Sonntag, 6. März 2022

புலம்பெயர் தமிழரின் யுத்தம் பற்றிய நிலைப்பாடும் உண்மை நிலமையும். - க.சுதாகரன்

புலம்பெயர் எமது உறவுகள் ஒரு சிலர் தாம் வாழும் நாடுகளில் இருந்து கொண்டு நன்றாக சுதந்திர காற்றினையும்  சவாசித்து வரியினையும் செலுத்தி சமூக உதவிகளையும் பெற்றுகொடு. தாம் வாழும் சக நாட்டவரின் யத்தபாதிப்பின் அச்சத்தினையும் கவனத்தில எடுக்காது. யுத்த்தினை தொடுத்த இன்னுமொரு ஆக்கிரமிப்பு அரசின் நியாயங்களை நியாயப்படுத்துவதன் அளவியல் புரியாத புதிராக உள்ளது.

புலம்பெயர்  தமிழரின் வெறுபட்ட நிலைப்பாடுகள்

ரசிய உக்ரேனிய யுத்தத்தில் புலம்பெயர் தமிழர்கள் நான்கு வித நிலைப்பாடுகளில் உள்ளனர்.

1. இவர்கள் ஈழப்போரில் உக்ரேன் தமிழ் மக்களிற்கு எதிராக இருந்ததால் தாமும் உக்ரேனிற்கு எதிராக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளவர்கள்.

2. இவர்கள் ஈழப்போரில் உக்ரேன் தமிழ் மக்களிற்கு ஆதரவாக இருந்ததாக  கருதி  ரசியாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ளவர்கள்

3. இவர்கள் உலகத்தின் பாெலிஸ்கார அமெரிக்க ஏகாபத்திற்கு எதிரான போராட்டமாக ரசிய ஆக்கிரமிப்பை ஆதரிப்பவர்கள்.

4. இவர்கள் இரசியா உக்கிரேன் என்ற இறமையை மதிக்காது மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு யுத்தினை எதிர்ப்பவர்கள்.

நாட்டோவின் கிழக்கு விஸ்தரிப்பு பற்றி

நாட்டோவின் கிழக்கு நோக்கிய ஆக்கிரமிப்பினால் அச்சத்துக்குள்ளான ரசியா உக்கிரேன் மீது யுத்தம் தொடுக்கப்பட்டுள்ளது என்ற விவாதத்தினை எடுத்து கொண்டாலும். இந் நடவடிக்கைய இன்றைய நுாற்றாண்டில் சிறப்பாக பேச்சுவார்த்தையில் தீர்வு காண்பதற்கும் தமது பக்க நியாயங்களை கூறி நட்பு நாடுகளை வென்றெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு வசதிகள் அதிகம் உள்ளது. ஈடுபடுவதற்கான வாய்ப்பு வசதிகள் அதிகம் உள்ளது. குறைந்தபட்சம் ரசியா உக்கிரேனுடன் தமது நட்பு ரீதியான இராஜதந்திரத்தினை பேணுவதற்கான முன்முயற்சியினை ஆக்க பூர்வமாக மேற்கொண்டதா?

பல்கேரியா (Bulgarien), எஸ்டோனியா (Estland), லிதுவேனியா (Litauen), ருமேனியா (Rumänien), ஸ்லோவேனியா (Slowenien), ஸ்லோவாக்கியா (Slowake), அல்பேனியா (Albanien) மற்றும் குரோஷியா (Kroatien). ஆகியவை 2004 மற்றும் 2009 க்கு இடையில் பின்பற்றப்பட்டன. குறிப்பாக பல்கான் நாடுகள் நாட்டோ உறுப்பினராக சேர்வதற்கு தாமகவே அழுத்தம் கொடுத்தன. நாட்டோ  கூட்டணி வளர்ந்து கொண்டே வந்தது. 2017 இல் மாண்டினீக்ரோ(Montenegro) மற்றும் மிக சமீபத்தில் 2020 இல் வடக்கு மாசிடோனியா (Nord-Mazedonien) சேர்க்கப்பட்டது.

ஒரு அரச உரிமை உள்ளநாடு தனது நாட்டின் பாதுகாப்பில் கருசனை கொண்டு எந்த பாதுகாப்பு கூட்டணிக்குள் தம்மை இணைக்க வேண்டும் தாமே  தீர்மாிப்பதே சுயாதீனமனது. ஏன் ரசியாவிற்கு அருகாமைில் உள்ள நாடுகள் ஏன் ரசியாவுடன் சேராது நாட்டேவுடன் விரும்புகின்றனர் என்ற கேள்வியை கேட்டே ஆக வேண்டும். ரசியாவின் அரசியலில் நம்பிக்கை அற்றவர்கள் மாறாக ஐரோப்பிய அமைப்பில் தம்மை இணைத்துகொள்ள விரும்புவர்கள் என்ற பதில்களே எமக்கு கிடைக்கமுடியும். பல லொபிகள் இக்ககூட்டமைப்பு இணைவாக்கத்திற்கு காரணாமாக அமைந்திருப்பினும் ரசியா தனது தரப்பின் இராஜதந்திர தோல்வியாகவே கருத முடியும். தோல்வியாகவே கருத முடியும்.

புதிய நாஐிகளும் ரசியாவினால் யுத்திற்காக முன்வைக்கபடும் காரணமும்

அப்படியானால் ஏன் தனது யுத்தம் புதிய நாஜிகளிற்கு எதிரான நடவடிக்கை என காரணத்தினை முன் வைத்தது. சரி அதனையும் காரணமாக பார்த்தால். இவர்கள் உக்கிரெனில் ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்பொழுது புதிய நாஜிகள் மிக சிறுபாண்மையினரே இவ்வகையில் புதிய நாஜிகள் ஐரோப்பி அமெரிக்க நாடுகளில் எண்ணிக்கை அடிப்படையில் கூடுதலாக உள்ளனர். வலது அதிதீவிர தேசிய வாதம் இவ்வகையில் நாஜிய கருத்து உடைய ஆயத வன்முறையாளரை உருவாக்கும்.

ரசியாவில் வன்முறை வலதுசாரி தீவிரவாதிகள் பல ஆண்டுகளாக வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். வலதுசாரி பயங்கரவாதத்தின் விளைவாக கடந்த பத்து ஆண்டுகளில் பல நூறு பேர் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர் தாக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் மத்திய ஆசியா அல்லது காகசஸில் (Kaukasus) இருந்து வந்தவர்கள். , மற்றும் இடது தீவிரவாதிகளும், வீ டற்றவர்கள்,  ஓரின சேர்க்கையாளர்கள் மற்றும் நீதிபதிகள் கூட தாக்கபட்டுள்ளனர். வேறு எந்த கிழக்கு ஐரோப்பிய நாட்டிலும் இதுபோன்ற வன்முறை நவ-நாஜிகள் பல்லாயிரக்கணக்கானதாக இருக்கவில்லை. குறைந்தது 150  தீவிரமான போராளி நவ-நாஜிக்குழுக்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சோவியத் யூனியனுக்கு எதிரான நாஜிய ஆட்சியின் அழிவுப் போரின் பின்னர் (நவ) தேசிய சோசலிசம் ரசியாவில் எல்லா இடங்களிலும் வலுவான ஈர்ப்பை உருவாகியது முரண்பாடாகத் தோன்றலாம். ஆனால் குறிப்பாக இளைஞர்களிடையே, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய முதல் தசாப்தங்களில் பாசிச அழகியல் நாகரீகமாகக் கருதப்பட்டது, மேலும் சோவியத் யூனியனின் விமர்சகர்கள் சில நேரங்களில் நாஜி ஆட்சியுடன் நாஜி சின்னங்களால் தங்களை அலங்கரித்துக் கொண்ட இரகசிய பாடசாலை பல நிகழ்வுகள் நடந்துள்ளன.

இதே போன்று உக்ரேனில் தீவிர வலதுசாரி இயக்கங்கள் உள்ளது, மேலும் அதன் ஆயுதமேந்திய தீவிர வலதுசாரி தேசியவாத போராளிக் குழுவான அசோவும் (AZOV) அதன் இராணுவ குழுவும் அடங்கும். இவர்கள் எல்லைப்புற ரசிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக உக்கரேனிய இராணுவத்துடன் இணைந்து செயற்பட்டு வந்துள்ளன. இது புதிய நாஐிகளின் அதிதீவிர தேசியவாதத்தின் வெளிப்பாடு. உக்கரேனிய அரசு இவர்களிற்கான எதிர் அரசியலை முன்னெடுக்காதபட்சத்தில் உக்கரேனிய அரசுக்கும் மக்களிற்கும் ஆபத்தானவர்களாக மாறுவர் என்பதை முக்க முடியாது. இது உக்ரேனின் உள்விவகாரம். ரசியா முதலில் தன் பிரதேசத்தில் உள்ள நவ-நாஐிகளிற்கு எதிராக நடவடிக்கை எடாது பக்கத்து வீட்டில் உள்ள பிரச்சினைக்குள் மூக்கை நுளைப்பது எவ்விதத்தில் நியாயமாகும்?

ரசியா கடந்த காலத்தில் ஐரோப்பா முழுவதிலும் இருந்து வலதுசாரி தீவிரவாதிகளின் சந்திப்பு புள்ளியாக செயல்பட்டது. 2015 ஆம் ஆண்டில், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் "சர்வதேச ரஷ்ய பழமைவாத மன்றம்" (International Russian Conservative Forum) நடத்தியது.  ஜேர்மன் தீவிர வலதுசாரி தேசிய ஜனநாயகக் கட்சியின் (NPD) முன்னாள் தலைவர் Udo Voigt, அத்துடன் இத்தாலியின் தீவிர வலதுசாரி Forza Nuova கட்சி, கிரேக்கத்தின் நவ-பாசிச கோல்டன் டான் கட்சி மற்றும் இத்தாலியின் தீவிர வலதுசாரி லீக் (Lega) ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

2017 ஆம் ஆண்டில், பிரான்சின் ஜனாதிபதித் தேர்தலுக்கு சற்று முன்பு, மரைன் லு பென் ( Marine Le Pen) - பின்னர் பிரெஞ்சு தீவிர வலதுசாரிக் கட்சியின் தேசிய முன்னணியின் தலைவர், இது 2018 இல் ராஸ்ஸெம்பிள்மென்ட் நேஷனல்(Rassemblement National) என மறுபெயரிடப்பட்டது - ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை மாஸ்கோவில் சந்தித்தார். லு பென் ரஷ்யாவுடன் நெருக்கமான உறவுகளை ஆதரித்தார் மற்றும் நாட்டிற்கு எதிரான ஐரோப்பிய ஒன்றிய தடைகளை விமர்சித்தார்.

இவை எல்லாம் நடைபெற்ற பொழுது ரசியா தனது நவ நாஜி அரசியலிற்கு எதிராக போராடாது தளம் அமைத்து ஏன் கொடுத்தது? இ தனை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்?

வல்லரசுகளாலும், ஏகாதிபத்தியங்களாலும், பிராந்திய வல்லரசுகளாலும் மேற்கொள்ளப்படும் யுத்தங்கள் அதற்கு அவர்களால் முன்வைக்கப்படும் காரணங்கள். வில்லன் கதாநாயகன் அல்லது நல்லவன் கெட்டவன் என்று ஆக்கிரம சக்திகளினால் உருவாக்கபடும் கதைகள். இவை அனைத்து யுத்தங்ளின் போது முன்வைக்கப்படும் பொய்கள்.

இவற்றை கடந்து யாரையும் ஆக்கிரமிக்காது தாம் வாழும் பிதேசங்களில் யுத்தமற்ற மனிதவிழுமையங்களை அங்கீகரிக்கும் திசை நோக்கி மனித சமூகம் பயணிக்க வேண்டும். அதனை மறுதலித்து விட்டு எமது போராட்டத்திற்கு அந்தநாடு உதவியது இந்நாடு எதிர்த்து என்று நடைபறும் யுத்ததில் சார்பு நிலை எடுக்காது. நடைபெறும் யுத்தம் ஒர் சுயாதீன அரசிற்கு எதிரானது என்ற அடிப்படையில் பார்க்கவேண்டும். ஏற்கனவே பல சுயாதீன நாடுகளிற்கு எதிரான போர்கள் நடைபெற்றுள்ளன. அப் போர்களும் நியாயமற்றவையே என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

 

 

Montag, 28. Februar 2022

ரசிய ஆக்கிரமிப்பு போர் பற்றிய பார்வையும் சுவிற்சர்லாந்தின் நிலைப்பாடும் - க. சுதாகரன் (01.03.2022)

 

கடந்த தினங்களாக, ரசிய சர்வாதிகாரி விளாடிமிர் புட்டின் உக்ரைனையும் உலகையும் பணயக்கைதிகளாக வைத்திருக்கின்றார். அவர் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக போலியாக முரண்பாடான சமிக்ஞைகள் தந்திருந்த போதிலும், அவர் ரசிய மற்றும் பெலாரஷ்(Belarus) பிரதேசத்தில் உக்ரைனின் எல்லையில் அணிவகுத்துச் சென்றுள்ளார். 2014 முதல் மறைமுக ஆரம்பிக்கபட்ட ஆக்கிரமிப்புப் போராக இன்று எம்முன் நிற்கின்றது.

டொனெட்ஸ்க் (Donezk) மற்றும் லுஹான்ஸ்க் (Luhansk) ஆகிய கிழக்கு உக்ரேனிய "மக்கள் குடியரசுகளை" அங்கீகரித்து ரசியாவின்யாவின் முன்னாள் மகத்துவத்தை மீட்டெடுத்து, மேற்கத்திய விழுமியங்கள் மற்றும் மேற்கத்திய ஜனநாயகத்திற்கு எதிரான அவரது போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

குண்டுவீச்சுத் தாக்குதல்கள் மற்றும் ரசிய துருப்புக்களால் உக்ரைன் மீதான படையெடுப்பு ஆகியவை புட்டினின் ஒரு புதிய அளவிலான ஆக்கிரமிப்பு ஆகும், சர்வதேச சட்டத்திற்கு முரணான இந்த ஆக்கிரமிப்புப் போரை எவரும் நியாயப்படுத்த முடியாது. ரசியா உடனடியாக போரை நிறுத்த வேண்டும், போர் நிறுத்தத்தை ஒப்புக்கொண்டு பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்ப வேண்டும்.

ஐரோப்பா முழுவதிலும் உள்ள மக்களுக்கு பாரிய விளைவுகளையும் பேரழிவுகளையும் தரக்கூடிய அபாயம் தரக்கூடிய யுத்தம். பல்லாயிரக்கணக்கான மக்களை எல்லைப்புற நாடுகளில் அகதிகளாக நிர்கதியாக்கும் யுத்தம். சர்வதேச சட்டங்களின் அரசியல் வழிமுறையாக போர் தவறான  அடிப்படையில் ஆரம்பிக்கபட்டுள்ளது.

நேட்டோவின் கிழக்கு நோக்கிய விரிவாக்கத்தை ரசியா பலமுறை சரியாக விமர்சித்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், நேட்டோ ஏவுகணை வரிசைப்படுத்தல்கள், தொடர்ச்சியான ஆயுதமயமாக்கலும்   கிழக்கு ஐரோப்பாவின் நிலைமைகளை மோசமாக்கியுள்ளது.

ரசிய துருப்புக்களினால் உக்ரைன் மீது மேற்கொள்ளபட்ட படையெடுப்பினை நியாயப்படுத்த முடியாது. ரசியா தனது படையெடுப்பினை பற்றி தமது மக்களிற்கு நாசிகள்,  , புதிய நாசிகள், மற்றும் தேசிய சோசலிசத்திற்கு எதிரான  ஒரு "அமைதி பணி" என தமத அரச ஊதுகோள்களில் பிரச்சாரம் செய்து வருகின்று. அது மட்டுமல்ல அல்லாது, பாடசாலை மாணவர்கள் யுத்தம் நடைபெறுகின்றதா என்ற கேள்வியை கேட்டால் அதற்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்ற வகையிலான சுற்று அறிக்கை ஒன்று ஆசிரியர்களிற்கு அனுப்பட்டுள்ளது.

சர்வதேச சட்டத்தை மீறி, உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை இவ் ஆக்கிரமிப்பு மறுக்கின்றது - இது ஐரோப்பாவில் ஒரு பெரிய போரின் அபாயத்தை ஏற்படுத்தஉள்ளது. உக்ரைனின் பாதுகாப்பும் சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டும். அங்கு வாழும் மக்கள் புவிசார் அரசியல் நலன்களின் விளையாட்டுப் பொருளாக மாறக்கூடாது.

ரசிய துருப்புக்கள் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும். மோதலைத் தணித்தல் மற்றும் பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்துதல் ஆகியவை அவசரமாகத் தேவைப்படுகின்றன. அனைத்து இராஜதந்திர வாய்ப்புகளும் பயன்படுத்தப்பட வேண்டும். உக்ரேனிய-ரசிய எல்லையிலும், மற்றும் நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு இடையேயான எல்லை ராணுவம் இல்லாத பாதுகாப்பு வழித்தடம் தொடர்பான ஒப்பந்தம் பற்றிய பேச்சுக்கள் தொடர வேண்டும். நார்மண்டி வடிவமைப்பின் கட்டமைப்பிற்குள் பேச்சுவார்த்தைகள்  ஒரு தெளிவான மற்றும் பொதுவான பாதுகாப்பு கொள்கையின் அடிப்படையில் நடைபெறவேண்டும்.

சமாதனத்துடன் கூடிய உலக ஒழுங்கை அங்கீகரிப்பதும் முன்நிலைப்படுத்துவது அத்தியாவசியமானதாகும். இதில் அமெரிக்கா மற்றும் ரசியா மட்டுமல்ல, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உக்ரைன் உட்பட அனைத்து கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் இணைந்து செயற்பட வேண்டிய தேவையை வலியுறுத்தல் வேண்டும். அமைதியுடன் இணைந்து வாழ ஒரு புதிய பொதுவான ஐரோப்பிய பாதுகாப்பு கட்டமைப்பின் தேவைகள் வலியுறுத்தபடல் வேண்டும்.. இதற்கு முன் நிபந்தனையாக நேட்டோவின் கிழக்கு ஐரோப்பிய விரிவாக்கம் நிறுத்தப்பட வேண்டும். மேலும் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமைப்பை (OSZE) பாரியளவில் வலுப்படுத்த படல் வேண்டும். ஐரோப்பாவில் நடுநிலைபாத்திரத்தினையும் மற்றும் அமைதி காக்கும் அதன் பங்கையும் நடாத்தும் வகையிலான திசைநோக்கி நகர வேண்டும்.

பெரும் வல்லரசுகளுக்கு இடையிலான இராணுவ மோதலில் இருந்து பயனடைவது அனைத்து ஆயுத நிறுவனங்களாகும் என்பதனை புரிந்துகொள்ளல் வேண்டும்.   அவசரமாக யத்த சுழலில் இருந்து வெளியேற வேண்டும். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவின் வெளியுறவுக் கொள்கையின் இராணுவமயமாக்கள் மேலும் மக்களின் நலன்களிற்கு எதிரானதாகும், வன்முறையற்ற யுத்தமற்ற  தீர்வுநோக்கியும், சமூக சமத்துவம் மற்றும் நாட்டு எல்லைகளிற்கு அப்பாலான சமத்துவ ஐக்கியம் நோக்கி முன்னேறல் வேண்டும். 

ரசிய ஆக்கிமிப்பில் சுவிற்சர்லாந்தின் நிலைப்பாடு

புட்டின் ஆட்சிக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத் தடைகளை சுவிற்சர்லாந்து சமஷ்டி அரச  முழுமையாக அங்கீகரிக்க வேண்டுமெனவும், ரசிய பெருநிறுவனங்கள் மற்றும் தன்னலக்குழுக்களுக்கு(Oligarchs) மிக முக்கியமான பொருட்கள் வர்த்தக மையம் மற்றும் முக்கியமான நிதி மையமாக, சுவிற்சர்லாந்து செயற்பட முடியாது எனவும் சுவிற்சர்லாந்து சோசலிச ஜனநாயகக்கட்சி(SP), 80,000 க்கும் மேற்பட்ட மக்களின் கையெழுத்தினை சேகரித்து சுவிற்சர்லாந்து அரசிற்கு கோரிக்கையை முன்வைத்திருந்தது. 

விதிவிலக்கு இல்லாமல், ரசியாவிற்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகளை சுவிட்சர்லாந்து 28,02.2022 பல அழுத்தங்களிற்குபிற்பாடு ஏற்றுகொண்டது.  ரசிய குடிமக்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரத் தடைகள் பட்டியலில் உள்ள பல நிறுவனங்களின் சொத்துக்கள் உடனடியாகத் தடுக்கப்பட்டுள்ளன. மேலும் ரசிய அல்லது உக்ரேனிய கடவுச்சீட்டுகளுடன் ஐந்து தன்னலக்குழுக்களுக்கு (Oligarchs) நுழைவுத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரசியர்களுக்கான விசா வசதி தொடர்பான ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. திங்கட்கிழமை பிற்பகல் முதல், சுவிட்சர்லாந்தில் உள்ள வான்வெளி ரசிய விமானங்களுக்கு அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டது - திட்டமிடப்பட்ட மற்றும் தனிப்பட்ட விமானங்களும் உள்ளடங்குகின்றன.

சுவிற்சர்லாந்து மக்கள் கட்சியினர் (SVP)  இவ்வகையான பொருளாதார தடையை ஏற்படுத்த வேண்டாம் எனவும் சுவிற்சர்லாந்தின் பாரம்பரிய நடுநிலை கொள்கையில் உறுதியாக இருக்குமாறு அரசை வலியுறுத்தியது இங்கு குறிப்பிடதக்கது.



Samstag, 6. November 2021

ஐெய் பீம் திரைப்படமும் கம்யுனிச இய்கங்களின் போரட்டங்களும் - க.சுதாகரன் (06.11.2021)

கம்யனிசம் மார்க்சிசம் தோற்று விட்டது என்று முதலாளித்துவம் கொக்கரிக்கின்றது. ஆனால் வரலாறுகள் இச்சமூக விஞ்ஞானத்தின் அடிப்படையில் செயற்பட்ட கட்சிகளும் இயக்கங்களும் சிறுபாண்மை மக்களிற்கானதும் மனித உரிமை மீறல்களிற்கு எதிராக போராட்டங்களையும் செய்து ஒடுக்கபட்ட மக்களிற்கு ஆதராவாக இருந்துள்ளனர். இவற்றை வரலாறுகளும் திரைப்படங்களும் மீளபதிவு செய்வது காலத்தின் தேவையாகும். இந்த வகையில் ஐெய்பீம் Jai Bhim (https://en.wikipedia.org/wiki/Jai_Bhim) கதை சினிமாவிற்காக பல மாற்றங்களை செய்த போதும் ஒரு சிறுபாண்மை சமுகத்திற்கு நடந்த அநீதியை உணர்வு பூர்வமாக அம்பலப்படுத்தியுள்ளது. பொலிஸ் அரச இயந்திரத்தின் அராஐகத்தினை அம்பலப்படுத்த போராடிய கம்யூனிஸ்கட்சித்தோளர்களிற்கு ஒரு சலூட். இதற்கு ஒத்துளைத்த மார்க்சிச கருத்துக்களில் ஈடுபாடு கொண்டுள்ள வழக்கறிஞர் சந்துருவிற்கும் ஓர் சலுட். இதே போல் பல வழக்குகளை மனிதம் சாகது இருக்கின்ற சட்ட  நுணுக்கங்களை பயன்படுத்தி பாதிக்க பட்டவர்களிற்கு நிாயங்களை வழக்கறிஞர் பெற்று கொடுத்துள்ளார்.

இதேபால் பல சிறுபாண்மை சமுகங்களை பெரும்பாண்மை சமுகங்ளும் ஆதிக்க சமூகமும் திருடர்கள் சமூகவிரோதிகள் என குற்றம்சாட்டிய வரவாறுகள் உலக நாடுகளில் பல உள்ளன. புலம் பெயர் தமிழர்கள் பலர் தாம தஞ்சம் அடைந்த நாட்டிலும் ஆரம்பத்தில் ஊத்தை தமிழன் ஆடுகளவெடுப்பவர்கள் என மேடியாக்களும் வலது சாரிகளும் முத்திரைபதிக்க முயன்றத. அனாலும் 90 களில் குறைந்த ஊதிய தொழிலாளர்களின்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் தொழில்வாய்ப்புக்களும் நிரந்தர இருப்பிட வசததிகளும் வழங்கப்பட்டது. இவ்வகைில் அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்து தமது நிரந்தர இருப்பினை தமிழர்கள் உறுதிப்படுத்தி கொண்டனர்.

இன்றும் பல நுற்றுகணக்கான வருடங்களிற்கு முன்னர் இந்தியாவில் இருந்து நிர்ப்பந்தித்தின் பெயரில் புலம் பெயர்ந்த ஐராப்பிய அமெரிக்க நாடுகளில் நாடோடிகளாக தமது வாழ்வை ஆரம்பித்த சிந்தி அல்லது ஐிப்சி அல்லது றோனிய சிறுபாண்மை சமுகம்.  ஐெய் பீம் திரப்படத்தில் காண்பிக்க பட்ட இருளர் அல்லது ஆதிவாசி சமுகம் போன்று சொல்லணாத்துயரத்தினை அனுபவித்து வருகின்றது. இவர்களிற்கும் ஐராப்பிய பெரும்பாண்மை ஆதிக்க சமுகம் திருடர் ஊத்தயர்கள் வன்முறையாளர்கள என்றே வகைப்படுத்தி உள்ளனர்.

பிரான்சில் வாழும் நான்கு மில்லியன் வெளிநாட்டவர்களில் சிந்து றொமானியர்கள் 15000 இருந்து 20000 வாழ்விடமின்றி தெரக்கில் பிச்சை எடுத்து வாழ்கின்றனர். இதேபோன்று உங்கான் பல்கேரியா றுமேனியா என்று பல கிழக்கு  ஐராப்பிய நாடுகளில் ஒதுக்கப்பட்டு அடிப்படை வசதி இன்றி வாழுகின்றனர்.  இத்துடன் இணைக்கப்ட்டுள்ள காணொலியில் இலர்களின் அவலவாழ்வினை புரிந்து கொள்ளலாம். ஐேர்மன் மொழி தெரிந்தவர்கள் மொழி குறிப்பின் மூலமாகபுரிந்து கொள்ளமுடியும்.

https://www.youtube.com/watch?v=buLf3h4YktI


இருளர் அல்லது ஆதிவாசிகள் ஆதிக்க சமூகத்தினால் தரப்படும் கடினமானதும் சுகாதரமற்ற தொழில்களே வழங்கப்படுகின்றது.அவ்வகையிலேயே சிந்து றேமானிய சமூகமும் ஐரோப்பிய மேலாதிக்க சமூகத்தினால் ஒடுக்கபடபடுகின்றது. 1971 ம் தம்மை ஒர் றோனிய தேசிய இனமாகவும் தமக்கான தேசியகொடியுடன் பிரகடனப்படுத்தியதாலும் எவ்வித முன்னேற்றங்களை அடையவில்லை.

கிழக்கு ஐரோப்பவில் கமயூனிசகட்சியின் அரசு இருந்தபோது தமக்கு தொழில்களும் உணவுபற்றாக்குறையும் இருக்கவில்லை என கூறுகின்றனர். எப்பொழுது ஐனநாயகம் என்ற போர்வையில் ஆட்சி மாற்றத்திற்கு தமது வாழ்நிலை அதள பாதளத்தில் விழுந்துள்ளதாக குப்பிடுகின்றனர்.

இன்றும் உலகம் பூராகவும் ஒடுக்கபட்ட சமூகங்களிற்கானதும் மனித உரிமைகளிற்கான உரிமைக்ககுரலும் இடது சாரி அரசியல் பாரம்பரியத்திலிரிந்தே ஒலிக்கின்றது.

 

Sonntag, 3. Oktober 2021

சுவிற்சர்லாந்தில் நடைபெற்று முடிந்த திருமணம் அனைவரிற்குமானது என்ற அபிப்பிரயா வாக்கெடுப்பும் «EHE FÜR ALLE» புலம் பெயர்சமுகத்தில் இடம்பெற்ற ஓரினபால் திருமணமும் ஓர் கட்டுடைப்பும்.

தமிழ் சமுகத்தில் பாலியல் ஒரு வெளிப்பையான பேசுபொருளாக இருக்கவில்லை. ஆனாலும் முப்பது நாற்பது வருடங்களாக  புலம்பெயர்ந்து ஐரோப்பிய அமெர்க்கா அவுஸ்ரேலியாவில் வாழ்ந்து வரும் சமூங்களும் இன்னமும் எவ்விததயக்கமும் இன்றி குடும்ப உறுப்பினர்களிடையோ அல்லது நண்பர் உறவினர்களிடையே பேசுபொருளாக்குவற்க்கு தயங்கியே வருகின்றது. இது இவர்களின் மற்றைய சமூகங்களிற்கிடையான இணைவாக்கத்தின் அளவு கோளாக அமைகின்றது.

ஓரினபால் பால் உறவு என்பது மனித சமூகத்தில் புதிய விடமில்லை. மனித சமுகத்தில் பெரும்பாண்மையாக ஆண் பெண் உறவு முறை மனித சமுகத்தில் பெரும்பாண்மையாகவும் இனப்பெருக்கத்திற்கான மூலமாக இருந்ததினால் அங்கீகரிக்கபட்ட உறவுமுறையாக இருந்து வந்துள்ளது. ஆனாலும் ஓரினபாலியல் உறவு முறைகளும் சமகாலங்களில் சிறுபாண்மையாக நிலவியே வந்துள்ளது. இதற்கு பல மனித வாழ்வியல் ஆய்வுகள் சாான்று பகிர்கின்றன. தெற்காசி அரண்மனை வரலாறுகளும் இந்து கோயில் கோபுர சிற்பங்களும் இதற்கு ஆதாரம் தருகின்றது.


பாலியல் விடயங்கள் எவ்வித கூச்சமும் தயக்கமும்  இன்றி எல்லா சமூக உறவுகள் மத்தியில் பேசுபொருளாக மாறும் கலாச்சாரம் வலுப்படல் வேண்டும். கடந்த வாரத்தில் கனடாவில் இந்து முறைப்படி நடைபெற் ஓரினபால் திருமணம் ஓர் புலம் பெயர் சமுகத்தில் ஓர் கட்டுடைப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் இவ்விடயம் பற்றி பலபேசவும் கருத்து கூறமறுத்ததும் ஓர் ஆரேக்கியமான விடயமாக அமையவில்லை. இவ்வகை புதிய அல்லது சிறுபாண்மை உறுவு முறைக்குள் எமது இரண்டாவது தலைமுமறைகள் சிலர் அங்கீகாரத்துடன் கூடிய ஓர் உறவுக்கு தயாராகலாம். இதனை அநாககரிகமாக கருதும் பெரும்பாண்மை சமுகம் எவ்வாறு இவ்விடயங்களை கையளப்போகின்றது என்ற கேள்விகள் மேலேங்குகின்றன.

இவ்வகையில் ஒரின உறவுமுறையின அங்கீகரிக்கும் மனேபாங்கிற்கான போராட்டம் தனியே தமிழ் சமூகத்திற்கானது மட்டுமல்ல வளர்ந்து வந்த சமூகங்கிற்கிடையிலேயே நடைபெறும் உட்போராட்டமாகும். இவ்விடயங்களை சரியான முறையில் கையாளத்தவறியதின்விளைவாக ஐரோப்பிய சமூகத்திலே யே பல தற்கொலைகள் கொலைகள் நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டில்  ஓர் பன்மவயதடைந்த இளைஞனை ஒரின பாலியல் உறவுமுறையை ஏற்றுகொள்ளாத தந்தை தனதுமகனை கொடூரமாக தாக்கிய சம்பவங்களும் நடைபெற்றிருந்து.

ஒரினபாலியலுடன் வாழும் உறவுகள் பெரும்பாண்மைசமூகத்தினால் பல வன்முைகளை அனைத்து உலகநாடுகிலும் சந்தித்து வந்துள்ளது. இதனை தடுக்கும் வகையில் இச்சமூகம் அமைப்புவடிவம் பெற்றது. தமது உறவுமுறையின் அங்கீகாரததிற்கான போரட்டங்களை தெருவுக்கு கொண்டுவந்து தமக்கு ஆதரவு சக்தியிை ஒன்றுதிரட்டி பலம்பெற்றனர். அவ்வகையல் சுவிற்சர்லாந்திலும் பெண் பெண் பாலர் உறவு சமுகத்தினான அமைப்பு (LOS) ஆண் ஆண் (PIN CROSS) பாலர் அமைப்பு (PIN CROSS)..திருநம்பி திருநங்கையர் அமைப்புக்கள் (TGNS) ஒருங்கினைந்து தமது அங்கீகரிப்பிற்கான பல போராட்டங்களை நடாத்தி வந்துள்ளன.

பல ஐரோப்பிய நாடுகள் திருமணம் தனியே ஆண் பெண்களிற்கானதல் ஓரின பாலினரு்கும் உரித்தனது எனும் சட்ட அங்கீகாரத்தினை பல நாடுகள் ஏற்கனவே வளங்கி உள்ளது. சுவிற்சர்லாந்தில் செப்டம்பர்

2021 இல் நடைபெற்ற அனைவருக்குமான திருமணம் என்ற அபிப்பிராய வாக்கெடுப்பு 64.1வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது. இச்சட்ட மூலத்தினை சட்டமூலமாக்கிய  17வது  ஐரோப்பிய நாடாக சுவிற்சர்லாந்து அமைகின்றது.

இணைந்து வாழும் சட்டமூலததிற்கும் திருமணசட்ட மூலத்திற்கும் இடைடயில் பினவரும் வேறுபாடுகள் உள்ளன. 

இணைந்து வாழும் சட்மூலத்தில் தனியே தான் இணைந்து வாழும் தம்பதி/தம்பதரின் குழந்தையை மட்டுமே தத்தெடக்கமுடியும்.திருமண ஒப்பந்தத்தில் மூலமாக எந்தகுழந்தையையும் தத்தெடுக்க முடியும்

பெண் பெண் உறவு தம்பதிகள் விந்துதாணத்தின் மூலம் விந்தினை பெற்றுகருத்தரிக்கும் உரிமையை வழங்குகின்றது

இவ்வகையில் கருத்தரிக்கபட்ட பிள்ளைகளிற்கு விந்துதானம் செய்த தந்தையை அறிந்துகொள்ள விரும்பினால் 18 வயதிற்குபின்னர் அந்த குழந்தை பெற்று கொள்ளலாம்.

 திருமணம் அனைவரிற்குமாது என பலர் ஆதரித்திருந்தாலும் இவ்வகைில் தத்தெடுக்க போகும் பி்ளைகளதும் விந்து தாணம் மூலம் பெறப்பட்ட பிள்ளைகள் சமூகத்தில் எதிர் நோக்கப்போகும் நெருக்கடிகள் பற்றியே பெரிதும் விவாதிக்கபட்டது. இவ்விடயங்களை கடந்து செல்ல வேண்டுமானால் பல கருத்தாடலுடன் கூடிய சமுகசிந்தனைகளில் மாற்றம் ஏற்படல்வேண்டும்.

சுவிற்சர்லாந்தில் கட்டாய திருமணங்கள் தண்டனைக்குரிய குற்றமாகும். அவ்லகையி எவ்வித ஓரின பாலியல் உறவு முறையிலான திருமணங்கள் அங்கீகரிக்கபட்டதினால் புலம்பெயர் தமிழ்சமூகத்தில் இவ்வகையான திருமணங்கள் எதிர்காலங்களில் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது. இவற்று எவ்வாறு வன்மறை அற்று சுமூகமாக இது ஒரு தனிநபர்களின் விருப்பத்தடன் கூடிய முடிவு என்ற மனநிலைக்கு எவ்வாறு எம்மை மாற்றி கொள்ள போகின்றோம்?. புலத்தில் வாழ் சமூகம் இன்னமும் திருமண உறவுகளில் சாதி என்ற விடயத்தில் இருந்து இன்னமும் விடுபெறவில்லை. ஆகவே புதிய சாவால்களை எவ்வாறு எதிர்கொள்ள போகின்றது?

கத்தோலிக்க கடும்போக்களர்கிடம் இவ்விடயம் நீண்டகாலம் ஏற்று கொள்ள படாத விடயமாக இருந்த போதும் பாப்பரசர் பரிான்சிஸ்குஸ் அவர்களும் கடவுளின் குழந்தைகளும் எமது குடும்பத்தில் ஒருவர்கள் எனறு ஏற்றுகெகாண்ட போது எதிர்ப்பு அலைகளின் ஆக்ரோசம் தணிந்தது. அவ்வகையில் ஒவ்வொரு சமுகத்தின் திறவுகோள் சக்திகளலே சமூக கருததுக்களில் மாற்று சிந்தனையை பெரும்பாண்மை கருத்தாக்க முடியம்.




Sonntag, 14. März 2021

முகத்தினை மறைப்பதிற்கான தடை - Das Verhüllungsverbot

 


கடந்த 7ம் திகதி சுவிறசர்லாந்தில் நடந்து முடிந்த அபிப்பிராய வாக்கெடுப்பும் அத் முடிவுகளும்.இம்முறை பின்வரும் மூன்று அபிப்பிராய வாக்கெடுப்பு சுவிறசர்லாந்தின் அனைத்து கன்ரோன்களில் நடைபெற்றது.

 

1. முகத்தினை மறைப்பதிற்கான தடை Das Verhüllungsverbot

2.இலத்திரன் அடையாள அட்டை «E-ID lektronischer Pass

3. இந்தோனேசியாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் Das Freihandelsabkommen mit Indonesien

 

முகத்தினை மறைப்பதிற்கான தடைக்கான அபிப்பிராய வாக்கெடுப்பினை முன்வைத்தவர்கள் Egerkinger Komitee இஸ்லாமியர்களிற்கு எதிரானதும் வெளிநாட்டவர்களிற்கு எதிரான அதி வலதுசாரி அமைப்பாகும். இவ்வமைப்பானது சுவிற்சர்லாந்து இஸ்லாமியமாகி விடும் என்ற அதி கூடிய பயத்தினால் உருவாக்கபட்ட மனித உரிமைகளை மறுக்கும் ஓர் அமைப்பாகும். 2009ஆண்டு  இஸ்லாமிய மசுதிகளை கூம்பு கோபுரதடதுடன் நிறுவுவதற்கான அனுமதிகள் மறுப்பதற்கான அபிப்பிராய வாக்கெடுப்பினை முன்னெடுத்து 57.5 வாக்குகளை பெற்று வெற்றிபெற்றது.

 

சுவிற்சர்லாந்தின் அரச சாசனத்தின்பிரகாரம் எந்த ஒரு சமுகத்தினதும் உடைகளை தீரமானிப்பதற்கான அதிகாரம் கிடையாது. இவ்வகையில் ஒரு சமூகத்தின் மீது வலோத்காரமான கலாச்சார தடையை அனுமதிப்பது மற்றைய கலாச்சார உடைகளிலும் தமது அதிகாரத்தினை திணிப்பதற்கான வழிவகைகளை செய்வது போன்றதாகிடும். இதனை புரியாத பலர் முகத்தை மறைத்து முட்டாக்கு அணிவது பெண்அடிமைத்தனம் என விடயத்தை குறுகிய பார்வை கொண்டு பார்க்கின்றனர். முகத்தை மூடி முக்காடு போடும் இஸ்லாமிய பெண்கள் இவ்வகையில் ஓர் கருத்தினை வைத்து போராடும் போது அந்த கருத்திற்கு சார்பாக குரல் கொடுப்பது வேறுவிடயம்.

 

இந்த அபிப்பிராய வாக்கெடுப்பானது கருத்து சுதந்திரத்தனையும் கலாச்சார சுதந்திரத்தினையும் மத சுதந்திரத்தினையும் மறுதலிக்கின்றது. இந்நாட்டில் Fastnacht  இன்போது முகமூடி அணிந்து செல்லும் விழாக்களை எப்படிப்பார்ப்பது? தமது கலாச்சார விழாக்களிற்கு வேறுஒரு நீதியும் இன்னும் ஒருசமூகத்திற்கு வேறு நியாயம் வழங்குவது ஒரு வகை அடக்கு முறையாகவே பார்க்க முடியும். Egerkinger Komitee தமது நாடு இஸ்லாமிமயமாகி விடும் என பயந்து ஒரு மதத்திற்கு எதிராக பல தடைகளை மேற்கொண்டு வருகின்றது. இதேபோல் பல மத மாற்றங்களை நிர்ப்பந்தித்துவரும் பல மதக்குழுக்களின் நடவடிக்கைகளை எவ்வாறு பார்ப்பது? இத்தார்மிக மற்றநடவடிக்கைகளை தனிேய பெண் உரிமை மீதான அக்கறையதக காட்டி வலது சாரிகள் தம்மை முற்போக்கு முகமூடிக்குள் போர்த்து மூடும் நாடகம் கண்டிக்க தக்கது.

 

சிறுபாண்மையாக வாழும் சமூகங்கள் இவ்வகையில் மேற்கொள்ளப்படும் சுதந்திர மறுப்புக்களை இது எமக்கல்லஎனைய சமுகத்திற்கானது என கருதி இவ்வகை மனித உரிமைமறுப்பிற்கு ஆதரவாக வாக்களிப்பது ஆபத்தானது.

 

51,2 %ஆம் எனவும்:48,8 % இல்லை என்ற விகிதாசார அடிப்படையில் Egerkinger Komitee முன்வைக்கட்ட நியாயமற்ற கோரிக்கை வெற்றி பெற்றது. 18 கன்ரோன்கள் பெரும்பாண்மையாக ஆம் 5 கன்ரோன்கள் இல்லை ெபரம்பாண்மையாக வாக்களித்தது குறிப்பிட தக்கது எனவும் இதே சட்ட முலம் எப்பொழுது எமது பாரம்பரிய உடைகள மீதும் மற்றைய சமூகங்களின் உடை கள் மீது ஆதிக்ககரத்தினன வைக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Montag, 15. Februar 2021

சொலத்துாண் மாநிலத்தில் வாழும் சுவிறசர்லாந்து பிராஜா உரிமைபெற்ற தமிழர்காளிற்கான வேண்டுகோள

 

இம் மாநிலத்தில் 100 மாநில சபை உறுப்பினரிற்கான தேர்தல் நடைபெறுகின்றது. இம் மாநிலத்தேர்தல் 5 பிரதேச பிரதேச பிரிவில் வாக்களார்கள் நிறுத்தபட்டுள்ளனர். பின்வரும் நான்கு பிரிவில் 4 தமிழர்கள் வேட்பாளர்களாக களம் இறங்கி உள்ளனர். சாதரணமாக போட்டிபோடும் வேட்பாளர்களிற்கு துணைநிக்கும் பொருட்டு ஓர் ஒத்துழைப்பு குழு உள்ளது. இவர்கள் குறிப்பிட்ட வெட்பாளரின் தேர்தல் பிரச்சார வேலைகளை பொறுப்பெடுத்து கொள்கின்றனர். இதனால் வெற்றியும் சாத்தியமாகின்றது. எம்வர்களில் இவ்வகையான மும்முயற்சி ஒரு விகிதம் கூட இல்லாதுள்ளது கவலை அளிக்கின்றது.

இந்நாட்டில் பல சந்ததிகளாகவாழப்போகும் சமுகம் அரசியலிலும் தம்மை பிரதிநிதித்துவதற்கான தேவை உள்ளது. இந்நாட்டில் நிறவாத ஒடுக்குமுறைகள் ஒனறும் குறைந்துவிடவில்லை. சாதரணமாக ஓர் தொழில் கல்வியை மேற்ெகாள்ள விரும்பும் மாணவர்கள் அவர்களின் பெயரை கொண்டு இனங்கண்டு வாய்ப்புக்கள் பின்தள்ளபடுகின்றது. அதே போல் தொழில் செய்யும் இடங்களில் எம்மவர்கள் குறைந்த சம்பளத்தில் வேலைக்கமர்த்தபடுகின்றனர். அயலவர்கள் வெளிநாட்டவர் அல்லது இரண்டாம் தர  பிஜைகளாக பார்க்கும் பல உதாரணங்கள் எம்மிடத்தில் உள்ளன. இவற்றிற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமாயின் எமதுஅரசியல் அங்த்துவம் முக்கியமானது. எதற்கும் தமிழ் தமிழ் என்று குரல் கொடுப்பவர்கள் மேடைகளில் உணர்சிவசப்படுகின்றனர். ஆனால் தாம் வாழும் பகுதியில் ஒர் அடையாளத்திற்கேனும் அரசியல் அங்கத்துவத்திற்காக போட்டி போடும் வேட்பாளர்களிற்கு எவவித ஒத்தாசையும் புரியமால் வேடிக்கைபார்ப்பது ஆச்சரியம் தருகின்றது.

எனது தேர்தல் அரசியலை ஏப்பிரல் மாதத்துடன் முடிவிற்கு கொண்டு வருகின்றேன். என்னுடன் பயணிக்கும் அரசியல் நண்பர்களிற்கும் இனி வர இருக்கும் புதிய தலைமுறை அரசியல் வாதிகளிற்கு தங்களால் இயன்ற ஒத்துழைப்பை  வழங்கி எமது அங்கத்துவங்களை தக்கவைத்து கொள்ளுங்கள். அதனடிப்படையில் இத்துடன் இணைக்கபட்டுள்ள விடியேவை பார்த்து நீங்கள் தெரிவு செய்யும் வேட்பாளரிற்கு இரண்டு வாக்குகளை அளித்து அவர்களின் வெற்றிவாய்ப்புக்கு வழிசமையுங்கள்.

தேர்தல் அரசியலானது தனக்கே உரித்தான பல குறைபாடுகளுடன் கூடியதே அதனை மறுப்பதற்கல்ல. என்னுடன் பயணிக்கும் பல தமிழ் அரசியல்வாதிகள் கட்சிக்கு உள்ளும் வெளியிலும் இனவாதரீதியில் பல்வேறுபட்ட தடைகளின் மத்திலேயே வேலை செய்துருகின்றனர். இவைபற்றியும் எமது நாட்டு கட்சி அரசியலிற்கும் சுவிற்சர்லாந்து கட்சிஅரசியற்கும் என்ன வெறுபாடுகள் உள்ளன ஒற்றுமைகள் உள்ளன பற்றி தேர்தல் முடிந்த பின்னர் விளக்காமான கட்டுரையுடன் சந்துக்கின்றேன். தயவு செய்த நான் குறிப்பிட்ட விடயத்தினை பகிர்ந்து தமிழ் வேட்பாளர்களிற்கு தங்களது ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டு கொள்கின்றேன்.