Sonntag, 27. März 2022

27.03.2022 அன்று சுவிற்சர்லாந்தில் நடைபெறும் தேர்தல்களும் புலம்பெயர தமிழர்களும்

 

இன்று 27.03.2022 சுவிற்சர்லாந்தில் பல உள்ள கன்ரோன்களிலும் (மாநிலங்கள்), உள்ளுர் ஆட்சி மன்றுகளில்(கிராம,நகர சபை) தேர்தல்கள் நடைபெறுகின்றன. வழமைபோல் பல புலம்பெயர்ந்து இந்நாட்டில் பிரஜா உரிமைபெற்ற பல வேட்பாளர்கள் தத்தமது பிரதேசங்களில் தேர்தலில் போட்டி இடுகின்றனர்.அவ்வகையில் தமிழ் வேட்பாளர்களும் போட்டி பங்குபெற்றுகின்றனர். பேர்ண் மாநகரின்

Bern மாநில உறுப்பினர்களிற்கான(  Grossrat, BE) தேர்தலில் சோமசுந்தரம் சந்துரு சோசலிச ஐனநாககட்சி சார்பில் (SP) போட்டி இடுகின்றார். இவர் இரண்டாம் தலை முறையை சேர்ந்தவரும் ப்கலைக்கழக வரலாற்று விஞ்ஞானத்தில் கலாநிதிப்பட்டம் பெற்றவர் Master of Arts - MA, Historische Wissenschaften).



Adliswil நகரத்தில் நகர ஆட்சி உறுப்பினுக்கான தேர்தலில் முத்துதம்பி கண்ணதாசன் சோசலிச ஐனநாககட்சி சார்பில் (SP) போட்டி இடுகின்றார். இவர் இரண்டு முறைகள் மக்களால் தெரிவுசெய்யப்பட்வர் என்பது குறிப்பிடதக்கது. இவர் சூறிச் சமுக ஐனநாக கட்சியின் குடியேற்ற வாதிகள் பிரிவின் தலைவர்களிலும் ஒருவர். மேலும் இவரது இலவச சமூகசேவை பணிகைள இந்த நகராட்சியில் நீண்டகாலமாக செய்து வருகி்றார்.


இதே நகர சபையில் இரண்டாம் சந்தினை சார்ந்த முத்துதம்பி முதல் தடவையாக சோசலிச ஐனநாககட்சி சார்பில் (SP)  தேர்லில் போட்டி இடுன்றார்,





Biel எனும் இரண்டு மொழிபேசும் நகரசபை உறுப்பினர்களிற்கான தேர்தலில் கந்தசுவாமி சுஐீவன் எவங்கலிச மக்கள் கட்சி (Evangelische Volkspartei EVP) சார்பில் போட்டி இடுகின்றார். இவரும் இரண்டாம் சந்தியினரை சேர்ந்த இளைஞன் என்பது குறிப்பிட தக்கது. 







புபாலபிள்ளை சாம்பவி இவரும் இரண்டாம் தலைமுறையை சேர்ந்தவர். இவர் இளையோரிற்கான லிபரல் (FDP- Jungfreisinnige) கட்சியின் சார்பில் Emmenthal பகுதியில் இருந்து மாநில சபைக்கான தேர்தலில் போட்டி போடுகின்றார்.



சிவராசா சண் சிவன் Emmenthal பகுதியில் மாநில சபைக்கான  சேசலிச ஐனநாயக கட்சியின் (SP) சார்பில் தேர்தலில்போட்டி இடுகின்றார். இவரும் இரண்டாம்  தலை  முறையைசேர்ந்த மாணவன் என்பது குறிப்பிடதக்கது.



இவர்கள் அனைவரது பெறுபெறுகள் 27.03.2022 மாலை வெளியாகி விடும். இவர்கள் வெற்றி பெற வழ்த்துக்கள்.

Sonntag, 13. März 2022

போரும் புலம்பெயர்ந்த எம்மவரின் சிந்தனையும் - க. சுதாகரன்

 


உலக சண்டியர்களின் பலப்பரீட்சைக்கானதும் தேசியவாதத்திற்கானதும் பிராந்தியவாத்திற்காணுமானதே ரசிய உக்கிரேன் போர். யுத்தததிற்கு ஆதரவு அல்லது எதிர்ப்பு தரப்பில் உள்ள நாடுகள் அனைத்தும்   தமது நலனிலேயே அக்கறையுடன் உள்ளனர். யுத்த்திற்கான அடிப்படை அல்லதுதோற்றுவித்தலில் பல வராற்று தப்புக்களும் நயவஞ்சகங்கள் நடைெபற்றிருப்பினும் யுத்தத்தினை யார் ஆரம்பித்தாலும் அது மாபெரும் தவறு. சண்டியர்களால் தமது நலன் கருதி செய்யப்பட்ட உடன்படிக்கைகளை அனைத்து தரப்பினரும் மீறி உள்ளனர் இதற்கு உலக வரலாற்றில் பல ஆதாரங்களை உதாரணங்களாக எடுத்து கொள்ளலாம். ரசியா தனது வியாபாரத்திற்கும் தனது பிராந்திய நலனை மட்டுமே முந்நிலைப்படுத்துகின்றது. அதேவகையில் ஐரோப்பிய அமெரிக்க தரப்பும் செயற்படுகின்றது. புலம்பெயர் தமிழராகிய எமக்கும் எமது சந்ததியினருக்கும் தற்பொழுது நாம் வாழும் நாடும் எம்முடன் இருக்கும் இந்நாட்டு மக்களின் வாழுதலிற்கான நியாயமான போராட்டங்களிற்கு ஆதரவாகவே இருக்கமுடியும். எமது நலனிலும் அக்கறையற்ற ஆதிக்கசக்திகளிற்கு ஆதரவாக குரல் கொடுத்து உலக சமாதாணத்தினை கொண்டு வரப்போகின்றோமா? அல்லது உலக மக்களிற்கு நீதிவாங்கி கொடுக்கமுடியுமா?  

உலகில் ஒவ்வொரு நாடுகளும் மூலப்பொருள் உணப்பொருட்கள் ரீதியில் தங்கி நிற்கும் முகமாகவே உலக பொருளாதார ஒழுங்கு கட்டமைக்கபட்டுள்ளது. நாடுகள் யுத்தினையும் தமக்கு சாதகமான அரசுகளை நிறுவுவதற்கும் பொருளாதார கொடுப்பனவற்றை ஆயுதமாக பயன்படுத்தி வந்துள்ளன. இவற்றால் பாதிக்கபடுவது சாதாரண பிரஐைகளே.ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் பிராஐா உரிமைபெற்று வாழும் எம்மவர்களது இரண்டாவது சந்ததிகள் தமது நாடுகளில் யுத்தம் நடைபெறும் போது யுத்தில் பங்குபெறுமாறு அழைக்கப்பட போவதும் எமது இரண்டாவது சந்தியினர் என்பதை மறந்து விட்டு ரசிய சீன அரசுகளின் நியாங்களை சரி என வாதிடுகின்றனர். 

நாம் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும் இனவாதம் புதிய நாஐிகளது ஆதிக்கம் அன்றாடம் வளர்ந்து வருகின்றது. இவற்றில் இருந்து மீள்வதற்கான போராட்டங்களில் ஈடுபடுவதற்கான பயணங்கள் பல மேற்கொள்ள வேண்டியுள்ளது.  யுத்தங்கள் நடைெபறும் போது அதிதீவிர தேசியசக்திகளின செயற்பாடுகள் அடையும். இதற்கு தற்போதைய உக்கிரேன் ரசிய தரப்பு புதிய நாஐிகளது செயற்பாடுகளை பாடமாக எடுத்து கொள்ளலாம். 

உலகில்தகவல் போர்கள் மேடியாக்காளால் அந்தந்த பிராந்திய சார்பு நலன் கருதி நடைபெறுகின்றது. இவற்றை எமது நலன்கருதியும் உலகமக்கள் கருதி பகுத்தாராய வேண்டும்.ஈழப்போராட்டம் நடைபெற்ற போது புலத்தில் இருந்து இராணுவதாக்கதலை மட்டும் இரசித்த அதே நபர்கள் இன்றும் ரசிய உக்ரேன் யுத்ததில்கையாளப்படும் இராணுவ யுக்திகளை விவரித்து புழாங்கிதமடைகின்றது. மனித குலம் எந்தநாடுகளிலும் மொழி நிற மத பிரதேச வேறுபாடற்ற புதிய சமுதாயங்களை உருவாக்குவதற்கான செயற்பாடுகளில் நட்பு சக்திகளோடு இணைந்து செயற்பட முன்வரவேண்டும். புலம்பெயர் சமுகங்கள் தமக்குள் மட்டும் ஒன்றுகூடி கல் தோன்றா காலத்து தற் பெருமைகள பேசிகளை பேசி  தாம் சேர்ந்து வாழும் சமூகங்களுடன் இருந்து அந்நியபடாது தம்மையும் இந்த சமூகத்தில் ஓர் அங்கம் என்பதனை புரிதல் வேண்டும். இவற்றை கவனமெடுக்காத பட்சத்தில் காலத்திற்கு காலம் நாடோடிகளாக வாழும் நிலையே எமக்கு ஏற்படும்.

Sonntag, 6. März 2022

புலம்பெயர் தமிழரின் யுத்தம் பற்றிய நிலைப்பாடும் உண்மை நிலமையும். - க.சுதாகரன்

புலம்பெயர் எமது உறவுகள் ஒரு சிலர் தாம் வாழும் நாடுகளில் இருந்து கொண்டு நன்றாக சுதந்திர காற்றினையும்  சவாசித்து வரியினையும் செலுத்தி சமூக உதவிகளையும் பெற்றுகொடு. தாம் வாழும் சக நாட்டவரின் யத்தபாதிப்பின் அச்சத்தினையும் கவனத்தில எடுக்காது. யுத்த்தினை தொடுத்த இன்னுமொரு ஆக்கிரமிப்பு அரசின் நியாயங்களை நியாயப்படுத்துவதன் அளவியல் புரியாத புதிராக உள்ளது.

புலம்பெயர்  தமிழரின் வெறுபட்ட நிலைப்பாடுகள்

ரசிய உக்ரேனிய யுத்தத்தில் புலம்பெயர் தமிழர்கள் நான்கு வித நிலைப்பாடுகளில் உள்ளனர்.

1. இவர்கள் ஈழப்போரில் உக்ரேன் தமிழ் மக்களிற்கு எதிராக இருந்ததால் தாமும் உக்ரேனிற்கு எதிராக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளவர்கள்.

2. இவர்கள் ஈழப்போரில் உக்ரேன் தமிழ் மக்களிற்கு ஆதரவாக இருந்ததாக  கருதி  ரசியாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ளவர்கள்

3. இவர்கள் உலகத்தின் பாெலிஸ்கார அமெரிக்க ஏகாபத்திற்கு எதிரான போராட்டமாக ரசிய ஆக்கிரமிப்பை ஆதரிப்பவர்கள்.

4. இவர்கள் இரசியா உக்கிரேன் என்ற இறமையை மதிக்காது மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு யுத்தினை எதிர்ப்பவர்கள்.

நாட்டோவின் கிழக்கு விஸ்தரிப்பு பற்றி

நாட்டோவின் கிழக்கு நோக்கிய ஆக்கிரமிப்பினால் அச்சத்துக்குள்ளான ரசியா உக்கிரேன் மீது யுத்தம் தொடுக்கப்பட்டுள்ளது என்ற விவாதத்தினை எடுத்து கொண்டாலும். இந் நடவடிக்கைய இன்றைய நுாற்றாண்டில் சிறப்பாக பேச்சுவார்த்தையில் தீர்வு காண்பதற்கும் தமது பக்க நியாயங்களை கூறி நட்பு நாடுகளை வென்றெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு வசதிகள் அதிகம் உள்ளது. ஈடுபடுவதற்கான வாய்ப்பு வசதிகள் அதிகம் உள்ளது. குறைந்தபட்சம் ரசியா உக்கிரேனுடன் தமது நட்பு ரீதியான இராஜதந்திரத்தினை பேணுவதற்கான முன்முயற்சியினை ஆக்க பூர்வமாக மேற்கொண்டதா?

பல்கேரியா (Bulgarien), எஸ்டோனியா (Estland), லிதுவேனியா (Litauen), ருமேனியா (Rumänien), ஸ்லோவேனியா (Slowenien), ஸ்லோவாக்கியா (Slowake), அல்பேனியா (Albanien) மற்றும் குரோஷியா (Kroatien). ஆகியவை 2004 மற்றும் 2009 க்கு இடையில் பின்பற்றப்பட்டன. குறிப்பாக பல்கான் நாடுகள் நாட்டோ உறுப்பினராக சேர்வதற்கு தாமகவே அழுத்தம் கொடுத்தன. நாட்டோ  கூட்டணி வளர்ந்து கொண்டே வந்தது. 2017 இல் மாண்டினீக்ரோ(Montenegro) மற்றும் மிக சமீபத்தில் 2020 இல் வடக்கு மாசிடோனியா (Nord-Mazedonien) சேர்க்கப்பட்டது.

ஒரு அரச உரிமை உள்ளநாடு தனது நாட்டின் பாதுகாப்பில் கருசனை கொண்டு எந்த பாதுகாப்பு கூட்டணிக்குள் தம்மை இணைக்க வேண்டும் தாமே  தீர்மாிப்பதே சுயாதீனமனது. ஏன் ரசியாவிற்கு அருகாமைில் உள்ள நாடுகள் ஏன் ரசியாவுடன் சேராது நாட்டேவுடன் விரும்புகின்றனர் என்ற கேள்வியை கேட்டே ஆக வேண்டும். ரசியாவின் அரசியலில் நம்பிக்கை அற்றவர்கள் மாறாக ஐரோப்பிய அமைப்பில் தம்மை இணைத்துகொள்ள விரும்புவர்கள் என்ற பதில்களே எமக்கு கிடைக்கமுடியும். பல லொபிகள் இக்ககூட்டமைப்பு இணைவாக்கத்திற்கு காரணாமாக அமைந்திருப்பினும் ரசியா தனது தரப்பின் இராஜதந்திர தோல்வியாகவே கருத முடியும். தோல்வியாகவே கருத முடியும்.

புதிய நாஐிகளும் ரசியாவினால் யுத்திற்காக முன்வைக்கபடும் காரணமும்

அப்படியானால் ஏன் தனது யுத்தம் புதிய நாஜிகளிற்கு எதிரான நடவடிக்கை என காரணத்தினை முன் வைத்தது. சரி அதனையும் காரணமாக பார்த்தால். இவர்கள் உக்கிரெனில் ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்பொழுது புதிய நாஜிகள் மிக சிறுபாண்மையினரே இவ்வகையில் புதிய நாஜிகள் ஐரோப்பி அமெரிக்க நாடுகளில் எண்ணிக்கை அடிப்படையில் கூடுதலாக உள்ளனர். வலது அதிதீவிர தேசிய வாதம் இவ்வகையில் நாஜிய கருத்து உடைய ஆயத வன்முறையாளரை உருவாக்கும்.

ரசியாவில் வன்முறை வலதுசாரி தீவிரவாதிகள் பல ஆண்டுகளாக வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். வலதுசாரி பயங்கரவாதத்தின் விளைவாக கடந்த பத்து ஆண்டுகளில் பல நூறு பேர் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர் தாக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் மத்திய ஆசியா அல்லது காகசஸில் (Kaukasus) இருந்து வந்தவர்கள். , மற்றும் இடது தீவிரவாதிகளும், வீ டற்றவர்கள்,  ஓரின சேர்க்கையாளர்கள் மற்றும் நீதிபதிகள் கூட தாக்கபட்டுள்ளனர். வேறு எந்த கிழக்கு ஐரோப்பிய நாட்டிலும் இதுபோன்ற வன்முறை நவ-நாஜிகள் பல்லாயிரக்கணக்கானதாக இருக்கவில்லை. குறைந்தது 150  தீவிரமான போராளி நவ-நாஜிக்குழுக்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சோவியத் யூனியனுக்கு எதிரான நாஜிய ஆட்சியின் அழிவுப் போரின் பின்னர் (நவ) தேசிய சோசலிசம் ரசியாவில் எல்லா இடங்களிலும் வலுவான ஈர்ப்பை உருவாகியது முரண்பாடாகத் தோன்றலாம். ஆனால் குறிப்பாக இளைஞர்களிடையே, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய முதல் தசாப்தங்களில் பாசிச அழகியல் நாகரீகமாகக் கருதப்பட்டது, மேலும் சோவியத் யூனியனின் விமர்சகர்கள் சில நேரங்களில் நாஜி ஆட்சியுடன் நாஜி சின்னங்களால் தங்களை அலங்கரித்துக் கொண்ட இரகசிய பாடசாலை பல நிகழ்வுகள் நடந்துள்ளன.

இதே போன்று உக்ரேனில் தீவிர வலதுசாரி இயக்கங்கள் உள்ளது, மேலும் அதன் ஆயுதமேந்திய தீவிர வலதுசாரி தேசியவாத போராளிக் குழுவான அசோவும் (AZOV) அதன் இராணுவ குழுவும் அடங்கும். இவர்கள் எல்லைப்புற ரசிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக உக்கரேனிய இராணுவத்துடன் இணைந்து செயற்பட்டு வந்துள்ளன. இது புதிய நாஐிகளின் அதிதீவிர தேசியவாதத்தின் வெளிப்பாடு. உக்கரேனிய அரசு இவர்களிற்கான எதிர் அரசியலை முன்னெடுக்காதபட்சத்தில் உக்கரேனிய அரசுக்கும் மக்களிற்கும் ஆபத்தானவர்களாக மாறுவர் என்பதை முக்க முடியாது. இது உக்ரேனின் உள்விவகாரம். ரசியா முதலில் தன் பிரதேசத்தில் உள்ள நவ-நாஐிகளிற்கு எதிராக நடவடிக்கை எடாது பக்கத்து வீட்டில் உள்ள பிரச்சினைக்குள் மூக்கை நுளைப்பது எவ்விதத்தில் நியாயமாகும்?

ரசியா கடந்த காலத்தில் ஐரோப்பா முழுவதிலும் இருந்து வலதுசாரி தீவிரவாதிகளின் சந்திப்பு புள்ளியாக செயல்பட்டது. 2015 ஆம் ஆண்டில், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் "சர்வதேச ரஷ்ய பழமைவாத மன்றம்" (International Russian Conservative Forum) நடத்தியது.  ஜேர்மன் தீவிர வலதுசாரி தேசிய ஜனநாயகக் கட்சியின் (NPD) முன்னாள் தலைவர் Udo Voigt, அத்துடன் இத்தாலியின் தீவிர வலதுசாரி Forza Nuova கட்சி, கிரேக்கத்தின் நவ-பாசிச கோல்டன் டான் கட்சி மற்றும் இத்தாலியின் தீவிர வலதுசாரி லீக் (Lega) ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

2017 ஆம் ஆண்டில், பிரான்சின் ஜனாதிபதித் தேர்தலுக்கு சற்று முன்பு, மரைன் லு பென் ( Marine Le Pen) - பின்னர் பிரெஞ்சு தீவிர வலதுசாரிக் கட்சியின் தேசிய முன்னணியின் தலைவர், இது 2018 இல் ராஸ்ஸெம்பிள்மென்ட் நேஷனல்(Rassemblement National) என மறுபெயரிடப்பட்டது - ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை மாஸ்கோவில் சந்தித்தார். லு பென் ரஷ்யாவுடன் நெருக்கமான உறவுகளை ஆதரித்தார் மற்றும் நாட்டிற்கு எதிரான ஐரோப்பிய ஒன்றிய தடைகளை விமர்சித்தார்.

இவை எல்லாம் நடைபெற்ற பொழுது ரசியா தனது நவ நாஜி அரசியலிற்கு எதிராக போராடாது தளம் அமைத்து ஏன் கொடுத்தது? தனை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்?

வல்லரசுகளாலும், ஏகாதிபத்தியங்களாலும், பிராந்திய வல்லரசுகளாலும் மேற்கொள்ளப்படும் யுத்தங்கள் அதற்கு அவர்களால் முன்வைக்கப்படும் காரணங்கள். வில்லன் கதாநாயகன் அல்லது நல்லவன் கெட்டவன் என்று ஆக்கிரம சக்திகளினால் உருவாக்கபடும் கதைகள். இவை அனைத்து யுத்தங்ளின் போது முன்வைக்கப்படும் பொய்கள்.

இவற்றை கடந்து யாரையும் ஆக்கிரமிக்காது தாம் வாழும் பிதேசங்களில் யுத்தமற்ற மனிதவிழுமையங்களை அங்கீகரிக்கும் திசை நோக்கி மனித சமூகம் பயணிக்க வேண்டும். அதனை மறுதலித்து விட்டு எமது போராட்டத்திற்கு அந்தநாடு உதவியது இந்நாடு எதிர்த்து என்று நடைபறும் யுத்ததில் சார்பு நிலை எடுக்காது. நடைபெறும் யுத்தம் ஒர் சுயாதீன அரசிற்கு எதிரானது என்ற அடிப்படையில் பார்க்கவேண்டும். ஏற்கனவே பல சுயாதீன நாடுகளிற்கு எதிரான போர்கள் நடைபெற்றுள்ளன. அப் போர்களும் நியாயமற்றவையே என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.