Freitag, 23. Januar 2015

தோழர் யோகாவின் அரசியல் சமூக வாழ்வு பற்றிய எனது பார்வை


(புலம் பெயர் நாடக எழுத்துருக்கள் நூல் அச்சுக்கு தயார் நிலையின் போது தோழர் தன்னைப்பற்றிய ஓர் குறிப்பை எழுதித்தருமாறு கேட்டிருந்தார். அவரின் வேண்டுகோளிற்கு இணங்க நான் கீழ் வரும் குறிப்பினை எழுதி தோழருக்கு அனுப்பிவைத்திருந்தேன். என்னால் அனுப்பிவைக்கப்பட்டிருந்த விமர்சனத்துடனான அறிமுகம் பார்வை பிரசுரிக்கப்பவாமல் தவிர்க்கப்பட்டிருந்தது. தோழர்  தன்னால் குறித்த நேரத்தில் எனது மின் அஞ்சலை பார்க்க முடிவில்லை என்ற காரணத்தினை முன்வைத்திருந்தார். இக் காரணத்தினை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனாலும் அவர் சம்பந்தபட்ட பதிவு சுவிற்சர்லார்ந்து அரசியல் சமூக வரலாற்று பதிவின் தேவை கருதி இதனை பிரசுரிக்கின்றேன். இதனை ஓர் தனிப்பட் விரோதமாக கருதாமல்  வாசகர்கள் குறிப்பில் இடம்பெற்றிருக்கின்ற அரசியல் வாழ் முறைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.)


தோழர் யோகா சுவிற்சர்லாந்து புலம்பெயர் சமூகத்தில் ஓர் முக்கிய சமூக அரசியல் பங்காளி. தோழர் இலங்கையில் பல் வேறுபட்ட அரசியல் இலக்கிய அமைப்புக்களில் முக்கிய அங்கத்துவராக இருந்ததினால் அவரின் முதிர்ச்சியும் அனுபவமும் இந்நாட்டில் புலம்பெயர்ந்த இளைஞர்களிற்கு ஓர் அனுபவ பகிர்னைவ கொடுத்தது. தோழரை நான் தழிழீழ விடுதலைக் கழகத்தில் (PLOT ) செயற்பட்ட போதே அறிமுகமானார். தோழர் அக் காலப்பகுதியில் தன்னை எந்தவொரு அமைப்பையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. ஆனாலும் அக்காலகட்டத்தில் சுவிற்சர்லாந்தில் செயற்பட்டு வந்த ஈழ விடுதலை அமைப்புக்களுடன் தனது தொடர்புகளை கொண்டிருந்தார். இயக்கங்களிடையே ஓர் தொடர்பு பாலமாகவும் செயற்பட்டு வந்துள்ளார். தளத்தில் விடுதலை இயக்கங்கள் தமக்குள் மோதிக்கொண்ட போதும் புலத்தில் நிலவிய சுமூக நிலைமைகளிற்கு தோழரின் செயற்பாடுகளும் ஓர்முக்கியமான காரணங்களாகியது.

வேறுபட்ட கருத்தோட்டங்கள் விரிவு பெற தோழரும் தனது கருத்துக்கனை பதிவு செய்யவேண்டிய தேவை உருவானது. இதன் அடிப்படையில் தோழர் கண்ணணுடன் இணைந்து ஒண்றியம் எனும் சிறு பத்திரிகையினை கொண்டுவந்தார். இச்சிறுபத்திரிகை சமூகத்தின் தேவைகளையும் இணைவாக்கம் ஈழவிடுதலை இயக்க அரசியல் சர்வதேச அரசியல் என பல்வேறு உள்ளடக்கங்களை கொண்டு வெளிவந்தது. புலத்தில் செயற்பட்ட அனைத்து ஈழ விடுதலை இயக்க அங்கத்தவர்களிற்கு ஓர் அரசியல் பார்வையை கொடுத்தது.

தளத்தில் கழகத்தில் உட்கட்சி போராட்டமும் உட்கொலைகளும் தாண்டவம்  ஆடிய போது நானும்  என்னுடன்  இணைந்து செயற்பட்ட சக தோழர்கள் அனைவரும் அமைப்பை விட்டு வெளியேறி இருந்தோம். இக்காலகட்டத்தில் தோழரின் சந்திப்புக்கள் பல விடயங்களை அலசி ஆராய உதவியது. இதன் விளைவுகளே காலப்போக்கில் சிறு சஞ்சிகையின் அவசியமும் விடுதலை இயக்கங்களின் தவறான போக்கால் அதிருப்தி உற்ற அங்கத்தவர்களை இணைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. ஆதன் வெளிப்பாடே வாசகர்வட்டம் மனிதம் வீடியோ சிறுபத்திரிகை பாரதி கலைக்குழு என உருவெடுத்தது.

தோழரின் செயற்பாடு மனிதம் ஆசிரியர் குழவில் முக்கியத்துவம் பெற்றது. மனிதம் குழவில் இருந்து பல ஆக்கங்களையும் அரசியல் பார்வைகளையும் தொகுத்திருந்தார். மனிதத்தினை ஆட்கொண்டிருந்த அதிதூயவாதத்திற்கு எதிராக தோழரின் கருத்துக்கள் சமநிலையை பேண பெரிதும் உதவியது. மனிதம் சஞ்சிகை ஐரொப்பிய நாடுகளிலும் இலஙகையிலும் இந்தியாவிலுள்ள வாசகர்களிடம் பெரிய எதிர்பார்ப்புக்களை வளர்த்திருந்தது. இவ் உயர்ந்த பட்ச எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் நிலையில் உள்கட்டுமாணம் நிலவவில்லை. இதனால் உண்மை நிலையை தெரியப்படுத்த வேண்டிய தருணம் உருவான போது மனிதம் குழு உடைந்தது.

மனிதத்தின் உடைவினை தொடர்ந்து பல மனிதம் குழு உறுப்பினர்கள் பல அரசியல் பின்புலங்களால் விடுதலைப்புலிகளை ஆதரிக்க  தொடங்கினர். அவ்வகையில் தோழரின் விடுதலைப்புலிகள் மீதான ஆதரவு எம்மவர் பலரிற்கு ஆச்சரியத்தினை கொடுத்தது.

பின்னர் தோழர் விடுதலைப்புலிகளின் கலாச்சார பிரிவினருடன் இணைந்திருந்த நாடக பயிற்சிக்கல்லூரியில் இணைந்து பல நாடகங்களை எழுதி மேடை ஏற்றி இருந்தார். ஏனது பார்வையில் தோழரின் நாடகங்களில் அவரின் தனித்துவம் மழுங்கடிக்கப்பட்டு அன்று மேலோங்கியிருந்த தேசியவாதப்போக்கே ஆக்கிரமித்திருந்தது.

புலிகளின் தோல்விக்கு பின்னரும் தோழர் தனது சமூக அரசியல் நடவடிக்ககைளை தொடர்ந்தார். இக்காலகட்டத்தில் தோழர் ராஐனுடன் இணைந்து புலிகளின் தோல்விகளை விமர்சித்தும் சர்வதேச அரசியல் போக்குகள் பற்றியும் எழுதத்தொடங்கினார். இக்காலப்பகுதிகளில் வெளியான ஆக்கங்களில் தோழரின் தெளிவான தனித்துவ பாங்கு காணாமல் போயிருந்தது.

நாமும் தோழரும் ஒன்றிணைந்து வேலை செய்ய வேண்டிய புதிய தேவைகள் உருவாகின. உள்நாட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட பல போராளிகளும் பொதுமக்களும் அங்கவீனமுற்றிருந்ததுடன் வாழ்வாதாரம் இன்றி தவிர்த்தனர். இந்நிலைமைகளிற்கு ஏதொ ஓர் வழியில் நாமும் காரணமாக இருந்தோம் என்ற குற்ற உணர்வின் வெளிப்பாடாக Support எனும் அமைப்பு தோற்றுவிக்கப்ட்டது. இவ்வமைப்பிலும் தோழரின் செயற்பாடுகள் மிக முக்கியத்துவம் பெற்றிருந்தது.

Donnerstag, 22. Januar 2015

சிறுவர்கள் பதின்ம வயதினர்க்கு ஏற்படும் மன அழுத்தமும் அதன் பாதிப்பும்


மொழிபெயர்ப்பு (க.சுதாகரன் சுவிற்சர்லாநது 3.11.2011)

சிறுவர்கள் பதின்ம வயதினர்க்கு ஏற்படும் மன அழுத்தமும் அதன் பாதிப்பும்...

பொதுவாக இளம்பராயத்தினரின் மன அழுத்தத்தினை பெரியவர்கள் கண்டறிவது மிகக் கடினமானது. ஆனாலும் பெரும்பாலும் அவர்களின் அன்றாட நடைமுறையும் அதனால் ஏற்படும் மாற்றங்களின் வெளிப்பாடுகளுமே அவர்களது மன அழுத்தினை கண்டறிவதற்கான இலகுவான பாரம்பரிய முறையாக இருந்துவருகிறது. இளவயதினரின் பருவமாற்றங்கள் புதிய விடயங்களை தோற்றுவிக்கின்றன. காதல் பிரிவு புதிய உறவுகள் அல்லது பெற்றோரிடமிருந்து ஏற்படும் பிரிவுகள் போன்ற பல்வேறுபட்ட காரணிகள் இளையோரிடம் நம்பிக்கையீனத்தினை தோற்றுவிக்கின்றன. சிலவேளைகளில் அதுவே மன அழுத்தத்தினை தோற்றுவிக்கின்ற காரணியாகவும் அமைகின்றது. சிறார்கள்; இவ்வாறு நெருக்கடியான நிலைமையில் கவலையின் நிமித்தம் சோர்வடைவதற்கு மாறாக, தமது மனத்தாக்கங்களை அதிதீவிர கோபத்தினால் வெளிப்படுத்துகின்றனர். ஆனால் பதின்ம வயதினர் தமது மனத்தாக்கங்களை வெளிப்படுத்த முடியாத நிலையில், அவர்களை மன அழுத்தம் இயல்பாக சூழ்ந்துகொள்கின்றது. இது அவர்களிற்கு வயிற்று நோ அல்லது தலைவலி போன்றவற்றை ஏற்படுத்துகிறது.

மனஅழுத்தத்தின் அறிகுறிகள்

சிறுவர்கள் 1-3 வயதுப் பிள்ளைகளிடம்...


சிறுவர்கள் 1-3 வயதுப் பிள்ளைகளிடம் காணப்படும் கீழ்வரும் குணாம்சங்கள் அவர்களிடம் மறைந்திருக்கும் மன அழுத்தத்தை வெளிப்படுத்தும் காரணிகளாகக் கொள்ளப்படுகின்றன.

- கவலை தோய்ந்த முகத்துடன் காணப்படல்

- எப்பொழுதும் பயப்படுவது அல்லது அதிகூடிய கூச்ச சுபாவத்தைக் கொண்டிருத்தல்

- மிக விரைவில் அழுவது

- விளையாடுவதற்கு விருப்பமின்றி இருத்தல்

- கூடுதலாக பெருவிரல் சூப்புதல்

- பாலியல் உறுப்புடன் அதிகம் விளையாடுதல்

சிறுவர்கள் 3-6 வயதினர்க்கான வெளிப்பாடுகள்


- கவலையுடன் இருப்பதும், உணர்வு ஏதுமின்றி சோர்வுடன் காணப்படுதல்

- முகங்கொடுக்காது பின்வாங்குவது, மிக விரைவில் ஆத்திரமடைவது

- பயங்கரக் கனவினால் அவதியுறுவது, இரவில் அடிக்கடி நித்திரையிலிருந்து எழுவது

- நண்பர்கள் இன்மை, விளையாடுவதில் ஆர்வம் காட்டாமை

- பொதுவாக எதிலும் விருப்பமின்மை

- உடல் பருமன் குறைதல் அல்லது அதிகரித்தல்

பாடசாலை செல்லும் வயதினர் - வயது 7 இலிருந்து


- கவலையாக இருப்பதாகக் கூறுவது

- தற்கொலையைப் பற்றி அதிகம் கதைத்தல்

- பாடசாலை வேலைகளில் கடினம்

- குற்ற உணர்வு

- எவற்றிலும் நம்பிக்கையீனம்

இளையோர் (பதின்ம வயதினர்)


- தன்னம்பிக்கையின்மை

- கூட்டு முயற்சிகளில் கலந்துகொள்ளாமை அல்லது அவற்றை தவிர்த்துக் கொள்ளல்

- மனதை ஒருமுகப்படுத்தும் தன்மை இன்மை

- கல்விவழி முன்னேற்றத்தில் வீழ்ச்சி

- நித்திரையின்மை அல்லது பசியின்மை

- தானாக தனது உடலில் பல காயங்களை ஏற்படுத்துவது

- தற்கொலை பற்றி சிந்தித்தல்

இவ்வாறான குணாம்சங்களுக்கு உட்படும் பல பிள்ளைகளை சோம்பேறிகள் அல்லது கோபக்காரர்களாக பெற்றோரும் சரி அல்லது மற்றையோரும் சரி சாதாரணமாகக் கருதுவதுண்டு. மாறாக அவர்களிடம் மனது சம்மந்தப்பட்ட ஏதோ ஓரு பிரச்சினை இருப்பதாகக் கருதுவதில்லை. அதைக் கண்டுபிடிக்க முனைவதுமில்லை. இந்நிலையில் அப் பிள்ளைகளுக்குச் செய்யவேண்டிய பேருதவி, பெற்றோர்களாகிய நாங்கள் அவர்களுடன் எதையும் கலந்து ஆலோசிப்பதற்கான தயார்நிலையில் இருக்கின்றோம் என்பதை தெரியப்படுத்துவதுதான். பிள்ளைகளும் அதற்கான தமது ஓத்துழைப்பினை வழங்க வேண்டியதும் முக்கியமே!

Hilfe für depressive Kinder (மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கும் பிள்ளைகளுக்கான உதவிகள்) என்ற நூலை எழுதிய Lawrence L. Kerrns என்பவர் இளம் பருவத்தினருடன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று 

விபரிக்கிறார். முக்கியமான பத்து விடயங்களை அவர் குறிப்பிடுகிறார்.

1. உங்கள் குழந்தைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது, அவர்களின் தனிப்பட்ட நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்வது, உங்கள் எதிர்பார்ப்புக்களை தெட்டத்தெளிவாக தெரியப்படுத்துவது, உங்களுடன் கலந்துபேசுவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பது.

2. பிள்ளைகளை எள்ளி நகையாடும் சந்தர்ப்பங்களை தவிர்த்துகொள்ளல், அல்லது அவ்வகையான சந்தர்ப்பங்களில் உங்கள் குழந்தைகளை தற்காத்துக் கொள்ளல்.

3. பிள்ளைகளுடனான உங்கள் ஆர்வத்தினை தெரியப்படுத்துதல், அவர்கள் சிந்திக்கும் அல்லது அச்சப்படும் விடயங்களை கேட்டு அறிந்துகொள்ளல், அவற்றில் அக்கறை எடுத்துக்கொள்ளல்.

4. பல்வேறுபட்ட சூழல்களுக்கு ஏற்ப வெற்றியை நோக்கி வழிநடத்தல். அதாவது பாடசாலைக் கல்வியில் கூடிய ஆர்வத்தை நோக்கியும்;, விளையாட்டில் வெற்றியை நோக்கியும், நட்புவட்டங்களில் நட்பை வளர்ப்பதிலும் வெற்றியை நோக்கி வழிநடத்துதல்.

5. குழந்தைகளிடம் (இழிவுபடுத்தல், மற்றவர்களுக்கு முன்னால் கண்டித்தல் போன்ற) எதிர்நிலை விமர்சனங்களைத் தவிர்த்தல். மிகத் தெளிவாக, முடிந்துபோன விடயங்கள் மீதான அபிப்பிராயங்களை அவர்களுக்கு சாதகமான முறையில் சொல்லும்போது அவர்களிடம் இருக்கும்; பயம் நீக்கப்படுகின்றது. சரியான விடயங்களில் பிள்ளைகள் மனத்தை ஒருநிலைப் படுத்தும்போது அதைப் பாராட்ட வேண்டும், மெச்ச வேண்டும். 

6. பிள்ளைகள் மீதான உங்களுடைய எதிர்பார்ப்புகள் நடைமுறைக்கு சாத்தியமா என்பதனை கவனத்தில் கொள்ளல் வேண்டும். தகுதிக்கு மிஞ்சிய எதிர்பார்ப்பு தேவையற்ற பயத்தினை பிள்ளைகள் மத்தியில் தோற்றுவிக்கும். பிள்ளைகளின் திறமைகளையும், திறமையின்மைகளையும் அவதானித்து வைத்துக் கொள்ளுதல் பெற்றாரின் முக்கிய கடமையாகும்.

7. பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அதை ஏற்றுக்கொள்ளப் பழகுதல் வேண்டும். சில சந்தர்ப்பங்களில் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத விடயங்களாக இருப்பின், அதனை சகித்துக்கொண்டு நட்புரீதியில் உங்கள் அபிப்பிராயத்தினை தெரிவித்துக் கொள்ள வேண்டும். 
பிள்ளைகளுக்கு ஆர்வமில்லாத வீட்டுப்பாடங்களில் இணைந்து உதவிசெய்து, அவ்விடயத்தில் ஆர்வத்தினை ஏற்படுத்த வேண்டும்.

8. பிள்ளைகளிடம் தாமே தனியே வேலைகளைச் செய்ய விடவேண்டும.; அவர்களால் சரிவரச் செய்ய முடியாவிடின் உங்கள் உதவியைக் கொடுக்கலாம். அதன்மூலம் தன்னம்பின்கை வளர்க்கப்பட வேண்டும்.

9. அவர்களுடைய தனி அறையின் ஒழுங்கமைப்பை அவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள். விரும்பினால் உங்களின் ஆலோசனையை வழங்கலாம். இவ்வகை நடவடிக்கைகள் முடிவெடுக்கும் தீர்மானத்தினை வளர்க்கும். 

10. உள்வாங்கும் தன்மையை அல்லது கல்விகற்கும் தன்மையை வளர்த்துவிடுங்கள். தன்னைப் பற்றிய சுயமதிப்பீட்டைச் செய்ய கற்பிக்க வேண்டும்.

66 வீதமான இளையோர் -பிழையான வழிமுறையாக- தற்கொலையை ஓர் தீர்வாக்குகின்றனர். இவ் வழிமுறை தொடர்வதனை தடுக்க வேண்டும். “வியன்” இல் உள்ள இளையோர் சம்பந்தமான மனோதத்துவ நிபுணர் Max Friedrich தற்கொலை சம்பந்தமான தனது கட்டுரைத் தொகுப்பில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். இப் பிரச்சினை உடையோர் தமது முகத்தை முகமூடியால் மறைத்துள்ளனர். மனஅழுத்தத்திற்கு உள்ளானவர் பலர் “எப்படி இருப்பினும் மூன்றாம் உலக யுத்தம் வரப்போகிறது, நாம் எல்லோரும் அழியப் போகின்றோம்” என குறிப்பிடுகின்றனர். இவ்வகையான கூற்றுக்களை ஓர் ஆபத்தின் அறிகுறியாகக் கருதவேண்டும் என எச்சரிக்கிறார் அவர்.
கட்டாயமாக தற்கொலைக்குச் சாத்தியமான ஓர் அபாய அறிவிப்பு உள்ளதாக குசனைசiஉh நம்புகின்றார். அதற்கான காரணம் அவர்களிடமே உள்ளது. இளையோர் அவற்றை அமுக்கி வைத்துள்ளனர். அதுமட்டுமல்லாது தமக்கு விருப்பமான விடயங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் போன்றவற்றில் தமது ஈடுபாட்டினை நிறுத்துகின்றனர். இவர்களை நன்கு அறிந்தவர்கள் இவர்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கண்டறிந்து, கலந்துபேசுவதற்கான சூழலை ஏற்படுத்துவது அவசியம். இவ் விடயத்தில் பாடசாலை நண்பர்கள், பாடசாலை வைத்தியர்கள், பாடசாலை மனோதத்துவ ஆலோசகர்கள் ஆகியோர் முக்கிய பங்காற்ற முடியும். தற்கொலைக்கு இன்னொரு முக்கிய காரணமாக பாடசாலைகளில் முகங்கொடுக்கும் பல்வேறுபட்ட துன்புறுத்தல்கல்கள்  (Mobbing) முக்கிய பங்காற்றுவதாக Fridrich குறிப்பிடுகின்றார்.

இன்னொரு மனோதத்துவ நிபுணர் Georg Fiedler கூற்றுப்படி, பலர் இது ஒரு பேசக்கூடாத விடயமாகவே கருதுகின்றனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களிற்கே தெரிவதில்லை, தாம் எவ்வாறு இந்நிலைக்கு உள்ளானோம் என்று. இதனால் உடனடித்தேவையாக மன அழுத்தத்திற்கான அறிகுறிகளை கண்டறிந்து, கலந்து பேசுவதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும். அதற்கான ஆய்வுகளை அனைத்து தரப்புகளும் மேற்கொள்ளவேண்டும்.

2.5 வீத சிறார்களும் 8.3 வீத இளையோரும் மனஅழுத்தத்தினால் அவதியுறுகின்றனர். அதுமட்டுமல்லாது ஓரு வயது குழந்தை இலிருந்து மூன்று வயது குழந்தை வரைக்கும்கூட இம் மனஅழுத்தங்களிற்கு உள்ளாகியுள்ளனர். தற்கொலை 10 வயது சிறுவர்களிடம் அனேகம் நடப்பதாக Max Friedrich அறியத்தருகின்றார். 

அதுமட்டுமல்லாது வயதுவந்தவர்களில் கூடுதலாக பெண்களே மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர் எனவும், மனஅழுத்தத்திற்கு உள்ளாகும் ஆண்களிடம் அறிகுறிகளை அறிவது கடினம் எனவும் கூறுகிறார். மனஅழுத்தம் கூடுதலாக பாடசாலை செல்லும் இளையோரையே தற்கொலைக்கு இட்டுச்செல்வதாகவும் மாசி, ஆனி மாதங்களில் ஆகக் கூடுதலாக நடைபெறுவதாகவும், இது பாடசாலை வேலைகளால் ஏற்படும் ஓய்வின்மையால் நிகழ்வதாகவும் குறிப்பிடுகின்றார். மன அழுத்தத்திற்கு உள்ளாபவர்களுக்கு ஏற்படும் நித்திரையின்மை, மனதை ஒருநிலைப்படுத்த முடியாமை, ஆத்திரப்படுதல், தொடர்புகளின்மை... என்பன வெளித்தெரியும் அறிகுறிகளாக உள்ளன. இவற்றிலிருந்து விடுபடுவதற்கு பல்வேறுபட்ட சிகிச்சை முறைகள் உள்ளன. நடனம், இசை, உடற்பயிற்சி போன்றவற்றுடன் இணைந்த சிகிச்சை முறைகளும் உள்ளன.

2011 ஜேர்மனியில் Leuphana பல்கலைகழகத்தில் 5840 பாடசாலை மாணவர்களில் எடுக்கப்பட்ட கணிப்பீட்டில், மூன்று பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் அவர்கள்; மனஅழுத்தத்திற்கு உள்ளாவதாக அறியப்பட்டுள்ளது. இங்கு Gymnasium மாணவர்களை விட Real மாணவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது. அவர்களிடம் ஏற்படும் இந்தப் பாதிப்பின் வீதம் 23 இலிருந்து 33 ஆக அதிரித்துள்ளது. புலம்பெயர்ந்த வெளிநாட்டு மாணவர்களில் தனியே 36 வீதமாக அதிகூடியதாக உள்ளது. ஓர் இளம் பராயத்தவருக்கு தொடர்ச்சியாக எதிரான உணர்வுகளை ஏற்படுத்தக் கூடிய சம்பவங்கள் நிகழும்போது, அது அவரை சூனிய நிலைக்குக் கொண்டு செல்கிறது. இதனால் இளையோரின் எண்ணங்களிற்கு மதிப்பளியுங்கள், சந்தர்ப்பங்களைக் கொடுங்கள், கலந்து பேசுங்கள், தேவையேற்படின் வெளி உதவியை நாடுங்கள்.

தமிழ் மொழியில் எற்படுத்த வேண்டிய மாற்றம் பற்றி ஓர் வினா?

தமிழ் மொழியில் எற்படுத்த வேண்டிய மாற்றம் பற்றி ஓர் வினா?

நீண்ட காலமாக என்னிடம் ஓர் தீர்க்க முடியாத ஓர் வினா பதிலில்லாமல் என்னகத்தில் தங்கிவிட்டது.
எனது வினா என்னவாக இருக்கலாம் என பலதையும் பத்தையும் யோசிக்காதீர்கள். விடயத்திற்கு வருகின்றேன் நான் கேட்கும் கேள்வியின் விவாதத்தில் தமிழ் மொழியில் புலமை பெற்றவர் கலந்து கொண்டால் சிறப்பாக இருக்கும் என்று கருதுகின்றேன்.
தமிழ் மொழி தனக்கே உரிய அழகான எழுத்து உருக்களை கொண்டுள்ளது. ஆனால் வழந்து வரும் கணணி தொழில்நுட்பத்தினாலும் புலம்பயர்ந்து வாழும் தமிழ்மக்களின் எண்ணிக்கையாலும் நீண்ட கால நோக்கில் தமிழ் மொழியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அருகி விடும் என்ற அச்சமும் என்னிடம் உள்ளது. கணணியில் எழுதப்படும் படைப்புக்கள் கணணி மொழிபெயர்க்கும் மென்பொருளால் இலகுவில் மொழிபெயர்க்க முடிவதில்லை. அதுமட்டுமல்லாது எமது இனம் ஓர் சிறுபாண்மையாக பல நாடுகளில் சிதைந்து போயுள்ளதாலும் தமிழ்மொழியை பேசுபவர்களின் அடுத்த சந்ததிகள் இம் மொழியினை பாவனைக்குட்படுத்தாது போகும் சந்தர்ப்பங்களே அதிகரித்து வருகின்றது.
மேலே முன்வைத்த கருத்தின் அடிப்படையில் ஏன் தமிழ் மொழியின் எழுத்து வடிவத்தினை ஆங்கில எழுத்து வடிவாமாக மாற்றி புதிய இலக்கண விதிகளை உருவாக்களாமே? இவ்வகையில் ஓர் மாற்றத்தினை கொண்டு வந்தால் இம்மொழி நீண்டகாலம் பாவனைக்குட்பட்ட மொழியாக இருக்கும் என்பது ஓர் நம்பிக்கை. ஓரு மொழிக்கு இரண்டு எழுத்துவடிவங்கள் இருப்பது ஒன்றும் புதிதல்ல.
தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் வழக்கத்திலுள்ள எழுத்துருக்களையே பயன்படுத்தலாம். புலத்தில் ஓர் பரீட்சார்த்தமாக ஓர் புது முயற்சியை ஆரம்பித்து பார்க்கலாமா?
எனது இந்த கேள்விக்காண பதிலை எல்லோரிடமிருந்து எதிர் பார்க்கின்றேன். தயவு செய்து இதனை உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

https://www.metype.com/page/aHR0cHM6Ly9zd2FyYWp5YW1hZy5jb20vY3VsdHVyZS93aWxsLXRhbWlsLXRha2UtdG8tbGF0aW4=?share=c2hhcmVfdHlwZT1jb21tZW50JmNvbW1lbnRJZD04ODk1OQ==

Sonntag, 18. Januar 2015

மனிதம் குழு மீதும் தோழர் ரவி மீது உள்நோக்கம் கொண்டு சுமர்த்தப்பட்ட கொலைப் பழிக்கு எதிராக நடந்த சம்பவங்கள் பற்றிய எனது பதிவு.

மனிதம் குழு மீதும் தோழர் ரவி மீது உள்நோக்கம் கொண்டு சுமர்த்தப்பட்ட கொலைப் பழிக்கு எதிராக நடந்த சம்பவங்கள் பற்றிய எனது பதிவு.



தோழர் அசோக் சுமத்திய குற்றசாட்டிற்கு தோழர் ரவி எழுதிய பதில் கட்டுரையான வேதாளம் மீண்டும் முரங்கமரத்தில் என்ற பதிவினை எனது முகநூல் நண்பர்களிற்காக இங்கு மீள் பிரசுரம் செய்கின்றேன். இவ்விடயத்தில் எனது கடமைப்பாட்டையும் பொறுப்புணர்வையும் கவனத்தில் எடுத்து எனது சுய விளக்கத்தினையும்  இங்கு பதிவு செய்கின்றேன். 2005 இலும் இதற்கான விளக்கத்தினை தேனி இணைய சஞ்சிகையில் பதிவு செய்திருந்தேன் என்பதனையும் இங்கு நினைவு கூற விரும்புகின்றேன்.

மனிதம் பற்றி

பல விடுதலை இயக்கங்களிலிருந்து கருது;து முரண்பாட்டால் வெளியேறிவர்களும் நீண்ட காலமாக அரசியலிலும் பல்வேறு சமூக தளங்களில் வேலைசெய்தவர்களும் புதிதாக அரசியல் களம் புகுந்தவர்களும் ஓன்று கூடியே வாசகர் வட்டம் என்ற படிப்பு வட்டம் உருவாக்கப்பட்டது. இங்கு நாம் ஓர் கூட்டுத்தலைமை முறமையையும் சுழற்சிமுறையிலான பொறுப்பெடுத்தலையும் முழமையாக உள்வாங்கி நடைமுறைப்புடுத்தி வெற்றியும் கண்டோம். வாசகர் வட்;டம் அரசியல் இலக்கியம்
சமூகம் பற்றிய கற்றலையும் விவாதங்களை மேற்கொண்டு தனது அரசியல் இலக்கிய பார்வையினை கூர்மைப்படுத்தியது. இதன் வெளிப்பாடாகவே மனிதம் வீடியோ சஞ்சிகையும் அதனைத்தொடர்ந்து மனிதம் சஞ்சிகையும் வெளியாகின. இச் சஞ்சிகையில் வெளியான ஆக்கங்கள் இலங்கையிலும் இந்தியாவிலும் உள்ள வாசகர்களிடம் ஓர் பெரிய எதிர்பார்பினை உருவாக்கியது. இச் சமகாலத்தில் தலைமறைவு கட்சியான தீப்பொறியிலும் கணிசமான மனிதம் தோழர்கள் அங்கத்துவம் பெற்றிருந்தனர்.

நான் 1994 களில் தனிப்பட்ட முரண்பாடுகள் காரணமாக தீப்பொறியை விட்டு வெளியேறி இருந்தேன். இதே கால கட்டத்திலேயே தோழர் ரவியும் தீப்பொறியை விட்டு வெளியேறி இருந்தார். எமது பங்களிப்பு மீண்டும் வெகுஐன அமைப்பான வாசகர்வட்டத்தில் தொடர்ந்தது. எம்மிடம் அதி கூடிய தூய்மை வாதப்போக்கு எம்மை ஆழ்கொண்டிருந்தது. இதனால் பல உறவுகளிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் தனித்துவைக்கப்பட்டோம்.

18 வது இலக்கிய சந்திப்பு

18 வது இலக்கிய சந்திப்பு 2-3 ஏப்பிரல் 1994 ம் ஆண்டு மனிதம் குழவினால் ஓழங்கு செய்யப்பட்டிருந்தது. இச் சந்திப்பில்; கனேடிய, ஸ்கண்டி நேவிய, ஐரொப்பிய நாடுகளில் இருந்து வெளியான சிறு சஞ்சிகை ஆசிரியர்களும் இலக்கிவாதிகளும் அரசியல் வாதிகளும் கலந்து கொண்டனர். இந் நிகழ்வில் காலம் சென்ற தோழர் புஸ்பராஐhவினால் சுவிற்சர்லாந்தின் புலிகளின் பொறுப்பாளரான முரளியும் அழைத்துவரப்பட்டார். இந்நிகழ்வு மனிதம் தோழர்களிற்கு ஓர் ஆச்சரயத்தினை அழித்திருந்தாலும் தோழர் புஸ்பராஐh தனது தனிப்பட்ட தொடர்பின் மூலமே அழைத்திருக்கின்றார் என்பதனை அறிந்து எம்மை நாம் சுதாகரித்துக் கொண்டோம்.; தோழர் சபாலிங்கம் தோழர் புஸ்பராஐh முரளி ஆகியோருக்கிடையிலான சுமகமான சம்பாசனைகள் நடந்ததை மட்டும் அவதானிக்க கூடியதாக இருந்தது.

இந்நிகழ்விலே வீடியோ கசட் பரிமாறப்பட்டிருக்கும் ஓர் சம்பவம நடைபெறவில்லை என்பதனை அசோக்கிற்கு இங்கு ஆணித்தரமாக முன்வைக்க விரும்புகின்றேன். இவ்விடயங்களில் தோழர் ரவி மிக யாக்கிரதையானவரும் மிக கடின போக்கை கொண்டவர். அசொக் தனது குற்றசாட்டில் தோழர் ரவியே கசட்டினை பரிமாறியதாக குறிப்பிடுவது அப்பட்டமான ஓர் உள்நோக்கம் கொண்ட பழிவாங்களாகவே கருதுகின்றேன்.

தோழர் சபாலிங்கத்தின் படு கொலையும் இறுதிசடங்கும்

தோழர் சபாலிங்கம் படு; கொலை செய்யப்பட்ட வேளையில் பல தீப்பொறி உறுப்பினர்கள் கட்சியின் மத்திய குழு கூட்டத்திற்காக தாய்லாந்து சென்றிருந்தனர். இக் கொலையை கேள்விப்பட்டு அனைத்து மனிதம் குழுவே ஆடிப் போயிருந்தது. விடுதலை புலிகளினால்; கருத்து சுதந்திரத்திற்கு எதிராக புலத்தில்  ஏவப்பட்ட முதல் கொலையாக அமைந்திருந்தது. இக்கொலையை எவ்வாறு கண்டிப்பது என்பத பற்றி கூடி ஆலோசித்தே கண்டன-அஞசலி துண்டுபிரசுரத்தினை தமிழ் Nஐர்மன் மொழியில் தயாரித்து வெளியிட்டோம். புhதுகாப்புக் காரணங்களை கருத்தில் கொண்டு ஏனைய ஐரொப்பிய சஞ்சிகைகளுடன் கலந்து பேசி அவர்களின் அனுமதியுடன் அமைப்புக்களின் பெயர்களையும் துண்டுபிரசுரத்தில் இணைத்துக்கொண்டோம்.

பாரிசில் சபாலிங்கத்தின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள நான் சென்றிருந்த போது எந்த தமிழர்களை காணும் போதும் சபாலிங்கத்தினை கொலை செய்தவன் இவனாக இருக்குமா என்ற சந்தேக நோயும் இனந்தெரியாத பயமும என்னை ஆட்கொண்டிருந்தது;. அப்படி இருந்தும் உறுதியுடன் மனிதம் குழு சார்பில் நான் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு இரங்கள் கூட்டத்தில் புலிகளின் இந்த அராஐக நடவடிக்கையையும் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான ஆயத வேழ்வியினையும் வன்மையாக கண்டித்திருந்தேன்.

இறுதி சடங்கு முடிவடைந்த உடனேயே என்னையும் ஏனைய ஐரொப்பிய நண்பர்களையும் பிரான்சு நாட்டு பொலிசார் விசாரணைக்கு அழைப்பதாக தோழர் புஸ்பராஐh கூறியிருந்தார். அவரே எம்மை பொலிஸ் நிலையத்திற்கும் அழைத்து சென்றார். போலிசார் ஓவ்வொருவராக விசாரணைக்கு அழைத்தனர். என்னை அழைத்த பொலிசாரின் அலுவலக சுவர்கள் என்னை ஆச்சரியப்படுத்தியது. சுவர்கள் அனைத்தும் எமது விடுதலை இயக்கங்களால் வெளியிடப்பட்டிருந்த துண்டுபிரசுரங்களாலும் போஸ்டர்களாலும் இயக்க தலைவர்களது புகைப்படங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இது எனக்கு இன்னுமொரு செய்தியை சொன்னது. புpரஞ்சு பொலிசார் புலத்தில் நடைபெற்ற அனைத்து இயக்க செயற்பாடுகளையும் எம்மவருக்கு தெரயாமலே  நன்கு அவதானித்து வந்திருக்கின்றது என்பது புலனாணது.

சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற இலக்கிய சந்திப்பில் நடந்த விடயங்களை பற்றி என்னிடம் துருவிதுருவி கேட்டு அறிந்து கொண்டனர். அது மட்டுமல்லாது தோழர் சபாலிங்கத்திற்கும் எனக்குமிருந்த தொடர்பு அவர் பற்றி நான் அறிந்த அரசியல் வாரலாறுகளையும் நீண்ட மணித்தியாலங்களாக நடைபெற்ற விசாரணையில் இருந்து அறிந்து கொண்டனர். இந்த சிறப்பு பொலிசாரின் சந்தேகங்கள் சுவிற்சர்லாந்து மனிதம் பக்கம் திரும்பி இருப்பின் கொலை பற்றிய விசாரணைகள் சுவிற்சர்லாந்திலும் தொடர்ந்திருக்கும். அவ்வாறான சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்பதனையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

சந்தேகஙகள் பற்றிய விளக்கம்

எவரோ இக் கொலையிலிருந்து தப்பிப்தற்காக 18 வது இலக்கிய சந்திப்பினையும் மனிதம் குழவையும் துணைக்கு இழுக்கின்றனர்.  தோழர் சபாலிங்கமும் புலிகளின் பொறுப்பாளர் முரளியும் கலந்து கொண்டதனை மட்டும் வைத்து கொண்டு கொலைக்கும்  மனிதத்தின் இலக்கிய சந்திப்பு வீடியோ கசட்டினையும் தொடர்பு படுத்துவதும் கொலைப் பழியை மனிதம் குழு தோழர்கள் மீது போடுவது ஓர் படும் அபத்தமான செயற்பாடாகும். இக் கொலைக்கு உடந்தையானவர்களின் பெயர்கள் அம்பலத்திற்கு வந்துவிடும் என்று பயப்பிடுவதினாலா கொலைப் பழி மனிதம் குழு மீது வந்து விழுகின்றது எனும் சந்தேகம் மேலும் வலுப்படுகின்றது.

இங்கு வேறுசில சம்பவங்களும் மனிதம் குழு புலிகளுடன் வேலை செய்தது என்ற தவறான செய்தியிலிருந்தே இவ் வகையான ஆதாரமற்ற பழிகள் தொடர்கின்றனவா எனும் கேள்வியும் என்னிடம் எழுகின்றது. இதனால் தீப்பொறியும் அதன் அரசியல் நகர்வு பற்றியும் புலிகளின் கலை இலக்கிய மேடையை அலங்கரித்த பழைய மனிதம் தோழர்கள் பற்றியும் குறிப்பிட வேண்டிய தேவை எழுகின்றது.

புலிகளின் ஐனநாயக மறுப்பு, அரசியல் வறுமை, இனவாத தேசியம், போன்ற கருத்துக்களுடன் தீப்பொறி பலகாலமாக மாறுபட்ட கருத்தினை கொண்டிருந்தது. ஆனால் இறுதிக்காலங்களில் புலிகளின் ஊடுருவாலால் கட்சியில் தேசியம் சம்பந்தமான நிலைப்பாடு மாற்றப்பட்டு அப்பட்டமாக புலிகளின்  போராட்ட வடிவமே சரியானது என நிறுவும் துர்பாக்கிய நிலைக்கு வந்தடைந்தனர். ஏன் நாம் தீப்பொறி கட்சி அரசியலில் மேலும் தொடர்ந்து இருக்கவேண்டும் கேள்வியை பல தீப்பொறி; தோழர்கள் எழுப்பியிருந்தனர். இதன் விளைவு புலிகளுடன் இணைவதே சரியென கருதி இறுதிக்காலங்களில் புலிகளுக்கு நிதியை வழங்கி புலிகளின் போராட்டத்தினை ஊக்குவித்தனர். ஆனால் இவ்வாறு ஈடுபட்ட பல தோழர்கள இன்று; தமது பிழையான  அரசியல் நகர்வினை உணர்ந்து கொண்டுள்ளனர்.

அதே போல் கலை இலக்கியங்களில் ஈடுபட்ட ஓருசில தோழர்கள் மனிதத்தின் உடைவிற்கு பின்னர் விடுதலைப்புலிகளின் கலை இயக்க பணிகளுடன் தம்மை இணைத்து தமது ஆக்கங்களை விடுதலைப்புலிகள் மேடைகளில் மேடை ஏற்றிவந்தனர்.

அரசியலில் கருத்து பார்வை மாற்றங்கள் சூழ்நிலைகளிற்கு ஏற்ப மாறுபடுவது ஓன்றும் புதிதல்ல. ஆனாலும் மேற்கொள்ளப்படும் நகர்வுகள் தம்மால் முன்வைக்கப்பட்ட அடிப்படை முற்போக்கு நடவடிக்கைகளுக்கு எதிரானதாக அமையுமாயின் அதிலிருந்து வெளியாகுவதே சிறந்த செயற்பாடாகும். இந் நகர்வுகள் என்றும் சரி என நியாயப்படுத்துவது ஓர் பிழையான அரசியல் நடவடிக்கையாகும.;

அரசியல் பார்வையில் வேறுபாடான கருத்துக்களையும்
முரண்பாடுகளையும் கொண்டிருந்தாலும் அடிப்படையில் எக் காலகட்டத்திலும் நானும் தோழர் ரவியும் புலிகளின் அரசியலை விமர்சித்தும் நிதியினை வழங்காது நேரடியாக முரண்பட்டவர்கள் என்பதனை தோழர் அசோக்கிற்கு ஞாபகபடுத்த விரும்புகின்றேன்.

ஆவணப்படுத்தல்

எமது செயற்பாடுகளில் நடைபெற்ற பல விடயங்களை நாம் ஆவணப்படுத்தவில்லை என்பதே எமது மிகப்பெரிய தவறாக உணர்கின்றோம். எமது கடந்தகால அரசியலை வைத்து பிரமுகமாகும் நோக்கமும் எதிர் கால திட்டமும் எம்மை ஆட்கொண்டதில்லை. ஆவணப்படுத்தாமல் போனதிற்கான இதுவும் ஓர் காரணமாக அமைந்துள்ளது. இது ஓர் வரலாற்று தேவை என்பதனை நாம் தற்பொழுது பல தடைவைகள் உணர்ந்துள்ளோம்.

வேண்டுகோள்

இறுதியாக ஒன்றை மட்டும் வலியுறுத்த ஆசைப்புடுகின்றேன். நாம் பலர் பல்வேறு பட்ட தளங்களில் இருந்து செயற்பட்டாலும் இணையக் கூடிய பல புள்ளிகல் எம்முன்னே நிறையவே உள்ளது. ஆகவே அடிப்படை நம்பிக்கைகள் தளராது பார்து;துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அனைத்து அரசியல் இலக்கியதளங்களில் ஈடுபடும் தோழர்கள் மீதுள்ள முன் நிபந்தனையாக அமைகின்றது.