Sonntag, 5. Juni 2016

சுவிஸ் தமிழர் ஓருங்கிணைப்பு குழுவினரின் (Swiss Tamil Coordinating Committee STCC) அடாவடித்தனமும் தன்;னார்வகுழுக்கள் மீதான உரிமை மறுப்பும்

புலிகளின் பினாமி அமைப்புக்களில் ஒன்றாகச் செயற்பட்டிருந்த உலகத்தமிழர் ஓருங்கிணைப்பு குழு (World Tamil Coordinating Committee WTCC), புலம்பெயர் நாடுகள் பூராவும் தன்னார்வக் குழுக்களாக உருவாகிய -கல்விகலை, கலாச்சாரம் மற்றும் ஆலயம் சார்- சமூக அமைப்புக்கள் அனைத்தையும் தமது கட்டுக்குள் உட்படுத்தியிருந்தமை அனைவரும் அறிந்த பழைய சங்கதிதான்! புலம்பெயர்ந்து வாழ், பெரும்பான்மைத் தமிழர்கள் தமிழ்தேசியத்தின் மீதான பற்றுதலிலும், அதீத நம்பிக்கையிலும் தாமே உருவாக்கிய தமது அமைப்பின் சுயாதீனத்தை இவர்களிடம் தாரைவார்த்திருந்தனர் என்பதும் உண்மையே! அவ்வகையில் இவ்வமைக்களின் மூலமும் மக்களிடம் இருந்து பணத்தைச் சேகரித்துஅனைத்தையும் „தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்திற்கே செல்லும்' என்ற நம்பிக்கையில் அதனையும் சேர்த்து புலிகளுக்கு தாரைவார்த்து வந்தனர்.

ஆனால் இன்று அதே அமைப்பு (உலகத்தமிழர் ஓருங்கிணைப்பு குழு WTCC)  „சுவிஸ் தமிழர் ஓருங்கிணைப்பு குழு (STCC)' என்ற பெயரில் சுவிற்சர்லாந்தில் தோற்றம் பெற்றுள்ளதுடன்;, மீண்டும் பொதுமையாக இயங்கத் துடிக்கும் ஆலயங்கள், மற்றும் கல்வி, கலை கலாச்சார அமைப்புக்களுக்குள் புகுந்து, ஒன்றாக இயங்குவதுபோல் நடித்து அவர்களின் நிம்மதியைக் குலைத்து வருவதுடன், அவ் அமைப்புக்களின் செயற்பாட்டுக்கு அவசியமான நிதியையும் அபகரிக்கும் மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

2009 ம் ஆண்டு போரட்டம் முடக்கப்ட்டு விடுதலைப்புலிகளின் தலைமை அழிக்கப்பட்ட போது தன்னார்வகுழுக்கள் தமது தனித்துவத்தினை நிலைநாட்ட முனைந்துள்ளனர். அத்தகையதொரு நோக்கில்  சொலத்தூண் தமிழர் நலன்புரி சங்கமும்(Tamil Welfare Association Solothurn TWAS) இவர்களிடம் இருந்து பிரிந்து கடந்த ஓராண்டு காலமாக தனித்துவத்துடன் செயற்பட்டும் வந்தது. ஆனால் உருசிகண்ட பூனைகளாகிய சுவிஸ் தமிழர் ஓருங்கமைப்புக் குழு, கடந்த ஏப்பிரலில் நிகழ்ந்த இசைக்குயில் போட்டி நிகழ்ச்சிக்கு உதவும் நோக்கில்  உள்நுழைந்தனர். நிகழ்ச்சி முடிந்ததுதான் தாமதம்! சுவிற்சர்லாந்து சொலத்தூண் மானிலத்தில்; செயற்பட்டு வந்த சொலத்தூண் நலன்புரி சங்கத்தினதும், அதன் செயற்திட்டத்தின் கீழ் இயங்கி வருகின்ற துர்கை அம்மன் கோவிலினதும் நிதியிலும் தமது கைவரிசையை காட்ட ஆரம்பித்துள்ளனர்.  

சோலத்தூண் நலன்புரி சங்கம் (Tamil Welfare Association Solothurn TWAS) இப்பிரதேசத்தில் வாழும் தழிழ் மக்களின் கலை, கலச்சாரம் மற்றும் ஆன்மீக வழிமுறைகளை கருத்தில் கொண்டு தோற்றுவிக்கப்பட்ட ஒன்று. அக்காலகட்டத்தில் தமிழ் தேசியத்தினை பெரும்பான்மை தமிழ்மக்கள் ஆதரத்தது மட்டுமல்லாது விடுதலைப்புலிகளுக்கு பெரும் நிதிப்பங்களிப்பினையும் செய்துவந்துள்ளனர். அவ்வேளையில் இச்சங்கத்தினால் பெரும் நிதி திரட்டக்கூடிய வேலைத்திட்டங்கள் பல முன்வைக்கப்பட்டு அவை வெற்றிகரமாக செயலாற்றிக்கொண்டுமிருந்தன. இவற்றில் சுவிற்சர்லாந்தில் உள்ள அனைத்து மானிலங்களில் வாழும் தமிழ் இளையோர்களுக்கிடையிலான நடன, இசை போட்டிகள் (இசைக்குயில், நாட்டியமயில்) முக்கிய இடத்தைப் பெற்றன.





ஓருங்கிணைப்பு குழுவினால்  (STCC)' முன்னெடுக்கப்பட்ட மக்கள் கடை போன்ற வேலத்திட்டங்கள் நட்டத்தைத் தழுவியபோது, அதனை ஈடுசெய்வதற்கும் சொலத்தூண் நலன்புரி சங்கத்தின் நிதி பாரிய அளவில் உதவியது. ஆரம்பத்திலிருந்தே இத்தகைய நடவடிக்கைகளில் திருப்பியற்றிருந்த பல நிhவாக உறுப்பினர்கள், „பரவாயில்லை, பணம் தேசியவிடுதலைக்கே பயன்படுத்தப்படுகின்றது' என நினைத்து அமைதியடைந்தனர். புலம்பெயர் புலிகளினால் ஓவ்வொரு தனிநபர்களிடம் இருந்து ஓரு இலட்சம் சுவிஸ்பிராங்குகள் வங்கிக் கடனூடாக போர் நிதியாக வசூலிக்கப்பட்டது. இது போர் முடிவுக்கு வரும் தறுவாயிலும் தொடர்ந்தது! 2009 ஆம் ஆண்டு போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்ததையடுத்து சொலத்தூண் நலன்புரிசங்கம் நாட்டியமயில், இசைக்குயில் நிகழ்ச்சிகளை நடாத்தி போரில் அங்கவீனமுற்ற போராளிகளிற்கும் போரினால் பாதிக்கபட்ட அல்லது வாழ்வாதரங்களை இழந்த மக்களுக்கும் வழங்குவதாக தீhமானித்திருந்தனர்.

அதேவேளை கடனெடுத்துக் கொடுத்த அப்பாவிகள் பலர் பணத்தினை வங்கிகளுக்கு திருப்பிச் செலுத்தமுடியாத முடியாத நிலையில் திண்டாடினர். பாவம்;, இன்றும் திண்டாடுகின்றனர். இச்சந்தர்பத்தில் ஓருங்கிணைப்பு குழுவினர், நலன்புரிச் சங்கத்திடம் அப்போதிருந்த பணத்தை, கடன் எடுத்துக் கொடுத்தவர்கள் அனைவருக்கும் பகிர்ந்தளிப்பதற்குப் பதிலாக தமது சகபாடிகளுக்கும், தமக்கு நெருங்கியவர்களுக்கும் மட்டும் கொடுக்கும் படி நிர்பந்தித்தனர்.
இதன் விளைவாக காலம்காலமாக, சிறுகச் சிறுக திரட்சிபெற்ற சங்க நிர்வாகிகளுக்கிடையிலான முரண்பாடுகள் ஒரேதடவையில் வெளிப்பட்டன. ஒரு சிறு பகுதினர் நலன்புரிச் சங்கத்தினை, உலகத்தமிழர் ஒருங்கிணைப்புப்புக் குழுவுக்கு ஆதரவாக நகர்த்துவதற்கும் முனைப்பட்டனர்.

இந் நிலைமையில், (பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட) நலன்புரிச் சங்கம் அதன் முதல் நடவடிக்கையாக 2015 செப்டம்பரில் பொது கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. இது தமக்கு பாதகமாக அமையும் என கருதிய ஓருங்கிணைப்பு குழு இப்பொது கூட்டத்தினை குழப்பும் முகமாக வேறொரு கூட்டத்தை ஒழுங்குசெய்து, பொதுக் கூட்டத்திற்கு வந்தவர்கள் சிலரை தனது கூட்டத்திற்கு வருமாறு அழைத்தது. ஓருங்கிணைப்புக் குழுனால் நடாத்தபட்ட அக் கூட்டத்தில் சங்கத்துககு அப்பாற்பட்ட, சொலத்தூண் மாநிலத்தைச் சாராததவர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர். இவர்களால் போலியாக உருவாக்கபட்ட நலன்புரிசங்கத்தினதும் கிறென்கன் துர்கை அம்மன் கோவிலது போலி பதிவின் ஆதாரங்கள். 













இதேவேளை பெரும்பான்மை செயற்குழு உறுப்பினர்களை கொண்ட உண்மையான நலன்புரிச் சங்கம் தமது நிர்வாகத்தினை இளையோரிடம் ஓப்படைப்பதாக முடிவெடுத்தது. பெரும்பான்மை பலத்தினை கொண்ட தம்மை சட்டரீதியில் பதிந்து, இசைக்குயில் போட்டி நிகழ்ச்சியை நடாத்துவதற்கும் தயாரானது.

நலன்புரிச் சங்கத்திற்கு எதிராகவும் அடாத்தாகவும் ஓருங்கிணைப்புக் குழுவின் ஆதரவுடன் கூடிய பிரிவும் சட்டத்திற்கு விரோதமான முறையில் தாமும் புதிய நிர்வாகத்தினை தெரிவு செய்து அதே பெயரில் தன்னையும் பதிவு செய்தது. இசைக்குயில் போட்டி நிகழ்ச்சியை தாமும் நடாத்தபோவதாக அறிவித்திருந்தது. 
ஆனால் போட்டியில் கலந்து கொள்ளும் பிள்ளைகளின் பெரும்பான்மையினரான பெற்றோர்களும் ஆசிரியர்களும பெரும்பான்மை நிர்வாக உறுப்பினர்களை கொண்ட நலன்புரிச்சங்க நிர்வாகத்துக்கே ஆதரவாக இருந்தனர். ஓருங்கிணைப்பு குழு தம்மால் இசைக்குயில் நடத்துவது சாத்தியமற்றது என கருதியபோது பெரும்பான்மை பலத்தினை கொண்ட சொலத்தூண் நலன் புரிச்சங்கத்தின் நிர்வாக சபையுடன் ஓர் சமரசத்திற்கு வந்து தாமும் இணைந்து இசைக்குயில் நிகழ்ச்சியை நடாத்துவதாக உடன்பாட்டிற்கு வந்தனர். இவற்றை உண்மை என நம்பி பெரும்பான்மை பலத்தினை கொண்ட நலன்புரி சங்கம் ஏமாந்து போனது.
நிகழ்ச்சி முடிந்தவுடன் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஆதரவுடன் மீண்டும் நலன்புரி சங்கத்தையும் கோவிலையும் கையகப்படுத்தும் நடவடிக்கைள் திரைமறைவில் மேற்கொள்ளப்பட்டன. இச்சூழ்சியின் உட்சக் கட்டமாக கோயில் நிர்வாகத்துக்கு சொந்தமான பணம் இருபது ஆயிரம் பிராங் -சந்தாபணம்- சூறையாடப்பட்டதுடன், நலன்புரிசங்கத்தின் வங்கிக்கணக்கும் முடக்கபட்டுள்ளது. 

இந் நடவடிக்ககை ஓர் பக்கா கிறிமினல் நடவடிக்ககை ஆகும். ஓருங்கிணைப்பு குழு விடுதலையை விட பணத்தினையே நேசித்தனர் என்பதற்கு இந்த நடவடிக்ககை ஓர் சிறந்த சாட்சியமாகிறது! சுவிஸ் தமிழர் ஓருங்கிணைப்பு (Tamil Welfare Association Solothurn TWAS)  அமைப்பின் கீழ் தனியார் பாதுகாப்பு படை (Verein Tamil Guard Swiss) ஒன்று இயங்கிவருகின்றது. இப்பதிவில் தாம் அரசியல்கட்சி மற்றும் மதசார்பற்றவர்கள் என குறிப்பிட்டுள்ளது உலகை ஏமாற்றும் நடவடிக்கை.
சுவிஸ் தமிழர் ஓருங்கிணைப்பு குழு வின் செயற்பாட்டுடனான செயற்பாடுகள் இலங்கையில் தடைசெய்யபட்டுள்ளது.ஆதலால் இவ்வமைப்பிற்கு நிதி சேர்த்தமையினாலும் ஊர்வங்களில் பங்குபற்றியதாலும் இரண்டாவது அகதி தஞ்சம் கோரியுள்ள சம்பவங்களும் நடந்தேறியுள்ளன. 


























இந் நிலைமைகளில், பெரும்பான்மை பலத்தினை கொண்ட நலன்புரிசங்க உறுப்பினர்களின் கைகளை பலப்படுத்துங்கள்! தமிழ்த் தேசியத்தினை வாய்கிழிய கத்தி, மக்களின் சொத்துகளையும் சுயாதீனத்தினையும் முடக்குவதற்கு முனையும் சக்திகளை மக்கள் இனங்கண்டு, உடனடியாக இவர்களின் அடவாடிதனங்களுக்கு முற்றுபுள்ளி வைப்பதற்கு முன்வரவேண்டும்!!!
க.சுதாகரன் 5.06.2016