Sonntag, 13. März 2022

போரும் புலம்பெயர்ந்த எம்மவரின் சிந்தனையும் - க. சுதாகரன்

 


உலக சண்டியர்களின் பலப்பரீட்சைக்கானதும் தேசியவாதத்திற்கானதும் பிராந்தியவாத்திற்காணுமானதே ரசிய உக்கிரேன் போர். யுத்தததிற்கு ஆதரவு அல்லது எதிர்ப்பு தரப்பில் உள்ள நாடுகள் அனைத்தும்   தமது நலனிலேயே அக்கறையுடன் உள்ளனர். யுத்த்திற்கான அடிப்படை அல்லதுதோற்றுவித்தலில் பல வராற்று தப்புக்களும் நயவஞ்சகங்கள் நடைெபற்றிருப்பினும் யுத்தத்தினை யார் ஆரம்பித்தாலும் அது மாபெரும் தவறு. சண்டியர்களால் தமது நலன் கருதி செய்யப்பட்ட உடன்படிக்கைகளை அனைத்து தரப்பினரும் மீறி உள்ளனர் இதற்கு உலக வரலாற்றில் பல ஆதாரங்களை உதாரணங்களாக எடுத்து கொள்ளலாம். ரசியா தனது வியாபாரத்திற்கும் தனது பிராந்திய நலனை மட்டுமே முந்நிலைப்படுத்துகின்றது. அதேவகையில் ஐரோப்பிய அமெரிக்க தரப்பும் செயற்படுகின்றது. புலம்பெயர் தமிழராகிய எமக்கும் எமது சந்ததியினருக்கும் தற்பொழுது நாம் வாழும் நாடும் எம்முடன் இருக்கும் இந்நாட்டு மக்களின் வாழுதலிற்கான நியாயமான போராட்டங்களிற்கு ஆதரவாகவே இருக்கமுடியும். எமது நலனிலும் அக்கறையற்ற ஆதிக்கசக்திகளிற்கு ஆதரவாக குரல் கொடுத்து உலக சமாதாணத்தினை கொண்டு வரப்போகின்றோமா? அல்லது உலக மக்களிற்கு நீதிவாங்கி கொடுக்கமுடியுமா?  

உலகில் ஒவ்வொரு நாடுகளும் மூலப்பொருள் உணப்பொருட்கள் ரீதியில் தங்கி நிற்கும் முகமாகவே உலக பொருளாதார ஒழுங்கு கட்டமைக்கபட்டுள்ளது. நாடுகள் யுத்தினையும் தமக்கு சாதகமான அரசுகளை நிறுவுவதற்கும் பொருளாதார கொடுப்பனவற்றை ஆயுதமாக பயன்படுத்தி வந்துள்ளன. இவற்றால் பாதிக்கபடுவது சாதாரண பிரஐைகளே.ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் பிராஐா உரிமைபெற்று வாழும் எம்மவர்களது இரண்டாவது சந்ததிகள் தமது நாடுகளில் யுத்தம் நடைபெறும் போது யுத்தில் பங்குபெறுமாறு அழைக்கப்பட போவதும் எமது இரண்டாவது சந்தியினர் என்பதை மறந்து விட்டு ரசிய சீன அரசுகளின் நியாங்களை சரி என வாதிடுகின்றனர். 

நாம் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும் இனவாதம் புதிய நாஐிகளது ஆதிக்கம் அன்றாடம் வளர்ந்து வருகின்றது. இவற்றில் இருந்து மீள்வதற்கான போராட்டங்களில் ஈடுபடுவதற்கான பயணங்கள் பல மேற்கொள்ள வேண்டியுள்ளது.  யுத்தங்கள் நடைெபறும் போது அதிதீவிர தேசியசக்திகளின செயற்பாடுகள் அடையும். இதற்கு தற்போதைய உக்கிரேன் ரசிய தரப்பு புதிய நாஐிகளது செயற்பாடுகளை பாடமாக எடுத்து கொள்ளலாம். 

உலகில்தகவல் போர்கள் மேடியாக்காளால் அந்தந்த பிராந்திய சார்பு நலன் கருதி நடைபெறுகின்றது. இவற்றை எமது நலன்கருதியும் உலகமக்கள் கருதி பகுத்தாராய வேண்டும்.ஈழப்போராட்டம் நடைபெற்ற போது புலத்தில் இருந்து இராணுவதாக்கதலை மட்டும் இரசித்த அதே நபர்கள் இன்றும் ரசிய உக்ரேன் யுத்ததில்கையாளப்படும் இராணுவ யுக்திகளை விவரித்து புழாங்கிதமடைகின்றது. மனித குலம் எந்தநாடுகளிலும் மொழி நிற மத பிரதேச வேறுபாடற்ற புதிய சமுதாயங்களை உருவாக்குவதற்கான செயற்பாடுகளில் நட்பு சக்திகளோடு இணைந்து செயற்பட முன்வரவேண்டும். புலம்பெயர் சமுகங்கள் தமக்குள் மட்டும் ஒன்றுகூடி கல் தோன்றா காலத்து தற் பெருமைகள பேசிகளை பேசி  தாம் சேர்ந்து வாழும் சமூகங்களுடன் இருந்து அந்நியபடாது தம்மையும் இந்த சமூகத்தில் ஓர் அங்கம் என்பதனை புரிதல் வேண்டும். இவற்றை கவனமெடுக்காத பட்சத்தில் காலத்திற்கு காலம் நாடோடிகளாக வாழும் நிலையே எமக்கு ஏற்படும்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen