Sonntag, 31. Januar 2021

எழுந்து வா தமிழா பாடலும் இசையும் காட்சிப்படுத்தலும் - ஓர் விமர்சனம்


30.01.20021
 அன்று சோலோ மூவீஸினால்- (Solo Movies) Carnatic Cafe யின் அனுசரனையுடன் எழுந்து வாழ் தமிழா என்ற பாடல் இணையெவளியில் வெளியிட்டு வைக்கப்பட்டிருந்தது. சுவிற்சர்லாந்து வாழ் இளைய தலைமுறையினரின் இசை திறமைகளை ஒன்று இணைத்து டென்மார்க்கை சேர்ந்த இரண்டாம் தலைமுறயை சார்ந்த வசந் துரைரட்ணத்தின் இசை ஆளுமையில் உருவாக்கப்டட பாடல் இந்த தலைமுறையின் ஓர் மையில் கல்லாகும். இந்த நிகழ்வில் கலந்து சிறு உரை ஆற்றும் சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றது பெரு மகிழ்ச்சி. பாடலின் இசையிலும் ஒலி ஒளி அமைப்பை பற்றி விமர்சப்பிப்பதற்கான திறமையிடம் என்னிடம் இல்லை.

பாடல் வரிகள் கூடுதலாக உணர்ச்சி பூர்வமாக அமைந்திரிந்தது. நாம் எப்போதும் உணர்ச்சிகளிற்கு ஆட்பட்டு போவதால் யாதார்த்திற்கு சாத்தியமானதும் சாதிக்ககூடிய பல சந்தர்ப்பங்களை வரலாற்றில் இழந்த உதாரணங்கள் பல உள்ளன.

பாடல் வரிகளையும் இளையோரே எழுதி இருந்திருந்தால்அவர்களது எண்ணக்கருக்களும் புலப்பட்டிருக்கும். பாடல் காட்சிகள் புலத்தினை எவ்விதத்திலும் காட்சிப்படுத்தாது தனியே தாயக காட்சிகள் மட்டும் காட்சிப்படுத்தியதும், மயக்கத்தரும் வகையில் பெண்போராளிகள் கொடி பிடிப்பது போன்றகாட்சிகள் ஏதோ ஒரு அரசியல் சார்பினை தெள்ள தெளிவாக காட்சி மூலம் செய்தி சொல்லவைக்கின்றது. இளையோர் தமது கையில் அனைத்தையும் கையகப்படுத்தியிருந்தால் இன்னுமொரு பரிமாணத்துடன் வந்திருக்லாம் என்ற அவா என்னிடம் உள்ளது.

எமது இளைய இசைக்கலைஞர்களின் இசைதிறமைகள் ஐரோப்பிய நாடுகளின் இசை கலைஞர்களுடன் இணைந்து ஓர் பெரிய அங்கீகாரத்தினை பெற்று கொள்ள வேண்டும் என்ற அவாவினை எமது இளையோரிக்கான அன்பானவேண்டுகோளை தெரியப்படுத்திருந்தேன். பல  இசை நிகழ்ச்சிகளில் ஒலியின் அளவினை அதிகரிப்பதே ஓர் பாரம்பரியமாக இருந்துவந்துள்ளது. இவைற்றை எல்லாம் தவிடு பொடியாக்கும் வகையில் இந்த பாடலின் ஒலி அமைப்பு துறை சார்ந்து ஒழுங்கு செய்ப்பட்டிருந்தது.

கோரனாவில் ஏற்பட்டுள்ள Lock down வினால் பல இளைய தலை முறையினர் மன அழுத்திற்கு உள்ளாகி உள்ளனர். இவ் இளைஞர்களை கவனத்தில் கொண்டு அவர்களிந்கு ஓர் இசைவிருந்தினை வழங்கி மன அழுத்ததில்விடுபட செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்திருந்தேன்.

மயா போன்ற பாடகிகள் அவரகளது அரசியல் நிலைப்பாட்டினால் எவ்வாறு இசைத்துறையிலிருந்து ஒதுக்கபட்டனர் என்பதையும்  சுட்டிகாட்டியிருந்தேன்.

புலம்பெயர் தமிழ் சமூகம் பல துறைகளில் கால்பதித்திருந்தாலும் தமது சந்ததியினரின் நீண்டகால இருத்தலின் நலன் கருதி அரசியலிலும் கால்பதிக்க வேண்டும் என்ற தேவையையும் உணர்த்தி இருந்தேன். புலத்தில் அரசியலில் ஈடுபடும் எம்மவர்களை எந்தநாட்டி லும் உள்ள கட்சிகளும் செம்கம்பளம் இட்டு வரேவேற்கவில்லை. நாம் தான் இந்தேசமூகத்தில் ஓர் அங்கம் என்பதனை நிருபிக்க வேண்டும்என்பதற்காகவே அரசியலில் ஈடுபட வேண்டிய தேவை உளளது.

கட்சியில் அங்கம் வகிக்கும் இனவாதிகள் எம்மை ஓர் துச்சமாக கருதுவதும் நாமும் இவ்வகை இனவாதிகளின் கழுகுபார்வைக்கு முன் நாம் ஏதோ உடை அணியாதது போல் உணர்ந்த சந்தர்ப்பங்களை சுருக்கமாக தெரியப்படுத்தியிருந்தேன்.

நிகழ்ச்சி ZOOM வழியாக நடைபெற்றிருந்தது. ஆரம்பத்தில் எமக்கு ஓர் ID கொடுக்கபட்டிருந்தது. அதில் ஒருசிலர் பிரச ண்மாகி இருந்தனர். நிகழ்ச்சி வேறு ஒர் ID ஊடாக  ஆரம்பித்ததாக ஒருவர் கூற இன்னும் ஓர் ID தரப்பட்டிருந்தது. மற்றொரு ID ஊடாக LOGIN  செய்து கலந்து கொண்ட போது நிகழ்ச்சி ஏற்கனவே ஆரம்பமாகி நடைபெற்று கொண்டிருந்து. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய வசந்திற்கு யார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவார்கள் என்ற விபரங்கள் அறியாது ஓர் ஒழுங்மைக்கபடாது நடைபெற்று கொண்டிருந்தது. இதனை நெறிப்படுத்த வந்த அறிவிப்பாளரை வசந் இணைத்து அவரை தம்முடன் இணைந்து நிகழ்ச்சியை நடாத்துமாறு கோரிக்கை விட்டிருந்த போதும். அந்த அறிவிப்பாளரிடம் எவ்வித தாயரிப்பும் இருக்கவில்லை. இதனை ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால். அறிவுப்பு துறையானது தனித்து அடுத்த அடுத்த நிகழ்ச்சிகளை அறிவிப்பதல்ல. நடைபெற இருக்கும் நிகழ்ச்சி பற்றி நன்கு அறிந்தும் நிகழ்ச்சியில் பேச இருப்பவர்கள் பற்றி ஓரளவாவது அிந்திருக்க வேண்டும்.

ஓர் மிகவும் சிறப்பாக தாயாரிக்கபட்ட இந்தபாடலை ஓர் சிறப்பு தேர்ச்சி அற்ற நிகழ்ச்சி ஒழுங்கீனத்தினால் நிகழ்ச்சி கவரப்படவில்லை. அல்லது இந்த இசையின் தாயாரிப்பில் ஈடுபட்ட கலைஞர்களுடனான கலந்துரையாடலாக சுருக்கி கொண்டிருக்கலாம்.

நிகழ்ச்சியை ஆளுமைப்படுத்தாதன் விளவாக யார் நிகழ்ச்சியை நடாத்தினார்கள் என்ற கேள்வியும் எமாற்றமும் என்னை ஆட்கொண்டது.

இந்த தவறுகள் நடைபெறாமல் நிகழ்ச்சி ஒழுங்கமைப்பிலும் அறிவிப்பு துறையிலும் கவனம் செலுத்தவேண்டும். இளையோரின் அனைத்து  செயற்பாடுகளும் துறைசார்ந்து சிறப்பு தேர்ச்சியுடன் நடைபெறவேண்டும் என  வாழ்த்துகின்றேன்.

சுதாகரன் கணபதிப்பிள்ளை

31.01.2021

Freitag, 22. Januar 2021

நண்பன் ஐெமினியும் ஐரோப்பிய தமிழரின் கருத்துகளமும்.

 

எனக்கு சுவிற்சர்லாந்தின் வதிவிட அனுமதி கிடைத்து முதன் முதலில் சுவிற்சர்லாந்தை விட்டு முறையாக ஜேர்மனியில் இடம்பெற்ற இலக்கிய சந்திப்பிற்கு சென்றிருந்தேன். இந்த இலக்கிய சந்திப்பினை ஜெமினி மற்றும் காலம்சென்ற தோழர் பராவினால் ஒழுங்கு செய்பட்டிருக்பலாம் என நினைக்கின்றேன். என்னை அழைப்பதற்காக புகையிரத நிலையம் வந்திருந்த நண்பர் ஜெமினிஎன்னை தனேக்கே உரித்தான சிரித்த முகத்ததுடன் வரவேற்றார். 87, 88, 89, 90 அந்தகாலம் சிறு பத்திரிகைகளின் பொற்காலம். ஐேர்மனி, பிரான்ஸ், சுவிற்சர்லாந்து, நெதர்லாந்து, டென்மார்க், நோர்வே என பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து பல சஞ்சிகைகள் புற்றீசலாக பறந்து திரிந்த காலம். அன்று நடை பெற்ற சந்திப்பில் சுவிற்சர்லாந்தில் இருந்து நான் மட்டுமே கலந்து கொண்டிருந்தேன். மனிதம் தனது விடியோ சஞ்சிகையினை முடிவிற்கு கொண்டுவந்து தனது ஆக்கங்களை கை எழுத்து பிரதியாக கொண்டு வந்த காலம். நான் நண்பர் ஜெமனியிடம் கை எழுத்து பிரதி கொண்டுவருவதில் உள்ள சிக்கல்களை அலசி ஆராய்ந்தோம். தாம்மால் கொண்டுவரப்பட்ட அக்கினி சிறு பத்திரிகை கணணியில் தமிழ்  எழுத்துக்களால் எழுதி வடிமைக்கபட்ட சஞ்சிகையாக வெளிவந்திருந்தது. என்னை தனது வீட்டிற்கு அழைத்து சென்று தமிழ் உருக்களை எவ்வாறு கணணியியில் பதிவு செய்யமுடியும், அதற்கு தேவையான மென்பொருட்கள் பறறியும் சலிக்காமல் சொல்லித்தந்திருந்தார். அதே கனவுடன் வந்து முதலில் சுவிற்சர்லாந்தில் வெளிவந்த மனிதம் சஞ்சிகையை கணணி தமிழ் உருவில் வடிவமைத்திருந்தேன். 

நான் ஜெமினியை சந்தித்ததன் விளைவாகவே எனக்கு கணணியில் ஆர்வம் ஏற்பட்டது. துறைசார்ந்த கணணி ஆர்வத்தை  ஏற்படுத்தியது நண்பர் ஜெமனி என்பது என் வாழ் நாளில் மறக்க முடியாத சம்பவமாகும். அதன் பின்னர் நான் கணணியை துறைசார்ந்துகற்றேன் பலரிற்கும் கற்பித்தேன்.

 90 களில் புலிகளின் இராணுவத்திற்கு எதிரான தாக்குதல்கள்அதிகரிக்க புலத்தில் புலிகளிற்குஆதரவாக பலர் செயற்பட ஆரம்பித்தனர். நாட்டில் விடுதலைப்புலிகள் ஜனநாயகத்தின் குரல்வைளயை நசித்த போது அதன் தாக்கம் புலத்திலும் தலைவிரித்தாட ஆரம்பித்தது. இதன் விளைவாக பல சிறு சஞ்சிகைகள் மீது அழுத்தங்கள் கொடுக்கப்பட்டது. மேலும் தனி ஆயுதகலாச்சாரம்மட்டுமே விடுதலைப்போரட்டத்தின் வடிவம் என நம்பி பலர் ஆதரவாளர்கள்ஆனார்கள். இவற்றின் விளைவாகவும் சிறு பத்திரிகைகள் வாசகர் பரப்புமின்றி ,துணிச்சலின்றி ஆக்கங்களை எழுதமுடியாது முடங்கின. இக்காலகட்டத்தில் ஜனநாயாக மறுப்புக்களிற்கு எதிராகவும் ஆயுதகலாச்சாரத்திற்கு எதிராக குரல்கொடுக்க முன்வந்த பல சிறு சஞ்சிகை எழுத்தாளர்கள் தமது பதிவுகளை பிரசுரிக்க வாய்பில்லாமல் இருந்த காலம்.

 அவ் வேளையிலும் ஜெமினி  கணணித்துறையில் ஒருபடி முன்சென்று தேனி எனும் இணையத்தளம் மூலம் பலரிற்கு எழுதும் தளத்தினை இலவசமாக வழங்கியிருந்தார். ஆயுத மோகமும் அச்சுறுத்தல்களும் தலைவிரித்தாடிய காலப்பகுதியில் துணிச்சலோடு அனைத்து விமர்சன எதிர்ப்பு ஆக்கங்களை பிரசுரித்து வந்திரிந்தார்.

அன்றும் பெரும்பாண்மையினரால் சரி எனும் கருத்துக்கு  மாற்றாக ஓர் கருத்து பதிவு செய்தால் எழுதியவர்களும் பிரசுரித்தவர்களும் துரோகிகள், காட்டி கொடுப்பவர்கள், அரச உளவாளிகள், இன்னும் பல பட்டங்களையும் தூற்றல்களையும் முகங்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. இவற்றை எல்லாம் சகித்து தனியே முகம் கொடுத்த மாமனிதன். இவ்வகை ஒர் கருத்து களத்திற்கான இடம் மறுக்கபட்டிருந்தால் மாற்று கருத்து என்பதே வெற்றிடமாக அமந்திருக்கும். எனது பல கட்டுரைகள் தேனியில் பிரசுரிக்கபடடிருந்தமையும்குறிப்பிடதக்கது.

புலம்பெயர்ந்ததமிழர் வரலாற்றில் ஜெமினி ஓர் முக்கிய பாத்திரம் என்பது யாராலும் மறுக்க முடியாதது ஒன்றாகும்.

நன்று ஓய்வாக நீண்ட உறக்கத்திற்கு சென்ற நண்பனிற்கு எனது இதய பூர்வமான நன்றிகளும் வாழ்த்துக்களும். உன்னை பிரிந்தி தவிர்க்கும் அன்பு நெஞ்சங்களிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

கணபதிப்பிள்ளை சுதாகரன்

23.01.2021


Montag, 4. Januar 2021

இலங்கைக்கான புதிய ஆட்சி முறமையினனதும் புதிய கட்சி வடிவத்துடன் கூடிய அரசியல் கலாச்சாரத்தின் முன் தேவையும்

இலங்கையில்
சிறுபாண்மையினரையும் பிரதேசங்களையும் பிரதிநித்துவப்படுத்தும் கட்சிகள் தொடர்ச்சியாக தமக்கிடையிலான உள்முரண்பாடுகளுடன் அரசியல் ரீதியில் தோல்விகளையே சந்தித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாது இவ்வகையான சிறுபாண்மை கட்சிகளின் எதிர்தாக்கமானது பெரும்பாண்மை இனத்தினை முதன்மைப்படுத்தும் கட்சிகளைபூதாகரமாக இனவாதக்கோட்பாடுகளுடன் வளர வழிசமைக்கின்றன.

சுவிற்சர்லாந்தில் நான்கு தேசிய இனங்கள் இருக்கின்ற போதும் தனியே மாநிலத்தையோ கிரமத்தினையோ மொழியோ பிரநிதித்துவ கட்சிகளை விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் உள்ளது. உதாரணமாக இத்தாலி மொழி பேசும் கன்ரோனில் Lega dei Ticinesi என்ற அதிதீவிர வலதுசாரிகட்சி ஒன்றுள்ளது. ஆனாலும் பெரிய கட்சிகள் தமது மாநில கிராமசபை கட்சிகள் மிகவும் சுயாதீனத்துடன் சுதந்திரமாக செயற்படுகின்றன. இவ்வகை செயற்பாட்டினால் மாநிலங்களின் சுயாதீனமும் அனைத்து தேசிய இனங்களின் ஒற்றுமையும் குறிப்பிட்டளவு பாதுகாக்கபடுகினறது. தனியே மாநில அல்லது சிறுபாண்மையினர் கட்சிகள் மட்டும் வலு வலுப்பட்டிருந்தால் 26 கன்ரோன்கள் ஒன்றுபட்டு செயற்பட முடியாது மட்டுமல்லாது சுவிற்சர்லாந்து என்ற நாடே சாத்திமாயிருக்க முடியாது.

இலங்கையை தமது கட்டுபாட்டிற்குள் வைத்திருக்க சீனாவும் இந்தியாவும் முந்தி அடித்து கொண்டு இருக்கின்ற போதும். சீனாவின் கை ஓங்கி இருப்பதனை கண்கூடாக பார்க்க முடிகின்றது. இவ்வகை இழுபறி நிலையில் இந்தியா, ஐரோப்பிய, அமெரிக்கநாடுகளுடன் இணைந்து தமிழர்களின் அரசியல் உரிமை போராட்டத்தினை கையில் எடுத்து சீனாவினை நெருக்கடியை கொடுக்கும்வகையி லும், தமிழர் வாழ் பிரதேசங்ளை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க விரும்புவதையும் அவதாணிக்க முடிகின்றது. இதன் வெளிப்பாடாகவே யாழ்பாணத்தில் அமைந்திருக்கும் இந்திய துாதரகரத்தினை பார்க்ககூடியதாக உள்ளது.


அதேபோன்று சீனாவில் நடைமுறையுல் மத்தியப்படுத்தபட்ட ஆட்சிமுறையினால் பல்வேறு பிரதேசங்களை தேசியனங்களை ஒருமித்தும் ஒடுக்கியும் கையாளுகின்றது. இவ்வகையான அணுகு முறையினையின் முனைப்பாகவே ராஜபக்ஸ அரசின் கைகளில் அதிகாரம் குவிவதனையும் அதே குடும்பம் One nation, one country கோட்பாட்டினை மக்களிடத்தினை பிராச்சாரப்படுத்துவதனையும் கண்டுகொள்ள கூடியதாக உள்ளது. இரு வகை தன்நலம் கருதும் ஆக்கிரமிப்பாளர்களின் உதைபந்தாட்டத்தில் இலங்கை வாழ் மக்கள் அல்லல் அடையப்போவது தி்ண்ணம்.

முழுமையான ஆக்கிமிப்பாளர்களது பந்தாட்டம் ஆரம்பிக்க முதல்,  இலங்கைவாழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் இலங்கைக்கே உரிய ஆட்சிமுறமையையும் அனைத்து சிறுபண்மைமக்களின் சுயநிர்ணயத்தினை உறுதிப்படுத்தும்வகையில் ஒர் நடைமுறைக்கு சாத்தியமான அரசியல்சாசணம் ஏற்படுத்த வேண்டும். இவ்வகையிலான நடைமுறைக்கு முன்னர் சக தேசிய இனங்களையும் ஒருங்கிணைக்க கூடிய கட்சி வடிவம் அவசியம். தற்பொழுது தம்மைதாமே தேசியகட்சிகள் என்று கூறும் இருபெரும் பேரினவாத கட்சி போலன்றி ஒர் மாறுபட்ட பதிய முறமை அவசியம். தம்மைத்தாமே தேசியகட்சி என அழைத்து கொள்ளும் கட்சியில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே சிறுபாண்மைபிரநிதித்துவம் உள்ளது.

இதைவிட்டுவிட்டு தந்திரோபாயம் சர்வதேச அரசியல் காய்நகர்த்தல் என்ற போர்வையில் சிறுபாண்மை தரப்பு ஒரு ஆக்கிரமாப்பதளருடனும் பெரும்பாண்மை தரப்பு இன்னுமொரு ஆக்கிரமிப்பாளர்களிற்கு முட்டு கொடுப்பதன் மூலம் இலங்கை வாழ்மக்களை கையேந்தும் பிஜைகளாக மட்டுமே மாற்றமுடியும். தம்மைதாமே ஆளும் உள்ளகத்தன்மை கொண்டிராத எந்த மக்கள் குழுமங்களும் எடுப்பார் கைப்பிள்ளைகளாகவே இருக்க முடியும்.

தமக்கான ஓர் அரசியல் கலாச்சாரத்தை சாசணத்துடன் கூடிய வரையறை ஒன்றை செய்து ஆட்சிஆளும்போது ஆக்கிரமிப்பாளர்களால் பெரரிமாற்றங்களை செய்து கபளீகரம் செய்ய முடியாது.

இந்தியவின் ஆக்கிமிப்பின் கட்டுப்பாட்டிற்கு வரும் தரப்பு ஜனநாயகம் என்ற போர்வையில் பல சீரழிவு கலாச்சாரங்களையை கடைப்பிடிக்க நேரிடும். பொரருளாதார நிறைவு என்ற சொல்லே தேவை அற்றது என்ற நிலை ஏற்படும். ஆனால் சீனாவினால் ஆக்கிரமிக்கபட்டால் பொருளாதார வளர்ச்சி ஏற்பட சாத்தியமிருப்பினும் தனிநபர் ஜனநாயக உரிமைகள் நிட்சயம் நசுக்கபடும். ஆதலாலே இலங்கை மக்கள் தம்மைதாமே ஆள்வதே சாலச்சிறந்தது. இந்நிலை ஏற்படேவண்டுமாயின் பிரதேச ஆதிக்க பெரும்பாண்மை சிந்தனைக்கு முற்றுபுள்ளியிடல் வேண்டும்.

சுதாகரன் கணபதிப்பிள்ளை

04.01.2021

Montag, 5. Oktober 2020

ஏன் பெற்றோர் தமது குழந்தைகளை கொலை செய்கின்றனர்?

தா
ய்மார்கள் தங்கள் குழந்தைகளை கொல்லும்போது அல்லது குறைந்தபட்சம் கொல்ல முயற்சிக்கும்போது அவர்கள் பெரும்பாலும் மனநோயினால் பாதிக்கபட்டவர்களாக இருப்பார்கள். குற்றவியல் உளவியலாளர்களும் மற்றும் தடயவியல் மனநல மருத்துவர்களும் இக் கருத்தடன் உடன்பட்டுள்ளனர். மற்றைய குடும்ப உறுப்பினர்களால் குழந்தைகள் பாலியல் வன்முறையால் துன்புறுத்துவதும்  ஒரு காரணியாக அமைந்துள்ளது.


குடும்பங்களுக்குள் நடைபெறும் வன்முறைகள் பொதுவாக மூன்று சாத்தியமான தோற்றங்களைக் கொண்டிருக்கின்றன குற்றவியல் உளவியளாளர் மார்க்ஸ் விளக்குகின்றார். உதாரணமாக ஒரு தாய் மனநலம் பாதிக்கப்பட்டதால் குழந்தையை கொல்கிறாள். எந்தவொரு காரணத்திற்காகவோ விவாகரத்து செய்ய விரும்புகிறாள், தன் குழந்தைகளை உலகத்திலிருந்து பாதுகாக்கவோ அல்லது காப்பாற்றவோ விரும்புகிறாள், அவர்களை தனது மரணத்துடன் அழைத்துச் செல்கிறாள். குற்றவியல் உளவியலாளர் மேலும்அவர் குறிப்பிடுகையில்  இவவகையான  வன்முறை நிகழ்வுகளை  நீட்டிக்கப்பட்ட தொடர்  தற்கொலை என்று வரையறை செய்கின்றார். தாய் தற்கொலை செய்து கொள்வதும், குழந்தைகளின் பாதுகாப்பு கருதி அவர்களது உயிரினை பறித்து தன்னுடன் அழைத்துச் செல்லும் நோக்கத்திலேயே செய்யப்படுகின்றது.

நீட்டிக்கப்பட்ட தொடர் கொலைகள்

இரண்டாவது வகையிவான  நீட்டிக்கப்பட்ட கொலைக்காரணம்  கணவன் மனைவிற்கு இடையிலான விவாகரத்து தகராறின் போது சட்டம் தனியே தாயிடமோ தந்தையிடம் மட்டும் குழந்தை பராமரிக்கும் உரிமைக்கான தீர்ப்பு வழங்கிவிடும் போது பாதிக்கபட்ட தாயோ தந்தையோ மற்றவரிற்கு வழங்கபட்ட குழந்தை பராமரிப்பிற்கான உரிமையை தடுக்கும் வகையில் தமது குழந்தையை தாமே காெலை செய்கின்றனர்.குற்றவியல் உளவியலாளரின் கூற்றுப்படி, பெண்களை விட ஆண்களே இவ்வகையான கொலைகளை பெரும்பாலும் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்னதாக குறிப்பிடுகின்றனர். இங்கும் மேல்குறிப்பிட்டது போல் குழந்தைகளின்  உயிரை முடிவுக்கு கொண்டுவருவதன்  முலம் தாயையோ தந்தையையோ தண்டிக்க முனைின்றனர்.

வயதான அல்லது  நோய்வாய்ப்பட்ட பெற்றோர் தமது குழந்தைகளை பராமரிக்க முடியாத இயலாமையில் கூட்டாக தமது உயிர்களை பறித்து கொள்கின்றனர். இவ்வகை கொலைகள் முன்றாவது வகைப்பட்ட நீடிக்கபட்ட தொடர் கொலைகள் ஆகும். முடிவு செய்கிறார்கள். ஒருவர் மற்றவரைக் கொன்று பின்னர் தற்கொலை செய்து கொள்கிறார்.


குழந்தை கொலைகள் மட்டுமல்ல

இவ்வகையில் திட்டமிட்ட நடைமுறையும் சாத்தியமாக்கின்றது என்று மார்க்ஸ் சுட்டிக்காட்டுகின்றார். வாழ்வில் ஏற்பட்ட அதிர்ச்சியும் கூட இவ்வகையில் ஓர் கொலையினை செய்யகூடிய  சாத்தியங்களை ஏற்படுத்தி கொடுக்கின்து. இதன் விளைவாக, ஒரு அதிர்ச்சிகரமான நிகழ்வுக்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிற்பாடு ஏற்படும் சில எதிர்வினைகள் எவ்வித தாயாரிப்பும் அற்ற  இயல்பான விடயமாக கொலை செய்யும் நிலைமைகளையும் மனோநிலமையையும் தோற்றுவிக்கின்றது.

உளவியல் பிரச்சினைகள் இருப்பதாக நீங்கள் கருதினால் பின்வரும் கேள்விகளை கேட்பதன் மூலம் உங்களை நீங்கள் புடம் போட்டு கொள்ள உதவக்கூடும்:

உங்களுக்கான கேள்விகள்:

ஆதாரம்: Rosemarie Piontek: Mut zur Veränderung. Methoden und Möglichkeiten der Psychotherapie. 2009.

  1. எனக்கு என்னைத் தெரியாதுஉள்ளது ! நான் வழக்கத்தை விட வித்தியாசமாக உணர்கிறேனா?
  2. இந்த மாற்றம் எனக்கு கவலை அளிக்கிறதா?
  3. மாற்றத்திற்ககான விளக்கம் உள்ளதா?
  4. எனனால் சில விடயங்களை ஏற்றுெகாள்ள முடியவில்லை ஆனாலும்  தீவிரத்தை உளுணர்வு நியாயப்படுத்த முனைகிறதா?
  5. எனது அன்றாட வேலைகளை சிரமத்துடன் செய்யகின்றீர்களா?
  6. நான் எப்போதும் கவலைப்படுகிறேனா, நான் மிகவும் பயப்படுகிறேனா?
  7. நான் உடல் வியாதிகளால் பாதிக்கப்படுகிறேனா?
  8. என் தூக்கம் தொந்தரவாக இருக்கிறதா, நான் மிகக் குறைவாக அல்லது அதிகமாக தூங்குகிறேனா?
  9. நான் அடிக்கடி ஆக்ரோஷமான, வெறுக்கத்தக்க, எரிச்சலை உணர்கிறேனா அல்லது நான் மிகவும் சகிப்புத்தன்மையற்றவனாக உள்ளேனா?
  10. நான் அடிக்கடி நோய்வாய்ப்பட்டவனை போன்று உணருகின்றேனா?
  11. எனக்கு தற்கொலை எண்ணங்கள் உள்ளதா?
  12. எனது பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்கு எவரும் இல்லை என்று உணருகின்றேனா?
  13. நண்பர்களுடனான உரையாடல்கள் உதவவில்லையா?
  14. எனது மாற்றம் மற்றவர்களால் தெளிவாக கவனிக்கப்படுகிறதா?
  15. மூன்று மாதங்களுக்கும் இவ்வகையான நிலை தொடர்கின்றதா?
  16. எனக்கு எவ்வடயத்திலும் அக்கறையற்றதும் விருப்பமற்ற போக்கினையும் உணரக்கூடியதாக உள்ளதா?

எமக்கான நண்பர்கள் உறவினர்களிடையே ஓர் திறந்த உரையாடல்களை தொடர்சியாக மேற்கொள்வதும் தொடர்புகளை தொடர்ந்து பேணுவதும் புலத்தில் வாழும் சூழலில் இருந்து அன்னியமாகாது எம்மை மகிழ்ச்சியாக வைத்துகொள்ள உதவும்.

- கணபதிப்பிள்ளை சுதாகரன்.