Donnerstag, 22. Januar 2015

தமிழ் மொழியில் எற்படுத்த வேண்டிய மாற்றம் பற்றி ஓர் வினா?

தமிழ் மொழியில் எற்படுத்த வேண்டிய மாற்றம் பற்றி ஓர் வினா?

நீண்ட காலமாக என்னிடம் ஓர் தீர்க்க முடியாத ஓர் வினா பதிலில்லாமல் என்னகத்தில் தங்கிவிட்டது.
எனது வினா என்னவாக இருக்கலாம் என பலதையும் பத்தையும் யோசிக்காதீர்கள். விடயத்திற்கு வருகின்றேன் நான் கேட்கும் கேள்வியின் விவாதத்தில் தமிழ் மொழியில் புலமை பெற்றவர் கலந்து கொண்டால் சிறப்பாக இருக்கும் என்று கருதுகின்றேன்.
தமிழ் மொழி தனக்கே உரிய அழகான எழுத்து உருக்களை கொண்டுள்ளது. ஆனால் வழந்து வரும் கணணி தொழில்நுட்பத்தினாலும் புலம்பயர்ந்து வாழும் தமிழ்மக்களின் எண்ணிக்கையாலும் நீண்ட கால நோக்கில் தமிழ் மொழியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அருகி விடும் என்ற அச்சமும் என்னிடம் உள்ளது. கணணியில் எழுதப்படும் படைப்புக்கள் கணணி மொழிபெயர்க்கும் மென்பொருளால் இலகுவில் மொழிபெயர்க்க முடிவதில்லை. அதுமட்டுமல்லாது எமது இனம் ஓர் சிறுபாண்மையாக பல நாடுகளில் சிதைந்து போயுள்ளதாலும் தமிழ்மொழியை பேசுபவர்களின் அடுத்த சந்ததிகள் இம் மொழியினை பாவனைக்குட்படுத்தாது போகும் சந்தர்ப்பங்களே அதிகரித்து வருகின்றது.
மேலே முன்வைத்த கருத்தின் அடிப்படையில் ஏன் தமிழ் மொழியின் எழுத்து வடிவத்தினை ஆங்கில எழுத்து வடிவாமாக மாற்றி புதிய இலக்கண விதிகளை உருவாக்களாமே? இவ்வகையில் ஓர் மாற்றத்தினை கொண்டு வந்தால் இம்மொழி நீண்டகாலம் பாவனைக்குட்பட்ட மொழியாக இருக்கும் என்பது ஓர் நம்பிக்கை. ஓரு மொழிக்கு இரண்டு எழுத்துவடிவங்கள் இருப்பது ஒன்றும் புதிதல்ல.
தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் வழக்கத்திலுள்ள எழுத்துருக்களையே பயன்படுத்தலாம். புலத்தில் ஓர் பரீட்சார்த்தமாக ஓர் புது முயற்சியை ஆரம்பித்து பார்க்கலாமா?
எனது இந்த கேள்விக்காண பதிலை எல்லோரிடமிருந்து எதிர் பார்க்கின்றேன். தயவு செய்து இதனை உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

https://www.metype.com/page/aHR0cHM6Ly9zd2FyYWp5YW1hZy5jb20vY3VsdHVyZS93aWxsLXRhbWlsLXRha2UtdG8tbGF0aW4=?share=c2hhcmVfdHlwZT1jb21tZW50JmNvbW1lbnRJZD04ODk1OQ==

Keine Kommentare:

Kommentar veröffentlichen