Montag, 28. Februar 2022

ரசிய ஆக்கிரமிப்பு போர் பற்றிய பார்வையும் சுவிற்சர்லாந்தின் நிலைப்பாடும் - க. சுதாகரன் (01.03.2022)

 

கடந்த தினங்களாக, ரசிய சர்வாதிகாரி விளாடிமிர் புட்டின் உக்ரைனையும் உலகையும் பணயக்கைதிகளாக வைத்திருக்கின்றார். அவர் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக போலியாக முரண்பாடான சமிக்ஞைகள் தந்திருந்த போதிலும், அவர் ரசிய மற்றும் பெலாரஷ்(Belarus) பிரதேசத்தில் உக்ரைனின் எல்லையில் அணிவகுத்துச் சென்றுள்ளார். 2014 முதல் மறைமுக ஆரம்பிக்கபட்ட ஆக்கிரமிப்புப் போராக இன்று எம்முன் நிற்கின்றது.

டொனெட்ஸ்க் (Donezk) மற்றும் லுஹான்ஸ்க் (Luhansk) ஆகிய கிழக்கு உக்ரேனிய "மக்கள் குடியரசுகளை" அங்கீகரித்து ரசியாவின்யாவின் முன்னாள் மகத்துவத்தை மீட்டெடுத்து, மேற்கத்திய விழுமியங்கள் மற்றும் மேற்கத்திய ஜனநாயகத்திற்கு எதிரான அவரது போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

குண்டுவீச்சுத் தாக்குதல்கள் மற்றும் ரசிய துருப்புக்களால் உக்ரைன் மீதான படையெடுப்பு ஆகியவை புட்டினின் ஒரு புதிய அளவிலான ஆக்கிரமிப்பு ஆகும், சர்வதேச சட்டத்திற்கு முரணான இந்த ஆக்கிரமிப்புப் போரை எவரும் நியாயப்படுத்த முடியாது. ரசியா உடனடியாக போரை நிறுத்த வேண்டும், போர் நிறுத்தத்தை ஒப்புக்கொண்டு பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்ப வேண்டும்.

ஐரோப்பா முழுவதிலும் உள்ள மக்களுக்கு பாரிய விளைவுகளையும் பேரழிவுகளையும் தரக்கூடிய அபாயம் தரக்கூடிய யுத்தம். பல்லாயிரக்கணக்கான மக்களை எல்லைப்புற நாடுகளில் அகதிகளாக நிர்கதியாக்கும் யுத்தம். சர்வதேச சட்டங்களின் அரசியல் வழிமுறையாக போர் தவறான  அடிப்படையில் ஆரம்பிக்கபட்டுள்ளது.

நேட்டோவின் கிழக்கு நோக்கிய விரிவாக்கத்தை ரசியா பலமுறை சரியாக விமர்சித்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், நேட்டோ ஏவுகணை வரிசைப்படுத்தல்கள், தொடர்ச்சியான ஆயுதமயமாக்கலும்   கிழக்கு ஐரோப்பாவின் நிலைமைகளை மோசமாக்கியுள்ளது.

ரசிய துருப்புக்களினால் உக்ரைன் மீது மேற்கொள்ளபட்ட படையெடுப்பினை நியாயப்படுத்த முடியாது. ரசியா தனது படையெடுப்பினை பற்றி தமது மக்களிற்கு நாசிகள்,  , புதிய நாசிகள், மற்றும் தேசிய சோசலிசத்திற்கு எதிரான  ஒரு "அமைதி பணி" என தமத அரச ஊதுகோள்களில் பிரச்சாரம் செய்து வருகின்று. அது மட்டுமல்ல அல்லாது, பாடசாலை மாணவர்கள் யுத்தம் நடைபெறுகின்றதா என்ற கேள்வியை கேட்டால் அதற்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்ற வகையிலான சுற்று அறிக்கை ஒன்று ஆசிரியர்களிற்கு அனுப்பட்டுள்ளது.

சர்வதேச சட்டத்தை மீறி, உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை இவ் ஆக்கிரமிப்பு மறுக்கின்றது - இது ஐரோப்பாவில் ஒரு பெரிய போரின் அபாயத்தை ஏற்படுத்தஉள்ளது. உக்ரைனின் பாதுகாப்பும் சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டும். அங்கு வாழும் மக்கள் புவிசார் அரசியல் நலன்களின் விளையாட்டுப் பொருளாக மாறக்கூடாது.

ரசிய துருப்புக்கள் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும். மோதலைத் தணித்தல் மற்றும் பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்துதல் ஆகியவை அவசரமாகத் தேவைப்படுகின்றன. அனைத்து இராஜதந்திர வாய்ப்புகளும் பயன்படுத்தப்பட வேண்டும். உக்ரேனிய-ரசிய எல்லையிலும், மற்றும் நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு இடையேயான எல்லை ராணுவம் இல்லாத பாதுகாப்பு வழித்தடம் தொடர்பான ஒப்பந்தம் பற்றிய பேச்சுக்கள் தொடர வேண்டும். நார்மண்டி வடிவமைப்பின் கட்டமைப்பிற்குள் பேச்சுவார்த்தைகள்  ஒரு தெளிவான மற்றும் பொதுவான பாதுகாப்பு கொள்கையின் அடிப்படையில் நடைபெறவேண்டும்.

சமாதனத்துடன் கூடிய உலக ஒழுங்கை அங்கீகரிப்பதும் முன்நிலைப்படுத்துவது அத்தியாவசியமானதாகும். இதில் அமெரிக்கா மற்றும் ரசியா மட்டுமல்ல, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உக்ரைன் உட்பட அனைத்து கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் இணைந்து செயற்பட வேண்டிய தேவையை வலியுறுத்தல் வேண்டும். அமைதியுடன் இணைந்து வாழ ஒரு புதிய பொதுவான ஐரோப்பிய பாதுகாப்பு கட்டமைப்பின் தேவைகள் வலியுறுத்தபடல் வேண்டும்.. இதற்கு முன் நிபந்தனையாக நேட்டோவின் கிழக்கு ஐரோப்பிய விரிவாக்கம் நிறுத்தப்பட வேண்டும். மேலும் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமைப்பை (OSZE) பாரியளவில் வலுப்படுத்த படல் வேண்டும். ஐரோப்பாவில் நடுநிலைபாத்திரத்தினையும் மற்றும் அமைதி காக்கும் அதன் பங்கையும் நடாத்தும் வகையிலான திசைநோக்கி நகர வேண்டும்.

பெரும் வல்லரசுகளுக்கு இடையிலான இராணுவ மோதலில் இருந்து பயனடைவது அனைத்து ஆயுத நிறுவனங்களாகும் என்பதனை புரிந்துகொள்ளல் வேண்டும்.   அவசரமாக யத்த சுழலில் இருந்து வெளியேற வேண்டும். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவின் வெளியுறவுக் கொள்கையின் இராணுவமயமாக்கள் மேலும் மக்களின் நலன்களிற்கு எதிரானதாகும், வன்முறையற்ற யுத்தமற்ற  தீர்வுநோக்கியும், சமூக சமத்துவம் மற்றும் நாட்டு எல்லைகளிற்கு அப்பாலான சமத்துவ ஐக்கியம் நோக்கி முன்னேறல் வேண்டும். 

ரசிய ஆக்கிமிப்பில் சுவிற்சர்லாந்தின் நிலைப்பாடு

புட்டின் ஆட்சிக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத் தடைகளை சுவிற்சர்லாந்து சமஷ்டி அரச  முழுமையாக அங்கீகரிக்க வேண்டுமெனவும், ரசிய பெருநிறுவனங்கள் மற்றும் தன்னலக்குழுக்களுக்கு(Oligarchs) மிக முக்கியமான பொருட்கள் வர்த்தக மையம் மற்றும் முக்கியமான நிதி மையமாக, சுவிற்சர்லாந்து செயற்பட முடியாது எனவும் சுவிற்சர்லாந்து சோசலிச ஜனநாயகக்கட்சி(SP), 80,000 க்கும் மேற்பட்ட மக்களின் கையெழுத்தினை சேகரித்து சுவிற்சர்லாந்து அரசிற்கு கோரிக்கையை முன்வைத்திருந்தது. 

விதிவிலக்கு இல்லாமல், ரசியாவிற்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகளை சுவிட்சர்லாந்து 28,02.2022 பல அழுத்தங்களிற்குபிற்பாடு ஏற்றுகொண்டது.  ரசிய குடிமக்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரத் தடைகள் பட்டியலில் உள்ள பல நிறுவனங்களின் சொத்துக்கள் உடனடியாகத் தடுக்கப்பட்டுள்ளன. மேலும் ரசிய அல்லது உக்ரேனிய கடவுச்சீட்டுகளுடன் ஐந்து தன்னலக்குழுக்களுக்கு (Oligarchs) நுழைவுத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரசியர்களுக்கான விசா வசதி தொடர்பான ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. திங்கட்கிழமை பிற்பகல் முதல், சுவிட்சர்லாந்தில் உள்ள வான்வெளி ரசிய விமானங்களுக்கு அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டது - திட்டமிடப்பட்ட மற்றும் தனிப்பட்ட விமானங்களும் உள்ளடங்குகின்றன.

சுவிற்சர்லாந்து மக்கள் கட்சியினர் (SVP)  இவ்வகையான பொருளாதார தடையை ஏற்படுத்த வேண்டாம் எனவும் சுவிற்சர்லாந்தின் பாரம்பரிய நடுநிலை கொள்கையில் உறுதியாக இருக்குமாறு அரசை வலியுறுத்தியது இங்கு குறிப்பிடதக்கது.