Samstag, 29. Oktober 2016

சுவிற்சர்லாந்தில் வாழும் தமிழர்களினால் மீண்டும் தொடரப்படும் வன்முறைகலாச்சாரம்

இவ்வாரம் சொலத்தூண் புகையிரத நிலையத்தில் நடைபெற்ற துப்hhக்கி சூட்டு சம்பவம் பல தமிழர்களிற்கு அதிர்ச்சி அளித்துள்ளது. பல ஆண்டுகளாக வாழும் தமிழர்கள் இந்நாட்டிலுள்ள ஐனநாயக கலாச்சரத்தினை கற்று கொள்ளாது அல்லது இணைவாக்கமடையாது தமக்கென ஓர் வட்டத்தினை உருவாக்கி வாழ்வதன் விளைவாகவே இச்சம்பவத்தினை பார்க்க முடிகின்றது.

இது ஓர் வியாபர போட்டியின் விளைவாக நடைபெற்ற வன்முறை சம்பவமாகவே அவதானிக்க முடிகின்றது. கடந்த சில காலங்களில் சுவிற்சர்லாந்தில் ஓரு குழு தாமே எல்லாவிடயங்களையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திரிக்கவேண்டும் அல்லது சகல நிதிகளும் தமக்கே வந்து சேரவேணும் என மீறாப்படன் செயற்பட்டு வருகின்றனர். இக்குழுவினர் தன்னிச்சையாக செயற்படும் புகைப்பட விடீயோ தொழில் வியாபாரிகளை முடக்க வேண்;டுமென கங்கணம் கட்டி செயற்படுகின்றனர். திட்டமிட்ட விலைக்குறைப்பு அல்லது தாதா போல் வெருட்டும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வியாபாரிகளை முடக்க முயலுகின்றனர்.

எது எப்படி இருப்பினும் முரண்பாடுகளை ஆயுதம் மூலம் தீர்த்துகொள்வதை எக்காரணம் கொண்டும் ஏற்றுகொள்ள முடியாது. இவ் ஆத்திர செயற்பாடு இவ்விபதத்தினை தடுக்க முயன்ற ஓர் இளைஞனின் உயிரைப்பறித்தது கொடூரமானது.

நீதியற்று நடைபெறும் விடயங்கனை முதலில்; அனைத்து தரப்பினர்களிற்கு தெரியப்படுத்துதல வேண்டும். அல்லது இந்நாட்டு சட்டங்களின் வசதிகளுடாக பிணக்குகளை தீர்க்க முயற்சிக்க வேண்டும். 
பேசித்தீர்க்க வேண்டிய விடயங்களிற்கு வன்முறையை கையிலெடுப்பது எமது வாழ்வில் உறைந்து போன ஓர் கலாச்சாரமாகவே உள்ளது. இதன் வெளிப்பாட்டினை யாழ் மண்ணிலும் காணக்கூடியதாக உள்ளது. அரசியல் சமூக ஐனநாயகத்திற்கு மட்டும் போராட்டம் நடாத்தாது கலாச்சார மாறுதலுக்கான போராட்ங்களிற்கான தேவையும் இன்று எழுந்துள்ளது.

புலத்தில் இன்றும் தமது இனத்துடன் மட்டுமே தொடர்புகளை குறுக்கி வைத்து கொண்டு இருப்பதனலால் எமது அருகில் வாழ்ந்து வரும் ஏனைய சமூகங்களில் காணப்படும் நல்ல குணாம்சங்களை கற்றுகொள்வதற்கான வாய்ப்புக்களையோ அல்லது அறிந்து கொள்ளவதற்கான வாய்ப்புக்களையோ மறுப்பதின் விளைவாகவே இவ்வகையான குறுகியமனோபாவத்தின் வளர்ச்சி அதிகரிக்கின்றது.

ஓவ்வெரு மனிதனும் தனது வாழ்காலம் முழுதும் கற்றுகொள்ள வேண்டிய பல விடயங்கள் நிறைவே உள்ளது. சுவிற்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்கள் ஓரே இடத்தில் கூடி வாழ்வதற்கான வசதிகள் பெரும்பாலும் அமையபெறவில்லை. ஓரே இன வெளிநாட்டு சமூகங்கள் ஒன்று கூடி வாழும் பல ஐரோப்பிய நாடுகளில் இன்னமும் வன்முறைச்சம்பவங்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.

ஓருவரை கண்டித்து பேச வேண்டும் என்றால் நாம் பலவிதமாக கண்டிக்கலாம். சம்பந்தபட்டவரை ஆத்திரம் ஊட்ட கூடியவாறும் கண்டிக்கலாம் அல்லது அறிவுறுத்துவது போலும் கண்டிக்கலாம். இந்நாட்டவர் தமது குழந்தைக்கு கட்டுபாடுகளையும் கண்டிப்புக்களையும் எவ்வாறு குழந்தையை புண்படுத்தாது கையாள வேண்டுமென்பதனை அறிந்து வைத்துள்ளனர். சரியான முறையில் குழந்தையிடம் தொடர்பாடுபளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக பயிச்சியையும் பெற்றுகொள்கின்றனர். ஐரோப்பியர் பல இளம் தம்பதிகள் குழந்தை வழர்ப்பு சம்பந்தமான பல புத்தகங்களை வாசிக்கின்றனர். எம்மில் பலர் இவ்வகையான வாசிப்புக்களை செய்வதில்லை மாறாக தனியே தென்னிந்திய தனிநபர் சகாச சினிமாக்களில மட்டுமே கவனம் செலுத்துகின்றனர்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சமூகத்தினர்; பலர் வாசிப்பதனையே முற்றாக நிறுத்திவிட்டனர்.  வுhசிப்பிற்கான முன்தேவை இன்று எழுந்துள்ளது. தனியே அரசியல் இலக்கிய வாசிப்புகளுடன் நின்றுவிடாது இன்று சமூகத்திற்கு தேவையான சாதாரன பல விடயங்கள் அடங்கிய புத்தகங்களை வாசிப்பதற்கான ஓர் வேலைத்திட்டத்தினை ஆரம்பிக்க வேண்டிய கடமை புலத்து தமிழ் புத்திஜீவிகளிற்கு உருவாகியுள்ளது.
ஓர் சரியான உரையாடல்களை தொடர்பாடல்களை மேற்கொள்வதற்கான வளம் தமிழ் மொழியில் நிறையவே உள்ளது. தமிழ் சினிமாவில் பயன்படுத்தப்படும் சரியானதும் பிழையான உரையாடல் வடிவங்களே இன்று பல தமிழர்களது நாவில் ஆதிக்கம் செலுத்துகின்றது.
தனியே இசை நாட்டிய போட்டி நிகழ்ச்சிகள் மட்டும் ஓர் சிறந்த சமூகத்தினை வளம்படுத்த முடியாது. புலம்பெயர் நாடுகளில் நடைபெறும் தமிழ்பாடசாலைகள் கூட இன்றும் பழமையான கற்றுகொடுக்கும் நடைமுறையையே கடைப்பிடித்து வருகின்றனர். இன்றும் யாரோ எழுதிக்கொடுக்கும் விடயங்களை மனப்பாடம் செய்து பேச்சுபோட்டி நிகழ்வுகளில் ஓப்புவிக்கும் கருவிகளாகவே குழந்தைகள் 
பயன்படுத்தப்படுகின்றனர். 

இந்நாட்டில் வாழும் ஏனைய சமூகங்களுடன் தம்மை இணைத்துகொண்டு அங்குள்ள போட்டிகளில் கலந்து கொள்ளாது. மேடையேறும் வாய்ப்புக்கள் தமிழ் மேடைகளில் அதிகமாக உள்ளதால் பெற்றோரும் தமது பிள்ளைகளை தமிழ்வட்டத்திற்குள் மாத்திரம் சுழலவிடுகின்றனர். இதற்கு பல தமிழ் போட்டி நிகழ்ச்சிகளை ஆதாரப்படுத்தலாம். கலை கலாச்சார நிகழ்ச்சிகளிலும் எவ்வித மாற்றமற்று கடந்த இரண்டு மூன்று சகாப்தங்களிற்கு முன்னர் எவ்வாறு நடந்ததோ உள்ளடக்கத்தில் மாற்றமற்று தனியே தொழில் நுட்பமாற்றங்களுடன் மாற்றங்களுடன் மேடையேறிவருகின்றது. ஓரு சிலர் மாற்றத்தினை கொண்டுவந்தாலும் அதற்கு மக்களின் ஆதரவு மட்டமாகவே உள்ளது.

புலம் பெயர்ந்து வாழும் சமூக அனைத்து தலைமுறையினரும் இந்நாட்டு அரசியல் கலை கலாச்சாரத்துடன் இணைவாக்கமடைய வேண்டும். தமக்கன மட்டும் கோடு போட்டு இந் நாடுகளில் தம்மை ஓர் தனி அலகாக பேணுவது ஆபத்தனதாகும். முக்கியமாக இரண்டாவது தலைமுறையினர் தத்தமது நாடுகளில் ஓர் அமைதியான வாழ்வை நடத்த வேண்டும் என்றால் மூடிய வாழ்வுநிலையில் இருந்து வெளியில் வரவேண்டும்.

க.சுதாகரன்

30.10.2016