Montag, 5. Oktober 2020

ஏன் பெற்றோர் தமது குழந்தைகளை கொலை செய்கின்றனர்?

தா
ய்மார்கள் தங்கள் குழந்தைகளை கொல்லும்போது அல்லது குறைந்தபட்சம் கொல்ல முயற்சிக்கும்போது அவர்கள் பெரும்பாலும் மனநோயினால் பாதிக்கபட்டவர்களாக இருப்பார்கள். குற்றவியல் உளவியலாளர்களும் மற்றும் தடயவியல் மனநல மருத்துவர்களும் இக் கருத்தடன் உடன்பட்டுள்ளனர். மற்றைய குடும்ப உறுப்பினர்களால் குழந்தைகள் பாலியல் வன்முறையால் துன்புறுத்துவதும்  ஒரு காரணியாக அமைந்துள்ளது.


குடும்பங்களுக்குள் நடைபெறும் வன்முறைகள் பொதுவாக மூன்று சாத்தியமான தோற்றங்களைக் கொண்டிருக்கின்றன குற்றவியல் உளவியளாளர் மார்க்ஸ் விளக்குகின்றார். உதாரணமாக ஒரு தாய் மனநலம் பாதிக்கப்பட்டதால் குழந்தையை கொல்கிறாள். எந்தவொரு காரணத்திற்காகவோ விவாகரத்து செய்ய விரும்புகிறாள், தன் குழந்தைகளை உலகத்திலிருந்து பாதுகாக்கவோ அல்லது காப்பாற்றவோ விரும்புகிறாள், அவர்களை தனது மரணத்துடன் அழைத்துச் செல்கிறாள். குற்றவியல் உளவியலாளர் மேலும்அவர் குறிப்பிடுகையில்  இவவகையான  வன்முறை நிகழ்வுகளை  நீட்டிக்கப்பட்ட தொடர்  தற்கொலை என்று வரையறை செய்கின்றார். தாய் தற்கொலை செய்து கொள்வதும், குழந்தைகளின் பாதுகாப்பு கருதி அவர்களது உயிரினை பறித்து தன்னுடன் அழைத்துச் செல்லும் நோக்கத்திலேயே செய்யப்படுகின்றது.

நீட்டிக்கப்பட்ட தொடர் கொலைகள்

இரண்டாவது வகையிவான  நீட்டிக்கப்பட்ட கொலைக்காரணம்  கணவன் மனைவிற்கு இடையிலான விவாகரத்து தகராறின் போது சட்டம் தனியே தாயிடமோ தந்தையிடம் மட்டும் குழந்தை பராமரிக்கும் உரிமைக்கான தீர்ப்பு வழங்கிவிடும் போது பாதிக்கபட்ட தாயோ தந்தையோ மற்றவரிற்கு வழங்கபட்ட குழந்தை பராமரிப்பிற்கான உரிமையை தடுக்கும் வகையில் தமது குழந்தையை தாமே காெலை செய்கின்றனர்.குற்றவியல் உளவியலாளரின் கூற்றுப்படி, பெண்களை விட ஆண்களே இவ்வகையான கொலைகளை பெரும்பாலும் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்னதாக குறிப்பிடுகின்றனர். இங்கும் மேல்குறிப்பிட்டது போல் குழந்தைகளின்  உயிரை முடிவுக்கு கொண்டுவருவதன்  முலம் தாயையோ தந்தையையோ தண்டிக்க முனைின்றனர்.

வயதான அல்லது  நோய்வாய்ப்பட்ட பெற்றோர் தமது குழந்தைகளை பராமரிக்க முடியாத இயலாமையில் கூட்டாக தமது உயிர்களை பறித்து கொள்கின்றனர். இவ்வகை கொலைகள் முன்றாவது வகைப்பட்ட நீடிக்கபட்ட தொடர் கொலைகள் ஆகும். முடிவு செய்கிறார்கள். ஒருவர் மற்றவரைக் கொன்று பின்னர் தற்கொலை செய்து கொள்கிறார்.


குழந்தை கொலைகள் மட்டுமல்ல

இவ்வகையில் திட்டமிட்ட நடைமுறையும் சாத்தியமாக்கின்றது என்று மார்க்ஸ் சுட்டிக்காட்டுகின்றார். வாழ்வில் ஏற்பட்ட அதிர்ச்சியும் கூட இவ்வகையில் ஓர் கொலையினை செய்யகூடிய  சாத்தியங்களை ஏற்படுத்தி கொடுக்கின்து. இதன் விளைவாக, ஒரு அதிர்ச்சிகரமான நிகழ்வுக்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிற்பாடு ஏற்படும் சில எதிர்வினைகள் எவ்வித தாயாரிப்பும் அற்ற  இயல்பான விடயமாக கொலை செய்யும் நிலைமைகளையும் மனோநிலமையையும் தோற்றுவிக்கின்றது.

உளவியல் பிரச்சினைகள் இருப்பதாக நீங்கள் கருதினால் பின்வரும் கேள்விகளை கேட்பதன் மூலம் உங்களை நீங்கள் புடம் போட்டு கொள்ள உதவக்கூடும்:

உங்களுக்கான கேள்விகள்:

ஆதாரம்: Rosemarie Piontek: Mut zur Veränderung. Methoden und Möglichkeiten der Psychotherapie. 2009.

  1. எனக்கு என்னைத் தெரியாதுஉள்ளது ! நான் வழக்கத்தை விட வித்தியாசமாக உணர்கிறேனா?
  2. இந்த மாற்றம் எனக்கு கவலை அளிக்கிறதா?
  3. மாற்றத்திற்ககான விளக்கம் உள்ளதா?
  4. எனனால் சில விடயங்களை ஏற்றுெகாள்ள முடியவில்லை ஆனாலும்  தீவிரத்தை உளுணர்வு நியாயப்படுத்த முனைகிறதா?
  5. எனது அன்றாட வேலைகளை சிரமத்துடன் செய்யகின்றீர்களா?
  6. நான் எப்போதும் கவலைப்படுகிறேனா, நான் மிகவும் பயப்படுகிறேனா?
  7. நான் உடல் வியாதிகளால் பாதிக்கப்படுகிறேனா?
  8. என் தூக்கம் தொந்தரவாக இருக்கிறதா, நான் மிகக் குறைவாக அல்லது அதிகமாக தூங்குகிறேனா?
  9. நான் அடிக்கடி ஆக்ரோஷமான, வெறுக்கத்தக்க, எரிச்சலை உணர்கிறேனா அல்லது நான் மிகவும் சகிப்புத்தன்மையற்றவனாக உள்ளேனா?
  10. நான் அடிக்கடி நோய்வாய்ப்பட்டவனை போன்று உணருகின்றேனா?
  11. எனக்கு தற்கொலை எண்ணங்கள் உள்ளதா?
  12. எனது பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்கு எவரும் இல்லை என்று உணருகின்றேனா?
  13. நண்பர்களுடனான உரையாடல்கள் உதவவில்லையா?
  14. எனது மாற்றம் மற்றவர்களால் தெளிவாக கவனிக்கப்படுகிறதா?
  15. மூன்று மாதங்களுக்கும் இவ்வகையான நிலை தொடர்கின்றதா?
  16. எனக்கு எவ்வடயத்திலும் அக்கறையற்றதும் விருப்பமற்ற போக்கினையும் உணரக்கூடியதாக உள்ளதா?

எமக்கான நண்பர்கள் உறவினர்களிடையே ஓர் திறந்த உரையாடல்களை தொடர்சியாக மேற்கொள்வதும் தொடர்புகளை தொடர்ந்து பேணுவதும் புலத்தில் வாழும் சூழலில் இருந்து அன்னியமாகாது எம்மை மகிழ்ச்சியாக வைத்துகொள்ள உதவும்.

- கணபதிப்பிள்ளை சுதாகரன்.  


Donnerstag, 1. Oktober 2020

ஆயத வணிபத்தில் ஈடுபடும் சுவிற்சர்லாந்தின் பாரிய நிதி நிறுவனங்களிற்கு எதிரான சட்ட திருத்த அபிப்பிராய வாக்கெடுப்பு

 

சுவிற்சர்லாந்து  பல உலகில் நிகழும் யுத்தங்களிற்கு   நிதியளிக்கிறது. 2018 ஆம் ஆண்டில் மட்டும், சுவிற்சர்லாந்தின் தேசிய வங்கியும் SNB  மற்றும் பெரிய வங்கிகளான Crédit Suisse மற்றும் UBS  அணு ஆயுத உற்பத்தியாளர்களுக்கு குறைந்தது ஒன்பது பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளன. அது சுவிற்சர்லாந்து  ஒரு குடிமகனுக்கு 1,044 அமெரிக்க டாலர் என்ற அடிப்படையில் நிதியை வழங்கி வருகின்றது.

வருகின்ற நவம்பர் மாதம் இருக்கும் 29  திகதிநடைபெற அபிப்பிராய வாக்கெடுப்பு யுத்தங்களிற்கான ஆயுதங்களிற்கு செய்யபடும் முதலீடுகளைதடுத்து நிறத்தி உலகின் சமாதானமுன்முயற்சி நடவடிக்கைகளிற்கு பங்களிக்குமாறு கோருகின்றது.

உலகம் முழுவதும் போர்களும் ஆயுத மோதல்களும் மேலோங்கி வருகின்றன. உண்மையில் எக்காரணங்களால் மக்கள் அகதிகள் ஆக்கபடும் காரணிகளை  ஊடகங்களினால் திட்டமிட்டே மூடி மறைக்கபடுகின்றது.   ஆயுதவணிகத்தினால் பெறப்படும் இலாபம் அப்பாவி மக்களின் உயிர்கள் சூறையாடப்பட்டே வருகின்றது என்பதனை பலர் பார்க்கமறுக்கின்றனர்.  இக்காரணங்களிற்காகவே ஆயுத வணிக முதலீடுகளை தடுக்கும் நோக்த்திற்கான சட்ட வரைபிற்கான அபிப்பிராய வாக்கெடுப்பு நடைபெற இருக்கின்றது.

2019 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 152 போர்களும் ஆயுத மோதல்களும் நடந்துள்ளனன. இவற்றில் 75,600 பேர் இறந்தனர், மேலும் பலர் காயமடைந்து இடம்பெயர்ந்துள்ளனர். இந்த மோதல்களில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் உலகெங்கிலும் உள்ள ஆயுத நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன. அவை முரண்பட்ட கட்சிகளுக்கு விற்கப்படுகின்றன அல்லது மோதல் பகுதிகளுக்கு பின் கதவு வழியாக அனுப்படுகின்றது.

இந்த இரத்தக்களரி வியாபாரத்தில் பில்லியன் கணக்கான சுவிஸ் பிராங்குகள் பாய்கின்றன. 2018 ஆம் ஆண்டில் மட்டும், சுவிஸ் நிதி நிறுவனங்களான தேசிய வங்கி, கிரெடிட் சூயிஸ் மற்றும் யுபிஎஸ் அணு ஆயுத உற்பத்தியாளர்களில் குறைந்தது ஒன்பது பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளன  ஒரு பணக்கார நாடு மற்றும் உலகின் மிகப்பெரிய நிதி மையங்களில் ஒன்றான, சுவிடற்சர்லாந்திற்கு ஒரு பொறுப்பு உள்ளது. நடைபெற இருக்கும் அபிப்பிராய வாக்கெடுப்பில் கலந்து கொண்டு ஆம் என்ற வாக்கு அளிப்பதன் மூலம் ஓர் அமைதியான உலகினை உருவாக்குவதற்கு  பங்களிப்பு செய்வோம்.

Lockheed Martin  குழு உலகின் மிகப்பெரிய பாதுகாப்பு நிறுவனமாகும், இது அமெரிக்காவில் அமைந்துள்ளது. Lockheed Martin பலவிதமான வழக்கமான ஆயுதங்களை உற்பத்தி செய்கிறார், ஆனால் அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கான அணு ஆயுதங்களையும் உருவாக்குகிறார். சிரியாவில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் Lockheed Martin தயாரித்த எஃப் -16 போர் விமானங்களுடன் சட்டவிரோதமாக யேமன் போரில் குண்டுவீச்சு நடத்தியது. மத்திய கிழக்கில் விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்துடன் Lockheed Martin 2015 முதல் கட்டாரில் ஒரு அதிகாரப்பூர்வ அலுவலகத்தை வைத்திருக்கிறார்.

பல சுவிற்சரலாந்தின் பெரிய வங்கிகள், ஓய்வூதிய நிதிகள் மற்றும் சுவிஸ் நேஷனல் வங்கி ஆகியவை Lockheed Martin தங்கள் முதலீடுகளை செய்துவருகினறன. யுபிஎஸ் குழுவில் குறைந்தபட்சம் 32 532 மில்லியனை 2017 இல் முதலீடு செய்தது. ஒரு ஓய்வூதிய நிதி அதன் சொத்துக்களின் ஒரு பகுதியை வெளிநாடுகளில் உள்ள பங்குகளில் Lockheed Martin முதலீடு செய்கிறது, உதாரணமாக, MSCI World  0.24% பங்குகளை மிகவும் பிரபலமான சர்வதேச பங்குச் சந்தை குறியீட்டு நிதிகளில் ஒன்றாக உள்ளது.

Northrop Grumman  மற்றொரு அமெரிக்க நிறுவனம். இந்நிறுவனம் அதன் அனைத்து விற்பனையையும் போர் பொருள் பொருட்கள், முக்கியமாக விமானம் மற்றும் கப்பல்கள் மூலம் உருவாக்குகிறது. அணுவாயுத உற்பத்தியிலும் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில், Crédit Suisse  Northrop Grumman குறைந்தது 105 மில்லியன் பிராங்குகளை முதலீடு செய்துள்ளது.

61% உடன், General Dynamics அதன் விற்பனையின் பெரும்பகுதியை போர் பொருட்களுடன் உருவாக்குகிறது. இந்த நிறுவனம் அமெரிக்க கடற்படையின் Trident-II (D5) அணு ஏவுகணைக்கான கட்டுப்பாட்டு அமைப்புகளை உற்பத்தி செய்கிறது. 2016 ஆம் ஆண்டில், ஜெனரல் டைனமிக்ஸ் துணை நிறுவனமான General Dynamic   Land Systems-Canada கனடாவிலிருந்து 700 லேசான கவச வாகனங்களை கனடாவிலிருந்து சவுதி அரேபியாவுக்கு 15 பில்லியன் டாலருக்கு விற்றது. 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், யேமன் போரின்போது பொதுமக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்த வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன என்பதைக் காட்டும் பல ஆவணங்கள் கசிந்தன.

2019 ஆம் ஆண்டில், SNB General Dynamics  136 மில்லியன் அமெரிக்க டாலர்களை வைத்திருந்தது, UBS  90 மில்லியனுக்கும், சிஎஸ் 66 மில்லியனுக்கும் முன்னதாக இருந்தது.

BAE Systems என்பது ஒரு பிரிட்டிஷ் நிறுவனமாகும், இது கிட்டத்தட்ட போர் பொருட்களின் உற்பத்தியில் கவனம் செலுத்துகிறது. BAE Systems போர் விமானங்கள், இராணுவ கப்பல்கள், கவச வாகனங்கள், பீரங்கி அமைப்புகள், ஏவுகணைகள் மற்றும் வெடிமருந்துகள் போன்றவற்றை உற்பத்தி செய்கிறது. இந்த நிறுவனம் அணு ஆயுத அமைப்புகளை தயாரிப்பதிலும் ஈடுபட்டுள்ளது மற்றும் எடுத்துக்காட்டாக, அமெரிக்க, பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு ஆயுதப்படைகளுக்கு அணு ஏவுகணைகளை உற்பத்தி செய்கிறது.

UBS  2018 இல் BAE Systems 160 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது.

Boeing என்பது ஒரு அமெரிக்க நிறுவனம், இது பெரும்பாலும் ஒரு கூட்டு நிறுவனமாக குறிப்பிடப்படுகிறது. நிறுவனத்தின் ஆயுதக் கிளை மொத்த விற்பனையில் 29% ஆகும். இது உண்மையில் பாதிக்கும் குறைவாக இருந்தாலும், Boeing 47 பில்லியன் பிராங்குகளுடன் தொழில்துறையில் மிகப்பெரிய ஒன்றாகும், இது நிறுவனம் முற்றிலும் போர் பொருட்களிலிருந்து உருவாக்குகிறது. 2019 ஆம் ஆண்டின் இறுதியில், SNB 549 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான போயிங்கில் முதலீடு செய்திருந்தது, UBS 2.78 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்தது. MSCI World குறியீட்டில் போயிங் சேர்க்கப்பட்டுள்ளது, இதில் 0.48% பங்கு உள்ளது. இதன் பொருள், இந்த பங்குக் குறியீட்டில் தங்கள் சொத்துக்களை முதலீடு செய்துள்ள அனைத்து ஓய்வூதிய நிதிகளும் போயிங்கில் முதலீடு செய்கின்றன.

போயிங் முக்கியமாக போர் விமானங்களை உருவாக்குகிறது, ஆனால் அணு ஆயுத வணிகத்திலும் உள்ளது. போயிங் தயாரித்த F-15 விமானம் சவூதி அரேபிய விமானப்படை யேமனில் நடந்த போரிலும், இஸ்ரேலிய விமானப்படையினாலும் காசா பகுதியில் தாக்குதல்களில் பொதுமக்கள் மீது குண்டு வீச பயன்படுத்தப்பட்டது.

கணபதிப்பிள்ளை சுதாகரன்



Mittwoch, 30. September 2020

பன்நாட்டு நிறவனங்கள் பொறுப்பு கூறும் மசோதாவிற்கான அபிப்பிராய வாக்கெடுப்பு

சுவிற்சர்லாந்தின் பாரிய பன்னாட்டு நிறுவனங்கள் உலக நாடுகளின் அந்நாட்டு சட்டங்களையும் மதிக்காது தான்றோன்றி தனமாக இவர்களால் சூழல் மாசு மற்றும் மனித உரிமை மீறல்களில் ஒரு சில உதாரணங்கள்.

நைஜீரிய கிராமமான எவெகோரோவில் (Ewekoro) சுவிற்சர்லாந்தின் Lafargehollcim பன்நாட்டு நிறுவனமான  ஒரு சிமென்ட் தொழிற்சாலையை நடத்தி வருகிறது. இநத கிராமம் சிமென்ட் தூசிகளால் சூழ்ந்து உள்ளது: கூரைகள், கட்டிடங்கள், மற்றும் வயல்கள் அனைத்தும் சிமெந்து தூசினால் முடப்பட்டுள்ளது. மக்களுக்கு கல்லீரல், நுரையீரல் மற்றும் மண்ணீரல் பாதிப்பு ஏற்பட்டு நோய்வாய்படுகின்றனர் என அக்கிராம மருத்துவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்


Glencore எனும் நிறுவனம் பங்களாதேசத்தில் பெட்ரோலிய உற்பத்தியில் இருந்து வரும் ரசாயனங்களை நேரடியாக ஒரு நதியில் கலக்கவைக்கின்றது. இதனால் குறிப்பிட்ட நதி விஷமாகின்றது. இந்த நதியினூடாக தமது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் மக்களது தோலில் சென்டிமீட்டர் அளவிலான கொப்புளங்களை ஏற்படுத்தி தீராத தோல் நோய்க்கு வழிவகுக்கிறது, மற்றும் கிராமவாசிகளின் கால்நடைகுக்கும் இந் நோய் பரவி வருகின்றது.

 
பெருவின் நகரமான செரோ டி பாஸ்கோவில் 70,000 பேர் வாழ்கின்றனர். செம்பு, ஈயம் மற்றும் வெள்ளி உற்பத்தியில் உலகின் மிகப்பெரிய சுரங்கத்தினை உற்பத்தியாளர்களில் ஒருவரான சுரங்க நிறுவனமான Glencore கட்டுப்படுத்துகிறார். மிக குறைந்த விலையில் கண்ணி வெடிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. உற்பத்தியின் போது சிதறிக்கப்படும் கனரக உலோகங்கள் நீரிலும் வளி மண்டலத்துடன் கலந்து விசமாகி பல குழந்தைகளிற்கு இரத்த சோகை, குறைபாடுகள், பக்கவாதம் போன்ற நோய்களை உருவாக்கி வருகின்றது.

பன்நாட்டு நிறவனங்கள் பொறுப்பு கூறும் மசோதாவிற்கான அபிப்பிராய வாக்கெடுப்பு

பன்நாட்டு நிறவனங்கள் தங்களால் ஏனைய நாடுகளில் செய்யப்படும் வணிகத்தில் மனித உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் தரங்களை மதிப்பதை உறுதி செய்ய வேண்டும். பன்னாட்டு நிறுவனங்கள் முறைகேடாக ஒருநாட்டின் மக்களின் வாழ்நிலைக்கும் சூழலிற்கு பாதகமான முறையில் உற்பத்தியை மேற்கொள்ளும் போது விதிமீறல்களிற்கு  எதிராக சட்டரீதியில் தண்டனையை பெற்று கொள்ளும் வகையில் சுவிற்சர்லாந்தின் சட்டங்கள் இருக்க வேண்டும்.

1.   எவ்வகை பன்னாட்டு நிறுவனங்களை இம் மசோதா பொறுப்பு கூறலை வேண்டி நிற்கின்றது?

இவ்வகையில் சுமார் 1,500 நிறுவனங்கள்  உள்ளடங்குகின்றன. சிறிய அல்லது நடுத்தர நிறுவனங்கள் (250 ஊழியர்கள் வரை) உள்ளடங்கா போதும் உயிர் ஆபத்துகளை ஏற்படுத்தகூடிய  துறைகளில் ஈடுபடும் வணிக நிறுவனங்கள் ஏற்படுத்த போகும் சட்ட வரையறுக்கு உள்ளடங்குவர். உதாரணமாக தங்க சுரங்க தொழில் நிறுவனங்கள்

2. எந்த நிறுவனம் அந்நாட்டு மககளின் வாழ்விற்கும் சூழலிற்கு பந்தகம் ஏற்படுத்துகின்றதோ அவர்களே அந்நாட்டில் ஏற்படுத்தபடும் அழிவுகளிற்கு பொறுப்பாளிகள்.

நிறுவனங்கள் குழந்தைத் தொழிலாளர்கள்மீது சார்ந்திருக்கவோ அல்லது நதிகளை மாசுபடுத்தவோ, மனித உரிமை மீறல்களிற்கு துணைபோகவோ மற்றும் அவற்றின் துணை நிறுவனங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீரழிவுகளுக்கும் பொறுப்பு கூறல் வேண்டும்.

3.  இம் மசோதா எவ்வகையில் நிறுவனங்களிற்கு பொறுப்பு கூறலை வலியுறுத்துகின்றது?

எந்தநிறுவனம் சேதம் செய்ததோ அவர்களே அனைத்து பாதிப்புக்களிற்கும்  பொறுப்பு எடுக்க வேண்டும். வெளிநாடுகளில் உள்ள பெருநிறுவனங்களால் பாதிக்கப்பட்டவர்கள் சுவிட்சர்லாந்தில் வழக்கு தொடர முடியும். பாரிய நிறுவனங்கள் தற்பொழுது தமது உப நிறுவனங்களூடாக செய்யப்படும்  மனித உரிமை மீறல்களிற்கு அல்லது சூழல் மாசுபடுதலிற்கு  இலகவாக பொறுப்பு கூறாமல் தப்பித்துகொள்கின்றன.

4.  பாதிக்கபட்டவர்களிற்குவர்களுக்கு எவ்வாறு இந்நிறுவனங்கள் நிவாரணம் கொடுக்க போகின்றார்கள்?

இந்த மசோதா, பாதிக்கப்பட்டவர்கள் சுவிற்சர்லாந்து  சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும், பாதிக்கப்பட்ட சேதத்திற்கு நிதி இழப்பீடு கோரவும் அனுமதிக்கிறது. தகுந்த சாட்சியங்கள் மூலம் பாதிப்புக்களை  ஏற்படுத்திய பாரிய நிறுவனமீதோ அல்லது துணை நிறுவனங்கள் மீதும் சுவிற்சர்லாந்தில் வழக்கு தொடுத்து நஷ்ட ஈட்டினை பெற்றுகொள்ள முடியும். துணை நிறுவனங்களின் தவறுகளிற்கும் தலமை நிறுவனமே பொறுப்பு கூறல் வேண்டும் என வலியுறுத்துகின்றது.

நவம்பர்மாதம் 29 திகதி நடைபெற இருக்கும் அபிப்பிராய வாக்கெடுப்பில் கலந்துகொண்டு இம் மசோதவிற்கு ஆதரவாக வாக்களியுங்கள். சுவற்சர்லாந்திலுள்ள பாரிய பன்னாட்டு நிறுவனங்களில் தான்றோன்றித்தனமான நடவடிக்கைகளை சட்டத்தின் முலம் கட்டுப்படத்தவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படும். மேலும் இந்நிறுவனங்களால் ஏற்படுத்தபடும் சூழல் மாசினையும் அப்பாவிமக்களது உயிர்களையும் ஓரளவிலாவது பாதுகாக்கமுடியும்.

- கணபதிப்பிள்ளை சுதாகரன் 




Montag, 3. August 2020

இலங்கை தேர்தல் பற்றிய எனது கருத்து

இலங்கை தேர்தல் பற்றிய எனது கருத்து தெளிவற்று இறுப்பதாக பலர் குறிப்பிட்டு இருந்தனர்இவ்விடயம் பற்றிஇங்கு தெளிவு படுத்த விரும்புகின்றேன்.
இலங்கையில் உள்ள எந்தவொரு கட்சியின் ஆதரவலனோ அல்லது அங்கத்தவரோ கிடையாதுஆனலும் இலங்கைவாழ் தமிழர்களின் அரசியல் உரிமை போராட்டத்தில் அக்கறை உள்ளவன்.
அவ்வகையில் நாடைபெறவிருக்கும் தேர்தலில் பங்கெடுக்கும் கட்சிகளும் வேட்பாளர்களும் இலங்கை வாழ் மக்களின்அரசியல் உரிமை போராட்டத்தினை சரியான திசை நோக்கி நகர்த்த கூடியவர்களா என்பதில் மட்டும் அக்கறைகொண்டவன்.

Samstag, 1. Februar 2020

வெறுப்புக்களிற்கு எதரான பாதுகாப்பு சட்டமூலத்திற்கு ஆம் (JA zum Schutz vor HASS -09.02.2020)

அனைத்து விதமான பாலியர்களிற்கும் (LGBTI) இனவெறித்தனத்திற்கும் பாலியல் ஓடுக்குமுறைக்கும் ஓர் பாதுகாப்பினை கொடுப்பதற்கான  சட்டமூல மாற்றத்திற்கான ஓர் அபிப்பிராய வாக்கெடுப்பு வருகின்ற 9 திகதி (09.02.2020) சுவிற்சர்லாந்தில் தேசியரீதியில் நடைபெற இருக்கின்றது.

உலகம் பூராகவும் பாலியல்ரீதியான அடையாளத்தினை முன்னிலைப்படுத்தி சமூகரீதியான ஓடுக்குமுறைகள் அன்றாடகாட்சியாக நடைபெற்றுவருகின்றது. ஓரு சில நாடுகள் ஓரு சில பாலினர்களின் இணைவிக்கும் உறவுகளிற்கும் எதிராக மரணதண்டனையும் வழங்கப்பட்டு வருகின்றது.

உலகில் மனிதனின் நிறம் தோற்றம்  இனம் மொழி மதம் கலாச்சாரம் அடிப்படையில் ஓர் சிறுபாண்மை பிரிவினர் ஓடுக்குமுறைக்கு உள்ளாக்க படுகின்றனரோ  அதேபோல் பாலியல் பாலியல் உறவுமுறைகளிற்கும் அடையாளங்களிற்கு  எதிராகவும் ஓடுக்குமுறைகள் நடைபெற்று வருகின்றது.

சுவிற்சுர்லாந்து 49 ஐரோப்பிய நாடுகளில் LGBTI பாலியல் பிரிவிகர்ளிற்கு எதிரான இனவெறியை வெளிப்படுத்தும் நாடுகளின் வரிசையில் 27வது இடம் வகிக்கின்றது.

ஏற்கனவே சுவிற்கர்லாந்தில் நடைமுறையில் இருக்கும் இனவாதத்திற்கு எதிரான 261 வது சரத்தினை மேலும் கூர்மையாக்கும் வகையில் பாலியல் வேறுபாடுகளிற்கு எதிரான விடயங்களையும் இணைத்து சட்ட மூலத்தினை திருத்துவதற்கான அனுமதியை கோரும் முகமாகவே அபிப்பிராய வாக்கெடுப்பு நடைபெறுகின்றது.

261ம் சரத்தில் ஓரு குறிப்பிட்ட இனமோ அல்லது ஓர் குறிப்பிட்ட கலாச்சர விழுமயங்களை கொண்ட பிரிவினரையோ நிற மத ரீதியல் வேறுபட்ட இனக்குழு மக்களையோ தனிப்பட்ட நபர்களையோ வன் சொல்லாடல்கள் மூலமோ வன்முறை தாக்குதலினால் சிறுமைப்படுத்தவோ அல்லது ஓடுக்குவதனை தடுப்பதற்கான சட்டரீதியான பாதுகாப்பினை கொடுக்கின்றது.

சுவிற்சர்லாந்தில் வாழ் தமிழ் சமூகத்தில் நிலவும் சாதியரீதியான வேறுபாடுகளுடன் கூடிய ஓடுக்குமுறைக்கும் இச்சட்ட மூலம் ஓர் பாதுகாப்பினைக்கொடுககின்;றது. பேர்ண் தமிழ் பாடசாலை ஆசிரியை ஓருவர் ஓர் புத்தக வெளியீட்டடில் பின்வரும் சம்பவத்தினை சுவிற்சர்லாந்து வாழ் தமிழ் மக்களிற்கு ஓர் ஞாபகமூடட்டலை ழேற்கொண்டிருந்தார்.

சுவிற்சர்லாந்து பாடசாலையில் இரு வேறுபட்ட சாதிய அடிப்படையான தமிழ்பேசும் குழந்தைகள் கல்விகற்று வந்துள்ளனர். இக்குழந்தைகளின் ஓர் சாதியப்பிரிவினை சார்ந்த பெற்றோர் மற்றைய தமிழ் குழந்தை குறைந்த சாதிப்பிள்ளை எனவும் அக்குழந்தையுடன் சேரவேண்டாம் என நஞ்சினை விதைத்துள்ளனர். இவ்வடிப்படையில் தன்னுடன் சக கல்வி பயிலும் மாணவரை சிறுமைப்படுத்தும் வகையிலும் மனதினை காயப்படுத்தும் வகையிலும் பல்வேறு தொந்தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவ்விடயம் நீதிமன்று வரைக்கும் சென்றதாக குறிப்பிட்டிருந்தார்.

தமிழ் சமூகம் இன்னமும் மனித குலத்திற்கு எதிரான சாதிய சிந்தனையில் இருந்தே இன்னமும் முழுமையாக விடுபடவில்லை. மனித குலத்தில் பெரும்பாண்மையாக காணப்படும் ஆண் பெண் பாலியல் அடையானங்களை தவிர ஏனைய பாலியங்கள் அடையாளங்களுடன் இருக்கும் எனைய திருநங்கையர்கள் திருநம்பிகளின் அடையாளங்களை ஓர் நகைப்புக்குரியதும் எள்ளிநகையாடும் வகையிலேயே புரிந்து கொண்டுள்ளது. எமது சமூகம் டுபுடீவுஐ பாலியல் உறவுகளை புரிந்து கொண்டு இவைகளும் மனிதர்களிற்கிடையான ஓர் பாலியல் உறவுமுறை என்பதனை அங்கீகரிக்க இன்னமும் பல விவாதங்களும் வாசிப்புக்ளும் மற்றும் கலாச்சார மாற்றங்களும் நடைபெற வேண்டி உள்ளது.

எமது இரண்டாவது தலைமுறையும் இந்நாட்டில் காலுண்றி உள்ளது. எமது பிள்ளகைள் அல்லது இன்னுமொரு அடுத்த சந்ததிகள் இவ்வகையில் பாலியல் அடையாளங்களுடன் பிறக்கும் குழந்தைகளிற்கும் அல்லது இவ்வகையில் டுபுடீவுஐ அடிப்படையில் ஓர் பாலியல் உறவினை மேற்கொள்ள விரும்பும் சந்ததிகளிற்கும் பெரும்பாண்மை பிரிவினர்களினால் ஓடுக்குமுறைக்கு உள்ளாகமல் இச் சட்டமூலங்கள் மூலங்களை அமுல்படுத்துவது மூலம் தம்மை பாதுகாத்து கொள்;ள எம்மால் உதவமுடியும்.

பன்முறையான பாலியல் அடையாளங்களுடனான உறவுமுறைகளும் உள்ளன. இது ஓவ்வொரு மனிதனின் தனிப்பட்ட உரிமை என்பதளை அடிப்படையில் ஏற்றுகௌ;வதனால் பல விடயங்களை இலகுவாக கடக்க உதவும். பாலியல் முறமை அதனால் ஏற்படப்போகும் சரியான பிழையான விடயங்களை தம்மகத்தில் கொண்டிருப்பதும் விவாதப்பொளாக்குவதும் ஓவ்வொரு தனிமனிதனின் உருமையுமாகும். ஆனால் அப்பாலின அடையாளங்களுடன் உள்ளவர்களையும் அல்லது அவ்வகையில் உறவுமுறமையயைப் பேணுவர்களை கொச்சைபடுத்தி மனதிiனை புண்படுத்தாது இருந்தால் சிறப்பு.

இனறும் எமது சமூகத்தில் ஓர் இன பாலில் உறவுகள் பற்றி வெளிப்படையாக பேசுவதற்கான சமூக சூழல் புலத்திலும் இல்லாதது எமது சமூகத்தின் போலித்தனமான இறுக்கத்தினை புலப்படுத்துகின்றது. ஆனாலும் இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் பல் வேறு பாலியல் அடையளத்துடன் வாழும் ஓரு சிலர் தம்மை எவ்வித தயக்கமும் இன்றி தமது பாலியல் அiயாளத்தினை அடையாளப்படுத்துவதும் மேலும் தமது பாதுகாப்பிற்கான அமைப்புக்களையும் தோற்றுவித்துள்ளனர் எனபது ஓர் துணிச்சலான செயல்முறை.


இந்தியாவில் 2018 ம் ஆண்டு 377 சட்டத்தின் மூலம் இதுவரைகாலமும் சட்டவிரோதமாக கருதப்பட்ட உறவுமுறைகள் சட்டத்தின் முன்னர் அங்கீகரிக்கப்பட்டதும் ஓர் மைல்கல் சம்பவமாகும்.

LGBTI என்பதற்கான விளக்கங்கள் மேல் குறிப்பிட்ட விடயங்களை மேலும புரிந்து கொள்ள உதவியாக இருக்கும் என்று கருதுகின்றேன்.

Lesbian: பெண் பெண்ணுடன் உடலுறவை மேற்கொள்பவர்கள்
Gay: ஆண் ஆணுடன் உடலுறவை மேற்கொள்பவர்கள்
Bisexual: ஆண் பெண் இருபாலருடனும் உடலுறவை மேற்கொள்பவர்கள்
Transexuell/Transgender: திருநங்கை திருநம்பிகள். இவர்களில் பலர் ஆண்பெண் இருபாலருக்குரிய அடையளங்களை விரும்புவர்கள்.
Intersexual: இவர்கள் பிறப்பில் ஓர் பாலியல் அடையாளத்தினை கொண்டிருந்திருப்பார்கள். பின்னர் தமது விருப்பத்தின் பெயரில் மருத்துவ சிகிச்சi மூலம் தமது பாலியல் அடையாளத்தினை மாற்றி கொண்ட பிரிவினர்.

புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழ் சமூகம் இன்று வரை ஓர் பேசாப் பொருளாகவும் பேச கூடதா வியங்களை எவ்வித கட்டுப்பாடும் அன்றி பேசுபொருளாக்கப்டல் வேண்டும். எமது சமூகத்தில் பாலியலே இன்றும் பேசாப் பொருளாக இருந்து வருகின்றது. ஓர் வகை போலி இறுக்கபோக்கினை பின்பற்றிவருவது சமூகத்தின் வளர்ச்சிக்கு ஓர் முட்டுகட்டையாகும்.

நாமும் புலத்தில் ஓர் சிறுபாண்மை பிரிவினராக இருப்பதால் மேலும் மத இன நிற பாலியல் ரீதியில் சிறுபாண்மையாக இருக்கும் மனித குழுமங்களின் அடிப்படை மனித உரிமைகளிற்கும் குரல்கொடுப்பதும் இவற்றிற்கு சாதகமான அடிப்படையில் கொண்டுவரப்படும் சட்டமூலங்களிற்கு இந்நாட்டில் பிராஜா உரிமைபெற்ற தமிழர்கள் தமது வாக்குகள் மூலம் சட்டமூலத்தினை அமுல்படுத்தி சிறுபாண்மை இனங்களிற்கிடையான ஓர் சொலிடாரிட்டடியை உருவாக்க முடியும்.