Montag, 22. Januar 2024

தமிழ் அரசு கட்சியின் தேர்தலும் விசிறி தேசியவாதமும் (Fans Nationalism)

G. Suthakaran / 23.01.2024

தமிழ் அரசுக்கட்சி தனது தலைவரிற்கான தெரிவினை தேர்தல் மூலமாக நடாத்தியது பாராட்டதக்கது. இது ஓர் முனமாதிரியான செயல். மற்றும் இலங்கை இந்திய அரசியல் கட்சிகளிற்கும் முன்மாதிரியாக அமைந்தள்ளது என்பதனை மறுக்கமுடியாது.

ஆனால் தமது கட்சி சக வேட்பாளர்கள் மீது அதே கட்சியை சேர்ந்த அங்கத்தவர்களும் வேட்பாளர்களும் சுமந்திரன் மீது ஆதாரமற்ற குற்றசாட்டுக்ளை அள்ளி வீசியது அருவருக்கத்தக்தும் ஏற்றுக்கொள்ளமுடியாத செயற்பாடுகளாக அமைந்திருந்தது. ஆனாலும் சுமந்திரன் தரப்பிலிருந்து தன்னுடன் இருந்த சக வேட்பாளர்களிற்கு எதிராக எந்த ஒரு மலிவான பிரச்சாரங்கள் இடம்பெறவில்லை. தேர்தல் முடிவுகளை மதித்து வெற்றி பெற்ற வேட்பாளரை உட்சாகப்படுத்தி தனது தோல்வியை கெளரவமாக ஏற்றுக்கொண்டது அவரது தலைமைத்துவ பண்பின் சிறப்பினை எடுத்துரைக்கின்றது.


புலத்தில் உள்ள தமிழ்தேசியம் என்ற போர்வையில் தமது விசிறி தமிழ் தேசியவாதிகள் (Fans Nationalism) சுமந்திரனை தமிழ் தேசியத்திற்கு எதிரானவர் சித்தரித்து இருந்தனர். தமது வித்தைகளிற்கும் தாம்போடும் தாளத்திற்கு தலை அசைப்பவராக சிறிதரன் இருப்பார் என்பதனை புலத்து விசிறிகள் கணிப்பிட்டிருந்தனர். அதன் அடிப்படையில் வாக்களிற்கும் தகுதிபெற்ற தமிழ் அரசுக்கட்சியுடன் தமது விருப்பு வேட்பாளரை தெரிவு செய்வதற்கான அளுத்தங்களை கொடுத்திருந்தனர். இச்செயற்பாடுகளை பல்வேறுபட்ட சமூகவலைத்தளங்களில் பார்க்கூடியதாக இருந்தது.

ஒரு ஆளுமையான ஒருவரை தம்மால் நிர்வாகிக்க முடியாது என்பதனை புலத்து விசிறிகளும் மற்றும் உணர்ச்சி பேச்சுக்களிற்கு காலம் காலமாக அடிமையாக இருந்த இலங்கை வாழ் தமிழர்களும் நன்கு அறிந்து இருந்தனர். இவர்களிற்கு இரத்தபொட்டு வேண்டி நிற்கும் தலையாட்டி பொம்மை தேவைப்பட்டது. இதற்கு நன்கு பொருத்தமானவர் சிறீதரன். இவ்வகையாக பல பொம்மைகள் மற்றைய தமிழ் கட்சியிலும் உள்ளனர். இவ்வகையில் உதாரணபுத்திரராக உள்ளவர்கள் ஐயா விக்கினேஸ்வரன், கயேந்திரன், சிவாஜிலிங்கம்......போன்றோர் உள்ளனர்.

தமிழ் சமுகமூம் தலைமைகளும் பல தடவைகள் தமக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை தாம் நம்பும் மற்றும் தமக்கே உரித்தான விசிறி தேசியத்தினால் (Fans Nationalism) பயன்படுத்தாது விட்டு்ளனர்.

தமிழ் அரசுகட்சி வருகின்ற தேர்தலில் மீண்டும் தமக்கு இரத்த பொட்டினையையும் வாக்குகளை தமதுபக்கம் குவிப்பதற்கு தகுதியான தலைவரையே தெரிவு செய்துள்ளனர். இந்த தலைமைக்கு சுமந்திரனை தெரிவு செய்து இருந்தால் மற்றைய தமிழ்கட்சிகளின் வாக்குவங்கி தானாகவே நிரம்பி இருக்கும். அதுமட்டுமல்லாது தமிழரசுகட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பல விழுக்காடுகளை காணவேண்டி நிலை ஏற்பட்டிருக்கும். வரப்போகின்ற நெருக்கடியில் இருந்து தமிழ் அரசு கட்சி தன்னை பாதுகாத்து கொண்டதாகவும் பார்க்க வேண்டி உள்ளது. மேலும் வருகின்ற தேர்தலில் சுமந்திரன் வெல்வதற்கான சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளதாகவும் எதிர்வு கூறலாம்.

வாய்வீச்சு வீரர்களிற்கு வழங்கப்பட்ட ஓர் வாய்பாகவும் பார்க்கலாம். அல்லாது விடில் இது அழகான கனவாக மட்டும் இருந்துவிடும். வசிறிகளின் கனவு நனவாகி உள்ளது. இனி எந்த மேடை சரி இல்லை என்று கூறப்போகின்றனர்? ஆனால் இவர்களிற்கு ஓர் சிறீதரனையும் தேசியத்திற்கு எதிரானவர் என முத்திரை குத்தி தப்பிப்பதற்கான பென்னாண வாய்ப்பு மட்டும் எஞ்சி உள்ளது.

இலங்கையில் எப்போது  தமிழ்தரப்பபில் அதிதீவிர தேியவாதிகள் ஆளுமை பெறுகினறன்றதோ, அது சிங்கள பேரின தேசியவாதிகிற்கு பால்சோறு கிடைக்கின்ற மாதிரியான சம்பவங்களாகவே வரலாற்று ரீதியில் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தல் சிங்கள தேசியத்தினை இன்னும் பல ஆண்டுகள் வலுவூட்டவே செய்யும். இதனையே புலத்து விசிறிகளும் யாகம் செய்து காத்துள்ளனர்.

ஏன் புலத்தில் உள்ளவர்கள் நாட்டில் வாழ்பவர்களை விட ஒருபடி மேல் தம்மை கலாச்சார, தேசிய காவளராக அடையாளப்படுத்துகின்றனர்?

இது புலம் பெயர்ந்து வாழும் பல சமூகங்களிற்கு உரிய பொது பண்பாக உள்ளது. குறிப்பிட்ட கலாச்சாரத்தில் வாழ்ந்த மனிதன் பிறிதொரு கலச்சார சமூகத்துடன் வாழும் போது தனக்காண அடையாளம் இழப்பதாக உணர்கின்றான். இதனாலேயே தமது சொந்த நாட்டில் வாழ்பவர்களை விட இறுக்கமான கலாச்சார காவலர்களாகவும் தேசியவாதிகளாகவும் வாழ முனைகின்றனர். அத்துடன் இவர்கள் நின்றுகொள்ளாமல் தமது சொந்தநாட்டின் அரசியலிலும் ஆதிக்கம் செலுத்த விரும்புகின்றனர்.

புலம்பெயர் தமிழர்கள் பலர் இன்னமும் தனி நாட்டு கோரிக்கையில் உறுதியாக உள்ளனர். இவர்கள் தமது சொந்த நாட்டிற்கு போய் வாழப்போவதில்லை. அங்கு வாழும் மக்கள் தமது அரசியலை தீரமாணிக்கட்டும் என விட்டுவிடும் மனோபவமும் அற்றவர்களாகவே உள்ளனர். இதனால் இலங்கைத் தமிழர்களின் அரசியல் உரிமைகளிற்கு முட்டுகட்டையாக சிங்கள தேசியம் உள்ளதோ அதேபோன்று புலத்தில் உள்ள விசிறி தேசியமும் ( Fans Nationalism) விடாப்பிடியாக இருக்கப்போகின்றது. இது ஓர் கசப்பான தொடர் வரலாறு.

நெல்சன் மண்டலா போன்ற ஓர் தமிழ் தலமை எப்பெழுது உருவாகும்?

Samstag, 20. Januar 2024

தமிழ் தேசியமும் தலைமத்துவ அவலங்களும்

தேசியம் பற்றிய புரிதல் அற்று இலங்கை தமிழர் அரசியல்வாதிகள் பலர்  இருப்பதை பார்க்கும் பொழுது கவலை அளிக்கின்றது. முதலில் தேசியம்பற்றி பேசுபவர்கள் மற்றைய தேசிய இனங்களை ஏற்றுக்கொள்ளவும் அங்கீகரிக்கவும் பக்குவப்படல் வேண்டும். தனியே தனது இனமே பல சிறப்பு அம்சங்களை கொண்டதாக தாமே நினைத்து பெருமை கொள்வது முட்டாள் தனமாது. தேசியம் கற்பிதமானதும் காலத்துக்கு ஏற்ப மாறுபாடுகளை கொண்டது என்பதனை மார்க்சிலிருந்து பல அரசியல் புத்தியீவிகள் விவாதித்து வந்துள்ளனர். இலங்கைத்தமிழரிடம் விடுதலைப்புலிகளும் தமிழ் மிதவாத கட்சிகளும் இந்தியாவில் சீமான் போன்ற அரசியல்வாதிகளும் தாம் சார்ந்த இலக்குகளை அடைவதற்கும் தேசியத்தினை ஆயுதமாக பயன்படுத்தி மக்களை அணிதிரட்ட பயன்படுத்த பட்டுள்ளது. இதனையே சிங்களத்தேசியமும் செய்கின்றது.


இன்று புலத்தில் தமிழர்கள் இடம் விடுதலைப்புலிகளால் விதைக்கபட்ட தமிழ்தேசியம் அவர்களின் இலக்கை நோக்கி மக்களை அணிதிரட்டவும் நிதிசேகரிக்கவும் நன்கு பயன்பட்டது. விடுதலைப்பபுலிகள் தளத்தில் இல்லாதபோதும் பலர் புரளிகளை பரப்பி விடுதலைப்புலிகளின் தேசியத்தினை உயிர்பித்து பணம்பறிப்பதில் பல பிரிவுகள் புலத்தில் உலாவருகின்றனர்.


இலங்கையில் உள்ள மிதவாத தமிழ்கடசியின் தலைவருக்கான தேர்தலில் மீண்டும் ஓர் தமிழ்தேசியம் பேசுபொருளாக எழுந்துள்ளது. தமிழ் அரசுகட்சி மூன்று வேடபாளர்களை கட்சித்தலைவர் தேர்வில் நிறுத்தி உள்ளனர். இந்த வேட்பாளர்களில் இருவர் சைவசமயத்தவரகள். ஒருவர் கிறுஸ்துவ மதத்தினை சார்ந்தவர். இப்பொழுது சில தமிழ் தேசியம் பேசும் அறப்படித்ததுகள் தாம் ஆதரிக்கும் சைவசமய வேட்பாளரிற்கு ஆதரவாக தமிழ் தேசியம் வரையறுக்கபடுகின்றனர்.


தலைமைத்துவம் என்பது இலகுவானதல்ல. வழிநடத்தல்களிற்காண பண்பும் அனைத்து விவாதங்களயும் பல்வேறுபட்ட விடயங்களை கூர்ந்து செவி சாய்க்கும் பண்புகளகொண்ட ஒருவராக இருக்கவேண்டும்.


இலங்கை இந்திய நாடுகளில் தலைமைத்துவம்பற்றிய விவாதங்கள் குறைவாகவே உள்ளது. இராணுவம்போல் மறுபேச்சு அற்று பின்தொடர்வது மட்டுமே தலைமை என்ற பழமைவாத சிந்தனை முறையே உள்ளது.


ஓர் சமூகம் எப்பொழுது ஆராக்கியமான கருத்துபரிமாற்றங்களையும் புதிய கருத்துக்களையும் மாற்றங்களையும் ஏற்க மறுக்கினறாதோ அந்த சமூகம் இந்த புதிய புவியியல் மாற்ற அரசியலில் இரையாகிவிடும் வாய்ப்பே அதிகமாக உள்ளது.


முதலில் இலங்கையில் வாழும் தமிழர்களும் புலத்தில் வாழும் தமிழர்களும் நடந்துமுடிந்த ஆயுதபோராட்டம் ,மற்றும் அரசியல் நகர்வுகளில் நடைபெற்ற தவறுகள் சரிகள் பற்றி பக்க சார்பற்ற விமர்சனங்களிற்கு தயாராக வேண்டும். அதற்கான அரசியல் புவியியல் சூழல்பற்றிய அறிவை வளர்த்து கொள்ளல் வெண்டும்.மாறாகா நாம் பிறப்பிலையே அறிவுயீவிகள் உலகத்தினையே ஆணடவர்கள் என்ற மமதையில் இருந்தால் இலங்கைத்தமிழர்கள் காணாமல் ஆட்கப்படுவர் என்பது நிட்சயமானதாக மாறிவிடும்.


அதுமட்டுமல்லாது உணர்ச்சிகளிற்கும் தம்பட்ங்களிற்கும் அடிமையாகாது கசப்பாண உண்மைகளை அறிந்துகொள்வதற்கும் ஏற்றுகொள்வதற்கு தயார் ஆகவேண்டும்.

Mittwoch, 1. März 2023

தமிழ்நாட்டில் கிட்லர் உயிருடன்? அவதானம் தமிழ் நாட்டு மக்களே !

 

சீமானின் தமிழ் தேசிய இனவாதம் உச்சத்தைதொட்டுள்ளது. தனது அரசியல் பிழைப்பிற்காக விடுதலைப்புலிகளின் ஆதரவு அலையை குத்தைகக்கு எடுத்து அரசியல் செய்யும் ஓர் நடிகன்.நடைபெறஇருக்கும் தேர்தல் பிரச்சாரங்களின் போது எவ்வித அரசியல் தெளிவும் அற்று கிட்லரின் அகங்கார தேசிய வெறி பேச்சுக்களை கோட்பாடாக எடுத்து பேசுகின்றார். அதுமட்டுமல்லாது நாஜிகளது சின்னத்தையும் தனது கட்சியின் அடையாளமாக பயன்படுத்துகின்றார். இதனை வேடிக்கை பார்க்கும் புலத்திலுள்ள ஈழத்து தம்பிகளும் மொளனம் சாதிக்கின்றனர். வடக்கிலிருந்து குறைந்த கூலிக்கு தமிழ் நாட்டிற்கு வேலைக்குவரும் வறுமைகாட்டிற்கு கீழுள்ள மக்கள் மீது அவிழ்துவிட்ட தீ.  இன்று வெளி மாநிலங்களில் தொழில் புரியும் தொழிலாளர்களிற்கு இனவாத தீ திருப்பி விடப்பட்டுள்ளது. இந்த பெருமை இவ்வகையில் தேசியம் என்ற பெயரில் அரசியல் நடத்தும் அறிவிலி சீமானுக்கே உரித்தாகும். எத்தனை பொய்களையும் தான் முன்வைத்த விடயங்களை மறுதலிக்கும் வகையில் எத்தனை பேச்சுக்களை எவ்வித கூச்சமும் இன்றி பேசுகிறாரே? தமிழ் அரசியலிற்கு ஓர் மாற்று அரசியல் தரப்பு  வேண்டும் என்பதில் எனக்கு கருத்து இல்லை. ஆனால் இவர் அல்ல அந்த மாற்று என்பதனை தமிழ் நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

தான் ஆட்சிக்கு வந்தவுடன் அதை மாற்றுவேன் என்பது அனைத்து தமிழ்நாட்டு அரசியல் வாதிகளினால் வழங்கப்படும்ெவற்று வாக்குறுதிகள். ஆனால் இந்த அறிவிலி தமிழ்நாடு  ஒரு தனி நாடு என்ற மமதையில் மாநில அரசிற்கு அதிகாரமற்ற பல விடயங்களைமாற்றுவேன் என வெடிக்காத வாணவேடிக்கை காட்டுகின்றார். இவரை தமிழ் நாட்டுமக்கள் நிராகரிக்க வேண்டும் அல்லது மிகப்பெரும்பாண்மை வாக்குகளை கொடுத்து ஆட்சிக்கட்டிலில் அமர்த்தவேண்டும். அதன் பின்னர் சென்ன வாக்குறுதிகளில் எதனை நமுறைப்படுத்தினார் என்பதைன பார்த்து ஏமாற்றம் அடைய வேண்டும்.இவர் பல நச்சுக்களை மனித சமுதாயம் மீது வீசுகின்றார். மிக ஆபத்தானது. 

புலம்பெயர் நாடுகளில் இவரைப்போல் பல இனவாத வலதுசாரிகள் பலம் குன்றி இருந்ததால் புலத்தில் அகதிகள் வெளிநாட்டவர்கள் இந்நாடுகளில் உயிர்வாழக்கூடியதாக உள்ளது. இதனை மறந்து இந்த அறிவிலியின் பேச்சுக்களை பார்த்து புள்ளரிக்கும் தம்பிகையும் பார்த்துள்ளேன். தமிழ்நாட்டுமக்களே இந்த அறிவிக்கு எதிராக குரல் எழுப்பும் நேரம் வந்துவிட்டது. இதனை அனுமதுப்பீர்களானால் மற்றைய மாநிலங்களல் உள்ள இனவாதிகளை தட்டி எழுப்பி உங்கள் சுதந்திரங்களை பதம்பார்க்கும் நிலை மிகவிரைவில் ஏற்படும்.

Mittwoch, 18. Januar 2023

அனுபூதி : சிறுவர்கள் பதின்ம வயதினர்க்கு ஏற்படும் மன அழுத்தமு...

அனுபூதி : சிறுவர்கள் பதின்ம வயதினர்க்கு ஏற்படும் மன அழுத்தமு...: மொழிபெயர்ப்பு (க.சுதாகரன் சுவிற்சர்லாநது 3.11.2011) சிறுவர்கள் பதின்ம வயதினர்க்கு ஏற்படும் மன அழுத்தமும் அதன் பாதிப்பும்... பொதுவா...

Sonntag, 27. März 2022

27.03.2022 அன்று சுவிற்சர்லாந்தில் நடைபெறும் தேர்தல்களும் புலம்பெயர தமிழர்களும்

 

இன்று 27.03.2022 சுவிற்சர்லாந்தில் பல உள்ள கன்ரோன்களிலும் (மாநிலங்கள்), உள்ளுர் ஆட்சி மன்றுகளில்(கிராம,நகர சபை) தேர்தல்கள் நடைபெறுகின்றன. வழமைபோல் பல புலம்பெயர்ந்து இந்நாட்டில் பிரஜா உரிமைபெற்ற பல வேட்பாளர்கள் தத்தமது பிரதேசங்களில் தேர்தலில் போட்டி இடுகின்றனர்.அவ்வகையில் தமிழ் வேட்பாளர்களும் போட்டி பங்குபெற்றுகின்றனர். பேர்ண் மாநகரின்

Bern மாநில உறுப்பினர்களிற்கான(  Grossrat, BE) தேர்தலில் சோமசுந்தரம் சந்துரு சோசலிச ஐனநாககட்சி சார்பில் (SP) போட்டி இடுகின்றார். இவர் இரண்டாம் தலை முறையை சேர்ந்தவரும் ப்கலைக்கழக வரலாற்று விஞ்ஞானத்தில் கலாநிதிப்பட்டம் பெற்றவர் Master of Arts - MA, Historische Wissenschaften).



Adliswil நகரத்தில் நகர ஆட்சி உறுப்பினுக்கான தேர்தலில் முத்துதம்பி கண்ணதாசன் சோசலிச ஐனநாககட்சி சார்பில் (SP) போட்டி இடுகின்றார். இவர் இரண்டு முறைகள் மக்களால் தெரிவுசெய்யப்பட்வர் என்பது குறிப்பிடதக்கது. இவர் சூறிச் சமுக ஐனநாக கட்சியின் குடியேற்ற வாதிகள் பிரிவின் தலைவர்களிலும் ஒருவர். மேலும் இவரது இலவச சமூகசேவை பணிகைள இந்த நகராட்சியில் நீண்டகாலமாக செய்து வருகி்றார்.


இதே நகர சபையில் இரண்டாம் சந்தினை சார்ந்த முத்துதம்பி முதல் தடவையாக சோசலிச ஐனநாககட்சி சார்பில் (SP)  தேர்லில் போட்டி இடுன்றார்,





Biel எனும் இரண்டு மொழிபேசும் நகரசபை உறுப்பினர்களிற்கான தேர்தலில் கந்தசுவாமி சுஐீவன் எவங்கலிச மக்கள் கட்சி (Evangelische Volkspartei EVP) சார்பில் போட்டி இடுகின்றார். இவரும் இரண்டாம் சந்தியினரை சேர்ந்த இளைஞன் என்பது குறிப்பிட தக்கது. 







புபாலபிள்ளை சாம்பவி இவரும் இரண்டாம் தலைமுறையை சேர்ந்தவர். இவர் இளையோரிற்கான லிபரல் (FDP- Jungfreisinnige) கட்சியின் சார்பில் Emmenthal பகுதியில் இருந்து மாநில சபைக்கான தேர்தலில் போட்டி போடுகின்றார்.



சிவராசா சண் சிவன் Emmenthal பகுதியில் மாநில சபைக்கான  சேசலிச ஐனநாயக கட்சியின் (SP) சார்பில் தேர்தலில்போட்டி இடுகின்றார். இவரும் இரண்டாம்  தலை  முறையைசேர்ந்த மாணவன் என்பது குறிப்பிடதக்கது.



இவர்கள் அனைவரது பெறுபெறுகள் 27.03.2022 மாலை வெளியாகி விடும். இவர்கள் வெற்றி பெற வழ்த்துக்கள்.

Sonntag, 13. März 2022

போரும் புலம்பெயர்ந்த எம்மவரின் சிந்தனையும் - க. சுதாகரன்

 


உலக சண்டியர்களின் பலப்பரீட்சைக்கானதும் தேசியவாதத்திற்கானதும் பிராந்தியவாத்திற்காணுமானதே ரசிய உக்கிரேன் போர். யுத்தததிற்கு ஆதரவு அல்லது எதிர்ப்பு தரப்பில் உள்ள நாடுகள் அனைத்தும்   தமது நலனிலேயே அக்கறையுடன் உள்ளனர். யுத்த்திற்கான அடிப்படை அல்லதுதோற்றுவித்தலில் பல வராற்று தப்புக்களும் நயவஞ்சகங்கள் நடைெபற்றிருப்பினும் யுத்தத்தினை யார் ஆரம்பித்தாலும் அது மாபெரும் தவறு. சண்டியர்களால் தமது நலன் கருதி செய்யப்பட்ட உடன்படிக்கைகளை அனைத்து தரப்பினரும் மீறி உள்ளனர் இதற்கு உலக வரலாற்றில் பல ஆதாரங்களை உதாரணங்களாக எடுத்து கொள்ளலாம். ரசியா தனது வியாபாரத்திற்கும் தனது பிராந்திய நலனை மட்டுமே முந்நிலைப்படுத்துகின்றது. அதேவகையில் ஐரோப்பிய அமெரிக்க தரப்பும் செயற்படுகின்றது. புலம்பெயர் தமிழராகிய எமக்கும் எமது சந்ததியினருக்கும் தற்பொழுது நாம் வாழும் நாடும் எம்முடன் இருக்கும் இந்நாட்டு மக்களின் வாழுதலிற்கான நியாயமான போராட்டங்களிற்கு ஆதரவாகவே இருக்கமுடியும். எமது நலனிலும் அக்கறையற்ற ஆதிக்கசக்திகளிற்கு ஆதரவாக குரல் கொடுத்து உலக சமாதாணத்தினை கொண்டு வரப்போகின்றோமா? அல்லது உலக மக்களிற்கு நீதிவாங்கி கொடுக்கமுடியுமா?  

உலகில் ஒவ்வொரு நாடுகளும் மூலப்பொருள் உணப்பொருட்கள் ரீதியில் தங்கி நிற்கும் முகமாகவே உலக பொருளாதார ஒழுங்கு கட்டமைக்கபட்டுள்ளது. நாடுகள் யுத்தினையும் தமக்கு சாதகமான அரசுகளை நிறுவுவதற்கும் பொருளாதார கொடுப்பனவற்றை ஆயுதமாக பயன்படுத்தி வந்துள்ளன. இவற்றால் பாதிக்கபடுவது சாதாரண பிரஐைகளே.ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் பிராஐா உரிமைபெற்று வாழும் எம்மவர்களது இரண்டாவது சந்ததிகள் தமது நாடுகளில் யுத்தம் நடைபெறும் போது யுத்தில் பங்குபெறுமாறு அழைக்கப்பட போவதும் எமது இரண்டாவது சந்தியினர் என்பதை மறந்து விட்டு ரசிய சீன அரசுகளின் நியாங்களை சரி என வாதிடுகின்றனர். 

நாம் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும் இனவாதம் புதிய நாஐிகளது ஆதிக்கம் அன்றாடம் வளர்ந்து வருகின்றது. இவற்றில் இருந்து மீள்வதற்கான போராட்டங்களில் ஈடுபடுவதற்கான பயணங்கள் பல மேற்கொள்ள வேண்டியுள்ளது.  யுத்தங்கள் நடைெபறும் போது அதிதீவிர தேசியசக்திகளின செயற்பாடுகள் அடையும். இதற்கு தற்போதைய உக்கிரேன் ரசிய தரப்பு புதிய நாஐிகளது செயற்பாடுகளை பாடமாக எடுத்து கொள்ளலாம். 

உலகில்தகவல் போர்கள் மேடியாக்காளால் அந்தந்த பிராந்திய சார்பு நலன் கருதி நடைபெறுகின்றது. இவற்றை எமது நலன்கருதியும் உலகமக்கள் கருதி பகுத்தாராய வேண்டும்.ஈழப்போராட்டம் நடைபெற்ற போது புலத்தில் இருந்து இராணுவதாக்கதலை மட்டும் இரசித்த அதே நபர்கள் இன்றும் ரசிய உக்ரேன் யுத்ததில்கையாளப்படும் இராணுவ யுக்திகளை விவரித்து புழாங்கிதமடைகின்றது. மனித குலம் எந்தநாடுகளிலும் மொழி நிற மத பிரதேச வேறுபாடற்ற புதிய சமுதாயங்களை உருவாக்குவதற்கான செயற்பாடுகளில் நட்பு சக்திகளோடு இணைந்து செயற்பட முன்வரவேண்டும். புலம்பெயர் சமுகங்கள் தமக்குள் மட்டும் ஒன்றுகூடி கல் தோன்றா காலத்து தற் பெருமைகள பேசிகளை பேசி  தாம் சேர்ந்து வாழும் சமூகங்களுடன் இருந்து அந்நியபடாது தம்மையும் இந்த சமூகத்தில் ஓர் அங்கம் என்பதனை புரிதல் வேண்டும். இவற்றை கவனமெடுக்காத பட்சத்தில் காலத்திற்கு காலம் நாடோடிகளாக வாழும் நிலையே எமக்கு ஏற்படும்.

Sonntag, 6. März 2022

புலம்பெயர் தமிழரின் யுத்தம் பற்றிய நிலைப்பாடும் உண்மை நிலமையும். - க.சுதாகரன்

புலம்பெயர் எமது உறவுகள் ஒரு சிலர் தாம் வாழும் நாடுகளில் இருந்து கொண்டு நன்றாக சுதந்திர காற்றினையும்  சவாசித்து வரியினையும் செலுத்தி சமூக உதவிகளையும் பெற்றுகொடு. தாம் வாழும் சக நாட்டவரின் யத்தபாதிப்பின் அச்சத்தினையும் கவனத்தில எடுக்காது. யுத்த்தினை தொடுத்த இன்னுமொரு ஆக்கிரமிப்பு அரசின் நியாயங்களை நியாயப்படுத்துவதன் அளவியல் புரியாத புதிராக உள்ளது.

புலம்பெயர்  தமிழரின் வெறுபட்ட நிலைப்பாடுகள்

ரசிய உக்ரேனிய யுத்தத்தில் புலம்பெயர் தமிழர்கள் நான்கு வித நிலைப்பாடுகளில் உள்ளனர்.

1. இவர்கள் ஈழப்போரில் உக்ரேன் தமிழ் மக்களிற்கு எதிராக இருந்ததால் தாமும் உக்ரேனிற்கு எதிராக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளவர்கள்.

2. இவர்கள் ஈழப்போரில் உக்ரேன் தமிழ் மக்களிற்கு ஆதரவாக இருந்ததாக  கருதி  ரசியாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ளவர்கள்

3. இவர்கள் உலகத்தின் பாெலிஸ்கார அமெரிக்க ஏகாபத்திற்கு எதிரான போராட்டமாக ரசிய ஆக்கிரமிப்பை ஆதரிப்பவர்கள்.

4. இவர்கள் இரசியா உக்கிரேன் என்ற இறமையை மதிக்காது மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு யுத்தினை எதிர்ப்பவர்கள்.

நாட்டோவின் கிழக்கு விஸ்தரிப்பு பற்றி

நாட்டோவின் கிழக்கு நோக்கிய ஆக்கிரமிப்பினால் அச்சத்துக்குள்ளான ரசியா உக்கிரேன் மீது யுத்தம் தொடுக்கப்பட்டுள்ளது என்ற விவாதத்தினை எடுத்து கொண்டாலும். இந் நடவடிக்கைய இன்றைய நுாற்றாண்டில் சிறப்பாக பேச்சுவார்த்தையில் தீர்வு காண்பதற்கும் தமது பக்க நியாயங்களை கூறி நட்பு நாடுகளை வென்றெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு வசதிகள் அதிகம் உள்ளது. ஈடுபடுவதற்கான வாய்ப்பு வசதிகள் அதிகம் உள்ளது. குறைந்தபட்சம் ரசியா உக்கிரேனுடன் தமது நட்பு ரீதியான இராஜதந்திரத்தினை பேணுவதற்கான முன்முயற்சியினை ஆக்க பூர்வமாக மேற்கொண்டதா?

பல்கேரியா (Bulgarien), எஸ்டோனியா (Estland), லிதுவேனியா (Litauen), ருமேனியா (Rumänien), ஸ்லோவேனியா (Slowenien), ஸ்லோவாக்கியா (Slowake), அல்பேனியா (Albanien) மற்றும் குரோஷியா (Kroatien). ஆகியவை 2004 மற்றும் 2009 க்கு இடையில் பின்பற்றப்பட்டன. குறிப்பாக பல்கான் நாடுகள் நாட்டோ உறுப்பினராக சேர்வதற்கு தாமகவே அழுத்தம் கொடுத்தன. நாட்டோ  கூட்டணி வளர்ந்து கொண்டே வந்தது. 2017 இல் மாண்டினீக்ரோ(Montenegro) மற்றும் மிக சமீபத்தில் 2020 இல் வடக்கு மாசிடோனியா (Nord-Mazedonien) சேர்க்கப்பட்டது.

ஒரு அரச உரிமை உள்ளநாடு தனது நாட்டின் பாதுகாப்பில் கருசனை கொண்டு எந்த பாதுகாப்பு கூட்டணிக்குள் தம்மை இணைக்க வேண்டும் தாமே  தீர்மாிப்பதே சுயாதீனமனது. ஏன் ரசியாவிற்கு அருகாமைில் உள்ள நாடுகள் ஏன் ரசியாவுடன் சேராது நாட்டேவுடன் விரும்புகின்றனர் என்ற கேள்வியை கேட்டே ஆக வேண்டும். ரசியாவின் அரசியலில் நம்பிக்கை அற்றவர்கள் மாறாக ஐரோப்பிய அமைப்பில் தம்மை இணைத்துகொள்ள விரும்புவர்கள் என்ற பதில்களே எமக்கு கிடைக்கமுடியும். பல லொபிகள் இக்ககூட்டமைப்பு இணைவாக்கத்திற்கு காரணாமாக அமைந்திருப்பினும் ரசியா தனது தரப்பின் இராஜதந்திர தோல்வியாகவே கருத முடியும். தோல்வியாகவே கருத முடியும்.

புதிய நாஐிகளும் ரசியாவினால் யுத்திற்காக முன்வைக்கபடும் காரணமும்

அப்படியானால் ஏன் தனது யுத்தம் புதிய நாஜிகளிற்கு எதிரான நடவடிக்கை என காரணத்தினை முன் வைத்தது. சரி அதனையும் காரணமாக பார்த்தால். இவர்கள் உக்கிரெனில் ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்பொழுது புதிய நாஜிகள் மிக சிறுபாண்மையினரே இவ்வகையில் புதிய நாஜிகள் ஐரோப்பி அமெரிக்க நாடுகளில் எண்ணிக்கை அடிப்படையில் கூடுதலாக உள்ளனர். வலது அதிதீவிர தேசிய வாதம் இவ்வகையில் நாஜிய கருத்து உடைய ஆயத வன்முறையாளரை உருவாக்கும்.

ரசியாவில் வன்முறை வலதுசாரி தீவிரவாதிகள் பல ஆண்டுகளாக வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். வலதுசாரி பயங்கரவாதத்தின் விளைவாக கடந்த பத்து ஆண்டுகளில் பல நூறு பேர் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர் தாக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் மத்திய ஆசியா அல்லது காகசஸில் (Kaukasus) இருந்து வந்தவர்கள். , மற்றும் இடது தீவிரவாதிகளும், வீ டற்றவர்கள்,  ஓரின சேர்க்கையாளர்கள் மற்றும் நீதிபதிகள் கூட தாக்கபட்டுள்ளனர். வேறு எந்த கிழக்கு ஐரோப்பிய நாட்டிலும் இதுபோன்ற வன்முறை நவ-நாஜிகள் பல்லாயிரக்கணக்கானதாக இருக்கவில்லை. குறைந்தது 150  தீவிரமான போராளி நவ-நாஜிக்குழுக்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சோவியத் யூனியனுக்கு எதிரான நாஜிய ஆட்சியின் அழிவுப் போரின் பின்னர் (நவ) தேசிய சோசலிசம் ரசியாவில் எல்லா இடங்களிலும் வலுவான ஈர்ப்பை உருவாகியது முரண்பாடாகத் தோன்றலாம். ஆனால் குறிப்பாக இளைஞர்களிடையே, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய முதல் தசாப்தங்களில் பாசிச அழகியல் நாகரீகமாகக் கருதப்பட்டது, மேலும் சோவியத் யூனியனின் விமர்சகர்கள் சில நேரங்களில் நாஜி ஆட்சியுடன் நாஜி சின்னங்களால் தங்களை அலங்கரித்துக் கொண்ட இரகசிய பாடசாலை பல நிகழ்வுகள் நடந்துள்ளன.

இதே போன்று உக்ரேனில் தீவிர வலதுசாரி இயக்கங்கள் உள்ளது, மேலும் அதன் ஆயுதமேந்திய தீவிர வலதுசாரி தேசியவாத போராளிக் குழுவான அசோவும் (AZOV) அதன் இராணுவ குழுவும் அடங்கும். இவர்கள் எல்லைப்புற ரசிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக உக்கரேனிய இராணுவத்துடன் இணைந்து செயற்பட்டு வந்துள்ளன. இது புதிய நாஐிகளின் அதிதீவிர தேசியவாதத்தின் வெளிப்பாடு. உக்கரேனிய அரசு இவர்களிற்கான எதிர் அரசியலை முன்னெடுக்காதபட்சத்தில் உக்கரேனிய அரசுக்கும் மக்களிற்கும் ஆபத்தானவர்களாக மாறுவர் என்பதை முக்க முடியாது. இது உக்ரேனின் உள்விவகாரம். ரசியா முதலில் தன் பிரதேசத்தில் உள்ள நவ-நாஐிகளிற்கு எதிராக நடவடிக்கை எடாது பக்கத்து வீட்டில் உள்ள பிரச்சினைக்குள் மூக்கை நுளைப்பது எவ்விதத்தில் நியாயமாகும்?

ரசியா கடந்த காலத்தில் ஐரோப்பா முழுவதிலும் இருந்து வலதுசாரி தீவிரவாதிகளின் சந்திப்பு புள்ளியாக செயல்பட்டது. 2015 ஆம் ஆண்டில், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் "சர்வதேச ரஷ்ய பழமைவாத மன்றம்" (International Russian Conservative Forum) நடத்தியது.  ஜேர்மன் தீவிர வலதுசாரி தேசிய ஜனநாயகக் கட்சியின் (NPD) முன்னாள் தலைவர் Udo Voigt, அத்துடன் இத்தாலியின் தீவிர வலதுசாரி Forza Nuova கட்சி, கிரேக்கத்தின் நவ-பாசிச கோல்டன் டான் கட்சி மற்றும் இத்தாலியின் தீவிர வலதுசாரி லீக் (Lega) ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

2017 ஆம் ஆண்டில், பிரான்சின் ஜனாதிபதித் தேர்தலுக்கு சற்று முன்பு, மரைன் லு பென் ( Marine Le Pen) - பின்னர் பிரெஞ்சு தீவிர வலதுசாரிக் கட்சியின் தேசிய முன்னணியின் தலைவர், இது 2018 இல் ராஸ்ஸெம்பிள்மென்ட் நேஷனல்(Rassemblement National) என மறுபெயரிடப்பட்டது - ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை மாஸ்கோவில் சந்தித்தார். லு பென் ரஷ்யாவுடன் நெருக்கமான உறவுகளை ஆதரித்தார் மற்றும் நாட்டிற்கு எதிரான ஐரோப்பிய ஒன்றிய தடைகளை விமர்சித்தார்.

இவை எல்லாம் நடைபெற்ற பொழுது ரசியா தனது நவ நாஜி அரசியலிற்கு எதிராக போராடாது தளம் அமைத்து ஏன் கொடுத்தது? இ தனை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்?

வல்லரசுகளாலும், ஏகாதிபத்தியங்களாலும், பிராந்திய வல்லரசுகளாலும் மேற்கொள்ளப்படும் யுத்தங்கள் அதற்கு அவர்களால் முன்வைக்கப்படும் காரணங்கள். வில்லன் கதாநாயகன் அல்லது நல்லவன் கெட்டவன் என்று ஆக்கிரம சக்திகளினால் உருவாக்கபடும் கதைகள். இவை அனைத்து யுத்தங்ளின் போது முன்வைக்கப்படும் பொய்கள்.

இவற்றை கடந்து யாரையும் ஆக்கிரமிக்காது தாம் வாழும் பிதேசங்களில் யுத்தமற்ற மனிதவிழுமையங்களை அங்கீகரிக்கும் திசை நோக்கி மனித சமூகம் பயணிக்க வேண்டும். அதனை மறுதலித்து விட்டு எமது போராட்டத்திற்கு அந்தநாடு உதவியது இந்நாடு எதிர்த்து என்று நடைபறும் யுத்ததில் சார்பு நிலை எடுக்காது. நடைபெறும் யுத்தம் ஒர் சுயாதீன அரசிற்கு எதிரானது என்ற அடிப்படையில் பார்க்கவேண்டும். ஏற்கனவே பல சுயாதீன நாடுகளிற்கு எதிரான போர்கள் நடைபெற்றுள்ளன. அப் போர்களும் நியாயமற்றவையே என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.