Sonntag, 12. November 2017

வடக்கு கிழக்கு இணைப்புபற்றிய மறுபார்வை


வடக்கு தலைமைகள் பேரினவாதிகளின் இன ஓடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுப்பதில் பின்னுக்கு நிற்பவர்கள் அல்ல. ஆனால் இலங்கையில் வாழ் ஏனைய சிறுபாண்மை சமூகங்களின் அரசியல் உரிமைகளை மதிக்க தெரியாதவர்கள். இதன் வெளிப்பாடே வடகிழக்கு தமிழ் அரசியல் வாதிகளால் முன்வைக்கப்படும் வடகிழக்கு இணைப்பு கோரிக்கை.

கிழக்கில் வாழும் இஸ்லாமியதமிழர்கள் தம்மை வியாபரரீதயாக வளர்த்து தாம் வாழும் பகுதிகளை பொருளாதார ரீதியில் செழிப்புற வைத்துள்ளனர். மாறி மாறி வரும் சிங்கள கட்சிகளுடன் கூட்டுச்சேர்ந்து தமது பொருளாதாரங்களையும் அபிவிருத்தி திட்டங்களையும்  தமது பகுதி நோக்கி நகர்த்தி உள்ளனர். கிழக்கில் ஆட்சிக்கட்டிலில் இருக்கும் ஏனைய தமிழ் தலைமைகள் தாம் சார்ந்த பகுதிகளில் எந்தவித உருப்படியாக மக்களின் நலன் நோக்கி திட்டங்களையும் முன்வைக்கவில்லை. தம்மிடம் உள்ள இயலாமையை மறைக்க இஸ்லாமியதமிழர்களை குறை கூறியே காலத்தினை கடத்துகின்றனர். அரேபிய நாடுகளில் தொழில்புரிந்து நாடுதிரும்பும் பல இஸ்லாமியதமிழர்கள தமது பிரதேசத்திங்களில் பல முதலீடுகளை மேற்கொண்டு தமது பொருளாதார வளத்தினை மேன்படுத்துகின்றனர். ஆனால் கிழக்குவாழ் புலம்பெயர் தமிழர்கள் வீடுகளையும் கோயில்களை மட்டுமே கட்டித்தள்ளுகின்றனர். இதே போல் இஸ்லாமியதமிழர்களும் பள்ளிவாசல்களை கட்டினாலும் பொருளாதாரத்திலும் வணிகத்துறையிலும் கவனம் செலுத்துகின்றனர்.

இஸ்லாமியதமிழர்களின் ஆதிக்கத்தினை ஓடுக்குவதற்கான ஓர் வழிமுறையாகவே வடக்குகிழக்கு தமிழர்கள் இன்று வடக்குகிழக்கு இணைப்பை கையில் தூக்குகின்றனர். இன்னுமொரு சிறுபாண்மை இனத்தினை ஓடுக்குவதற்கான ஓர் கோசமாகவே அதனை பார்க்க முடிகின்றது.

வடக்கில் மத்திய அரசினால் வளங்கப்படும் குறைந்த பட்ச பணத்தினை கொண்டே எவ்வித திட்டங்களையும் மேற்கொள்ளாத இந்த தலைமைகள் இரண்டு மாநிலங்களைலும் ஓன்றிணைத்து பெரிதாக ஒன்றும் வெட்டிக்கிழிக்க போவதில்லை.

வடக்கு அரசியல் வாதிகளும் அரச அதிகாரிகளும் வடக்கில் வாழும் சமூகங்க்ளின் மீதே தமது திமிரான ஆதிக்கத்தினை செலுத்தி தமது மக்கiளையே சுரண்டுகின்றனர். இவர்களால் எவ்வாறு மற்றைய சிறுபாண்ணமை சமூகங்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளமுடியும்?
மாற்றிய அமைக்க இருக்கும் அரசியல் யாப்புவில் இஸ்லாமியதமிழர்கள் தனி ஓர் அலகாக இருப்பதே எதிர்காலங்களில் பல உள் முரண்பாடுகளை தவிhத்து கிழக்குவாழ் தமிழர்களுடன் ஓர் நல் உறவை பேண வழிவகுக்கும்.

இதேபோல் வடக்கு வாழ் தமிழர்களின் கலாச்சாரத்திற்கும் கிழக்கு வாழ் தமிழர்களின் கலாச்சாரத்திற்கும் பல வேறுபாடுகள் உள்ளன. வடக்கு ஓர் தமிழ்பேசும் மாநிலமாகவும் கிழக்கு ஓர் தமிழ்பேசும் மாநிலமாக ஆனால் இரண்டு அலகுகளை கொண்ட பிரதேசமாக இருப்பதே இலங்கையில் எதிர்காலங்களில் சிறுபாண்மையினங்களின் அரசியல் அதிகாரத்தினை நிலைநிறுத்த முடியும் என்பது எனது பார்வை. ஆனால் இக் கோரக்கையினை சிங்களத்தரப்பும் தமிழ்தரப்பும் ஏற்று கொள்ள போவதில்லை என்பது மறுவிடயம்.

இவ்விடயம் சம்பந்தமாக இஸ்லாமியதலைமைகளும் தமிழ்தலைமைகளும் மேலம் ஆழ்ந்து சிந்தித்து செயற்பட வேண்டும்.

சுவிற்சர்லாந்தில் 1979 இல் உருவாகிய Jura மாநிலம் உருவாகியது. ஆனால் இவ் மாநில உருவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த பேர்ண் மாநிலம் ஓரு சில பிரதேசங்களை தமது மாநிலத்துடன் இணைத்து வைத்திருந்தது. இவ்வாறு இணைத்து வைக்கபட்ட பிரதேசமான மூட்டியே "Moutier" என்ற பிரதேசம் கடந்த êன்மாதம் சர்வசன வாக்கெடுப்பினை நடாத்தி தாம் Jura கன்ரனுடன் இணைவதற்கான மக்களின் ஆணையை பெற்றுள்ளனர்.

இணைவு பிரிவு மக்களின் அரசியல் அபிலாசகளிற்கு ஏற்பவும் சூழ்நிலைகளிற்கு ஏற்பவும் மாறுபடும். எவ்வாறு இலங்கை அரசு பிரிக்ககூடாத இலங்கை என்பதில் பிடிவாதகமாக உள்ளதோ அதேபோன்று தமிழ் தலைமைகளும் வடகிழக்கு தாயகம் எனும் கோரிக்கையில் அழுங்குபிடியாக உள்ளனர். இவ்விரண்டுமே சிறுபாண்மை இனங்களையும் மக்கள் குழுக்களையும் ஓடுக்கும் ஓர் வன்மமான கோரிக்கiயாகவே பார்க்க வேண்டியுள்ளது.


பிரிவு ஓர் புரிந்துணர்வை ஏற்படுத்த கூடிய சார்த்தியங்களை உருவாக்கும். மாறாக கட்டாய இணைப்பு மீண்டும் மீண்டும் முரண்பாடுகளை வலுவடையச்செய்யும். 

Montag, 3. April 2017

கலைபட்ட மௌனமும் நடனமும் 2017


சுவிற்சர்லாந்தில் இயங்கிவந்த பல சுயாதீன அமைப்புகளை விடுதலைப்புலிகளின் சுவிஸ் கிளையினர் என தம்மை அடையாளப்படுத்தியோர் தமது கட்டுபாட்டிற்குள் இருந்த இந்நிறுவனங்களால் சேகரிக்கபட்ட நிதிஅனைத்தும் கபளீகரம் செய்யபட்டது. வருமானம் தரும் எந்த நிறுவனங்களையோ அல்லது கோயில்களையோ வியாபர ஸ்தாபனங்களையேர் இவர்கள் விட்டுவைக்கவில்லை. இவர்களது நிர்பந்ததிற்கு அடிபணிய மறுத்த அமைப்புகளிற்கோ அல்லது கோயில்களிற்கு எதிராக அதே பிரதேசத்தில் அமைப்புக்களையும் கோயில்களையும் நிறுவினர்;. முழுக்க  முழுக்க புலம் பெயர் தமிழர்கள் பலரால் ஆதரிக்கபட்ட ஓர் ஆயுதப்போரட்டத்தின் விருப்பினை மட்டும் தமக்கு சதாகமாக பயன்படுத்தி புலம்பெயர் மக்கள்மீது தமது ஆதிக்கத்தினை செலுத்திவந்திருந்தனர்.
மக்களும் போராட்டத்திற்கு தானே என தம்மால் கேட்கவேண்டிய வினாக்களை தமக்குள்ளேயே வைத்து மௌனித்து கொண்டு நிதியை வாரிவழங்கினர். 2009 இற்கு பின்னர் மக்கள் யாதார்hத்தினை புரிய ஆரம்பித்தனர். தம்மால் வழங்கப்படும் பணம் மட்டும் ஓர் ஆயுதப்போரட்டத்தினை வெற்றிபெற செய்யமுடியாது என்பதனை மெல்ல மெல்ல புரிந்து கொள்ள ஆரம்பித்தனர்.

2015 2016 2017 களில் மக்கள் இவர்களிடம் இதுவரை கேட்காமல் மௌனித்தவர்கள் தம்மிடம் இருந்த பல கேள்விகளை இவர்களை நோக்கி கேட்க ஆரம்பித்தனர். அதன் வளர்ச்சி போக்கில் இன்று இதுவரைகாலமும் சுயாதீனமற்று செயற்பட்டு வந்த பல அமைப்புக்களும் கோயில்களும் இவர்களின் கட்டுபாட்டிற்குள்ளிருந்து வெளியேற ஆரம்பித்தனர்.
சொலத்தூண் நலன்புரிசங்கம் யாரால் எப்பொழுது ஆரம்பிக்க பட்டது என்ற கேள்விக்கு விடை காணுவது இப்பதிவின் நோக்கமல்ல. இப்பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களாலேயே இந்நிகழ்ச்சி இரவுபகலாக உழைத்து நடாத்தபட்டு வந்தது என்பது மட்டும் உண்மை.

அன்றைய போராட்டத்தின் எழுச்சிக்காலப்பகுதியில் பராதநாட்டியத்தினை தமது பிரச்சார நிகழ்வுகளிற்கம் அஞ்கலி நிகழ்வுகளிற்கும் எழுச்சி நடனமாக பல மேடைகளில் வலம்வந்தது. இதற்கு அன்று நடன ஆசிரியர்களும் மாணவர்களும் தேவைப்பட்டிந்தனர். இன்று இந்நடனம் தமிழர் பாரம்பரிய நடனம் இல்லை எனவும் இது தேவதாசிகளால் ஆடப்பட்ட ஓர் கலைவடிவம் என்ற கண்டுபிடிப்புகளையும் முன்வைக்கின்றனர். தமக்கு ஆதாயத்தினை கொடுக்கும் போது ஓர் தேசிய கலைப்படைப்பாக பிரச்சாரம் செய்தாவர்கள் இன்று இக்கூற்றினை தலை கீழாக புரட்டிப்போடுகின்றனர்.

நான் இங்கு இக் கலை வடிவம் ஓர் தமிழர் தேசியகலையா அல்லது முற்போக்கு கலைவடிவமா என்பதனை விவாதிக்கவரவில்லை. ஆனால் இக் கலை வடிவம் ஆயுதபோரட்டத்தின் எழுச்சிகாலத்தில் தனது மரபுகளை உடைத்து புதிய யுக்திகளையும் தேடல்களை தோற்றுவித்தது என்பதனை மறுக்கமுடியாது. ஆகவே இது ஓர் கலைவடிவம் ஆர்வம் உள்ளவர்கள் கற்றுகொள்ளலாம் அல்லது கற்பிக்கலாம். அன்றைய நிலைமையில் இக்கலைக்கு ஓர் உந்துதலாக நாட்டியமயில் நிகழ்ச்சி அமைந்திருந்தது. இந்நிகழ்வின் மூலம் ஆசிரியர்கள் பெற்றோர்கள்; மாணவர்கள் மற்றும் மிக முக்கியமாக விடுதலைப்புலிகளின் கிளையினர் பலன் பெற்றிருந்தனர் என்பதனை யாரும் மறுக்க இயலாது.

இந்நாட்டு சட்டவிதகளின் அடிப்படையில் சுவிற்சர்லாந்து சிவில்சட்டமான Art. 60 ff. ZGB சரத்தின் கீழ் யார் வேண்டுமானாலும் அரசியல் கலை மதம் விளையாட்டு என பல வித ஓருமைப்பாட்டுடன் ஓர் சங்கத்தினை நிறுவ சுவிற்சர்லாந்தில் வசிக்கும் அனைத்து பிரஜைகளிற்கும் உருமை உண்டு. மிக குறைந்தது இரண்டு பேர் மட்டுமே ஓர் சங்கத்தினை உருவாக்குவதற்கு போதுமானது. ஓர் சங்கமானது தனது பெயரை சட்டரீதியில் வேறு எவரும் பாவிக்காமல் தடுப்பதற்கு மாத்திரமே சிவில் சரத்து Art. 61 ff. ZGB  கீழ் ஓர் வியாபர நிறுவனம் பதிவுசெய்வதுபோல் மாநில வியாபரபதிவு திணைக்களங்களில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இவ்வகை சங்கங்கள் தமக்கான அங்கத்தவர்களை சேர்த்தபின்னர். இது தன்னால் வரையப்பட்ட சட்டவிதிகளின் அடிப்படையில். அமைப்பின் நிர்வாகிகளின் நிர்வாக காலத்தினை ஓன்று அல்லது இணர்டு வருடங்ளுக்கு மேற்பட்டதாக என நிர்ணயம் செய்து கொள்ளலாம். ஆதனடிப்படையில் ஓர் நிர்வாகத்தின் காலம் முடிவடையும் போது அங்த்தவர்களாக தம்மை இணைத்து கொண்டவர்கள் பொது கூட்டத்தில் புதிய நிர்வாகத்தினை அல்லது அதே நிர்வாகத்தினை தெரிவுசெய்து கொள்ளலாம்.

இவற்றை புரிந்து கொண்டோ அல்லது புரிந்து கொள்ளலாமல் மக்களை கொண்டு நிர்வாகம் தெரிவு செய்யவேண்டும் என குறிப்பிடுவது ஓர் அரசுக்குள் இன்னொரு அரசு நடாத்தும் ஓர் குத்தகை மனோபாவமாகும்;. இந்நாடுகளில் தஞ்சம் அடைந்த நாம் அந்நாடுகளின்ன் சட்டங்களிற்கு அமையவே வாழமுடியும். நாம் எல்லோரும் தமிழ் இனம் என்பதற்காக எமக்கான சட்டதிட்டங்களை நமோ எமக்கான அமைப்போ வரையறை செய்து கொள்ள முடியாது. ஆனால் ஓரேவிடயத்திற்கு ஆதரவான சக்திகள் ஓன்றிணைந்து ஓர் சங்கத்தினை தோற்றுவித்து அந்த சங்கம் மூலமாக தமது கோரிக்ககைளை முன்வைத்து பெரும்பாண்மை கருத்திற்காக போரடாலாம்.

விடுதலைப் புலிகளின் கிளை என தம்மை  அறிமுகப்படுத்தி இந்நாடுகளில் செயற்பட்டவர்கள் ஏற்கனவே இயங்கிவந்த அல்லது இயங்கி வருகின்ற அமைப்புகளை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்துகொள்ள முடியாது. ஓவ்வொரு அமைப்புகளும் தமக்கே உரிய தனித்தன்னைமயையும் நோக்கங்களையும் கொண்டவையாகவே இருக்கமுடியும்.

ஓர் இரு நாட்களில் இவர்களின் தமது கட்டுப்பாட்டிற்குள் இருந்த அனைத்து நிறுவனங்களையும் மக்கள் மயப்படுத்த போவதாக ஓர் அறைகூவலை விடுத்திருந்தனர். இவர்கள் யார் மக்கள் மயப்படுத்துவதற்கு? யார் இவர்களிற்கு அதிகாரம் வழங்கியது. கடந்தகலாயங்களில் கோயில்களை கைவகப்படுத்துவதற்கு தாம் ஓர் கூட்டத்தினை அழைத்து சென்று உடனே அங்கத்தவர்களாக்கி புதிய நிர்வாகத்தினை தம்மால் கொண்டுவரப்பட்ட பினாமிகளிடம் ஓப்படைத்த மக்கள் மயப்படுத்தியதையும் சுவிற்சர்லாந்து வாழ் தமிழ்மக்கள் மறந்திருக்கமாட்டார்கள் எனநம்புகின்றேன்.

பரதம் ஓர் கலைவடிவம் இதனை கற்பிக்கும் ஆசிரியர்கள் தமது நலன்கருதியும் மாணவர் நலன்கருதியும் பொதுவானவர்களினால் ஓழுங்கு செய்யப்படும் போட்டியில் கலந்து கொள்ள விரும்புகின்றனர். திரட்டப்படும் நிதிக்கு குறிவைக்கன்றது இன்றும தம்மை; விடுதலைப்புலிகளின் கிளை என அடையாளப்படுத்தும் குழு.

எவ்வகையில் கராட்டி வகுப்புக்கள் நடைபெறுகின்றதோ அதேவகைகளில் அவர்களும் ஓர் போட்டி நிகழ்ச்சியை நடாத்தி மாணவர்களின் திறமைகளளை கணிப்பிடுகின்றனரோ. அதேவகையில் தான் நாட்டியமயில் இசைக்குயில் போன்ற போட்டி நிகழ்ச்சியை பார்க்கமுடியும்.

5 பேர் கொண்ட நிர்வாகத்தில் இரண்டுபேர் விலகிவிட்டால் இருக்கின்ற மூன்று பேர்களிற்கே அவ் அமைப்பை வழிநடத்துவதுற்கு உரிமை உண்டு. சரியான முறையில் அங்கத்துவர் இணைக்கப்படாததும் அதற்கான கால நேர அடிப்படையில் கூட்டங்கள் நடத்தாதும் நிதி விபரங்கள் வெளிப்படைத்தன்மையுடன் வெளிப்பாடுத்தாமையே இவர்கள் விட்டதவறாக பார்க்கமுடிகின்றது.

இளைஞர்களிடம் ஓப்படைப்பது எனபது ஓர் நிர்பந்தமாக அமையமுடியாது. புதிய நிர்வாகத்தினை தெரிவு செய்யும் முழு உரிமையும் அங்கத்துவர்ளிற்கே உள்ளது.  சொலத்தூண் வாழ் பொதுமக்களாகிய எமக்கு எவ்வித உரிமையும் கிடையாது.

இன்று குத்தகை மனப்பாண்பிற்கு எதிராக பல தமிழர்கள் குரல் எழுப்புகின்றனர். இது வரைகாலமும் பயத்தினாலும் ஓர் தேவைகருதி காத்து வந்த மௌனத்தினை மக்கள் கலைக்கின்றனர். இந்நடவடிக்கையினை ஆதரிக்க வேண்டியது ஓவ்வொரு ஐனநாயக வாதியின் கடமை என நான் கருதுகின்றேன். இதைவிட்டு விட்டு இரண்டு பகுதியையும் ஓர் கூடைக்குள் வைத்து பார்ப்பது சுயாதீனத்தினை விரும்பும் சக்திளையும் மழுங்கடிக்க வைக்கும். ஆனால் இவ்வகையில் சுயாதீனமாக இயங்கப்போவதாக அறிவித்துள்ள சொலத்தூண் நலன்புரி சங்கம் இதேபோன்ற தவறுகளையும் வெளிப்படையற்ற நிதி நடைமுறைகளை பேணுவார்களாயின் அவர்களையும் கண்டிக்கும் விமர்சிக்கு நடவடிக்கைகளிற்கு அனைவரும் முன்வரவேண்டும்.

ஓர் குடையில் தான் ஓன்று கூடுவோம் என அடம்பிடிப்பதே பன்முகத்தன்மைக்கு முரணாணது. பல கருத்துக்கள் முட்டி மோத வேண்டும். பல சுயாதீனமான அமைப்புக்கள் தோற்றம் பெற வேண்டும். ஓருங்கிணைந்து குரல் கொடுக்கும் விடயங்களில் தத்தமது சுயாதீன அமைப்பின் சார்பில் ஓர் கூட்டு நடவடிக்கiயில் ஈடுபடலாம். இவ்வகையான ஓர் போக்கே ஆரோக்கியமான ஓர் புலம்பெயா தமிழ் சமூகத்தினை உருவாக்கும். தன்னாதிக்க சர்வாதிகார முறையிலான நடவடிக்ககைள் எமது சமூகத்தினை பின்னோக்கியோ நகர்த்தும்.

கணபதிப்பிள்ளை சுதாகரன்
03.04.2017


Samstag, 18. März 2017

சுவிற்சர்லாந்தல் ஓர் மாநிலமான சொலத்தூணில் நடைபெற்று முடிந்த தேர்தலும் வேட்பாளாராகிய நான் பெற்ற அனுபவங்களும்.


கடந்த 12 ம் திகதி சொலத்தூண் மாநிலத்திற்கான தேர்தல் நடந்து முடிந்தது. சொலத்தூண் மாநிலத்தில் உள்ள 10 பிரதேசங்கள் 5 தொகுதிகளாக்க பட்டு 5 தொகுதிலிலும் தொகுதிவாரியாக வேட்பாளர்கள் நிறுத்தபட்டிருந்தனர். இம் முறை மூன்று தொகுதிகளில் 4 தமிழ் வேட்பாளர்கள் சோசலிச ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்டிருந்தனர். ஓரு தமிழ் வேட்பாளாகளும் வெற்றிபெறவில்லை. இது ஒன்றும் ஆச்சரியப்படக்குடிய விடயமில்லை. சொலத்தூண் மாநிலம் ஓர் வலதுசாரி அரசியலை கொண்ட ஓர் மாநிலமாகவே பல காலமாக இருந்து வந்துள்ளது. இம் முறை சொசலிச ஜனநாயக கட்சி மாநிலத்தில் இரண்டாவது பலம் பொருந்திய கட்சியாக மாற்றம் பெற்றுள்ளது. இது சோசலிச ஜனநாயக கட்சிக்கு கிடைக்கபெற்ற மாபெரும் வெற்றியாகும்.

மாநில பாராளுமன்றில் 100 ஆசனங்களிற்காக நடைபெற்ற தேர்தலில் வௌ;வேறு கட்சிகளில் இருந்து 505 வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர். இவர்களில் 364 ஆண்களும் 141 பெண்களும் போட்டியிட்டிருந்தனர். கடந்த 4 வருடங்களிற்கு முன்னர் நடைபெற்ற தேர்தலில் பெண் வேட்பாளர்கள் 29.8 விகிதமாக  அமைந்திருந்தது. இவ்வாண்டு நடைபெற்ற தேர்தலில் பெண்வேட்பாளர்கள் (27.9) 2 விகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

சோலிச ஜனநாயக கட்சி 2013 ம் ஆண்டு நடைபெற்ற மாநில அவை தேர்தலில் 19 இடங்களை மட்டுமே கைப்பற்றி இருந்தது. இம் முறை 4 இடங்களை மேலதிகமாக பெற்றுள்ளது குறிப்பிடதக்கது. வலது சாரிகட்சிகளான சுவிற்சர்லாந்து மக்கள் கட்சி 1 இடத்தினையும் கத்தோலிக்க மக்கள்கட்சி 2 ஆசனங்களையும் பசுமை லிபரல் கட்சி 1 இடத்தினை இழந்துள்ளனர். தேர்தலில் 35.35 விகிதமான மக்களே கலந்துகொண்டுள்ளனர் என்பது ஓர் வருத்தக்க நிகழ்வு.
தேர்தலில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்களின் வாக்கு விபரங்கள்.

இராசமாணிக்கம் சிறீ (Olten-Gösgen)
பெற்ற மொத்த வாக்குகள் 2646
விருப்பு வாக்குகள் 135
SP சொசலிச ஜனநாயககட்சிக்கு கிடைக்கபெற்ற மொத்த ஆசனம் 7
கட்சிக்கு கிடைத்த மொத்த வாக்குகள்: 98953
பிரதேசத்திற்கான மொத்த ஆசனங்கள்: 29


சித்தம்பரம் தனுஜா (Olten-Gösgen)

பெற்ற மொத்த மொத்த வாக்குகள் 630
விருப்பு வாக்குகள் 236
JUSO இளையோர் சொசலிச ஜனநாயககட்சிக்கு கிடைக்கபெற்ற மொத்த ஆசனம் 1
கட்சிக்கு கிடைத்த மொத்த வாக்குகள்: 22493
பிரதேசத்திற்கான மொத்த ஆசனங்கள்: 29



சுந்தரலிங்கம் சுலோஜன் (Dorneck-Thierstein)
பெற்ற மொத்த வாக்குகள் 1384
விருப்பு வாக்குகள் 71
JUSO
சொசலிச ஜனநாயககட்சிக்கு கிடைக்கபெற்ற மொத்த ஆசனம் 3
கட்சிக்கு கிடைத்த மொத்த வாக்குகள்: 18402
பிரதேசத்திற்கான மொத்த ஆசனங்கள்: 13



கணபதிப்பிள்ளை சுதாகரன் (Bucheggb.-Wasseramt)
எடுக்கபட்ட மொத்த வாக்குகள் 2629
விருப்பு வாக்குகள் 350
சொசலிச ஜனநாயககட்சிக்கு கிடைக்கபெற்ற மொத்த ஆசனம் 6
கட்சிக்கு கிடைத்த மொத்த வாக்குகள்: 69333
பிரதேசத்திற்கான மொத்த ஆசனங்கள்: 22



தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தமது சொந்த நிதியின் அடிப்படையில் தத்தமது தேர்தல் பிரச்சாரத்தினை மேற்கொண்டிருந்தனர். சோசலிச ஜனநாயக கட்சி வேட்பாளர்களிடமே தத்தமது தேர்தல் பிரச்சாரத்தினை ஓப்படைத்திருந்தது. எந்த வித நிதிப்பங்களிப்பினையோ செலவுகளையோ கட்சி பொறுப்பெடுக்கவில்லை.
நான் இத்தேர்தலில் வெல்வதற்கான சந்தர்பம் குறைவு என்பதனை முன் கூட்டியே கணிப்பிட்டிருந்தேன். என்னால் வழங்கப்பட்ட செவ்விகளிலும் இதனை பதிவு செய்திருந்தேன். தனியே முகநூல்கள் முலமாகவும் டிவிட்டர் முலமாகவும் இணையத்தள மூலமாகவே எனது அதிகமான தேர்தல் பிரச்சாரத்தினை மேற்கொண்டிருந்தேன.;
கட்சியால் ஏற்பாடுசெய்து கொடுக்காட்ட தொiபேசி பிரச்சாரத்தில் தவறாது கலந்து கொண்டிருந்தேன். மேலும் மக்களை சந்தித்து நேரடியாக பிரசுரங்களை விநியோகித்திருந்தேன். இவ்வகை செயற்பாடுகள் மட்டுமே எனக்கு 2629 வாக்குகளையும் 350விருப்பு வாக்குகளை பெற்றுதந்திருந்தது. 



ஓரு தரப்பினரால் எனது தேர்தல் பணிகளை முடக்கும் வகையில் பல முகநூல் பதிவுகள் இடப்பட்டன. எனது தேர்தல் பிரச்சாரத்திற்கு ஓத்துழைத்த சுவிற்சர்லாந்து பாராளுமன்ற உறுப்பினருக்கு மின் அஞ்கல்கள் மூலாமாக எனக்கு வழங்கும் ஆதரவினை திரும்பப்பெறுமாறு அழுத்தம் கொடுத்தனர். மேலும் மாநில கட்சிகளிற்கும் என்னைபற்றி பொய்யான தகவல்களை வழங்கியிருந்தனர். அப்படி இருந்தும் இத்தேர்தல் எனக்கு முதல் தேர்தல் ஆயினும் பல அனுபவங்களையும் புதிய பரிமாணங்களையும் அறியத்தந்திருந்தது. தமிழின துரோகி என்ற அடையாளத்தினை அதிதீவிர தமிழ் தேசியவாதிகள் எனக்கு வழங்கியிருந்தனர். இலங்iயில் தமிழினம் ஆயுதபோராட்டத்தில் தமது கல்வி வாழ்வாதரம் சொந்த நிலங்கள் என பல்வேறுபட்ட விடயங்களை இழந்து ஓர் அங்கவீனமான சமூகமாக்கபட்டுள்ளது. ஓர் மிக குறைந்த எண்ணிக்கையை கொண்ட ஓர் இனத்தினால் மேற்கொள்ளபடும் ஆயுதப்போராட்டங்கள் போராட்டம் ஆரம்பிக்கபட்ட காலத்தில் இருந்த நிலைமையை விட பி;னோக்கியே எடுத்துசெல்லும் என்பதற்கு தமிழர் போராட்டம் ஓர் சான்றாகும். புலம்பெயர் அதிதீவிரதமிழ் தேசியவாதிகளின் யுத்தம்மீதான காதலுக்கும் அதிதீவிரவாத அரசியலுக்கு என்றும் எதிரானவன். எனது தேர்தல் பிரச்சாரத்தின் போது பலர் என்னிடம் கேட்ட கேள்வி ஈழப்போராட்டம் பற்றிய நிலைப்பாடு என்ன? இந்த கேள்வி எழுப்பட்டதன் நோக்கம் எனது பிரதிநிதித்துவத்தால் ஈழப்போரட்டத்திற்கு என்ன இலாபம் என்பதிலிருந்தே தோற்றம் பெறுகின்றது.

நான் சுவிற்சர்லாந்தில் உள்ள 26 மாநிலங்களில் உள்ள ஓர் மாநிலமான சொலத்தூண் போட்டிபோடும் ஓர் சாதாரண வேட்பாளாரக மட்டுமே என்னைபார்த்தேன். நான் போட்டியிடும் பிரதேசத்தில் உள்ள சுவிற்சர்லாந்து பிரஜைகள் என்னைப்போன்று அகதிதஞ்சம் கோரி இன்று பிராஜா உரிமைபெற்ற அனைத்து வெளிநாட்வர்கள் எதிர்நோக்கும் அரசியல் சமூக பிரச்சினைகளில் எனது பங்கு என்ன என்பதனை பற்றியே கவனம்செலுத்தினேன். தேர்தலில் நான் ஈழத்தமிழர்களிற்காக குரல் கொடுக்கப்போகின்றேன் அதற்காகவே வேட்பாளர்களாகியுள்ளேன் என அறிவித்திருந்தால் அதிதீவிர தேசியவாதிகள் எனக்கு வாக்களியுங்கள் என தன்னிச்சையாகவே பிரச்சாரத்தினை மேற்கொண்டிருப்பர். அது மட்டுமல்லாது பல தமிழ் மேடியாக்கல் என்னை முன்நிலைப்படுத்தி இருக்கும். இவ்வகையில் சார்த்தியமற்றதை கூறி வாக்கு குவிக்கு அரசியலை உடைக்க விரும்பினேன் அதனை நேர்மையாக செய்துள்ளேன்.

ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்டமற்ற அரசியல் சமூக போராட்டங்களிற்கு என்றும் ஆதரவாளனாகவே இருப்பேன். ஆனால் தேசியம் என்ற போர்வையில் எமது மக்களை படுகுழியில் தள்ளும் எவ்வித போராட்டங்களிற்கு என்றும் எதிரானவனகவே இருப்பேன். இதேபோன்று இலங்கையில் நிலவும் பொளத்த பேரினவாத அரசியலுக்கு என்றம் எதரிரானவனகாவே இருப்பேன் என்பதனையும் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றேன்.

ஜரோப்பிய ஜனநாயகத்திற்கு ஏற்றவகையில் நடைமுறைக்கு சாத்தியமானதினையே எனது கோரிக்ககையாக முன்வைத்ததேன். இலங்கை வாழ் தமிழ்மக்களின் அரசியலை போட்டு குழப்பவில்லை. பொப்புலாரிட்டி அரசியல் செய்வதை நான் தனிப்பட்ட முறையிலும் விரும்பவில்லை. பலவித எதிர்ப்புக்களில் மத்pயியும் நான் யாதார்த்தமான கோரிக்கைகளையே முன்வைத்தேன்.

நான்கு தமிழர்கள் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்று போட்டி போட்டபோது சுவிற்சர்லாந்து மக்களிடம் இருந்து எவ்வித எதிர்ப்புகளும் கிளம்பவில்லை. மாறாக தமிழர்கள் மீதான நன்மதிப்பு இன்னமும் ஓர் படி கூடுதலாக வளர்ந்துள்ளதேயே அவதானிக்க கூடியதாக உள்ளது.
ஓவ்வொரு வேட்பாளர்களும் இந்த மாநில அரசின் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளை கவனத்திற்கு எடுத்து Smartvote என்ற இணையத்தளம் 54 வினாக்களை வேட்பாளர்களிடம் முன்வைத்து இருந்தது.; இதற்கான பதில்கள் தொகுக்கபட்டு ஓர் சிலந்திவலை வடிவமைப்பிற்குள் கொண்டுவரப்பட்டிருந்தது.
வெளிநாட்டு அரசியல் சமூக அரசியல் நிதி கல்வி போன்ற பல்வேறு விடயங்களில் உங்களது நிலைப்பாடுகளை தொகுத்து ஓர் வரைபடத்தின் மூலம் இலதுவாக வெளிப்படுத்தபட்டிருந்தது. வாக்காளர்களும் தமக்கான கேள்விகளுக்கு பதில்களை அளிப்பதன் மூலம் தமது நிலைப்பாடுகளிற்கு சார்பான வேட்பாளர்களை இலகுவில் இனம்கண்டுகொள்ள இவ் இணையத்தளம் உதவியுள்ளது. சுவிற்சர்லாந்தில் நடைபெறும் அனைத்து தேர்தல்களிற்கான வினாக்கால் இவ் இணையத்தளத்தில் தொகுக்கபட்டுள்ளது. பல வாக்களர்கள் எனது அரசியல் நிலைப்பாடுகளை இனங்கண்டு கொண்ட நிகழ்வுகள் நடந்துள்ளது. கீழே காணப்படும் சிலந்தி வரைபடத்தின் மூலம் எனது அரசியல்நிலைப்பாட்டினை புரிந்து கொள்ளலாம். 
வளர்ந்து வரும் கணணிமயமாக்கலில் எதிர்காலத்தில் தமது அரசியல் நிலைப்பாட்டிற்கு ஆதரவான வேட்பாளர்களையும் கட்சிகளையும் இனம்காணுவதற்கு இவ்வகை இணையத்தள நடவடிக்கைகள் மேலும் உதவும்.
போட்டியிட்ட 21 பேரில் நான் 14வது இடத்தினை பெற்றுகொண்டேன். தமிழர்கள் பற்றி சுவிற்சர்லாந்து மக்களிடம் இருந்த ஓர் அங்கீகார மனோபாவமும் எனக்கு கணிசமான வாக்குகளை கொடுத்துள்ளது. மிக சொற்பமான தமிழ் மக்களிற்கே வாக்களிக்கும் உரிமை இருந்ததினை எனது தொலைபேசி பிரச்சாரம் மூலம் அறிந்துகொண்டேன். நான் தொலைபேசி மூலம் பிரச்சரம் செய்த போது பல தமிழர்கள் தமது வாக்குகள் எனக்கு என உறுதிப்படுத்தியிருந்தனர்.


பல பொய் பிரச்சார நடவடிக்கைளின் போது எனக்கு மனமார வாக்களித்த எனது பகுதி வாழ் தமிழ்மக்களிற்கு இத்தருணத்தின் போது எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்ள விரும்புகி;னனறேன். எனது தொலைபேசி பிரச்சாரத்திற்கு ஓத்துழைத்த பேர்ண் சொலத்துண் வாழ் தமிழ் நண்புர்களிற்கு ஓர் மிகப்பெரிய நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.  
க.சுதாகரன்
18.03.2017

Montag, 16. Januar 2017

நான் ஓர் தமிழின துரோகியும் சிறிலங்கா அரசின் கை கூலியும்- ஓர் சுய விளக்கம



ன்னை ஓர் தமிழின துரோகி எனவும்; சிறிலங்கா அரசின் உளவு கைக்கூலி எனவும் தமிழிலிலும் யேர்மன் மொழியிலும் முகநூல் மூலமாக எனக்கு எதிரான பிராச்சரத்தினை சுவிஸ் ஈழத்தமிழர் அமைப்பின் பிரதிநிதிகள் என கூறிக்கொள்ளும் நபர்களால் முன்னெடுக்கபட்டிருந்ததினை எனது முகநூல் நண்பர்கள் அறிந்திருப்பீர்கள்.



இவர்களின் உளவுத்திறமையினால் என்னை இனங்கொண்ட விடயங்களை நீங்களும் அறிந்துகொள்ள வேண்டும். இதே போல்; இலங்கையில் எவ்வித ஆதாரமும் அற்று தம்மை விமர்சிப்பவர்ளை துரோகிளாக்கி புலிகளினால் அழித்தொழிக்கபட்ட பல புத்திஜீவிகளின் எண்ணிக்கை அதிகமானது. இவர்களினால் துரோகி என அடையாளம் காட்டுவதற்கு இவர்களால் முன்வைக்கும் இலகுவான ஐந்து காரணிகள் பின்வருமாறு.

1. அரச உளவாளி அல்லது கைகூலி
2. காட்டிக்கொடுப்பு
3. பண மோசடி
4. பல பெண்களுடன் தகாத தொடர்பு
5. தமிழ் தேசியத்தினை அங்கீகரிக்காதவர்கள்

இவற்றை போராட்ட சூழலில் வாழ்ந்த சமூகம் எவ்வித கேள்வி கேட்காது ஏற்று கொண்டது. தமிழீழ போரட்டம் முள்ளி வாய்காலில் மௌனிக்கபட்டவுடனே இங்கு சுட சுட புலம்பெயர் மக்களுடன் தமது வியாபரத்தினை தொடருவதற்காக தாம் இனி ஐனநாயக வழியில் போராட்டத்தை தொடருவதாக கூறி பல பிரிவுகளாக பிரிந்து ஓருவர் தன்னை நாடுகடந்தவர் என்றும் மற்றவர் ஈழத்தமிழர் அமைப்பு எனவும் அமைப்புக்களை நிறுவி தமக்குதானே தேர்தலை சுவிற்சர்லாந்தில் நடத்தி இருந்ததினை யாவரும் மறந்திருக்க மாட்டீர்கள். அவ்வாறு தெரிவு செய்பட்டவர்கள் பலர் இவர்களது அரசியலில் இருந்து இன்று ஒதுங்கியுள்ளனர். அவ்வாறு தமது பிரதிநிதிகளை தெரிவு செய்பட்டதால் சுவிற்சர்லாந்து புலம்பெயர் தமிழ் மக்கள் தம்மை ஏகபிரதிநிதிகளாகவும் தமக்கு சுவிற்சர்லாந்து வாழும் தமிழர்களால் புலம் பெயர் தமிழர்களின் அரசியலை தீர்மாணிக்கும் ஆணை வழங்கப்பட்டதாக கர்வத்துடன் செயற்பட்டு வருகின்றனர்.



சுவிற்சர்லாந்து சோசலிச ஜனநாயக கட்சியில் தமது பிரதிநிதித்துவத்தினை உட்புகுத்தி தமது கட்டுபாட்டில் சுவிற்சர்லாந்து தமிழ் அரசியல்வாதிகள் இருக்க வேண்டும் என கனவு காணுகின்றனர். அக்கனவை அடிப்படையாகவைத்து தமக்கு ஆமாபோடும் ஓரு சில வேட்பாளர்களிற்கு பிரச்சாரம் செய்வதும் அவர்களை தமிழ்மக்களின் ஓரே பிரதிநிதியாக காட்டும் ஓர் ஐனநாயக மற்ற நடவடிக்கையினை செய்துவருகின்றனர்.
நான் ஓர் தமிழின துரோகி இலங்கை அரசின் உளவாளி. என்று இவ்வாறு எனக்கு முத்திரை குத்துவதற்காக இவர்களால் கண்டுபிடிக்கபட்ட காரணத்தினை கண்டு மெய்சிலிர்த்துவிட்டேன். இப்படியான இவர்களது சிறப்பு திறமையாலேயே  சர்வதேச புலனாவுக்குள் தம்மை அறியாது அடைக்களம் புகுந்துள்ளார்கள்.

தம்மை ஜனநாயக சூழலில் இணைத்து கொண்டவர்கள் என தம்பட்டம் அடித்து கொண்டு. ஓரு தனிநபரிடம் எவ்வாறு தமது சந்தேகத்தினை கேட்டு அறிவேண்டும் என்ற அடிப்படை நாகரிகமே தெரியதவர்களை நான் எப்படி அழைப்பது? அது மட்டுமல்லாது நீ தமிழின துரோகி அரசின் கைகூலி இவருக்கு வாக்களிக்காதீர்கள் என முகநூல்களில் செய்திகளை பரவலாக்கிவிட்டு அதே பிரச்சாரத்தில் என்னிடம் கேள்வி கேட்பது எவ்விதத்தில் நியாயம். நீங்கள் தானே துரோகி என முடிவெடுத்துவிட்டீர்களே அதற்கு பிறகு எவ்வாறு என்னிடம் இருந்து பதிலை எதிர்பார்க்கமுடியும்.
அரசியலில் பொது வெளிக்கு வந்தால் யாரும் கேள்வ கேட்கலாம் ஆனால் அதற்கு ஓர் ஜரோப்பிய ஜனநாயக பண்புள்ளது. பொதுவெளியில் சேற்றை வாரி வீசிவிட்டு கேள்வி கெட்பதல்ல. கேள்விக்கு பதிலளிக்காமல் இருப்பதற்கும் எனக்கும் தனிமனித சுதந்திரமுள்ளது.

எனது முகநூலில் Die srilankische Diaspora in der Schweiz என்ற பக்கமுள்ளது.
இந்தமுகநூல்பக்கத்தினை நான் கூடுதலாக நான் எனது சுவிற்சர்லாந்து நண்பர்களிற்கு யேர்மன் மொழிப்பதிவுகளிற்காகவே பயன்படுத்திவந்துள்ளேன். இது ஓர் அமைப்பல்ல எனது முகநூலில் என்னால் உருவாக்கபட்ட ஓர் முகநூல்பக்கம். ஏன் நான் சிறீலங்கா டயஸ்பொரா என்ற பெயரை பயன்படுத்தினேன் என்பதற்கு பல காரணங்கள் உள்ளன.

1.டயஸ்பொரா என்ற சொல்லை எடுத்துப் பார்த்தால் அது – êதர்கள் தங்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதைக் குறிக்கும் ஓரு சொல். அதேபோல் நாமும் யுத்தினால் நாட்டைவிட்டு வந்தவர்கள்.

2. இலங்கையில் நடைபெற்ற யுத்ததில் இருந்து தனியே தமிழர்கள் மட்டும் நாட்டை விட்டு வெளியேறவில்லை. சிங்கள மக்களும் பலர் ஜரோப்பிய நாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளனர். இவர்களில் பல பத்திரிகையாளர்களும் மனிதஉரிமைவாதிகளும் உள்ளடங்குவர்.



3. 2007 ம் ஆண்டு சுவிற்சர்லாந்து நீதித்துறையினால் சுவிற்சர்லாந்தில் வாழும் தமிழர்களை பற்றி ஆய்வின் வெளியீட்டிற்கும் Die srilankische Diaspora in der Schweiz என்றே பெயரிட்டிருந்தனர். (2007 ம் ஆண்டு )

4. சுவிற்சர்லாந்து அரசியல் என்று வரும் பொழுது இங்கு பல தரப்பட்ட இன மக்களின் நலன்களை கவனத்தில் கொண்டே ஆகவேண்டும்.

மேலும்இந்த முகநூல்பக்கத்தித்தில் சிறிலங்கா அரசினை விமர்சிக்கும் வகையிலான கார்ட்டூன் படமும் சிங்கள பேரினவாத பிரதிநிதிகளாக தம்மை அடையளப்படுத்தி தெருச்சண்டையில் ஈடுபட்டிருந்த புத்த பிக்குகளின் விடியோவும் பதிவிடப்பட்டிருந்தது. இதனைப்பார்த்தும் எமது அரசியல் தத்துக்குட்டிகளும் ஞானசூனியங்களும் இது சிறிலங்கா அரசினால் உருவாக்கபட்ட வலைப்பின்னல் என நிறுவியுள்ளனர்.

சிறீலங்கா அரசு எனது உளவுப்பணிக்கான சம்பளத்தினை தவறுதலாக தங்கள் வங்கி கணக்கிற்கே அனுப்பி உள்ளார்கள் போலும். ஆதனால் தான் உங்களிற்கு சந்தேகம் ஏற்பட்டதோ? உங்களுடன் இணைந்து தமிழ் தேசியம் பேசிய பலர் இன்று இலங்கை அரசுடன் இணைந்து பல எஸ்டேட்டுகளையும் வாங்கி பல நிறுவனங்களையும் கொள்வனவு செய்து நடாத்தி வருவது மட்டும் ஏன் உங்கள் கண்களிற்கு புலப்படவில்லை? அல்லது கடைசி யுத்தகாலத்தில் சேகரிக்கபட்ட பணங்கள் தனிநபர்களின் கணக்குகளிற்கு மாற்றபட்டது ஏன் உங்களிற்கு தெரயாமல் போனது? அல்லது சேகரிக்கபட்பட பணத்திற்கான கணக்கு விபரங்களை மக்களிற்கு முன்வைக்கபடாது மறைக்கபட்டதிற்கு எதிராக ஏன் உங்கள் எதிர்ப்பு குரல் எழும்பவில்லை? இதற்கெல்லாம் சுவிற்சர்லாந்து தழிழ் மக்கள் உங்களிற்கு ஆணைபிறப்பிக்வில்லையா?


இப்பக்கத்தில் கடந்த ஆண்டு 13.02.2016 ஓழுங்குபடுத்தபட்ட நாடுகடத்தல் சட்டமூலத்திற்கு எதிராக என்னாலும் இன்னும் இரண்டு கட்சி தோழர்களினால் ஓழுங்கு செய்யபட்டிருந்தது. கலந்துரையாடலிற்கான அழைப்பு இப்பக்கத்திலிருந்தே அறிவக்கபட்டிருந்தது. மற்றைய தோழர்கள் தமது வட்த்திற்கும் அழைப்பிதலை அனுப்பியிருந்தனர். சுவிற்சர்லாந்து சோசலிச ஜனநாயக கட்சியிலும் அங்கம் வகித்து கொண்டு சுவிஸ்ஈழத்தமிழர் பேரவையின் அங்கத்தவர்கள் அல்லது ஆதரவாளர்கள் அல்லது அமைப்பாளராக வலம்வரும் எந்தவொரு நபரையும் நான் தனிப்பட அழைக்கவில்லை.

ஆனால் மற்ற தோழர்கள் தமது நட்புவட்டத்திற்கும் உங்களைப்போன்றவர்களிற்கும் அழைப்பு விடப்பட்டிருக்கின்றது. ஓர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன்னர் யாரால் இந்த நிகழ்ச்சி ஓழுங்குபடுத்தபடுகின்றது என்பதை கூட ஆராயது மேடை கிடைத்தால் காணும் என நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மட்டுமல்லாது நிகழ்ச்சியில் மைக்கை பிடித்து உரையாடிவிட்டு. இன்று 2017ம் ஆண்டு இது சிறிலங்கா அரசினால் ஓழுங்கு செய்யபட்டுள்ள நிகழ்ச்சியில் எமது படங்களை நீக்கி விடுமாறு கோருவது நகைப்பிற்கு இடமானது. நீங்கள் எந்த நிகழ்ச்சியை நடாத்துபவர்களிற்கு ஓர் கோரிக்கையை விடுங்கள். நாங்கள் தமிழ் அல்லது ஈழம் என்ற பெயரைக்கொண்ட அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்து கொள்ளுவோம் என வெளிப்படையாக அறிவியுங்கள்.

நாடுகடத்தல் சட்டமூலம் எவ்வித ஆபத்தானது என்பதை நான் விளங்கப்படுத்தும் போது இவ்வகையான கடும்போக்கான சட்டங்களே யுத்ததினையும் மனித உரிமை மீறல்களையும் காட்டுமிராண்டி அரச தர்பார்களையும் இலங்கையிலும் இந்தியாவிலும் நடைமறைப்படுத்த சாத்தியமாக்கியது. என்பதற்கு ஆதாரமாக திரையில் காட்டபட்ட படத்தினையும இங்கு காணலாம்.

இலங்கை இந்தியாவில் அமுலாக்கபட்ட இறுக்கமான சட்டமூலங்கள்;


  1. Prevention of Terrorism Act of 1978 (PTA)
  2. Terrorist and Disruptive Activities (Prevention) Act (TADA) (1985–95


எந்த அரச உளவு நிறுவனம் தன்னால் கொண்டுவரப்பட்ட அத்துடன் நடைமுறையில் ஓர் சட்டமூலத்தினை அம்பலப்படுத்தி விமர்சனம் செய்யும். நான் நினைக்கின்றேன் உங்களை போன்ற அரசியல் ஞான சூனியங்களால் மட்டுமே இப்படி ஓரு கண்டுபிடிப்பை கண்டுபிடிக்க முடியும் என்பதனை யாராலும் மறுக்கமுடியாது.

நான் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளிலும் அவர்களது வாழ்வாதாரத்துடன் அக்கறையுடையவன.; நீங்கள் வரையறுத்துள்ள தமிழ் தேசியவாதி ஆக நான் இல்லை. ஆனால் உங்களைப் பொறுத்தவரை தமிழ் தேசியத்தினை ஏற்காதவன் ஓர் துரோகி. உங்களுடைய பார்வையில் நானும் துரோகியாக இருப்பதை எண்ணி பெருமைப்படுகின்றேன். உங்களுடைய சான்றிதல் எனக்கு எவ்வித பாதிப்பiயும் ஏற்படுத்ததது.

சுவிற்சர்லாந்து வாழ் தமிழ் மக்கள் இன்று நீங்கள் சொல்வதை கேட்டு தலையாட்டும் காலம் கடந்துவிட்டது. சுவிற்சர்லாந்து வாழ் தமிழ்மக்கள் இன்று ஜனநாயக காற்றை சுவாசிக்கின்றார்கள். இச்சுதந்திர காற்றினை சுவாசிக்கும் எந்த தமிழரும் உங்களது ஞானசூனிய அரசியலிற்கு எடுபடமாட்டார்கள் என்ற உறுதியான நம்பிக்ககை எனக்கு உண்டு.

சோசலிச ஜனநாயக கட்சி தலைமை பீடத்திற்கு எழுதிய கடிதத்தில் என்னை சிறீலங்கா அரசின் கைக்கூலி எனவும.; நான் ஓர் ளுஉhறயசணநள ளுஉhயக  (கறுத்த ஆடு)இந்த கறுத்த ஆட்டை வெளியேற்ற வேண்டுமென குறிப்பிடபட்டுள்ளது. ஓர் இனவாத சொல் தொடர்களை பாவிப்பது ஓர் தவறானது என்ற அடிப்படை அறிவில்லாதவரினாலே கடிதம் எழுதப்பட்டுள்ளது. இனவாதத்தினையும் சாதிய ஓடுக்குமுறையினை வெளிப்படுத்தும் சொற்களை எமது பானையிலிருந்து நீக்க வேண்டும். இந்த அடிப்படை அம்சமும் தெரியாமல் சோலிச ஜனநாயக கட்சியில் அங்கம் வகிப்பது ஆச்சரியத்தினை தருகின்றது. இவர்களை போன்றவர்களிற்கான சரியான தரிப்பிடம் வலதுசாரி முகாம் என்றே கருதுகின்றேன்.
நான் சுவிற்சர்லாந்து சொலத்தூண் மாநில அரசியலிற்கு உட்புகுந்தது இலங்கை அரசியல் செய்யவில்லை என்பதனை ஆணித்தரமாக கூற விரும்புகின்றேன்.

மேலும் சுவிற்சர்லாந்து வாழ் பல்லின பாலியல் உரிமைகளிற்காகவும் இநநாட்டில் குடியேறி அனைத்து இனத்தவர்களின் வதிவிட உரிமைகளிற்காகவும் அனைவருக்கும் இன மத வேறுபாடற்ற வேலைவாய்ப்பு கல்வி உரிமைகளிற்காகவும். நிறவாதம் சாதியம் போன்ற அனைத்து சமூக ஓடுக்குமுறைகளிற்காகவும். அதிதீவிர தேசியத்திற்கு எதிராகவும் அதிதீவிரமத அடிப்படைவாதத்திற்கு எதிராகவே எனது சுவிற்சர்லாந்து அரசில் அமையும்.

இவ்விடயங்களை நான் யேர்மன் மொழியில் பதில் அளிக்கவிரும்பாததிற்கும் ஓருவருடைய பெயர்களும் பாவிக்கபடாதிற்கு பின்வரும் காரணங்களே முக்கிய காரணிகளாகும். தமிழ்ஈழ அரசியலில் ஈடுபடும் உங்களை போன்றவர்களிற்கு நன்றாக தமிழ் பேச எழுத வரும் என்று நம்புகின்றேன். அப்படி தமிழ் தெரியாவிடன் உடன் தமிழை கற்று கொள்ளுங்கள்.

1. இவ்வருடம் பல தேர்தல்கள் பல்வேறு மாநில கிராம நகர சபையில் நடைபெற இருப்பதால். உங்களது சேறடிப்புகள் பற்றிய யேர்மன் மொழி விவாதம் பல் வேறு குடியேற்ற பின்புலம் கொண்ட வேட்பாளர்களையும் பாதிக்கும்.

2. உங்களது அரசியல் ஞானசூனிய நடவடிக்கையை மற்றைய நாட்டவர்களிற்கு முன்னிலையில் நான் அம்பலப்படுத்த விரும்பவில்லை.

மீண்டுமொரு முறை சுவிற்சர்லாந்து அரசியலுக்கு வருபவர்கள் இந்நாட்டு அரசியலில் முதற்கண் கவனம் செலுத்துங்கள். தமிழ்ஈழ அரசியலை தனித்து நடத்துங்கள். இந்நாட்டு அரசியலில் கால்பத்திக்கும் போது நீங்கள் அனைத்து குடியேற்றவாதிகளிற்குமான குரலாக ஒலிக்கவேண்டும்.

கணபதிப்பிள்ளை சுதாகரன்
17.01.2017