Montag, 12. Februar 2018

இலங்கையில் நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல் பற்றிய ஓர் குறிப்பு

தேர்தலில் கிடைக்கப்பெற்ற சாதக அம்சங்கள்.


  • புதிய அரசியல் தலைமுறையினரின் வரவு
  • 25 விகிதம் கட்டாய பெண் வேட்பாளர்களின் பங்களிப்பு
  • விகிதாச முறையிலான ஓர் கலப்பு தேர்தல் முறைமை
  • தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலைமை
  • இலங்கை வாழ் தமிழ் சிங்கள மக்களின் வாழ்வாதார தேவையின் அவசியம் அம்பலமாகியது
  • பேரினவாதம் பேசும் கட்சி வெற்றி பெற்றதின் விளைவு 
  • சிங்களமக்களின் அச்சமும் விருப்பும் வெளிப்படையானது.
  • தமிழ் தீவிர தேசிய அரசியல் வாதிகளின் வளர்ச்சி ஓர் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தியுள்ளது.
  • கூட்டமைப்பின் தனிபிரதிநிதித்துவம் சற்று ஆட்டம் கண்டுள்ளது.
  • தமிழ் தீவிர தேசிய அரசியல்வாதிகள் தனியே சாத்தியமற்ற விமர்சனங்களை மட்டும முன்;வைக்காது மக்களின் தேவைகளிற்கான வேலைத்திட்டங்களை மற்றைய கட்சிகளுடன் இணைந்து செயற்பட வேண்டிய நிர்பந்த நிலை.
  • கூட்டு வேலை முறையின் தேவை
  • தனியே அரசியல் இறைமையில் மட்டும் கவனம் செலுத்தாது. மக்களின் அன்றாட வாழ்விற்கான அபிவிருத்தி திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்ற செய்தி மக்களால் அரசியல்வாதிகளிற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
  • பெரின்பாண்மையினரின் ஆணையைப் பெற்ற கட்சியுடனேயே சிறுபாண்மை மக்களின் அரசியல் இறைமை பற்றிய பேச்சு வார்;தை நடத்த வேண்டிய நிர்பந்தம். இதனை எவ்வாறு சாதகமாக பார்க முடியும் என்ற கேள்வி எழுவது யதார்த்தமாகும். ஆனால் பெருண்மான்மை மக்களின் ஆதரவு குறைந்தகட்சிகளுடன் நடைபெற்ற பேச்சு வார்தைகள் அனைத்தும். தமது வாக்குவங்கிகளை இழக்க விரும்பாத கட்சிகள் முடிவுகளை தள்ளிப்போட்டு வந்த கசப்பான அனுபவங்களே நடைமுறையாகிருந்ததை யாவரும் அறிந்த உண்மை. ஆதலால் பேரிண்மை மக்களின் கட்சியுடன் அரசியல்தந்திNhபயத்தின் மூலம் அணுகியே சிறுபாண்மை மக்களின் அரசியல் இறமையை பெறுவதற்கான பேச்சுவார்தையினை தொடர வேண்டும்.
  • உள்ளுர் ஆட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகளின் செயற்பாட்டு நடைமுறைப்பாட்டினை அவதானித்தே 2 வருடங்களிற்கு பின்னர் நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் மக்களின் தெரிவு அமையும். 
  • சுயேட்சை வேட்பாளர்களின் வெற்றி
  • சிறுபாண்மையினரின் கடும்போக்கு மீண்டும் சிங்களப்பகுதிகளில் பெரினவாதிகளையே ஆட்சிப்பீடம் ஏற்றும் என்பதை மீண்டும் ஓரு முறை நிருபித்துள்ளது.

தேர்தலில் கிடைக்கப்பெற்ற பாதக அம்சங்கள்.

  • பேரினவாத கட்சியின் வெற்றி சிறுபாண்மை மக்களிற்கான அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.
  • தற்பொழுது நடைமுறையில் உள்ள ஐ.தே.க வினதும் சு.கட்சியினதும் தேசிய அட்சியில் ஓர் அரசியல் நாகரிகமும் ஓர் மூச்சு விடும் ஜனநாயகம் இருந்தது. மீண்டும் வெள்ளை வான் கடத்தல் இடம் பெறுமா என்ற அச்சம் சிறுபாண்மை மக்களிடம் உள்ளது.
  • சிங்கள பிரதேசங்களில் ஓரு கட்சி 200க்கும் மேற்பட்ட மன்றங்களை கைப்பற்றியது.
  • மாறி மாறி வரும் ஓரே தலைமைகள்
  • இலஞ்சம் ஊழலை மேற்கொண்ட அதே கட்சிகளை மீண்டும் ஆட்சிக்கட்டிலில்  மக்கள் அமர்த்தியது
  • பெரும்பாண்மை இராணுவத்துடன் நெருக்கமுள்ள கட்சி அதிக மன்றங்களை தம் வசமாக்கியது.
  • சிறுபாண்மையினரின் அரசியல் இறமைக்கான தீர்வு மீண்டும் தொடர்கதையாகும் நிலமை.
  • கடும் போக்கும் ஜனநாயக மறுப்புக்களிற்கான சாத்திப்பாடு அதிகரித்துள்ளது.
  • குடும்ப ஆட்சி மீண்டும் மேலோங்கும் நிலமை
  • ஆட்சி மாற்றத்திற்கான ஆபாயம்