Montag, 3. April 2017

கலைபட்ட மௌனமும் நடனமும் 2017


சுவிற்சர்லாந்தில் இயங்கிவந்த பல சுயாதீன அமைப்புகளை விடுதலைப்புலிகளின் சுவிஸ் கிளையினர் என தம்மை அடையாளப்படுத்தியோர் தமது கட்டுபாட்டிற்குள் இருந்த இந்நிறுவனங்களால் சேகரிக்கபட்ட நிதிஅனைத்தும் கபளீகரம் செய்யபட்டது. வருமானம் தரும் எந்த நிறுவனங்களையோ அல்லது கோயில்களையோ வியாபர ஸ்தாபனங்களையேர் இவர்கள் விட்டுவைக்கவில்லை. இவர்களது நிர்பந்ததிற்கு அடிபணிய மறுத்த அமைப்புகளிற்கோ அல்லது கோயில்களிற்கு எதிராக அதே பிரதேசத்தில் அமைப்புக்களையும் கோயில்களையும் நிறுவினர்;. முழுக்க  முழுக்க புலம் பெயர் தமிழர்கள் பலரால் ஆதரிக்கபட்ட ஓர் ஆயுதப்போரட்டத்தின் விருப்பினை மட்டும் தமக்கு சதாகமாக பயன்படுத்தி புலம்பெயர் மக்கள்மீது தமது ஆதிக்கத்தினை செலுத்திவந்திருந்தனர்.
மக்களும் போராட்டத்திற்கு தானே என தம்மால் கேட்கவேண்டிய வினாக்களை தமக்குள்ளேயே வைத்து மௌனித்து கொண்டு நிதியை வாரிவழங்கினர். 2009 இற்கு பின்னர் மக்கள் யாதார்hத்தினை புரிய ஆரம்பித்தனர். தம்மால் வழங்கப்படும் பணம் மட்டும் ஓர் ஆயுதப்போரட்டத்தினை வெற்றிபெற செய்யமுடியாது என்பதனை மெல்ல மெல்ல புரிந்து கொள்ள ஆரம்பித்தனர்.

2015 2016 2017 களில் மக்கள் இவர்களிடம் இதுவரை கேட்காமல் மௌனித்தவர்கள் தம்மிடம் இருந்த பல கேள்விகளை இவர்களை நோக்கி கேட்க ஆரம்பித்தனர். அதன் வளர்ச்சி போக்கில் இன்று இதுவரைகாலமும் சுயாதீனமற்று செயற்பட்டு வந்த பல அமைப்புக்களும் கோயில்களும் இவர்களின் கட்டுபாட்டிற்குள்ளிருந்து வெளியேற ஆரம்பித்தனர்.
சொலத்தூண் நலன்புரிசங்கம் யாரால் எப்பொழுது ஆரம்பிக்க பட்டது என்ற கேள்விக்கு விடை காணுவது இப்பதிவின் நோக்கமல்ல. இப்பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களாலேயே இந்நிகழ்ச்சி இரவுபகலாக உழைத்து நடாத்தபட்டு வந்தது என்பது மட்டும் உண்மை.

அன்றைய போராட்டத்தின் எழுச்சிக்காலப்பகுதியில் பராதநாட்டியத்தினை தமது பிரச்சார நிகழ்வுகளிற்கம் அஞ்கலி நிகழ்வுகளிற்கும் எழுச்சி நடனமாக பல மேடைகளில் வலம்வந்தது. இதற்கு அன்று நடன ஆசிரியர்களும் மாணவர்களும் தேவைப்பட்டிந்தனர். இன்று இந்நடனம் தமிழர் பாரம்பரிய நடனம் இல்லை எனவும் இது தேவதாசிகளால் ஆடப்பட்ட ஓர் கலைவடிவம் என்ற கண்டுபிடிப்புகளையும் முன்வைக்கின்றனர். தமக்கு ஆதாயத்தினை கொடுக்கும் போது ஓர் தேசிய கலைப்படைப்பாக பிரச்சாரம் செய்தாவர்கள் இன்று இக்கூற்றினை தலை கீழாக புரட்டிப்போடுகின்றனர்.

நான் இங்கு இக் கலை வடிவம் ஓர் தமிழர் தேசியகலையா அல்லது முற்போக்கு கலைவடிவமா என்பதனை விவாதிக்கவரவில்லை. ஆனால் இக் கலை வடிவம் ஆயுதபோரட்டத்தின் எழுச்சிகாலத்தில் தனது மரபுகளை உடைத்து புதிய யுக்திகளையும் தேடல்களை தோற்றுவித்தது என்பதனை மறுக்கமுடியாது. ஆகவே இது ஓர் கலைவடிவம் ஆர்வம் உள்ளவர்கள் கற்றுகொள்ளலாம் அல்லது கற்பிக்கலாம். அன்றைய நிலைமையில் இக்கலைக்கு ஓர் உந்துதலாக நாட்டியமயில் நிகழ்ச்சி அமைந்திருந்தது. இந்நிகழ்வின் மூலம் ஆசிரியர்கள் பெற்றோர்கள்; மாணவர்கள் மற்றும் மிக முக்கியமாக விடுதலைப்புலிகளின் கிளையினர் பலன் பெற்றிருந்தனர் என்பதனை யாரும் மறுக்க இயலாது.

இந்நாட்டு சட்டவிதகளின் அடிப்படையில் சுவிற்சர்லாந்து சிவில்சட்டமான Art. 60 ff. ZGB சரத்தின் கீழ் யார் வேண்டுமானாலும் அரசியல் கலை மதம் விளையாட்டு என பல வித ஓருமைப்பாட்டுடன் ஓர் சங்கத்தினை நிறுவ சுவிற்சர்லாந்தில் வசிக்கும் அனைத்து பிரஜைகளிற்கும் உருமை உண்டு. மிக குறைந்தது இரண்டு பேர் மட்டுமே ஓர் சங்கத்தினை உருவாக்குவதற்கு போதுமானது. ஓர் சங்கமானது தனது பெயரை சட்டரீதியில் வேறு எவரும் பாவிக்காமல் தடுப்பதற்கு மாத்திரமே சிவில் சரத்து Art. 61 ff. ZGB  கீழ் ஓர் வியாபர நிறுவனம் பதிவுசெய்வதுபோல் மாநில வியாபரபதிவு திணைக்களங்களில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இவ்வகை சங்கங்கள் தமக்கான அங்கத்தவர்களை சேர்த்தபின்னர். இது தன்னால் வரையப்பட்ட சட்டவிதிகளின் அடிப்படையில். அமைப்பின் நிர்வாகிகளின் நிர்வாக காலத்தினை ஓன்று அல்லது இணர்டு வருடங்ளுக்கு மேற்பட்டதாக என நிர்ணயம் செய்து கொள்ளலாம். ஆதனடிப்படையில் ஓர் நிர்வாகத்தின் காலம் முடிவடையும் போது அங்த்தவர்களாக தம்மை இணைத்து கொண்டவர்கள் பொது கூட்டத்தில் புதிய நிர்வாகத்தினை அல்லது அதே நிர்வாகத்தினை தெரிவுசெய்து கொள்ளலாம்.

இவற்றை புரிந்து கொண்டோ அல்லது புரிந்து கொள்ளலாமல் மக்களை கொண்டு நிர்வாகம் தெரிவு செய்யவேண்டும் என குறிப்பிடுவது ஓர் அரசுக்குள் இன்னொரு அரசு நடாத்தும் ஓர் குத்தகை மனோபாவமாகும்;. இந்நாடுகளில் தஞ்சம் அடைந்த நாம் அந்நாடுகளின்ன் சட்டங்களிற்கு அமையவே வாழமுடியும். நாம் எல்லோரும் தமிழ் இனம் என்பதற்காக எமக்கான சட்டதிட்டங்களை நமோ எமக்கான அமைப்போ வரையறை செய்து கொள்ள முடியாது. ஆனால் ஓரேவிடயத்திற்கு ஆதரவான சக்திகள் ஓன்றிணைந்து ஓர் சங்கத்தினை தோற்றுவித்து அந்த சங்கம் மூலமாக தமது கோரிக்ககைளை முன்வைத்து பெரும்பாண்மை கருத்திற்காக போரடாலாம்.

விடுதலைப் புலிகளின் கிளை என தம்மை  அறிமுகப்படுத்தி இந்நாடுகளில் செயற்பட்டவர்கள் ஏற்கனவே இயங்கிவந்த அல்லது இயங்கி வருகின்ற அமைப்புகளை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்துகொள்ள முடியாது. ஓவ்வொரு அமைப்புகளும் தமக்கே உரிய தனித்தன்னைமயையும் நோக்கங்களையும் கொண்டவையாகவே இருக்கமுடியும்.

ஓர் இரு நாட்களில் இவர்களின் தமது கட்டுப்பாட்டிற்குள் இருந்த அனைத்து நிறுவனங்களையும் மக்கள் மயப்படுத்த போவதாக ஓர் அறைகூவலை விடுத்திருந்தனர். இவர்கள் யார் மக்கள் மயப்படுத்துவதற்கு? யார் இவர்களிற்கு அதிகாரம் வழங்கியது. கடந்தகலாயங்களில் கோயில்களை கைவகப்படுத்துவதற்கு தாம் ஓர் கூட்டத்தினை அழைத்து சென்று உடனே அங்கத்தவர்களாக்கி புதிய நிர்வாகத்தினை தம்மால் கொண்டுவரப்பட்ட பினாமிகளிடம் ஓப்படைத்த மக்கள் மயப்படுத்தியதையும் சுவிற்சர்லாந்து வாழ் தமிழ்மக்கள் மறந்திருக்கமாட்டார்கள் எனநம்புகின்றேன்.

பரதம் ஓர் கலைவடிவம் இதனை கற்பிக்கும் ஆசிரியர்கள் தமது நலன்கருதியும் மாணவர் நலன்கருதியும் பொதுவானவர்களினால் ஓழுங்கு செய்யப்படும் போட்டியில் கலந்து கொள்ள விரும்புகின்றனர். திரட்டப்படும் நிதிக்கு குறிவைக்கன்றது இன்றும தம்மை; விடுதலைப்புலிகளின் கிளை என அடையாளப்படுத்தும் குழு.

எவ்வகையில் கராட்டி வகுப்புக்கள் நடைபெறுகின்றதோ அதேவகைகளில் அவர்களும் ஓர் போட்டி நிகழ்ச்சியை நடாத்தி மாணவர்களின் திறமைகளளை கணிப்பிடுகின்றனரோ. அதேவகையில் தான் நாட்டியமயில் இசைக்குயில் போன்ற போட்டி நிகழ்ச்சியை பார்க்கமுடியும்.

5 பேர் கொண்ட நிர்வாகத்தில் இரண்டுபேர் விலகிவிட்டால் இருக்கின்ற மூன்று பேர்களிற்கே அவ் அமைப்பை வழிநடத்துவதுற்கு உரிமை உண்டு. சரியான முறையில் அங்கத்துவர் இணைக்கப்படாததும் அதற்கான கால நேர அடிப்படையில் கூட்டங்கள் நடத்தாதும் நிதி விபரங்கள் வெளிப்படைத்தன்மையுடன் வெளிப்பாடுத்தாமையே இவர்கள் விட்டதவறாக பார்க்கமுடிகின்றது.

இளைஞர்களிடம் ஓப்படைப்பது எனபது ஓர் நிர்பந்தமாக அமையமுடியாது. புதிய நிர்வாகத்தினை தெரிவு செய்யும் முழு உரிமையும் அங்கத்துவர்ளிற்கே உள்ளது.  சொலத்தூண் வாழ் பொதுமக்களாகிய எமக்கு எவ்வித உரிமையும் கிடையாது.

இன்று குத்தகை மனப்பாண்பிற்கு எதிராக பல தமிழர்கள் குரல் எழுப்புகின்றனர். இது வரைகாலமும் பயத்தினாலும் ஓர் தேவைகருதி காத்து வந்த மௌனத்தினை மக்கள் கலைக்கின்றனர். இந்நடவடிக்கையினை ஆதரிக்க வேண்டியது ஓவ்வொரு ஐனநாயக வாதியின் கடமை என நான் கருதுகின்றேன். இதைவிட்டு விட்டு இரண்டு பகுதியையும் ஓர் கூடைக்குள் வைத்து பார்ப்பது சுயாதீனத்தினை விரும்பும் சக்திளையும் மழுங்கடிக்க வைக்கும். ஆனால் இவ்வகையில் சுயாதீனமாக இயங்கப்போவதாக அறிவித்துள்ள சொலத்தூண் நலன்புரி சங்கம் இதேபோன்ற தவறுகளையும் வெளிப்படையற்ற நிதி நடைமுறைகளை பேணுவார்களாயின் அவர்களையும் கண்டிக்கும் விமர்சிக்கு நடவடிக்கைகளிற்கு அனைவரும் முன்வரவேண்டும்.

ஓர் குடையில் தான் ஓன்று கூடுவோம் என அடம்பிடிப்பதே பன்முகத்தன்மைக்கு முரணாணது. பல கருத்துக்கள் முட்டி மோத வேண்டும். பல சுயாதீனமான அமைப்புக்கள் தோற்றம் பெற வேண்டும். ஓருங்கிணைந்து குரல் கொடுக்கும் விடயங்களில் தத்தமது சுயாதீன அமைப்பின் சார்பில் ஓர் கூட்டு நடவடிக்கiயில் ஈடுபடலாம். இவ்வகையான ஓர் போக்கே ஆரோக்கியமான ஓர் புலம்பெயா தமிழ் சமூகத்தினை உருவாக்கும். தன்னாதிக்க சர்வாதிகார முறையிலான நடவடிக்ககைள் எமது சமூகத்தினை பின்னோக்கியோ நகர்த்தும்.

கணபதிப்பிள்ளை சுதாகரன்
03.04.2017