்பிய நாடுகிளில் உள்ள பல மக்கள் உள்ளனர். இதனால் வேட்பாளர் பட்டியலை தெரிவு செய்யும் போது அனைத்து கட்சிகளும் பாரிய சவால்களை சந்திக்கின்றனர். இந்த ஆய்வளர்கள் ஏன் இதனை அறிந்திருக்கவில்லை? இந்த நிலமையால் சுவிற்சர்லாந்தில் பல குடியேற்றவாதிகள் சுவிற்சர்லாந்து கட்சிகளில் அங்கத்துவம் பெற்று வேட்பாளராக கூடிய வாய்புக்கள் அதிகமாக உள்ளது. பல ஐரோப்பிய நாடுகளிலும் பல தமிழர்களும் ஏனைய குடியேற்றவாதிகளும் மக்களால் தெரிவு செய்யப்பட்டு அரசுகளில் ஓர் அங்கமாக உள்ளனர். 

மற்றும் கட்சி கூடடங்களில் தீர்மாணத்தினை நிறைவேற்றுவதற்கு கையை உயர்த்தி வாக்களிகுக்கும் நடமுறை இன்றும் ஐரோப்பிய கட்சிகளில் வழமையாக உள்ளது. ஒரு முறைதமிழ் அரசுக்கட்சியில் தீர்மாணம் நிறைவேற்றிய விடயம் சம்பந்தமாக இந்த ஆய்வாளர்களால் மயிர் பிழக்கும் விவாதங்கள் நடைபெற்றதை நாம் பலர் மறந்திருக்க மாட்டோம்.

இவ்வகை ஆய்வாளர்களை  கிணத்து தவளைகளும் கத்துகட்டிகள் என்றே வரையறை செ்யமுடியும் . இவர்கள் தாம் நினைக்கும் ஒரு விடயத்தினை நிறுவுவதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் குறிப்பிட்ட தரப்பினரால் கொண்டுவரப்பட்டுள்ள கையாட்களாகவும் ஏவலர்களாகவுமே பார்க்க முடிகின்றது.  


புலத்தில் பல சிறிய அரசியல், இலக்கிய, சஞ்சிகைகள் 80, 90 களில் ஐரோப்பிய நாடுகளில் பல்வேறு பட்ட தளங்களில் இருந்து வெளி வந்திருந்தது. மிக சிறுபாண்மையாக இருந்திருந்தாலும் ஓரு ஆரோக்கிய சமுகத்தின் ஆரம்பம் தென்பட்டது. புலத்து புலிகளது குத்தகை செயற்பாடுகள் ஆட்கொணட பொழுது பல சஞ்சிகைகள் காணாமல் ஆக்கபட்டன. இதனையும் மீறி ஒரு சில சஞ்சிகைகள் பத்திரிகைகள் ,இணைய பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருந்தன. ஆயத சாகச காதல் பல சுயாதின செயற்பாட்டை முடக்கின. இதன் புலம் பெயர் தமிழர் தாம் வாழும் நாட்டு சமுகத்துடன் இணைவாக்கம் (Integration) அடையாது தமக்குள்ளேயே ஓர் Parallel society 

The term “parallel society” describes the belief that “ethnic” or religious minorities develop their own infrastructures and separate themselves from a mainstream society that is considered to be homogenous.

உருவாக்கி கொண்டது. இதன் வெளிப்பாடகவே குறுகிய எண்ணம் கொண்ட இந்த ஆய்வாளராகது தோற்றமாக பார்க்க வேண்டி உள்ளது. புலத்தில் வாழும் எம்மவர்களில் எத்தனை பேர் இந்நாடுகளில் உள்ள சிவில் சமூக நிறுவனங்களில் அங்கத்துவத்தினை ஏற்படுத்தி பொதுவான மக்கள் நோக்கிற்காக இணைந்து இந்நாட்டு மக்களுடன் இணைந்து பயணிக்கின்றனர்?  இந்த Parallel society யினை முதலாம் தலைமுறையினரே தேற்றுவித்திருந்தனர். இருந்தாலும் துரதிஷ்ட வசமாக ஒரு சிறிய இரண்டாம் தலைமுறையிலும் தொடர்கின்றது.இது ஓர் ஆரோக்கிய சமுகத்திற்கு ஆபத்தானது.

I’m attracted to intelligence, not education. You could graduate from the best, most elite college, but if you’re clueless about the world and society, you don’t know anything

புலம்பெயர்மக்கள் இந்த Monopol ஊடகங்கள் மூலம் கிடைக்கும் தகவல்களையும் அலசல்களையும் சரியாக விமர்சனைப் பார்வையுடன் பகுத்தறிய கற்று கொள்ள வேண்டும். செய்தி ஊடகங்களில் தம்மை ஆய்வாளர் செய்தியாளர் என அடையாளப்படுத்துபவர்கள் தாம் வாழும் நாடுகளில் எப்படிசெயற்படுகின்றார்கள் என்பதை இனங்கண்டு கொள்வது அவசியம். மாக இந்த நஞ்சு களை அப்படியே உள்வாங்குவது ஓர் அறிவிலி ஆட்டு மந்தை சமுகத்தினைேயே தோற்றுவிக்கும்.


இலங்கை தமிழரசுக்கட்சியும் இரண்டுதோணியில்கால்வைத்ததலைவர்களும்! - மூ. சிவகுமாரன் / 13.10.2024

திர்வரும் 14 நவம்பர் இலங்கைத்தீவின் 17 வது நாடாளுமன்றத்திற்கான 225 மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெறவுள்ளது

தேசியமக்கள்சக்தி அநுரா அலை நாடாளுமன்றத்தில் அதிகப்படியான ஆசனங்களை கைப்பற்றுவார்கள் என்பது சந்தேகத்துக்கு இடமற்றது ஆனாலும் கடந்த நாடாளுமன்றத்தில் வெறும் 3 ஆசனங்களைமட்டுமே

பெற்றுக்கொண்ட மக்கள்சக்தி இம்முறை நாடாளுமன்றத்தில் தன் அசுரபல வளர்ச்சியை பெரும்பான்பை பலத்தை காட்டுமா என்ற வினாஎழுப்பும்அளவுக்கு அதன் மக்கள் ஈர்ப்பு அலை மோதுகிறது பெரும்பான்மைபலத்தை பெறுவதினூடாகத்தான் மக்கள் சக்தி அது விரும்பும் மாற்றத்தை கொண்டுவர முடியும்  அதேநேரம் இடது அநுராஅலையை தடுக்க பவ்வியமான பதுங்கலான பகட்டிலா முகங்களோடு பன்னாட்டு பின்னணயில் பாரம்பரிய வலது சஜித்அணி வெல்ல தன்தான தண்ட வியூகங்களை வகுப்பது வெட்ட வெளிச்சம்!

இத்தகைய சூழலில் எம் தமிழ் பரப்பின் தேர்தல் அரசியல் நிலைமைகள் என்ன குறிப்பாக  தமிழரசின் நிலை இதுகுறித்த என்அவதானமே இங்கே பதிவாகிறது செப்பரம்பர் ஜனதிபதிபதித்தேர்தல்வரை எம்மக்களை ஆட்கொண்ட தேசம் திரட்சி  மிரட்சி போன்ற அழகான வார்த்தைகளின் திரைவிலகி ஜனநாயகம் என்ற மக்கள் தேவை பெரும்பாலும் உணரப்படுகிறது சங்கோடு ஜனநாயக கூட்டணி தமிழரசில் விலகிய ஜனநாயக தமிழரசு  இன்னும் ஜனநாக முற்போக்கு கூட்டணிஎன ஜனநாயகம் எம்மக்களின் உதடுகளெல்லாம்இவ்வளவு உச்சரிக்கப்படுவது யுத்தத்திற்குப்பிந்திய தேர்தல்களில் இதுதான் முதல் முறை அந்தவகையில் மக்கள் சுதந்திரமாக

தம்வாக்குகளை அளிக்ககூடிய ஒருசூழல் கனிந்திருப்பதாகவே தெரிகிறது. இது ஆரோக்கியம் மற்றும் தமிழ்மொழி அமுலாக்க அமைச்சில் பணியாற்றிய இனப்பிரச்சனை அரச நிர்வாகப்பிரச்சனை போன்றவற்றில் பட்டறிவுள்ள முன்னாள் அரசதிகாரிகளும் இத்தேர்தலில் சுயாட்சையாக போட்டியிடுவது விரிந்த ஜனநாயக சூழலின் வீரியத்தை வெளிப்படுத்துகிறதென்று சொல்வது மிகையான கூற்றல்ல சென்ற தேர்தல்வரை எம்மக்களிடையே அதிக செல்வாக்கை செலுத்திய தமிழரசுக்கு இம்முறைத்தேர்தல் சவாலாகவே இருக்கப்போகின்றது என்பது திண்ணம். 

ஏனெனில் தீவில் எம்மக்களிடையே அது செல்லும் திசையை சொல்லும் முதல்தேர்தல் கட்சிக்குள் முட்டியமோதிய அணிகள் இணைந்தும் பிரிந்தும் தமிழரசாக ஜ. தமிழரசாக தேர்தலுக்கு முகம் கொடுக்க போகிறார்கள் என்பதால் இது முக்கியத்துவமுடையதாகவும் ஆகின்றது தமிழரசும் அதன் எதிர்காலமும்: இலங்கை தமிழர்களின் பாரம்பரியஜனநாயகத்தில் வளர்க்கப்பட்டதுதான் தமிழரசுக்கட்சி தந்தை செல்வா அண்ணன் அமிர்தலிங்கம் என்ற குடும்ப உறவுபாசம் கொட்டி எம்தந்தைதாய் ஆச்சி அப்புவால் போற்றிவளர்க்கப்பட்ட கட்சி தலைவர்பதவி இல்லாமலேயே தமிழ் மக்களின் ஏகோபித்த தலைவனாக தந்தைசெல்வா பிரகாசித்தார் தந்தைசெல்வாவும் தன்உடல் உழைப்பு சொத்து எல்லாம் கட்சிக்கென்றே அர்ப்பணித்து ஓர் ஜனநாயக தலைவராகவே வாழ்ந்தார் அதனால் அவர் இன்றுவரை ஈழத்தமிழர் தந்தையாகவே போற்றப்படுகிறார்!

ஆனாலும் ஒருகட்சியால்மட்டும் ஒருவரலாற்று சிக்கலான இனப்பிரச்சனையை தீர்க்கமுடியாதென்பதை அவர்தன் இறுதிவாழ்நாளில் நன்கு உணர்ந்துகொண்டார் சிங்களபேரினவாத த்தின் கொடுங்கோல்கண்டு கடவுள்தான் எம்மக்களைஇனிகாப்பாற்றவேண்டும் என்று தன்உள்ளக்குமுறலை வெளிப்படைய்கொட்டி எளிய மக்களின் மனங்களில்எல்லாம் ஒரு தலைவனாக மட்டுமன்றி ஓர் உன்னதமனிதனாகவும் உயர்ந்திருக்கிறார் தந்தை செல்வா இது வரலாறு!

பின்னர் தமிழர்விடுதலைக்கூட்டணியில் கரைந்துகொண்ட தமிழரசு அதன் செயலாளர்நாயகம் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் கொலையோடு இருந்த இடம்தெரியாமல் எங்கோதொலைந்தது அதன்ஜனநாயகபண்புகளில் இருந்தும்! பிற்பாடு யுத்த போர்காலசூழலில் கூட்டமைப்பின் வீட்டுசின்னத்தோடு மாவைஅண்ணன் தலைவராக மறுபடி உயிர்த்தது. 

யுத்தத்திற்கு பிந்தி: யுத்தம் முடியும் இறுதிநாட்களின் நிலமைகள் குறித்து அறியமேற்கு ஐரோப்பிய பிரபல பத்திரிகைஒன்று அரசியல்அறிவியலாளர் கொழும்பு பாக்கியசோதி சரவணமுத்து அவர்களோடு நடாத்திய நீண்ட செவ்வியில் ஒரு கேள்வி: இனி  இலங்கைத்தமிழர் தலைமை எவ்வாறு அமையப்போகின்றது ?அதற்கு அவர்அளித்த பதில் இனி புதிய தமிழ்ஆளுமைகள்அரசியலுக்கு வர வாய்புக்கள் இருக்கின்றது என்றார்

தமிழரசில் சுமந்திரன்:

அந்தகாலகட்டத்தில்தான் கொழும்புவாழ் சட்டத்தரணி மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரனும்தமிழரசுக்கட்சிக்குள் சம்பந்தன் ஐயாவால் அறிமுகம் செய்யப்பட்டார் தமிழ் சிங்கள மொழி சட்ட அறிவியல் புலமை யுத்தத்துக்கு பிந்திய சர்வதேச நாடுகளின் இன்றைய சட்டநியம புரிதல்களோடு கட்சிக்குள்பிரகாசிக்க தொடங்கினார் சுமந்திரன்!ஆனால் முப்பதுவருட யுத்தத்துள் மூச்சுவிடாமல் தவித்த ஜனநாயக சூழலிருந்து யுத்தம் முடிந்து மிரண்டு விழித்த ஜனநாய வெளிச்சம்!எமது தமிழ்சூழலில் கட்டமைக்கப்படும் பெரும்பான்மை கருத்தே ஜனநாயகமாகவும் ஏனையவை துரோகம் எனவும்அதுதன் யுத்தகால அகராதியை தூக்கிநிறுத்தியது! தேசம் மனித உரிமை என்பவையெல்லாவற்றையும் ஒற்றைப்பரிமாண வாய்ப்பாடாய் முப்பதுவருட யுத்தம் தின்றகாலம் கடந்தும்  இன்றும் ஒப்புவிக்கின்றது!

தமிழர்கூட்டமைப்பு:

எதிரிக்கு எதிரி நண்பன் எனக்குமூக்குபோனாலும் எதிரிக்குசகுனம் பிழைக்கவேண்டும் என்ற எம்தமிழ் பழையமொழிகளை அரசியல் கொள்கையாய் வரித்தது அன்றைய தமிழர்கூட்டமைப்பு ! யுத்தத்தை களத்தில் நின்றுநடாத்திய சிங்கள பேரினவாத இராணுவதளபதிக்கே  எம்மக்களை வாக்குபோட வைத்தது பிற்பாடு யுத்தத்தை நடாத்திய பாதுகாப்புமந்திரிக்கே  நல்லிணக்கம் என்று சொல்லி எம்மை நம்பசொல்லி மீண்டும் வாக்கு கேட்டார்கள் சந்தனம் பூச்சோடு இலங்கையின் முன்னாள் தமிழ்நீதி அரசரை எம் வடபுல முதலமைச்சராக்கினார்கள் இவைகள்தான் தமிழர்கூட்டமைப்புசெய்த தமிழ்தேசிய அரசியல்கள் யுத்தத்தால் அனைத்தும் இழந்த அபலைகளுக்கு அப்பாவி ஏழைமக்களுக்கு செய்தது என் பட்டியலிட

இந்த தலைமைகள்! தமிழ்தேசியம் வெல்லும்வரைமக்களுக்கான வாழ்வாதாரம் அபிவிருத்தி எதுவும்தொடவும்மாட்டோம் அண்டவும்மாட்டோம் என்றார்கள் சிங்களபேரினவாதம் தன்மனிதாபிமானத்தோடு மாகாணத்துக்கு கொடுத்த நிதிகளைக்கூட தொட்டால் தீட்டாக திருப்பிஅனுப்பினர் தேசியம்போற்றும் நிலத்துபுலத்து தலைவர்களுக்கோ அவர்கள் குடும்பம் உறவு ஏன் பரம்பரைசெல்வசெழிப்புக்குகுறைவேஇல்லாதபடி நிலம்புலம்குடிதோட்டம் ! மக்கள்பட்டினிவாழ்வை காணமறுத்து தேசிய அரசியல்குருடர்கள்ஆனார்கள் இந்ததலைவர்கள்! மக்களோ தம்தேவைகளுக்காக சுயமான அரசியல்சக்திகளுக்கு தம்வாக்குகளை வாரிவழங்க தொடங்க  கூட்டமைப்பு ஆணிவேரோடு ஆட்டம்கண்டது! இதில் யுத்தத்துக்கு பிந்திவந்த தமிழரசு சுமந்திரன் தமிழர் கூட்டமைப்பின் பேச்சாளர்மட்டுமல்ல தமிழரசின் மூச்சாளரும் என்ற உள்ளூர வெதும்பல்கள் வெடித்தெழத்தொடங்கின இத்தகைய சூழலில்தான் சென்றாண்டு முதுமைவாழ்வையெட்டும் மாவைஅண்ணாவின் தமிழரசு தலைவர் பதவிக்கு ஒரு தேர்தல் நடந்தது அப்படித்தான் வெளியே சொல்லவும்பட்டது ஆனால்பின்திரையில் நிலத்தில் புலத்திலுள்ள தேசிய பரப்பாளர்களின் பலத்தோடுதமிழரசில் சுமந்திரனை கழட்டி சிறிதரனை தலைவராக்கும் முயற்சிமேற்கொள்ளப்பட்டது புலத்திலுள்ள மீடியாக்கள்ஊத!

தமிழரசின் பெருமையையும் சிறிதரனின்  தேசியபரப்பையும் ஊதிஊதிக்காட்டினார்கள் அமெரிக்க அதிபர்தேர்தல்போல சிறிதரன்புகழ் பிரச்சாரம் புலத்தில் கொடிகட்டியது நிலத்தில் சந்தனப்பொட்டு நீதிஅரசர் சிறிதரன் நல்லதலைவர் எனசான்றிதழ் கொடுத்தார் ஆனால் பாவம் சிறிதரன் அந்தாள் நொந்துபோய் தமிழர்நாம் வெளிவிவகாரகொள்கைஎல்லாவற்றிலும் தோற்றுப்போனோம் என்று வெளிநாட்டில் நின்று அழுதது கைகெட்டியும் வாய்கெட்டாம்போனகதையா கட்சித்தலைவர்பதவியும்! புலத்து நிதிஊட்டோடு சிறிதரனைவைத்து கட்சியை கபளீகரம்செய்ய எடுத்த முயற்சி முடிவு என்னவோ நீதிமன்றத்தில் கட்சிஇப்போ! இதை தொடர்ந்து வந்த இலங்கைஅதிபர்தேர்தல் தமிழரசு சுமந்தரன்அணி தெளிவான முடிவு யாருக்கு ஆதரவு ஆனால் மாவைஅண்ணா சிறிதரன் சட்டத்தரணி தவராசா இவரகள்யாவரும் கட்சி முடிவுக்கு எதிராக பொதுவேட்பாளர் ஆதரவு இதில் தலைவர் மாவைஅண்ணா அதிபர் தேர்தல்முடியும்வரை அவருக்கே தெரியுமோ தெரியாது அவர் யாருக்கு ஆதரவு என்று  இப்போ கட்சியில் இருந்து கொளரவமாக ஓய்வுபெற்று  தன்கட்சியின் ஜனநாயக விழுமியத்துக்கு வலுச்சேர்த்திருக்கிறார் தேர்தலில் முதன்மை வேட்பாளராக சிறிதரன் முன்னிறுத்தப்பட்டிருக்கிறார் கடந்த காலங்களில் எல்லாம் எம் மக்கள் பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரை ஒன்றல்ல இரண்டல்ல கன்சாட் எடுத்துப்பார்த்தால் புரியும் எல்லாவற்றுக்கும் மேலாக கிளிநொச்சியில் அவர் ஆற்றிய உரை மிக மிக மிக்கியமானது!

ஜேவிதான்  வடக்கு கிழக்கை பிரித்தது இனக்கலவரத்தை நடாத்தியது இரவில் ஏறினால் எனக்குஎடுப்பார்கள் என்றுதன் அரசியல் புலமையையும் தன்ஆதரவாளர்களையும் புகழ்ந்தார் வடக்குகிழக்கை பிரித்தது

இலங்கை நீதித்துறை நீதிமன்றம் என்பதை மறந்தால் மறந்து பறவாயில்லை சிறிதரன் முன்னாள் எம்பி அந்த நீதியின்குடைக்குள்ளேதானே எம்பிபதவி அவருக்கு குளிராய் கிடைத்தது மீண்டும் ஆசைப்படுகிறார்!

ஆனால் இனக்கலவரத்தைநடாத்தியது ஜேஆரல்ல ஜேவிதான் என்று சொன்னார் ஒரு வரலாறு அப்பவே இவர் எம் ஈழத்தமிழ்தலைவரா என மக்கள் சிந்திக்கத்தொடங்கிவிட்டனர்! இதற்குபிற்பாடு அநுராவிடம் ஏன்போனார் எந்த நாடாளுமன்றத்துக்கு வேட்பாளராக போட்டியிட தேர்தலில் குத்தித்துள்ளார் என எம் தமிழ் மக்களே குழம்புகின்றனர் ஆனால் ஒன்று நிச்சயம் எம் மக்கள் இம்முறை தங்களுக்கான தலைவர்களை தாங்களே தேர்ந்தெடுக்க தயாராகிவிட்டார்கள் தமிழரசுக்கட்சிக்கும் கூடவே

இது ஜனநாயக தேர்தல் அது உலகளாவிய தன் தேர்தல் பண்பாட்டோடு கொண்டாடப்போகிறது பொறுத்திருந்து பார்ப்போமே மக்கள் தீர்ப்பைமகேசன் தீர்ப்பாய் ஏற்றிடும் ஜனநாயகத்தை போற்றும் மனத்திடத்தோடு!

Dienstag, 8. Oktober 2024

தமிழர்களின் கட்சி அரசியலும் தமிழ்மக்களின் துருப்பு சீட்டு பறிபோகும் ஆபத்தும் - 08.10.2024 / க. சுதாகரன்

லங்கையில் தமிழர்பகுதியிலும் தேர்தல் சூடுபடித்துள்ளதை யாவரும் அறிந்ததே. அதற்கு சாட்சியாக கட்சி தாவல்கள், விலகள்கள்,சின்னத்திற்கான அடிபிடிகள், போட்டியாளர்ளாக தெரிவுசெய்யப்படாதவர்களின் குமுறல்கள் என பல செய்திதாள்களையும் முகநுால்களையும் நிரப்பிவருகின்றது.  இவற்றை அவதானிக்கும் அல்லது நிதி வழங்கும் புலத்துதரப்பினரும் தமது மூலதனத்தினை காப்பாற்ற வாந்தி எடுக்கும் ஒற்றைபரிமாண ஊடகங்கள் தமது பங்குக்கு நச்சூட்டலையும் நடாத்திவருகின்றன. ஒரு சில ஊடகங்களும் தனிநபர்களும் ஊடகப்பண்போடு தமது ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகின்றனர் என்பதனையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

நடைபெற இருக்கும் தேர்தலில் தமிழ்தரப்பினை பலவீனமாக்கும் பல சதிகள் நடைபெற்றுவருகின்றன. இதனை சதி என்று புரியாதும் பலர் உள்ளனர்.  இலங்கையில் உள்ள அதி தீவிர தேசியவாதிகளும் (ultra Nationalist) தேசியத்திற்கான விசிறிகளான (Fans) புலத்தில் உள்ள சில போலி தேசியவாதிகளும் உடந்தையாக உள்ளனர். இந்த சதியினை இலங்கையையும் தெற்காசிய பிராந்தியத்தினை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் இந்தியாவும்  ஒரு சிலபுலத்து முதலாளிகளும் இணைந்தே நடைமுறைப்படுத்திவருகின்றனர். 

NPP யினால் கொண்டு வரப்பட்ட இளையோர் பெண்கள் மற்றும் புத்திஐீவிகளின் படை எடுப்பு இலங்கையில் உள்ள அனைத்துதரப்பினருடமும் தாக்கம் செலுத்தி உள்ளது. இந்த அலை சிறுபாண்மை தரப்பினையும் விட்டுவைக்கவில்லை. அதால் பெண்களும் இளையோரும் தமிழ், இஸ்லாமிய, மலையக மக்களின் வேட்பாளர்கள் பட்டியலை நிரப்பி உள்ளது. 

NPP இனால் மூன்றில் இரண்டை பெற முடியவில்லை என்றால் ஏனைய வெற்றி பெற்ற கட்சிகளுடன் இணைந்தே ஆட்சியமைக்க முடியும். இது சிறுபாண்மையினரை பிரநிதிப்படுத்தும் கடசிகளிற்கு கிடைக்க இருக்கு வரப்பிரசாரம். அதன் மூலம் தமது அரசியல் உரிமை சட்டங்களை அமுல்படுத்துவதற்கு பெரிதும் உதவும். இதனால் தமிழ்மக்கள் சரியான அரசியலை நடாத்தும் கட்சிக்கு வாக்குளை வழங்கி தமது பிரதிநித்துவதினை தக்கவைக்க வேண்டும். அதற்கு தமிழ்மக்கள் யாதார்தமானதும் சாத்தியமானதும் படிப்படையாக உரிமைகளை பெற்றுகொள்ள தகுதி படைத்த கட்சியையும் தலைமையையும் இனங்காணல் வேண்டும். 

நடமுறையில் தற்போது சாத்தியமற்றதும் தற்போதைய அரசமுறமையை ஏற்று கொள்ள விரும்பாது தனியே பாராளுமன்ற கதிரைகளை சூடாக்க விரும்புவர்களை மக்கள் இனங்கண்டு அரியலில் இருந்து ஒதுக்க தாயாராக வேண்டும். சர்வதேசததிற்கு எடுத்துகாட்டவும் நாம் தேசிய இனம் என பறைசாற்றுவதற்கும் மட்டும் பாரளுமன்ற ஆசனங்களை வேண்டி வருபவர்களையும் தமிழ்மக்கள் இனம்கண்டு புறந்தள்ள வேண்டும்.

சிறுபாண்மைினர் தமது  பிரதிநிதித்துவத்தினை தக்கவைக்காது தவறவிடுமானால் தனது பேரம்பேசும் தகுதி எனும் துருப்பு சீட்டினை இழந்துவிடும் ஆபத்து உள்ளது. மீண்டும் உரிமைக்கான குரல்கள் அடுத்ததேர்தல்வரை காத்திருக்க நேரிடும். இக்கால இடைவெளியில் பல பாதக சாதக அம்சங்கள் நடைபெறலாம்.

சிறுபாண்மை கட்சிகள் தனிநபர் சேறு பூசல்களை நிறுத்தி தமது கொள்களை தீர்வு திட்டங்களை முன்வைத்து மக்களின் ஒப்புதல்களை பெற்றுகொள்ள முயற்சிக்க வேண்டும். புதிய அரசில்கலாச்சாரத்தினை கட்சிகளும் ஊடகங்களும் நடைமுறைப்படுத்த வேண்டும். 

ஒருவர்மீது சேறு பூசியும் அந்நபர் இன்னமும் எவ்வித ஊழல்களில் மாட்டாமல் இருக்கின்றார் எனில் குறித்த நபரின் கருத்துகளிலும் தனிப்பட்ட நேர்மை உள்ளதாக கருதவேண்டி உள்ளது. அனைத்து தரப்பும் ஒருவரை மட்டும் சுட்டி நிற்பது மற்றவர்களது ஆளுமை இயலாமை நேர்மையின்மை பற்றிய சந்தேகங்களை தோற்றுவிக்கின்றது.

ஒரு பாரிய சதி வலைகளில் இருந்து இருந்து மீள வேண்டியவர்களாக  இன்றைய இலங்கை வாழ் தமிழர்கள் உள்ளனர். இந்த வலையில் இருந்து புத்திசாதுரியமாக இந்த தேர்தல் வெற்றியை தமதாக்கி கொள்வதிலேயே தங்கி உள்ளது. மக்கள் மீண்டும் பொய்வாக்கு உறுதிகளையும் உணர்ச்சி அரசியலிற்கு (emotional politics) அடிமையாகள் ஆகாமல்  தம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும்.


Freitag, 27. September 2024

எமதுதீவின் புதியதிபரும் புலம்பெயர் ஊடகங்களும்… - மூ. சிவகுமாரன்/27.09.2024

லங்கைத்தீவின் அரசியல் அதிஉயர் அதிகாரபீடத்தை புரட்டிப்போட்ட ஒருசூறாவளி அதிபர் தேர்தல் நடந்துமுடிந்திருக்கிறது. சுதந்திர இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக தீவில்வாழும் பெரும்பான்மையான ஏழைமக்களின் வாழ்வுமேம்பாட்டை மட்டுமே அரசியல் சுலோகமாக கொண்டு  தேசியமக்கள்சக்திஎன்ற கட்சி அதிபர் பீடத்தை கைப்பற்றிஇருக்கிறது. இது தீவில் வாழும் ஏழைமக்களுக்கு  நம்பிக்கை கொடுக்கும் ஒரு வெற்றிதான் கொண்டாடப்படவேண்டிய வெற்றிதான். ஆனாலும் அன்றாட வாழ்வாதாரமே பெரும்திண்டாட்டமானஅந்த ஏழைமக்கள் தங்கள் மனங்களில்தான் அந்த கொண்டாட்டத்தை நிகழ்த்துகிறார்கள் ! புதிய அதிபர் பதவியேற்பும் மிகமிக எளிமையாகவே நடாத்திமுடிக்கப்பட்டது ஜேஆரிலிருந்து ரணில்வரை அநுராதபுர கோத்தா அதிபர் இராஜ்சிய பதவிஏற்பை கண்ட மக்கள் அருராவின் பதவி ஏற்புஎவ்வளவு எளிமை என்பதை உணர்வர்!

இரண்டுபுரட்சிகளைமூட்டி அரச அதிகார இயந்திரகொடூர பற்களால் வெறிகொண்டு கொன்றுதின்னப்பட்ட ஜேவிபி என்ற இயக்கத்தின் பல்லாயிரக்கணக்கான இளம் உயிர்களின் விடுதலைகனலை ஏந்தி ஒரு சோசலிச இயக்கத்தின் இளைஞர் அமைப்பின் தலைவராகி பிற்பாடு அந்த இயக்கத்தின்அரசியல்கட்சி தலைவராகி நாட்டின் எதிர்கட்சி தலைவராகி ஒரு முப்பது வருட அரசியல் போர் அநுபவங்களினூடாக அதிபராகி இருக்கிறார் அநுரா!

செயல் அதுவே சிறந்தசொல் என்பதை நிரூபிப்பதே தன் இலட்சியம் என்பதை அவர் மக்களுக்கு ஆற்றுகின்ற உரைகள் எல்லாவற்றிலும் இடித்துரைக்கிறார் தீவில் தெற்கில் ஒரு வார்த்தை கிழக்கில் இன்னொருவார்த்தை  தான்சார்ந்த சிங்கள மக்களுக்கு ஒருபேச்சு வடக்கு தமிழர்வாக்குப்பெற இன்னோர்பேச்சு

என்று அரசியல் வியாபார தலைவராகன்றி ஒன்றுபட்ட இலங்கைத்தீவுக்குமான இன மத பாகுபாடற்ற ஐனநாயகசமத்துவ ஆட்சியை கொண்டுவருவேன் குறிப்பாக ஏழைமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவேன் என்று நிதானமாக ஆணித்தரமாக உரைக்கும்  இலங்கை தீவின் முதல் அதிபர் இவர் !

முப்பதுவருடத்துக்கும்மேலான யுத்தத்தில் எல்லாம் இழந்து தேசம்விட்டுதப்பிஓடிக்கொண்டிருக்கும் கூட்டத்தின் பக்கம் எண்ணியே பார்க்க முடியாத எம் சொந்த உறவுகள் இந்த தலைவனை ஒருநம்பிக்கை நட்சத்திரமாக பார்ப்பதில் என்ன தவறு!

பண்டாரநாயக்கா சந்திரிகாவை நம்பி நல்லூரில் காப்புகூட வாங்கிய எங்கள் மக்கள்  ஏழைஅடிவயிற்று பசிபோக்குவேன் ஏழைப்பிள்ளைகளின் கல்வியை உறுதிசெய்வேன் என்ற அநுராவின் வார்த்தையை நம்பத்தானேசெய்வார்கள்?

ஆனால் எம்புலம்பெயர் ஊடகங்களும் பெரும்பாலான சர்வதேச ஊடகங்களும் புதியதிபரை புதிராகவே சித்தரிக்கிறார்கள் இன்னும் ஒருபடிமேலாக மார்க்ஸிட் சோசலிச கம்யூனிச தலைவர் இவரால் ஆட்சியை கொண்டுநடத்தமுடியாது இவரின் ஆட்சிஆயுள் அரைவருடமும் நீடிக்காது என்று மக்கள்மனங்களிலே எதிர்மறை எண்ணங்களை விழுந்தடித்து விதைக்க முனைவதேன்?

யுத்தம் நடந்துகொண்டிருந்த காலத்தில் லண்டனில் இருந்துவந்த ஒருமாத இதழுக்கு சிவதம்பிஅவர்கள் எம் தமிழ் ஊடகத்துறை குறித்த பேட்டியில் சிங்கள ஊடகத்துறை வளர்ந்தளவுக்கு தமிழ்ஊடகம் வளர்ச்சிஇல்லை என்ற பொருள்பட  குறிப்பிட்டார் அது யுத்தகாலம் யுத்தம்முடிந்து ஒரு பதினைந்துவருடம் கழிந்தும் பொதுசன ஊடகம் என்று சொல்லக்கூடியவைகள்கூட எம் இலங்கைத்தீவின் அரசியல் என்றாலே ஒரு சார்பாக உலகக்குருட்டுப்பார்வையோடு ஏனோசெயற்படுகிறார்கள்?இந்தபோக்கு எம்தீவின் தேர்தல்காலகட்டத்திலும் அநுராவின் வெற்றிக்குப் பிறகும் தொடர்வது எம்ஈழத்தமிழரின் அரசியல் சாபமோ என்று எண்ணத்தோன்றுகிறது.!

இந்த எண்ணப்பாட்டுத்தீக்கு எண்ணை விடுபவர்களாக எம் மக்களின் அரசியல்கட்சி தலைவர்களே இருக்கிறார்கள் அண்மையில் அப்புக்காத்துவாரிசு அரசியல்கட்சி கஜேந்திரன் அநுராவுக்கு  என்ன அருகதை இருக்கு என்று முழக்கமிடுகிறார்

தமிழரசுகட்சி ஜனநாயக தேர்தல் தலைவரோ அநுரா ஜேவிபி கட்சிதான் 83 இனக்கலவரத்தை நடாத்தியது என்று மிகமோசமான வரலாற்று பொய்யை புனிதநாள் பேச்சில் கட்டவிழ்க்கிறார்

இலங்கைதீவின் புவியியல் அமைப்பு அது இன்னும் எவ்வளவுகாலம் ஆயுள் உள்ளது என்று புவியியல் ஆய்வாளர்கள் அங்கலாய்க்கிறார்கள் மாலைதீவையும் ஒப்பிட்டு!

உலக மேலாதிக்கப்போட்டியில் முன்னணியில் ஓடும் சீனாவுக்கு ஆப்புவைக்க தாய்வான் யுத்தத்தைகொழுத்துவிடத்துடிக்கும் மேற்கு ஆதிக்க சக்திகளும் எம் ஆசியபிராந்தியமும்!

உலக சனத்தொகையில் முதன்மை்பெற்றதுமட்டுமல்ல வளர்ந்துவரும் சந்தைப்பொருளாதார போட்டியாளர்களிடையேயும் பலம்பொருந்தும் ஆதிக்கசக்தியாக கருதப்படும் இந்தியா எம் அண்டைநாடுமட்டுமல்ல பாலம்போட்டால் கொழும்பைவிட குறுகிய தூரத்தில் இருக்கும் எம் உறவுநாடு!

இலங்கையின் சனத்தொகையில் இரண்டாம் இடத்தில்இருந்த தமிழர்

மூன்றா நான்கா இடம் என்று தடுமாறும் அளவுக்கு ஈழத்தமிழ்இளைஞர் தப்பி ஓட வைக்கும் அரசியலே இதுவரை இலங்கைத்தீவில் இருந்துவந்த நிலையில் யுத்தத்தால் அனைத்தும்

இழந்தும் பதினைந்து வருடங்கள்கழிந்தும் முறையான எந்த புனர் மேம்பாடும் இன்றி தவிக்கும்எம் ஏழைசகோகதர மக்கள் வாழ்வு விடிவது எப்போ? ஒரு அரைநூற்றாண்டாய் அழிந்துபோன எம்தேச வளங்களை மீள்கட்டமைப்பு செய்வது எப்போ?அல்லது சர்வதேச அனுசரணையோடு வடக்கும் கிழக்கும் இணைந்த உள்ளக சுயாட்சி தீர்வு கிடைக்கும்வரை களத்திலும் புலத்திலும் திரண்டுபோராட புதுசக்திகள்தயாராகிறார்களா?

இந்த கேள்விகளை முன்னிறுத்தி ஆக்கபூர்வ அறிவுக்கண்களை திறக்க ஐனநாயகத்தின் ஒருமுக்கிய தூண் என்ற சமூக பொறுப்போடு  குறிப்பாக எம்புலம்பெயர் ஊடகங்கள் செயற்படுவார்களா என்று ஒரு ஈழத்தமிழனாக ஏங்குகிறேன்!

Montag, 23. September 2024

இலங்கை தமிழர்கள் தவறவிட்ட பல வாய்ப்புக்கள் பற்றியும் இன்றைய சூழல் பற்றிய ஓர் அலசல். -க.சுதாகரன் / 23.09.2024

இலங்கையில் தமிழர்கள் தமது அரசியல் உரிமைகளிற்காகவும் இனத்தின் இருப்பிற்காகவும் பல்வேறு முறையில் போராட்டத்தினை நடாத்திய சமூகம். அதுமட்டுமல்லது போராட்டங்கள் பல சரியான நோக்கி நகர்த்தபடாதினால்  வன்முறைகளால் மொளனிக்கபட்டுள்ளது. இவற்றிற்கு பல்வேறு காரணிகள் தாக்கம் செலுத்தி உள்ளது.


1. நடைமுறைக்கு சாத்தியமற்ற உயர்ந்தபட்ச கோரிக்களை முன்வைப்பது

2. பிழமையான தலமைகள் போராட்டங்களை நடாத்துவது

3.பாராளுமன்ற கதிரைகளை கைப்பெற்றும்  நோக்காகத்திற்காக மக்களிடம் உணர்ச்சி கோரிக்களை முன்வைப்பது

4. படிப் படியாக சிறிய கோரிக்கைகளை முன்வைக்கும் அல்லது ஏற்கும் போராட்டங்களை நிராகரிப்பது

5. இலங்கை வாழ் ஏனைய தேசிய இனங்களின் போராட்டங்களிற்கு ஒத்துழைப்பு வழங்காது புறக்கணிப்பது

6. போராட்டங்கள் ஓரளவு சமரச நிலமைக்கு வரும்பொழுது ஏற்றுகொள்ள கூடிய விடயங்களை ஏற்க மறுப்பது

7.போராட்டங்களிற்கான நியாயத்தினை ஏனைய தேசிய இனங்களிற்கு புரிய வைக்காமையும் இலங்கை மக்களிற்கான பொது கோரிக்கைகளின் போராட்டங்களின் போது   அனைத்து சக்திகளையும் இணைக்க தவறுவது.

8.சிறிய சிவில் அமைப்புக்களின் பற்றாக்குறை

9. விடுதலை இயக்கங்ளிலும் அரசியல் கட்சிகளிற்குள் இந்திய உளவுகளும் புலம் பெயர் அமைப்புக்களின் தலையீடும்

10. புத்திஜீவிகள் என்ற போர்வையில் அதிதீவிர தேசியத்தினை மக்களிடம் விதைப்பது

11. ஏனை தேசிய இனங்களை எப்பவும் சந்தேகத்துடனும் இனவாத வெறுப்புனூடாக நோக்குவது. 

12. போராட்டங்களை ஒருகட்சியோ இயக்கமோ குத்தகைக்கு எடுக்கும் பண்பு. 

13. ஏனை தேசிய இனங்களுடன் தொடர்பற்ற நிலை, 

14. துரோகி அல்லது தேசியத்திற்கு ஆதரவு சக்தி என வகைபிரிப்பது, அதனை ஓர் சமூக நீதியாக உருவாக்குவது.

15. ஆட்சியில் அல்லது பொறுப்புக்களை ஏற்காது எதிர்கட்சி கதிரையில் இருந்து சகல அரச வசதிகளையும் அனுபவிபப்பது. 

மேற்குறிப்பிட்ட வாறு பல்வேறு காரணிகள் தமிழ் மக்களது உரிமைபோராட்டங்கள் வெற்றியை நோக்கி நகர்த்தாது முடக்கபட்டுள்ளது. மக்கள் உணர்ச்சி அரசியலிற்கும் இனவாத அரசியலை இனங்கண்டு புறம்தள்ள வேண்டும்.

இன்று ஜனாதிபதியான அனுர திசநாயக்கவின் தாய்க்கட்சியான ஓர் ஆயுத அமைப்பாக இருந்து அரச இயந்திரத்தின் கோர கரங்களால் ஒடுக்கபட்ட வரலாற்றினை இலங்கை வாழ்மக்கள் மறந்திருக் மாட்டார்கள். இன்று அவர்களின் மிதவாத அரசியலின் நீண்டகால உழைப்பின் பயனாக ஆட்சி அதிகாரம் இவர்களின் கைகளுக்குள் வந்துள்ளது. 

இதேபோல் புலிகள் கைகள் ஓங்கி இருந்த காலங்களில் நடைபெற்ற பேச்சு வார்த்தை காலங்களில் ஒப்பீட்டளவில் மிகசிறிய அளவினான அதிகாரபகிர்வு முன்மொழியப்பட்டிருந்து. கிடைத்தால் தமிழ்ஈழம் அல்லது வேறு  தீர்வுகள் வேண்டாம் என்ற அடிப்படையில் மற்றைய முன்மொழிவுகள் பல புலிகளால் நிராகரிக்கபட்டிருந்து. சிறிய தீர்வுகளை ஏற்று படிப்படியாக மிதவாத அரசியலில் கால் பதித்திருந்தால் மொளனிப்பும் இன அழிப்பும் நடைபெறாமல் தடுத்திருக்கலாம்.  மக்களிடம் தாம் தமிழ் ஈழத்தினை வலுயர்த்தி இருந்ததால்  தாம் ஒரு படி இறங்கிபோக இயலாது என்ற தரப்பும்., நிதிகளை வழங்கிய புலம்பெயர் அமைப்புககளின் அழுத்தமும். புலிகளை மாறுபட சிந்திக்க விடாமல் தடுத்திருக்லாம். அது மட்டுமல்லாது ஆயுதத்தினையே நம்பி வளர்ந்த இயக்கம் ஆயுத்தினை கீழே வைத்தவிட்டு முனனர் போன்று ஓர் கட்டுபாட்டிற்குள் உறுப்பினர்களை வைத்து கொள்ள முடியாது என தலமை எண்ணி இருக்கலாம். இவ்வகையான தெளிவற்ற முடிவுகளால் பல சந்தர்ப்பங்களை தமிழர் இழந்துள்ளனர்.

அதேபோன்ற தவறுகள் தமிழ் கட்சிகளிடமும் தொடருகின்றது. இன்றைய தேர்தலில் பல சிறுபாண்மை இன கட்சிகள் பல சஜித் பிரேமதாச வெல்லுவார் எனக் கணிப்பிட்டு அவரிற்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்து இருந்தனர். இவர்களால் பெரும்பாண்மை மக்களின் மனோ நிலமையைபுரிந்து கொள்ள இயலாது போய்விட்டது. 

வெல்பவர்களுடன் ஐக்கியப்பட்டு பிரச்சாரம் செய்வது என்பது சாத்தியம் அற்றது. இன்று ஒரு சில புலம் பெயர்ந்தவர்கள் தமிழரசுகட்சி தோற்பவருக்கு ஆதரவாக ஏன் ஆதரவளித்தனர் என விமர்சிக்கின்றனர். இது ஓர் சுத்த முட்டால் தனமான விமர்சனம். எவ்வாறு வெற்றியாளரை முன்பே கணிப்பிடுவது?  இது ஓர் கணிப்பு மட்டுமே. ஆனால் தமிழரசு கட்சி வென்றால் தமது எதிர்கால ப்பை பற்றி ஆராயிந்து இருந்தனரா என்ற கேள்வி எழுகின்றது. 

மித வாத அரசியலில் நம்பிக்கை அற்றவர்கள் ஏன் பாராளுமன்ற கதிரைக்கான தேர்தலில் மட்டும் பங்கு பெறுகின்றனர். மக்களை ஏமாற்றி தமது நலனுக்காக மட்டுமே பாராளுமன்ற‍கதிரைகளை பயன்படுத்துகின்றனர். இதனை மக்கள் விரைவில் உணர்வார்கள். மேலும் சிலர், தமிழ் இனவாத கருத்துக்களை உணர்சியாக வாந்தி எடுத்து வாக்குகளாக மாற்றி பாரளுமன்ற கதிரைகளை ஆக்கிரமிக்கின்றனர். இவர்களை நம்பும் மக்களை ஏமாற்றுவது மட்டுமல்லாது பேரினவாத இனவாதிகளை உசுப்பேத்தி தமிழ்மக்கள் மீது வன்முறையைதூண்ட ஒத்தாசை புரிகின்றனர்.

மிக உண்மையாக சிறுபாண்மை மக்களின் உரிமைக்காக போராடும் கட்சிகள் பெரும்பாண்மை தேசிய இனங்களுடன் முதலில் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்த முனைய வேண்டும். கொழும்பு வந்து பாராளுமன்றத்தில் தூள்பறக்க பேசிவிட்டு மீண்டும் தமிழ் பிரதேசத்தில் சென்று அடைகாக்காமல்.பரந்துபட்ட இலங்கையில் அனைத்து தரப்பினருடன் வேலை செய்யும் வேலை முறமைகளை உருவாக்கி கொள்ள வேண்டும. இல்லை தனிநாடுதான் உங்கள் தீரவாக இருந்தால் பாராளுமனற‍ரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டு அதற்கான போராட்த்தில் குதிக்க வேண்டும்.

நிதிகளை வழங்கி உங்களை தலையாட்டி பொம்மைகளாக்கி தாம் குளிர்காய எண்ணும் சக்திகளை இனங்கண்டு நிராகரிக்க கற்றுகொள்ளல் வேண்டும்.

இன்றைய புதிய சூழலையாவது திட்டமிட்டு தமிழ் மககளின் அபிலாசைகளை வென்றெடுக்கும் திசை நோக்கிநகர்துங்கள். வழமைபொல் தனியே எதிர்கட்சி அரசியலில் மட்டும் நின்றுவிடாது இலங்கை மக்களின் சேகவர்களாக மாறுங்கள்.


Montag, 2. September 2024

எனது இலங்கை பயணமும் நடைபெற போகும் ஜனாதிபதி தேர்தல் பற்றிய எனது பார்வையும், புலத்து அதிதீவிர தேசிய வாதமும் யதார்ததமும் - க.சுதாகரன் / 02.09.2024

 

இலங்கை மக்கள் இம்முறை தேர்தலில் மும்முனையாக போட்டி இடும் மூன்று வேட்பாளர்களை சந்திக்க உள்ளனர் என்பது உறுதியாகிவிட்டது. ஆனாலும் இலங்கையில் காலம் கலமாக தேர்தல் காலங்களில் நடைபெறும் வன்முறைகளும் சூழ்சிகளும் அனைத்தையும் தலைகீளாக மாற்றும் என்பதையும் எதிர்பார்த்தே ஆகவேண்டும். சிங்கள தமிழ் முஸ்லீம் மக்களிடம் அலசிய பொழுதும் மூன்று வேறுபட்ட வேட்பாளர்ளின் பெயர்களையே முன் மொழிந்திருந்தனர். கிழக்கில் தமிழ் பல்கலைக்கழக தரப்பினைரும் அரச உத்தியோக பிரிவினரும் NPP யின் அனுரவிற்கு குமார திசாநாயக்க ஆதரவாகவே கருத்துளை தெரவித்திருந்தனர். இந்த விடயம் ஆச்சரியத்தினை தந்திருந்து. ஆனால் யாழ்பாணத்தில் அனைத்து வேட்பாளர்கள் மீதும் ஓர் சந்தேகத்தின் கூடிய பார்வையே காணப்பட்டது. கிழக்கில் உள்ள ஒரு சில புத்திஐீவிகளுடன் பேசிய பொழுது. அனுர தரப்புடன் பல துறைசார் புத்திஐீவிகளை ஒண்றினைத்து உள்ளதாகவும் திறமையான ஊழல் அற்ற தலமையை கொடுக்கமுடியும் என வாதிட்டனர்.

ஆனால் வடக்கில் ரணில் அணியும் சஜித் அணியுமே கண்ணுக்குள் புலப்பட்டன.

முன்னால் போரளிகளும் இலங்கையின் உளவுத்துறையும்

மகிந்த தரப்பு யுத்ததினை கொடூரங்கொண்டு நசுக்கிய பின்னர். தன்னால் கைது செய்யப்ட்ட பல போராளிகளிற்கு புனர் வாழ்வளிப்பதாக கூறி அனைத்து போராளிகளையும் மூளை சலைவை செய்துள்ளனர். அது மட்டுமல்லது அவர்களது வறுமைக்கு ஊதியமளிக்கும் போர்வையில் அவர்களை தமது உளவுறையில் அரச உத்திகோத்தர்களாக ஆக்கி உள்ளனர். Diaspora தமிழர்கள் விடுதலைப்புலிகளின் உளவுதிறனை எப்பவும் பெருமையாக பேசுவதை நான் கண்டுள்ளேன். இம்முறை எனது பயணத்தின் இலங்கை அரசின் நரித்தனமான உளவை எண்ணி வியந்தேன். முன்னாள் போராளிகள் என்ற அமைப்பினை தோற்றுவித்து தமிழ் கட்சிகளிடையே பல பிளவுகளை ஏற்படுத்தி இருக்கின்றனர். எவ்வாறு புலிகள் காலத்தில் புலிகளால் விரட்டபட்ட அமைப்புக்கள் அரசிடம் மண்டியிட்டு தம்மையும் தமது உறுப்பிணர்களை எவ்வாறு காப்பாற்றினார்களோ, அதைவகையில் தான் இன்றைய முன்னாள் போராளிகளின் நிலையும். முன்னால் போராளிகள் மகிந்தவின் கையாளான ரணிலை ஆதரிப்பது என்பதனை வெளிப்படரயாகவே கூறி உள்ளனர்.

நாடு திவாலான நேரம்

ரணில் மகிந்த கொள்ளைக்கூட்டத்தினை காப்பாற்ற வந்த துதூவன் என்பதை பலர் மறந்து. நாடு வங்குரோத்தில் இருந்த போது நாட்டைகாப்பாற்றிய தேவ தூதுவனாக பார்ப்பதே கவலைதருகின்றது. நாட்டை திவாலாக்கிய கும்பல் முற்றும் அதிகாரம் இழந்து இருக்கவில்லை. அவர்களின் சாகாக்களே அன்றும் இன்றும் பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவ படுத்தகின்றனர். திவாலகி போன நாட்டின் ஆட்சியை ஏற்க மறுத்தவர்கள் கெகள்ளைக் கூட்டத்தினை காப்பாற்றுவதே மறைமுக நிபந்தனையாக இருந்தது. இதனாலே இன்றைய மற்றைய ஜனாதிபதி வேட்பாளர்கள் (சஜித், அனுர) ஏற்றுகாள்ளவில்லை என்றகருத்தும் வலுமைபெறுகின்றது.

 

தமிழர் தரப்பு

தமிழர் தரப்பு பல அரசியல் இராணுவ தோல்விகளை சந்தித்த போதும் இன்னமும் எவற்றையும் கற்று கொள்ளவில்லை என்பதை தமிழர் தரப்பின் நகர்வுகள் நிரூப்பிகின்றது. எனது கணிப்பின்படி தேசியம் என்ற மந்திரமும் புலம்பெயர்ந்தவர்பளின் தலையீடுகளும் மற்றும் இலங்கை அரசின் உளவுமே தமிழ் தரப்புக்களை கோமாளிகளாக முடிவுகளை எடுக்க தள்ளுகின்றது. இலங்கை அரசின் உளவின் காய் நகர்த்தலாகவே தமிழ் பொது வேட்பாளர் செயற்பாட்டை பார்க்க முடிகின்றது. இதற்கு ஆதாரமாக இதை இச்செற்பாட்டை மும்மொழிந்த தமிழ் தலமையின் பின்புலம் சாட்சியாக உள்ளது. தமிழ்மக்களின் வாக்குகளை சிதறடித்து மகிந்த தரப்பு தன்னை பாதுகாத்து கொள்ள ரணிலை வெற்றிகொள்ள முனைகின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் நாமல் ராஜபக்ச  தனது பேட்டியில் தமிழ் பொது வேட்பாளர் முனைப்பு வரவேற்கதக்து என்று குறிப்பிட்டுள்ளார். முன்பே குறிப்பிட்டது உளவின் பிடியில் சிக்கி உள்ள முன்னால் போராளிகள் ரணிலிற்கும் தமிழ் பொது வேட்பாளர்களிற்கு ஆதரவளிக்க உள்ளனர்.

அதிதீவிர தமிழ்தேசியம் பேசுபவர்கள் மக்களின் உணர்வுகளை உசுப்பேத்தி வாக்குகளாக்க நினைப்பவர்கள் தமிழ்மக்களிற்கான அரசியல் தீர்வுபற்றி எவ்வித அக்கறையும் அற்று தங்கள் வாக்கு வங்கியை காப்பாற்றி அடுத்ததேர்தலில் எத்தனை கதிரைகளை பெறலாம் என்பது அவர்களின் கனவு. இந்த தரப்பு பகிஸ்கரிப்பு அல்லது பொது வேட்பாளர் என்ற தெரிவின் முலம் பேரினவாத வலைக்குள் சிக்கி உள்ளனர்.

 

புலத்து விசிறி அரசியல்

புலிகளின்காலத்தில் வெற்றித்தாக்குதலிற்கும் தனிநாட்டு கனவிற்கும் விசிறியாக இருந்த புலம்பெயர் தரப்பு. இன்றும் தமிழ் அரசியல்தலமைகளிற்கு நிதியை வழங்கி அவர்களை தமது தலையாட்டு பொம்மைகளாக செயற்படுத்தின்றனர். இந்த அரசியல்வாதிகளும் தேர்தல் காலத்தில் பிரச்சாரத்திற்கான நிதியை கருத்தில் கொண்டு தலையாட்ட சம்மதித்துள்ளனர். தாம் தோற்றுப்போன பந்தையத்தினை மீண்டும் இந்த தலையாட்டி பொம்மைகளை கொண்டு தாம் பார்வையாளராக இருந்து உண்டியல்களுடன் வலம் வரலாம் என கனவு காண்கின்றது.

எனக்கு ஓரு பிரச்சினையை தீர்க்க ஒரு மணித்தியாலயங்கள் கிடைத்தால் 55 நிமிடங்கள் பிரச்சினை என்ன என்பதை ஆராய எடுத்து கொள்வேன் தீர்விற்கு 5 நிமிடங்கள் தீர்வைபற்றி யேசிப்பதற்கு எடுத்துகொள்வேன் என  ஐன் ஸ்ரைன் கூறி உள்ளார். பிரச்சினையை புரிந்து கொள்வதே கடினமானது,

ஆனால் எமது தமிழ் அரசியல் வாதிகள் தமது இருப்புக்ளிற்கும் உணர்வுகளை ஊட்டி ஆதரவு தளத்தினை மட்டுமே சிந்திப்பவர்கள். இவர்கள் எவ்வாறு தமிழ் மக்களின் தீர்வை பற்றி சிந்திப்பார்கள்?

 

பொது வெட்பாளர்

ஜனாதிபதி தேர்தலில் ஓர் சிறுபாண்மை இனத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி தனது வேட்பாளரை நிறுத்தி எதனை சாதிக்க விரும்புகின்றனர்? பொது வேட்பாளரை தீர்மானித்ததரப்பு கூறும் விவாதங்கள்.

1. நாம் ஒருகுறியீடாக செயற்ட முனைகின்றோம்

2. சிறுபாண்மை தமிழரிகளின் ஒற்றைமயை காண்பித்தல்

3. தமிழர்பிரச்சினையை சர்வதேசமயப்படுத்தல்

4.மற்றைய வேட்பாளர்களிற்கு தமிழர் வாக்கு செல்லாது தடுப்பது

 எவ்வித யாதர்த்தமும் அற்ற விவாதங்களை முன் வைக்கின்றனர். இலங்கையை முழுதாக பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய கட்சியில் சிறுபாண்மை இனத்தை சார்ந்தவர் போட்டி போடுவது என்பது வேறு. சர்வதேசம் அறியாத இன முரண்பாட்டை தமிழ் பொது வெட்பாளர் மூலம் காட்ட முனைவதாக கூறுவது சுத்த முட்டாள்தனம். மேலும் ஒற்றுமையை காட்டுவதற்காக பொது வேட்பாளரினால் கிடைக்கும் சில ஆயிரம் வாக்குகளை வைத்து எதனை நிருபிக்க போகின்றனர் ?  இலங்கை பேரினவாதிகளின் கணிப்பின்படி தமிழ்மக்களது வாக்குகளை தீர்மாணகரமான அற்ற வாக்குகளாக மாற்றுவது மட்டுமே நடைபெற போகின்றது.

புலத்து தமிழ் அரசியலும் Monopol ஊடகமும்

இலங்கையில் ஒருவருக்கு வயிற்று வலி என்றால் புலத்திலிருந்து வைத்தியம் பார்ப்பதாக படங்காட்டும் பன்முகைத்தன்மையற்ற ஒருபக்கசர்பான புலத்து ஊடகங்கள். அரசியல் ஆய்வுகளும் கணிப்புகளும் எந்த தரப்பின் அட்டவணையின் அனுகூலத்திற்கான செயற்படுகின்றனர் என்பது ஓர் பெருத்த சந்தேகமே. இந்த Monopol ஓர் பன்முகத்தன்மைுடன் பயணிக்க விரும்பும் சமூகத்தினை முற்றிலும் தடைசெய்யும்.

மற்றும் புலத்து அதிதீவிர தேசிய விரும்பிகள் இலங்கையில் சிறப்பு தேர்ச்சி பெற்றதும் தனித்தன்மை உள்ள தலமைகளை விரும்புவதில்லை. அவ்வகை தலமைகளை இவர்களால் தமது கைபொம்மைகளாக வைத்து கொள்ள இயலாது. துரோகி அல்லது தேசியவாதி என  தமது ஆதரவு அல்லது எதிரி என தமேக்கே உரிய வடிதட்டி  முலம் வடி தட்டி வைத்துள்ளனர் .ஆளுமையற்ற தனிதன்மையற்றவர்கள் மிக இலகுவில் புலத்தில் உள்ள நிதிகளிற்கு அடிமையகி தலையாட்டி பொம்மைகளாக மாறி உள்ளனர்.

மூன்று வேட்பாளர்கள்

ஐனாதிபதி தேர்தலில் போட்டி இடும் ரணிலை ஆதரிப்பதன் மூலம் மகிந்த குடும்பத்தினை  குற்றசாட்டுக்களில் இருந்து காப்பாற்றுவதற்கும் ஊழல்வாதிகளை காப்பாற்றுவதற்குமே பயனாக அமையும் .சஜித் பிரமேதாசாவின் கட்சியிலும் இனவாதத்தினையும் சிறுபாண்மை மக்களின் அரசியல் உரிமைகளை மறுத்தவர்களே பலர் அங்கம் வகிக்கின்றனர். அனுரவின் NPP இயிலும் பல இனவாதிகள் இடதுசாரி சிவப்பு அங்கிகளை அணிந்த வண்ணமே உள்ளனர். இந்த கட்சியில் ஊழலிற்கு எதிரான குரல்கள் வலுப்பெற்றுள்ளது. புதிய கரங்களாக இருப்பதால் ஊழல் கறை படியவில்லை. இனவாதிகளின் ஆதிக்கம் உள்ளதாலும் தேர்தல் வெற்றியை கருத்தில் கொள்வதாலும் வெளிப்படையாக சிறுபாண்மை மக்களிற்கான அரசியல் தீர்வுதிட்டம் முன் வைக்வில்லை. இவர்கள்பு திய அரசியல் அமைப்பை பற்றி பேசுகின்றனர். இது எந்தளவிற்கு சாத்தியம் என்பது கேள்விக்குறி. ரணில் தரப்பும் சஜித்தரப்பும் மட்டுமே இலகுவில் அமுல் படுத்த கூடிய 13 வது சட்ட மூலத்தினை அமுல்படுத்தலாம் என கூறி வருகின்றனர் . இங்கிருந்து ஆரம்பிப்பதே சாத்தியமானது.

தமிழ் அரசுகட்சி

தமிழ் அரசுகட்சி இருதலைக்கொள்ளி எறும்புபோல் அதிதீவிர தேசியம் பேசும் அரசியல்வாதிகளையும் யதார்த்த அரசியல் பேசுபவர்களையும் தன்னகத்தில் வைத்துள்ளனர். தேர்தலின் போது உணர்ச்சி அரசியலிற்கு வாக்களர்களின் வாக்கு வங்கி தேவை என்று கருதி அவர்களிற்கும் கட்சியின் ஐனநாயகம் போன்ற மாயையில் மூடி மறைத்து வைத்துள்ளனர். இது தமிழ் அரசுகட்சி கட்சியின் மறைவிற்கு  இந்த நிலைப்பாடே ஓர் முக்கியகாரணியாக அமைய போகின்றது.

எனது அவதாணிப்பின்படி மக்கள் தாம் சார்ந்த கட்சிகளின் முன்மொழிவினை கருத்தில் கொள்ளாமல் தாமே தன்னிச்சையாக வேட்பாளர்களை தெரிவு செய்வார்கள். வெற்றிபெறும் வேட்பாளரிற்கு வாக்களிப்பதன் மூலம் சிறுபாண்மை தேசிய இனங்கள் தமது உரிமை போராட்டங்களை தொடர்வதற்கு ஆரம்ப புள்ளியாக அமைய வாய்ப்புள்ளது. முஸ்லீம் மலையக வடக்கு கிழக்கு மக்கள் வாக்குகள் ஒரு ஜனாதிபதி வேட்பாளரின் பக்கம் ஒருங்கிணையும் போது அந்த வேட்பாளரிற்கான வெற்றிவாய்ப்பு அதிகமாகும்.

சிறுபாண்மை மக்களின் வாக்குகள் சிதையும் போது புதிதாக பெரும்பாண்மையினரின் ஆதரவை பெற்று வரும் கட்சிக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகமாகும். இந்த காய்கள் எப்பவும் எதிர்பாராத திசைநோக்கி நகர இறுதி நேரம் வரைக்கும் வாய்ப்புக்கள் உள்ளது.

ஜனாதிபதி தேர்தல் முடிந்த பின்பு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பெரும்பாண்மையாக புதிய தரப்பினரே பல கதிரைகளை கைப்பற்றவர் என எதிர்வு கூற முடிகின்றது.

Dienstag, 12. März 2024

இமாலய பிரகடனமும் அதி தீவிர தமிழ் தேசியவாத மீழ் தோற்றமும்.

 12.03.2024 /கணபதிப்பிள்ளை சுதாகரன்

மாலய பிரகடத்தினை இலங்கைத் தமிழ்க்களின் தீர்வு பொதி என புலம்பெயர்  அதி தீவிர தமிழ் தேசியவாதிகள் நம்பியதன் விளைவினாகவே துவாராகவின் தோற்றமும் இலங்கைத் தமிரசுக்கட்சியின்  தலைவர் தெரிவியினையும் பார்க்க வேண்டி உள்ளது.

இமாலய பிரகடத்தினை புலிகளின் ஆதரவு தரப்பாக  செயற்பட்ட Global Tamil Forum மினாலும் கனடிய தமிழ் காங்கிரசினாலேயே கொண்டுவரப்பட்டது.

புலத்தில் வாழும் பழைய புலிகள் ஆதரவாளர்களும் அமைப்புக்களும் இன்றும் ஈழவிடுதலைக் கனவிலேயே  வாழும் சமூகமாகவே உள்ளது. தமிழ் தேசியம் என்பதனை ஓர் புனிதக்கோட்பாடகவும் தாம் நம்பும் ஈழமே சாத்தியம் என நினைப்பவர்ககளுமே பெரும்பாண்மையாக உள்ளனர். இக்கருத்துக்களையும் விமர்சிப்பவர்களும் சாத்தியபாடுகள் பற்றி ஆய்வு செய்பவர்களும் துரோகியாக கணிக்கும் பண்பே மேலோங்கி உள்ளது.

இலங்கை வாழ் தமிழ்மக்களிற்கான ஒரு அதிகார பரவாலக்கத்தின் அவசியத்தினையும் அரசியல் உரிமைகளை பற்றி சிந்திக்காது தனியே தமிழ் ஈழம் தான் சர்வ விமோர்சனமாக நம்பி வாழ்ந்துள்ள சமூகமாகவே பல புலம்பெயர் மக்கள் உள்ளனர். மாற்றுத் தீர்வுகளை முன்வைப்பவர்களை துரோகிகளாக இனங்கண்டு ஒதுக்கியதன் விளைவாக ஓர் ஆரோக்கியமான அரசியல் விவாதங்கள் நடைபெறவில்லை. மாறாக விடுதலை புலிகினால்  முன்வைக்கபட்ட தமிழ் ஈழ கோரிக்கையை நியாயப்படுத்தும் கருத்து உருவாக்கத்தினை மட்டுமே ஓருதலைபட்சமாக ஊடகங்கள் புலத்து மக்களிடம் விதைத்துள்ளது. இந்த ஊடகங்கள் விடுதலைப்புலிகள் போராடிய காலத்தில் அவர்களின் நிதி ஒத்தாசையுடன் முழங்கின. 

புலிகளின் தமிழ் தேசியம் புலத்தில் ஒரு பிராண்டாக (Trade Mark or Brand) மாறின. தமிழ் தேசியமும் தமிழ் ஈழத்தினை ஆதரித்தாலே புலத்து சமூகத்தில் ஏற்றுகொள்பவர்களாக மதிக்கபட்டனர். இதனால் புலத்தில் இருந்த பெரும்பாண்மையான வியாபாரிகள் விடுதலை புலிகளிற்கு நிதியை வாரி இறைத்தனர். இதன் எச்சசொச்ச பண்பு இன்றும் தொடர்கின்றது. மாற்று கருத்துக்களை முன்வைத்த அணியினர் சிறு பத்திரிகைகள் ஆகவும் முகநூல் இணைய செய்திகளாக குறுகிப்போயின. சிறு பத்திரிகைகளின் வாசகர் சுற்றும் கேள்வியும் குறைந்து சென்றது. இது மட்டுமல்லாது புலிகள் கோயில்கள், கலைநிகழ்வுகள், தமிழ் பாடசாலைகள், தாம்சார்ந்த இலக்கியங்களையும், தன்னகப்படுத்தியிருந்தது. அதன் விளைவாகவே ஒற்றைப்பரிணாமமான கருத்துக்களை கொண்ட சமூகமாக முடக்கபட்டுள்ளது.

இதனால் இந்த சமூகத்தினை ஆட்கொண்டிருக்கும் கருத்தினால் இன்று ஆயுத போராட்டமற்ற நிலையிலும் தாம் நம்பிய தீர்வே ஓரே வழிமுறை என நம்புகின்றது. இந்த கருத்திற்கு மாற்றீடாக தமது ஆதரவு சக்திகளே முன்வைக்கும் போது தம்முடன் பயணித்தவர்களிற்கே தூரோகிப்பட்டம் கொடுக்க தயாராகின்றது.

இலங்கையை ஆட்சி செய்யும் முக்கிய மூன்று கட்டமைப்புக்கள் உள்ளன. 1. பெளத்தபீடாதிபதிகள்

2. மக்களால் தெரிவு செய்யபட்ட பாராளுமன்றம்.

3. இராணுவம்


தமிழ் மக்களிற்கான தீர்வுப்பொதிகள் வரும்பொது முதலில் முட்டுக்கட்டையாக இருப்பவர்கள் பொளத்த பீடாதிபதிகள். இதுவரைகாலமும் தமிழரிற்கான தீர்வு திட்டங்களில் இந்திய நோர்வே அரசுகள் தனியே இலங்கை அரசுடனே பேச்சுவார்த்தை நடாத்தி இருந்தன.

பல தேசிய இனங்கள் வாழும் நாடுகளில் முரண்பாடுகளை முடிவிற்கு கொண்டுவருவதற்கு இனங்களிற்கிடையான புரிந்துணர்வே அடிப்பையாக உள்ளது. பேரினவாதத்தின் உயிர்நாடியாக இருந்த பொளத்த பீடங்களை அழைத்து முதலில் சிறுபாண்மை மக்களின் உரிமைக்கான நியாயப்பாட்டினை முன்வைத்து சிங்களமக்கள் மத்தியில் கலந்துரையாடலினை  மேற்கொள்வது ஓர் மிக முக்கிய நகர்வாகும். இதனடிப்படையில் இமாலய திட்டத்தினை முன்மொழிந்திருந்தால் நான் இதனை ஓர் சரியான நகர்வாகவே பார்க்கின்றேன். ஆனால் தமிழ் ஈழமே நிரந்தர தீர்வு எனும் சக்திகள் இம் இமாலய முனைப்பினை தமிழ்மக்களிற்கு செய்யும் தூரோகமாகவும் பேரினவாதத்திற்கு அடிபடியும் செயலாககருதியது.

2009 இற்கு பின்னர் புலத்தில் பல பிரிவுகளாக உடைந்து கிடந்த புலிகள் ஆதரவு அமைப்புக்கள். இமாலய திட்டங்களிற்கும் முன்னெடுப்பிற்கு முட்டுகட்டையாக ஒண்று திரண்டனர். இம்முன்னெடுப்பினை ஓர் தீர்வுதிட்டம் என திரிபுபடுத்து தமிழ்மக்களை ஓர் தேசிய இனமாக வரையறுக்கவில்லை என போர் கொடி தூக்கினர். இம் முன்னெடுப்பிற்கு தமிழ் அரசுகட்சியின் (Illankai Tamil Arasu Kachchi, Tamil Federal Party) பேச்சாளரான சுமந்திரனும் ஆதரவாக செயற்பட்டிருந்தார். இவர் மீது துரோகிப்பட்டம் குடுப்பதற்கான முழு வேலைத்திட்டமும் புலத்தில் இருந்து வழங்கபட்ட நிதி முலமாக நன்கு திட்டமிடப்பட்டு நடாத்தபட்டிருந்தது.

இக்காலப்பகுதியிலேயே தமிழ் அரசுக் கட்சிக்கான தலைவர் தேர்தல் நடைபெற்றிருந்தது. இக் கடசிக்குள் நடைபெற்ற தேர்தலில் பங்கு பற்றிய வேட்பாளர்களை சிறீதரனை தமிழ் தேசியத்திற்கு ஆதரவானவராகவும் சுமந்திரனை தமிழ்தேசியத்திற்கு எதிரானவர்களாக சித்தரித்து இருந்தனர். ஒருகட்சியின் உட்கட்சி தேர்தலிற்கு புலத்தின் நிதியும் மேடியாவும் இணைந்து புலத்தில் உள்ள தமிழ் தேசியவாதிகளிற்கு ஆமா போடும் நபரான சிறீதரனை அக்கட்சிக்கு தலைவராக்கியது. 

அது மட்டுமல்லாது  இமாலய திட்டத்திற்கு கனேடிய தமிழ்காங்கிரசும் ஆதரவு தெரிவித்திருந்தது. இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக கனடாவில் உள்ள அதி தீவிர தேசியம் பேசும் ஆதரவாளார்களால் அக்கட்சி காரியாளயம் தாக்கபட்டது.

இன்னுமொரு பிரிவினராகிய விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிராபகரனும் அவரது மனைவியும் மகள் துவாராகவும் உயிருடன் இருப்பதாக கூறும் கூட்டமும் தமது பங்கிற்கு போலி துவாராகவை தமிழ் மேடியாக்களிறகு அழைத்து வந்தது. மக்களை நம்பவைக்கும் முயறற்சியில் ஈடுபட்டனர். உயிருடன் இருக்கின்றார்கள் என்ற வதந்தியின் போது பல தனிப்பட்டவர்கள் வியாபாரிகளிடமிருந்து பல தொகை பணங்களை சேகரித்து இருந்தனர். இன்னமும் இந்த நிதியை பெருக்குவதற்கும் சிதறி உள்ள பல பழைய புலிகளின் பிரிவுகளையும் ஒன்றணைப்பதற்கும் துவராகவின் வருகை அமையும் என கற்பனை செய்தனர். ஆனால் பல எதிர்மறைவான சம்பவங்களே நடந்தேறின.

இமாலய பிரகடத்தின் மூலம் சிங்கள பேரினவாத கருத்தியல்களை அதற்கு முண்டு கொடுப்பவர்களை வைத்தே, சிங்கள மக்களிடையே சிந்தனை மாற்றத்தினை தேர்தல் காலத்தில் முன்வைத்து ஓர் சிறிய நகர்வாக அமையலாம் என Global Tamil Form எண்ணியது.  Global Tamil Form உடன் ஏற்கனவே அரசியலில் பயணித்தவர்களே எதிராளியானர்கள்.

முதலில் தமிழ் தேசியம் என்றால் என்ன?

இலங்கைவாழ் தமிழர்கனிற்கு எவ்வகையான தீர்வு அவசியமானது? அவ்வகை தீர்வினை அடைவதற்காண வழிமுறை என்ன?

இனங்களிற்கிடையான சமாதனம் இன்றி எந்த தீர்வும் சாத்தியம் இல்லை என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். சிங்கள கட்சிகள் மட்டும் தமது வேட்பாளர்களை தமிழ் சிங்கள பகுதிகளில் முன்னிறுத்துகின்றது.

தமிழ்கட்சிகள் தனியே தமிழ் பகுதிகளுடன் நிற்பது இனங்களிற்கிடையான சமாதனத்தினை உண்டுபண்ணுமா?

சமஷ்டியை தீர்வாக பேசும் கட்சிகள் சமஷ்டி ஆட்சி நடைமுறையில் உள்நாட்டில் உள்ள பல தேசிய இனங்களை ஒன்றிணைக்கும் விதமாக கட்சிகள் எவ்வாறு வடிவமைக்க வேண்டும்?

தற்பொழுது உள்ள சூழலில் தேசிய இனங்கள் தமது சுய நிர்ணய உரிமையை எவ்வாறு பெறுவது சாத்தியம்

போன்ற பல கேள்விகளிற்கும் விடைகள் தேடவேண்டும். கடந்த காலங்களில் பல முன்னெடுப்புக்களிற்கு தனியே பேரினவாதம் மட்டுமே தடையாக அமையவில்லை. தமிழ் மக்களது பிழையான முடிவுகளும் அமைந்துள்ளது என்பதே கசப்பான உண்மை ஆகும். அவ்வகையான பிழையான நகர்வுகள் பேரினவாதம் மீண்டும் சிறுபாண்மை இனங்கள் மீது சந்தேகம் கொள்வதற்கும், வன்முறையை கட்ட அவிழ்பதற்கும், அரசியல் தீர்வுகளை  நடைமுறைப்படுத்துவதில் தடையாகவே  அமைந்துள்ளது.